சனி, 14 ஆகஸ்ட், 2021

அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க தடைகோரிய மனு தள்ளுபடி ஆனதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 நம் ஆட்களின் பிரச்சினையே இது தான்.மக்கள் பிரதிநிதிக்கும் அரசு அதிகாரிக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் போட்ட வழக்கு இது..

இந்த வழக்கை போட்டவர் கேட்ட பரிகாரம் என்ன?

தமிழக முதல்வர் எம்.கே. ஸ்டாலின் HR & CE ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் "அவர் இந்து மதத்தை நம்புகிறார்." என்ற உறுதிமொழியை எடுக்காமல், இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் குழுவின் தலைவராக பங்கேற்பதை தடுக்கவேண்டும்" என்பது தான் அது!!

இதற்கு முன்னரும் இந்த மனுதாரர் , சென்னையின் வழக்கறிஞர் எஸ்.ஸ்ரீதரன் இதே போன்ற ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.,அதில், "தற்போதைய HR & CE கமிஷனர் மற்றும் பிற அதிகாரிகளால், பிறப்பால் தாங்கள் இந்துக்கள் என்று கட்டாயமாக உறுதிமொழி எடுக்காத அனைத்து அதிகாரிகளையும் பணியில் இருந்து நீக்க வேண்டும் "என்ற கோரிக்கை தான் அது!!

அரசு தரப்பு வழக்கறிஞர் பணியில் இருந்து நீக்க தேவையில்லை. வேண்டுமானால், இப்போது உத்தரவிட்டால் கூட, அனைத்து ஊழியர்கள்/அதிகாரிகள் உறுதிமொழி எடுப்பார்கள்" என்று சொல்ல , உயர் நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டு அப்படியே உத்தரவிட்டது!

அதே பாணியில், இப்போது முதல்வரும் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று இந்த பொதுநல வழக்கை போட்டுள்ளார்..

என்ன ஆச்சரியம் என்றால்,

  • வழக்கு போட்டவர் ஒரு வழக்கறிஞர்..
  • அவருக்கு ஏற்கெணவே தான் போட்ட மனுவின் படி ஏன் உயர்நீதிமன்றம், அறநிலையத்துறை அதிகாரிகளையும் ஊழியர்களையும் மேற்படி உறுதிமொழி எடுக்க சொல்லி உத்தரவிட்டது என்று தெரியும்.
  • ஏனென்றால், அவர் தான் தன் பிரமாண பத்திரத்தில், "ஆணையர், கூடுதல் ஆணையர், கூட்டு, துணை அல்லது உதவி ஆணையர் மற்றும் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட அனைத்து அலுவலர்கள் அல்லது பணியாளர்கள் , இந்து மதத்தை பின்பற்றும் நபராக இருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்கள் அந்த பதவியில் இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று 1959 ஆம் ஆண்டின் எச்.ஆர் & சிஇ சட்டத்தின் பிரிவு 10 கூறுகிறது என்று சுட்டிகாட்டியவர்.!!
  • அதே போல, செப்டம்பர் 23, 1961 அன்று வெளியிடப்பட்ட அரசு ஆணையின் படி, ,இந்து மதத்தை பின்பற்றுவதை நிரூபிக்கும் விதிகள், நநடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது ,என்றும் அந்த விதிகளின்படி, அந்த சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் அருகிலுள்ள இந்து மத அமைப்பின் முன்னிலையிலும் அதன் அறங்காவலர் குழுவின் தலைவர்.முன்னிலை வகிக்கும்போதும், உறுதிமொழி எடுக்கவேண்டும் என்று சொலலியுள்ளதை விவரித்ததும் இவரே!!
  • அதன்படி உறுதிமொழி ஏற்காத அனைத்து அதிகாரிகளையும் வேலையை விட்டே தூக்க வேண்டும் என்றார்!!
  • அதன் உண்மைத்தன்மையை உணர்ந்த பின்பே, உயர்நீதிமன்றமும் மேற்படி உத்தரவை போட்டது!

HC directs all HR&CE dept. staff to take the ‘Hindu pledge’

  • இத்தனைக்கும், அறநிலயத்துறை அதிகாரிகளுக்கு அந்த விதிகள் பொருந்தாது என்று அரசுதரப்பில் வாதிட்டு பார்த்தார்கள். ஆனால், உயர் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை..HR&CE சட்டத்தின் பிரிவு 10 ஐப் பற்றி குறிப்பிடுகையில், விதி 2 உடன் வாசிக்கப்பட்டது, "இந்த விதியில், "நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் ..." என்ற வார்த்தைகளுடன் தொடங்குகிறது. எனவே கமிஷனர் மற்றும் பிற உயர் அதிகாரிகளை அதன் வரம்பிலிருந்து விலக்க முடியாது என்பது தெளிவாக இருந்தது."என்று தான் உத்தரவில் தெளிவாக சொல்லவில்லையா?இதை அவரும் தானே தெரிந்து வைத்திருந்தார்?!
  • இப்போது சொல்லுங்கள்.இவ்வளவு விவரம் தெரிந்தவருக்கு, தமிழக முதல்வர், இந்து அறநிலையத்துறை சட்டத்தால் நியமிக்கப்படவில்லை என்றும், அவர் அதன் அதிகாரி என்பதும், அவர் பொது ஊழிடர் மட்டுமே, அவர் அந்த சட்ட விதிகளின் வரையறைக்குள் வரமாட்டார் என்று தெரியாதா?
  • அதனால் தான், அந்த பொது நல வழக்கு மனுவை உயர்நீதிமன்றம், திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. .இதை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசாவலு ஆகியோரின் முதல் டிவிஷன் பெஞ்ச், "முற்றிலும் குறும்புத்தனமானது" என்று கூறி, மனுவை அனுமதிக்க மறுத்துவிட்டது. வழக்கு "மிகவும் மோசமான சுவையில்" இருப்பதாகவும், வழக்குரைஞர் கேட்கும் பிரார்த்தனையில் ஒரு தப்பெண்ணம் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்

அது உங்களுக்கும் தெரிந்திருக்கும்!

  • இத்தனைக்கும் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீனடிக்கும் இதுபோண்ற வழக்குகளுக்கு செலவுத்தொகை உத்தரவிடும் மாண்புமிகு நீதிபதிகள், சென்னை வழக்குரைஞர் எஸ்.ஸ்ரீதரன் மீது செலவுகளை விதிப்பதைத் தவிர்த்தாலும், சம்பந்தப்பட்ட பெஞ்சின் வெளிப்படையான அனுமதியைப் பெறாமல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உயர் நீதிமன்றத்தில் எந்த பொதுநல மனு தாக்கல் செய்ய அவருக்கு உரிமை இல்லை என்று உத்தரவிட்டனர்.!!
சரி தானே!!
  • இந்த வழக்கிற்கு மேல் முறையீடு செய்யவேண்டும் என்றால் உச்ச நீதிமன்றம் தான் போகவேண்டும்.நம் கோரா சட்டமேதைகள் சொல்வது போல இங்கேயே அப்பீல் போடவும் முடியாது.அதனால் இங்கேயே ஸ்டே கிடைக்காது!!
  • அதுவும் அரசு ஊழியரிகள், அதிகாரிகள் யார், பொது ஊழியர்கள் யார் என்ற வித்யாசம் கூட தெரியாமல், அல்லது தெரிந்தும் விளம்பரத்திற்காகவோ செய்தது போன்ற ஒன்றிற்கு, இத்தனை கருணை காட்டியதே அதிசயம்..

ஒரு பொது ஊழியர் மட்டுமல்ல யாரும் குறிப்பிட்ட மதத்தை தான் பின்பற்றுகிறார் என்பதை வெளியில் சொல்லவேண்டிய அவசியமில்லை..

எந்த மதத்தையும் இங்கு யாரும் பின்பற்றும் சுதந்திரம் என்பது அடிப்படை சுதந்திரம்..அதை அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுத்துள்ளது..ஒரு மதத்தில் இருந்துக்கொண்டே அவர் இன்னொரு மதத்தை பின்பற்றவும் செய்யலாம்!!

அதனால் தான் உயர்நீதிமன்ற, இதுகூட தெரியாத வழக்கறிங்ஞருக்கு "இது ஒரு மதச்சார்பற்ற நாடு. அரசியல் சாசனம் கூட கடவுளின் பெயரிலோ அல்லது அரசியலமைப்பின் பெயரிலோ பதவிப் பிரமாணம் எடுக்க அனுமதிக்கிறது, ”என்று பாடம் சொல்லி கொடுத்தது!

அப்படியிருக்க, இந்து சமய அறநிலையத்துறையில் மட்டுமே இந்த விதிவிலக்கான விதி!!

ஏனென்றால், இந்து சமயத்தை பின்பற்றாத ஒருவர் அங்கு பணிபுரியும் போது, வேற்று மத துவேஷ எண்ணம் அவருக்கு இல்லையென்றாலும், மற்றவருக்கு அவர் அப்படி நடக்கிறாரோ என்பது போன்ற எண்ணம் வரக்கூடுமோ என்று தான்!!

சரி..இப்படி ஒரு மக்கள் பிரதிநிதி, உறுதிமொழி எடுத்தால் தான், அவர் எந்த மதத்தை பின்பற்றுகிறார் என்று மற்றவருக்கு தெரியுமா?

அப்படி அவர் எடுக்கவில்லையென்றால் அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியுமா? அல்லது, அவர் இந்து அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தலையிட கூடாது என்று தடுத்து நிறுத்தமுடியுமா?

பெரும்பான்மையான மக்கள் தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து, அரசு நிர்வாகம் செய்ய அனுப்பியவரை, மதத்தின் பெயர் கொண்டு முட்டுக்கட்டை போடுவதென்பது??

இதோ உயர்நீதிமன்றமே "சுளீர்" என்று சாட்டையால் விளாசியிருக்கிறது!!

"எந்த மதமும் குறுகிய மனப்பான்மையையோ அல்லது மற்றவர்களை காயப்படுத்துவதையோ போதிக்கவில்லை"

அதே போல இந்த பொது நல வழக்கை,

இதில் என்ன பொது நலன் இருக்கிறது??

போட்ட . வழக்குரைஞரால் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளை பாராட்ட முடியாது, என்றும் சொல்லியிருக்கிறது!!

ஏனென்றால், நீதிமன்றத்திற்கு நன்றாக தெரிந்திருக்கிறது…இங்கு மதம் பிரச்சினை அல்ல..

வெளிநாட்டில் உள்ள இதே ஆட்கள் அவர்கள் சுற்றம், அங்கு கிரித்துவர்களையும் 
நீக்ரோக்களையும் கூட திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள்..ஆனால் 
இந்தியாவுக்கு வந்து விட்டால் மட்டும் மதத்தின் ரட்சகனாக காட்டிக்கொள்வார்கள்!!☺️

சாதி தான்" என்பது!!

புதன், 11 ஆகஸ்ட், 2021

கல்வி சமூகத்தை மாற்றுமா?

கண்டிப்பாக ..கல்வி தனி மனதனின் வாழக்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்..

அதற்கு உதாரணம் இந்த மனிதர் …முஹம்மத் சாஜித் மகபூப் அன்சாரி…

ரொம்ப பெரிதாக கற்பனை செய்துக்கொள்ளாதீர்கள் ஆள் ஹீரோ போல ஏதும் செய்தாரா என்று…

ஒரு விதத்தில் ஹீரோ தான்….ஆனால் ஆண்டி ஹீரோ…கல் நாயக்..

2006 மும்பை தொடர் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதாகி குற்றவாளி என்று தீர்பளிக்கப்பட்டு தற்போது ஆயுள் கைதியாக சிறை வாசம் அனுபவ்ப்பவர் தான் இவர்!

சிறையில் இருக்கும் போதே, கல்வியால் எல்லோரையும் திரும்பி பார்க்க வைதுருக்கிறார் இவர்….

அவர் என்ன செய்தார் என்று போகும் முன்,

கல்வியால் பொதுவாக என்ன செய்து விட முடியும்? ன்ற வினாவுக்குள் போவோம்…

இன்று நம் மாநிலத்தில் கல்வியறிவின் விகிதம் கூடி கொண்டே போகிறது.

மகிழ்ச்சி…..ஆனால் குற்றங்களும் அதே அளவுக்கு உயர காரணம் என்ன?

முழுதாக கல்வி அறிவில்லை என்றால் மோசம். ஆனால் அதை விட மோசமானது அரைகுறையாக, புரிந்தும் புரியாமல் கல்வி பயில்வது.

அதுவும் புரிந்து படித்து, அக உழாமல் ஆழமாக உழுவது போல் கற்பது அவன் எண்ணவோட்டத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வரத்தான் செய்யும். ஆனால் கல்வியை இன்றைக்கு எதற்கு உபயோகமா என்று பார்க்கிறோம்?

தன பொருளாதார உயர்வுக்கு, குறுக்கு வழியில் பயன்படுத்துவது.

படித்தவர்கள் தான் அதிக அளவில் நூதனமான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். பாலியல் குற்றங்கள்..ஒன்றும் வேண்டாம்…. சாலை விதிகளை மீறி வண்டி ஓட்டுபவர் பெரும்பாலும் படித்தவர்களே.

இன்னொருவனின் வீழ்ச்சியில் தான் உயர்வு அடைய நினைக்கும், எப்படியாவது வாழ்க்கை படிக்கட்டில் மேலேற நினைக்கும் ஒருவனின் கல்வியால் சமூகத்திற்கு என்ன பயன்?

உதாரணதிற்கு ஒரு புள்ளி விவரத்தை சொல்லலாம்.

கேரளா தான் கல்வியறிவில் முன்னேறிய மாநிலம் என்று தெரியும். கடந்த, 2016-ம் ஆண்டின், தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிபரப்படி, தமிழகத்தின், கிரைம் ரேட் 672. ஆனால் கேரளாவின் கிரைம் ரேட், 1,980!!!அதாவது .தமிழகத்தை காட்டிலும், கேரளாவில், மூன்று மடங்கு அதிகம் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று தான்,நாம் நினைப்போம்.

ஆனால் உண்மை அது அல்ல. நம் காவல் நிலையத்திற்கு போய் புகார் கொடுத்தால் அதை பதிந்தால் தானே.??

ஏன்?

உள்ளதை உள்ளபடியே காட்டினால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேட்டுவிட்டது என்று எதிர்கட்சியினர் குறை சொல்ல காரணமாக அமைந்து விடுமாம்.

ஆனால் கேரளாவில் இது போல புகார் கொடுத்து காவல் த்துறையினர் மறுக்க முடியுமா?

அங்கு கொரானாவை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கையும் அரசு மேற்கொள்கிறது!! வீடுகளுக்கு தேவையான அத்த்யாவாசிய பொருட்களை பகிர்கிறது…

ஆனால் இங்கேயோ…விலையில்லா பொருள் வாங்கவும், இரண்டாயிரம் ரூபாயை வாங்கவும் படித்தவர், படிக்காதவன் வித்தியாசமின்றி வரிசையில் நின்று வாங்குவோம்.!! 

 அதன் பயன் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் இரண்டு லட்சம் ரூபாய் கடன் இருக்கிறதாம். !!

இதற்கெல்லாம் காரணம்…சுயநலம் சார்ந்த எண்ணம்…

இதை மாற்றக் கூடியது சிறந்த கல்வி மட்டுமே…

அதனால் தான் குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர் அங்கிருந்து கல்வி கற்றால், அவர் சிறை காலத்தையே குறைக்கும் வழி வகையை சிறை விதிகள் வைத்துள்ளன.

ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட சிறை விதிகளில் பெருமளவில் மாற்றமில்லை!!.

ஆனால் அது பொது மக்கள் அறிதலுக்கும் வ்ளிவராது.

இது போல மேற்கல்வி கற்றால் சிறை தண்டனை குறைக்கப்படும் என்ற விவரத்தை சிறை நிர்வாகமே தருவதில்லை.

ஜி. டபிள்யு.எப். ஹீகேள் போன்ற சிந்தனையாளர்கள் குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டும், தண்டனையை வழங்கும்போது அவர்களை பகுத்தறிவுள்ள மனிதர்களாக அதிகாரிகள் மதிக்க வேண்டிய உரிமை உண்டு.என்று வாதிடுவர்.

உலகெங்கிலும் உள்ள குற்றவியல் நீதி அமைப்பு எல்லாம் , பயத்தை தூண்டுவதற்காக தண்டனையைப் பயன்படுத்துவதில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டன., தற்போது, தண்டனையை குற்றவாளிகளின் மனமாற்றம், சுய ்-சீர்திருத்தம் மற்றும் சமரசம் செய்ய வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவும் அதை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறது.. 


இப்போது தான் "மக்களை தேடி மருத்துவம்" என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது..!

ஆனால் ஏற்கெனவே கைககெட்டும் தூரத்தில் நீதியை கொண்டு வந்த பெருமை இந்திய நீதித்துறைக்கு உண்டு.

இலவச சட்ட உதவி முகாம்களும், சட்ட ஆலோசனை மையங்களும், சமரச மையங்களும் மக்கள் நீதிமன்றங்களும் எத்தனையோ நிலுவையிலுள்ள கோடிக்கணக்கான வழக்குகளை தீர்த்தது மட்டுமல்லாமல், வரவிருந்த வழக்குகளையும் சமரச முறையில் தீர்த்து வைத்துள்ளனர்!!

ஆனால்……

அதை பெறக கூடிய அளவில் கல்வி கற்று இருந்தால் தானே பயனடைய முடியும்?!

சிறை தண்டனை குறைப்பிற்கு அருகதை உள்ள எத்தனையோ சிறைவாசிகள் அது குறித்து விழிப்புணர்வு இல்லாமலேயே உள்ளனர். 

 சிறை அதிகாரிகளும் அது குறித்து அக்கறை கொள்வதில்லை.

இந்த கோவிட் தொற்று காலத்தில், தகுதியுடைய சிறைவாசிகளுக்கு தண்டனையை குறைத்து சிறைக்கு வெளியே அனுப்புவதில் மாநில அரசுகள், நம் மாநிலம் உட்பட போதிய அக்கறை காட்டவில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே வருததப்படுள்ளார்.

சிறை தண்டனையின் காலத்தை குறைக்கக்கூடிய விதிகளை பற்றி நான் பேச ஆரம்பித்ததும் நிறைய பேருக்கு , பேரறிவாளன் மற்றும் பலர் தான் நினைவுக்கு வருகிறார்கள். நான் அந்த விஷயத்திற்குள் போகவில்லை.

நம்மில் எத்தனை பேருக்கு, சிறை வாசிகள் அங்கிருந்து உயர் கல்வி பயின்றால், தண்டனை காலம் குறைக்கப்படும் என்று தெரியும்?!!

அதை முஹம்மத் சாஜித் மகபூப் அன்சாரி…தெரிந்து வைத்துள்ளார். அவருடைய பதினாறு வருட சிறைககாலத்தில், அவர் பெற்றது பல பல்கலைகழக பட்டங்கள், சான்றிதழ்கள்…

அதுவும் அவரின் பொலிடிகல் சயின்ஸ் மேற்படிப்பும், மனித உரிமைக்கான பட்டய படிப்பும் நீண்ட இருண்ட சிறை வாழ்ககையை கடக்க அவருக்கு உதவியதாம்…

அது மட்டுமல்ல இந்த கல்வி தகுதிகள், அவருடைய தண்டனை காலத்தில் மூன்று மாதத்தை குறைத்தும் விட்டுருககிறது!!

இப்படி ஒரு சிறை விதி இருப்பதே யாருக்கும் தெரியாமல் இருந்த போது, இவர் தன்னுடைய இடைவிடாத மனுகளாலும், தைகள் அறியும் சத்தின் மூலமும், இந்த சிறை தண்டனை குறைப்பிற்குரிய விவரங்களை பெற்று, அதற்கு தகுதியுடையவர் ஆகியிருக்கிறார்!!

அவர் இருக்கும் மகாராஷ்டிரா மாநில சிறை விதிகளின் படி அதிகபட்சமாக தொண்னூறு நாட்கள், கல்விக்கான தண்டனை குறைப்பு உண்டாம்… அதே போல தமிழ்நாட்டிலும் உண்டு….

சிறைவாசத்தின் பொது, கைதிகள் நிறைய பேர் மேற்கல்வி பயில்வது உண்டு. அதை சிறை அதிகார்கள் ஊக்குவிப்பதும் உண்டு. 

 ஏன் அன்சாரியை போலவே அந்த வழக்கில் தண்டனை பெற்றவர்களும் சிறையிலேயே கற்கிறார்கள் தான். அதில் ஒருவருக்கு சட்டக கலூரியில் பயில நுழைவு தேர்வு எழுதி தேர்வும் ஆகி விட்டாராம். ஆனால் அவர் அதன் பிறகு, குற்றவாளி என்று தீர்ப்பு வந்தவுடன், மும்பை சிறையிலிருந்து நாசிக் சிறைக்கு மாற்றப்பட்டுவிட்டார் என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது….

ஆனால் யாரும் யோசிக்காத வகையில் , இப்படியொரு சிறை விதி இருப்பதை அறிந்து , அந்த தகவலை வெளிககொனரவே முடியாத சிறை துறையிலிருந்து பெற்றது தான் எல்லோரையும் பேச வைத்துள்ளது!

அவருக்கு கிடைத்த ஆயுள் தண்டனையின் படி அவர் குறைந்த பட்சம் பதினான்கு வருடம் சிறை தண்டனை பெற வேண்டும். ஏற்கெனவே அவர் பதினாறு வருடங்களாக அங்கிருககிறார். அவர் தண்டனை குறைப்பிர்கான விசாரணை இனி தான் எடுத்துக்கொள்ள இருக்கிறது…

அதனால் கனவான்களே …நமக்கிருக்கும் உரிமைகளை தெரிந்துக கொள்ளவும் கல்வி அவசியம் தான்….ஆனால் அந்த கல்வியும், தான் இருக்கும் படி நிலையை புரிந்துக கொண்டு வாதிடுவதற்கே பயன்படுத்த வேண்டும்…

அது தெரியாமல்…'நீயும் நானும் ஒன்னு"ன்னு வாதிட்டால், நம தலையில் போட்டுக்க வேண்டியது மண்ணு" தான்!!.

சனி, 7 ஆகஸ்ட், 2021

நில பத்திரத்தில் உள்ள சர்வே எண் பட்டாவில் அந்த சர்வே எண் விடுபட்டுவிட்டது, அந்த சர்வே எண் வேறு ஒருவர் நபரில் பெயரில் உள்ளது, இதை எவ்வாறு மாற்றுவது?

 பட்டாவில் நீங்கள் யாரிடம் வங்கினீர்களோ அவர் பெயர் இல்லை.

ஆனால் அவர் எழுதி குடுத்த பத்திரத்தில் மட்டும் சர்வே எண் உள்ளது இல்லையா?

பட்டாவை வழங்குவது அரசு தரப்பு..ஆனால் பத்திரம எழுதுபவர் தனி நபர்.

யாருடைய ஆவணம் செல்லுபடியாகும்?

கண்டிப்பாக அரசு தரப்புடையதே..

இல்லையா பின்னே..தனி நபரின் ஆவணம் தான் செலலக்கூடியது என்றால் யார் வேண்டுமானாலும், யாருடைய சொத்தையும் எழுதி கொடுத்து விடலாமே?!!

பட்டாவில் சர்வே எண் விடுபட்டுவிட்டது என்கிறீர்கள்.

ஏனென்றால் அது வேறு ஒருவரின் பெயரில் உள்ளது..அதாவது அந்த சர்வே எண்ணுக்குரிய நிலததின் உரிமையாளர் அவர் என அரசு ஆவணம் காட்டுகிறது.

இந்த நிலையில், பத்திரத்தில் சர்வே எண் குறிப்பிட்டு விட்டாலேயே உங்களுக்கு நில உரிமை வந்துவிட்டது என்று அர்த்தமல்ல.

ஏனெனில் பத்திரம எழுதி கொடுத்தவருக்கே அந்த உரிமை, அந்த தேதியில் இல்லை என்பதால்..

உண்மையிலேயே, அவருக்கு தான் அந்த நிலம் உரிமையானது என்றால், எந்த காலத்தில் பட்டா வேறொருவரின் பெயருக்கு மாற்றப்பட்டது என்று பார்க்க வேண்டும்.

அரசு தரப்பில் ரீ.சர்வே செய்யும்போது, தவறு நடந்திருந்தாலும, அதற்கான பல வருடம் கடந்து வந்து விட்டோம்.

அது, இவருக்கு இத்தனை காலமும் ஏன் தெரியாமல் போனது என்பதும் தெரிய வேண்டும்.

காரணங்கள் ஏற்று கொள்ளதககதாக இருக்க வேண்டும்.நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்."சட்டம் தூங்குபவருக்கு உதவாது" என்று.

நீங்கள் கேட்கலாம்.."நாம் காலக்கெடுவில் மனு கொடுத்திருந்தாலும், அதை உடனேவா பைசல் செய்துவிடுகிறார்கள்?" என்று.

சட்டம், நம் குறையை, முறையீடு, எதிர்ப்பை ஒருவர் தெரிவிக்க கால வரையறை வைத்திருக்கிறதே தவிர, அதை தீர்வு காண்பதற்கு கெடு விதிக்கவில்லை!

அதனால் தான் பல தசாப்தம் கடந்தும் தீர்வை எட்டாத கோரிக்கைகள், அரசிடம் நிலுவையில் இருக்கிண்றன!

இன்னொன்று சொல்ல வேண்டும்.தவறு அரசுதரப்பில் இருந்தாலும், விற்றவர் தரப்பில் இருந்தாலும், அதை சரி செய்து, தன் பெயருக்கு நிலத்தின் பட்டாவில் மாற்றிக்கொண்டு, அதன் பிறகு தான், அந்த நில உரிமையை பத்திரம் மூலம் மாற்ற முடியும்.

அதற்கு முன்னரே பதிவு செய்யப்பட்ட இந்த பத்திரம் செல்லாது.. எந்த நில உரிமையையும் மாற்றி தராது!!

இதற்கேற்பட்ட செலவுகளை, நிலம் விற்றவர் தான் ஏற்க வேண்டும்.ஏனெனில் அந்த வில்லங்கம் அவரால் உருவானது என்பதால் அதை சரி செய்ய வேண்டிய கடமையும் அவருக்கே..இதற்கான ஸரத்து ஒன்று பொதுவாக பத்திரத்திலேயே இருக்கும்.

ஆனாலும் இந்த வில்லங்கம் இருப்பதை, வாங்கும் முன்பே சான்றிதழ் எடுத்து, பார்த்து தெரிந்திருக்கலாம்.

வாங்குபவர் தான் கவனமாக இருக்க வேண்டும். இல்லாத போது, விற்றவரிடம் இழப்பீடு கேட்கலாம். மறுக்கும் போது,

தனக்கு உரிமை யில்லாத நிலத்தை ஏமாற்றி விற்றுவிட்டதாக நீதிமண்றத்தை அணுகி, இழப்பீடு கேட்கலாம்.

தர்மமே வெல்லும்!!

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு எவ்வளவு சதவீதம்?

 தமிழ்நாட்டில் தான் 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது..இதில் 50% பிற்பட்டோருக்கு உரியது…இது நாட்டிலேயே அதிக அளவிலான இட ஒதுக்கீடு என்றாலும் இது மண்டல் கமிஷன் அடிப்படையில் என்பதால் இன்றுபவரையில் பிரச்சினை இல்லை.

ஏன் இன்று வரையில் என்று சொல்கிறேன்?

ஏனென்றால் உச்சநீதிமன்றத்தில், இது குறித்த வழக்கு இறுதி விசாரணை வெகு சீக்கிரம் வரவுள்ளது!!

மராத்தா வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என்று சமீபத்தில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது நினைவில் இருக்கலாம்!!

நிலைமை இப்படியிருக்க, தற்போது சூட்டை கிளப்பி கொண்டிருக்கும் இந்த இட ஒதுக்கீடு விவகாரம் தான் என்ன?

மருத்துவ படிப்புகளில் பிற்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு செய்ததற்கு மத்திய அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன..அந்த உத்தரவை எந்த கட்டாயத்தின் பேரில் போடப்பட்டது என்பது விவரம் அறிந்தவருக்கு தெரியும்.

நீதிமண்ற அவமதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்துக்கொண்டார்கள் .அவ்வளவு தான்…

இப்போது இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் வந்து செய்திருக்கிறது.

செவ்வாயன்று, வந்த அந்த வழக்கு விசாரணையின் போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மாநிலத்தால் ஒப்படைக்கப்பட்ட AIQ இடங்களுக்கு OBC களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கவும், தற்போதுள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் வராதவர்களுக்கு 10% EWS இட ஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. என்றார்.

அதற்கு மெட்றாஸ் உயர்நீதிமன்றம் என்ன சொன்னது தெரியமா?

"தமிழ்நாடு வழங்கும் ஓபிசி பிரிவினருக்கான 50% ஒதுக்கீட்டை , அகில இந்திய ஒதுக்கீட்டிலும் (ஏஐக்யூ) சேர்க்க வேண்டும் என்று தான் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இரண்டுமே தெளிவுபடுத்தியுள்ளன. மத்திய சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளபடி 27% ஆக அது இருக்க முடியாது."

ஆனாலும், திமுக வின் மூத்த வழக்கறிஞர் பி வில்சன் அவர்கள் எடுத்து வைத்த வாதம் ஆணித்தரமானது,

" தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்கள் மற்றும் நியமனங்களில் இட ஒதுக்கீடு) சட்டம், 1993 என்பது, AIQ இடங்களுக்கும் பொருந்தும். என்பதை, ஜூலை 27, 2020 தேதியிட்ட உயர் நீதிமன்ற உத்தரவு, படி, சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொண்டதாக வாதிட்டார்.

அதன்படி, AIQ இடங்களில் OBC களுக்கு மாநிலத்தில் கொடுப்பது போல 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், 27% அல்ல, "

அதையே பதிவுசெய்த உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் கூட தனது உத்தரவில் இதை கவனித்ததை சுட்டிக்காட்டியது: அந்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு சொல்லியுள்ளது

"1993 சட்டத்தை AIQ இடங்களுக்கு பொருந்தும் என்று மேல்முறையீட்டாளர்கள் சமர்ப்பித்ததை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்பதில் சந்தேகமில்லை"

..இதை எதிர்த்து அரசு தரப்பில் வாதிட்டபோது, அதை ஒதுக்கிவைத்த நீதிமன்றம், அவருடைய வாதம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் இரண்டிலும் குறிப்பிடப்பட்ட நோக்கத்திற்கு எதிராக உள்ளது என்றது.

"இந்த மாநிலத்தில் உள்ள AIQ இடங்களுக்கு OBC வேட்பாளர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் முறைகளை கண்டறிய ஒரு குழு உருவாக்கப்பட்டு அது செயல்படும் " என்று அந்த இரண்டு உத்தரவுகளும் சுட்டிக்காட்டுகிறது.

"ஒருவேளை, இது உத்தரவை அமலாக்கும் பிரச்சினையாக இருந்தால், இடஒதுக்கீட்டின் அளவு அல்லது குழுக்களுக்கிடையேயான இடை ஒதுக்கீடு ஆகியவற்றைக் கண்டறியும் கடமை குழுவுக்கு இல்லை." என்றது நீதிமன்றம்.

தொடர்ந்து ஆகஸ்ட் 9 வரை காத்திருப்போம்.

இந்த உத்தரவை சரியாக புரிந்து கொள்ளாத சில பேர் "ஏன் 50% .மொத்தத்தையும் எடுத்து கொடுத்து விடுங்கள்" என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

விவரம் இல்லாத கூற்று இது.

உண்மையில் இந்த 50% இட ஒதுக்கீடு என்பது நம் மாநிலத்தின் கோரிக்கை..

தமிழ் நாடு மட்டும் ஏன் இவ்வளவு அதிகம் இட ஒதுக்கீடு, அதுவும் பிற்பட்டோருக்கு மட்டும் , கேட்கிறது?

ஏனென்றால், தமிழ் நாடு தான் அதிக அளவில் மருத்துவ படிப்பிர்காண சீட்களை, மறுவிநியோகம் செய்ய மத்திய அரசுக்கு உதவுவதற்காக விட்டுக்கொடுத்தது.

ஆனால், அது தான், நியாயமான கோரிக்கை செவிசாய்க்கப்படாமல் , உறுதியான நடவடிக்கையின் எல்லைக்கு வெளியே இத்தனை காலமும்.வைக்கப்பட்ட்டுள்ளது.!!

அதன் கோரிக்கை தான் என்ன என்கிறீர்களா?

AIQ இடங்கள் முதலில் மாநிலங்களைச் சேர்ந்தவை என்பதால், அந்தந்த மாநிலங்களுக்கு பொருந்தும் ஒதுக்கீட்டு கொள்கை அவர்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வாதத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டில் பிற்பட்டோருக்கு உள்ள 50% ஒதுக்கீடு, அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பின்பற்றவேண்டும் என்ற கோரிக்கை தான் அது.

ஆனால் இட ஒதுக்கீடு அனைத்து வகையிலும் சேர்த்து, 50% ஐ தாண்ட முடியாது என்றது மத்திய அரசு.

அதை தான் சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது..அவர்கள் கருத்து மத்திய சட்டங்கள் அடிப்படையிலானது, இந்த விவகாரத்தில் செல்லுபடியாகாது என்றது..

சரி தானே!

வெள்ளி, 23 ஜூலை, 2021

பொது மக்களால் அறியப்படாத நீதிமன்றத்தில் நடக்கும் பொதுவான நடத்தைகள் என்ன?

 நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குள் தேக்கம், நீதிமன்றங்களுக்கு விடும் விடுமுறைகள், அவை வழங்கும் தீர்ப்புகள்…..இவை பற்றி மட்டுமே பொதுமக்கள் அறிவார்கள்…

ஆனால் எல்லா தீபங்களுக்கு கீழேயே இருள் உண்டு என்பதை மறந்துவிடுகிறோம்.

விசாரணை நீதிமன்றங்களில் இருக்கும் நீதிபதிகலுக்கு உள்ள பணிசுமை தவிர்த்த மனசுமை தெரியுமா?

இதோ ………. மாண்புமிகு உச்ச நீதிமன்றம் சமீபத்திய தீர்ப்பு ஒன்றில், பட்டியலிட்டுள்ளது…இன்னும் சொல்லபோனால் அவர்களுக்காக வாதாடியுள்ளது!! …வழக்கம் போல…..

என்ன தாம்ப்பா அவங்க பிரச்சினை"ன்னு கேட்கிறவங்களுக்கு………….

அவர்கள் வாய்ஸ்சிலேயே

"உள்கட்டமைப்பின் பற்றாக்குறை, போதிய பாதுகாப்பு இல்லாமை , நீதிபதிகள் சரியான முடிவெடுத்து அதன் பால் நிற்கும்போது அவர்கள் இலக்குகளாக மாற்றப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள், துரதிர்ஷ்டவசமாக, உயர்நீதிமன்றத்தின் நிர்வாகத்திற்கு கீழ்ப்படிதல், என்ற அடிப்படையில் அவர்களை பாதிக்கப்படக்கூடிய இடமாற்றங்கள் "

இதை ஏன் திடீருன்னு சொல்லியிருக்குன்னு கேட்கிறீங்களா?

எம், டாமோவில் காங்கிரஸ் தலைவர் தேவேந்திர சவுராசியா கொலை செய்யப்பட்டார் இல்லையா?

அது தொடர்பாக, மாநிபுமிகு மத்திய பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த போது சொன்னவை இவை

இந்த வழக்கிற்கும், நீதிபதிகளுக்கும் என்ன சம்பந்தம்?

மேலே சொன்ன கிரிமினல் வழக்கை விசாரிக்கும் கூடுதல் அமர்வு நீதிபதி ஹதா தனது உத்தரவில் தனக்கு உள்ள அச்சங்கள், எல் செல்வாக்குமிக்க குற்றவாளியின் சூழ்ச்சிகள் போன்றவற்றை வெளிப்படுத்தியிருந்தார்.

மாவட்ட நீதித்துறையின் சுதந்திரம் என்பது ஒட்டுமொத்த நீதித்துறை என்ற முழு அமைப்பின் ஒருமைப்பாட்டிற்கும் முக்கியமானது என்பதை நீங்கள் ஒத்துகொள்கிறீர்கள் தானே? இதைத்தான் மான்்புமிகு உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

ஒரு சுதந்திரமான, எந்த பக்கச்சார்பற்ற நீதித்துறை ஜனநாயகத்தின் மூலக்கல்லாகும். மாவட்ட நீதித்துறையில் உள்ள நீதிமன்றங்கள் தான் குடிமக்களுடன் தொடர்பு கொள்ளும் முதல் புள்ளியாகும். நீதி நிர்வாகத்தில் குடிமகனின் நம்பிக்கை நிலைக்க வேண்டுமானால், மாவட்ட நீதித்துறையிலும், 'உயர்' நீதித்துறையிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். விசாரணை நீதிபதிகள் மோசமான நிலைமைகளுக்கு மத்தியில் பணியாற்றுகிறார்கள் -உள்கட்டமைப்பின் பற்றாக்குறை, போதிய பாதுகாப்பு இல்லாமை , நீதிபதிகள் சரியான முடிவெடுத்து அதன் பால் நிற்கும்போது அவர்கள் இலக்குகளாக மாற்றப்படுவதற்கான எடுத்துக்காட்டுகள், துரதிர்ஷ்டவசமாக, உயர்நீதிமன்றத்தின் நிர்வாகத்திற்கு கீழ்ப்படிதல், என்ற அடிப்படையில் அவர்களை பாதிக்கப்படக்கூடிய இடமாற்றங்கள்...

.மாவட்ட நீதித்துறையின் பால் கொண்டுள்ள 
 காலனித்துவ மனநிலை மாற வேண்டும்.
 அப்போதுதான் குற்றம் சாட்டப்பட்டவர்கள்,
 பாதிக்கப்பட்டவர்கள் சமூகம் - என்று எங்கள் 
விசாரணை நீதிமன்றங்களில் அர்த்தமுள்ள 
வகையில் பாதுகாக்கப்படும், ஒவ்வொரு 
ஸ்டாக்கிற்கும் சிவில் சுதந்திரம் கிடைக்கும்.  

மெட்ராஸ் பார் அசோசியேஷேன் எதிர் ஒன்றிய அரசு என்ற வழக்கை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்,

 நீதித்துறையை ஒரு சுதந்திரமான  அமைப்பாக
 செயல்படுத்துவது என்பது,  அதிகாரங்களைப் 
பிரிக்கும் கருத்தில் வேரூன்றியுள்ளது. தனிப்பட்ட
 நீதிபதிகள் சரிசெய்ய முடியும். வேறு எந்த 
காரணிகளின் இடையூறின்றி நீதிபால் சட்டத்தின்
 துணை கொண்டு தீர்ப்பு வழங்க இயல வேண்டும்.
  அதனால நீதித்துறையின் சுதந்திரம் என்பது 
ஒவ்வவொரு நீதிபதியின் சுதந்திரம ஆகும்.  அது 
அவருடன் பணியாற்றும் ஏனைய சக நீதிபதி, 
அல்லது அவருக்கு மூத்த நீதிபதியிடமிருந்தும் 
சுதந்திரத்தை உள்ளடக்கியது.  '

இது சம்பந்தமாக அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 5௦ல் சொல்லப்பட்டதை எடுத்து சொல்லிய உச்ச நீதிமன்றம்,

" இது நீதித்துறையை, பொது சேவையை பொறுத்த வரையில், அரசின் நிர்வாகத்திடம் இருந்து நீதித்துறையை பிரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது, உயர் நீதிமன்ற நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் மாவட்ட நீதித்துறை, எந்தவித நிர்வாக இடையூறு இன்றி சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். நீதிபதிகளின் தனிப்பட்ட முடிவெடுக்கும் அதிகாரத்தில் எந்தவிதத்திலும் அரசின் நிர்வாகம் இடையூறு செய்யாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். "

என்றுள்ளது..

ஒன்று சொல்லவா…

ஊரில் எங்கு பிரச்சினை என்றாலும் நீதிமன்றத்தில் போய் முறையிடலாம்.

ஆனால் நீதிபதிக்கே பிரச்சினையென்றால் யாரிடம் போய் நீதி கேட்க முடியும்??
















புதன், 21 ஜூலை, 2021

கூட்டுறவு துறை என்னும் மாநில பட்டியலில் உள்ளதற்கு இது வரை இல்லாத வகையில் மத்திய அரசு தனியாக அமைச்சகம் அமைத்துள்ளது குறித்து?

 சமீபத்தில் நடந்த ஒன்றிய அரசின் மந்திரிசபை விரிவாக்கத்தின் போது, கூட்டுறவு துறை என்று புதிதாக உருவாக்கப்பட்டு அதற்கென ஒரு அமைச்சரும் நியமிக்கப்பட்டு உள்ளார். 


ஆனாலும் அது குறித்து பெரிதாக விவாதம் ஏதும் எழவில்லை.

கூட்டுறவுத் துறை என்பது சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் இருக்கும்போது, ஒன்றிய அரசின் இந்த செயல், மாநிலங்களின் அதிகாரத்தை தன வசம் ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்ளும் முயற்சியே என்ற முனுமுனுப்பு தவிர வேறு ஏதும் இல்லை.


சற்றே பின்னோக்கி பார்ப்போமேயானால், நாட்டில் கூட்டுறவு சங்கங்களை திறம்பட நிர்வகிப்பது தொடர்பான பிரச்சினைகளை கையாளும் 97 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 2011 டிசம்பரில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு பிப்ரவரி 15, 2012 முதல் நடைமுறைக்கு வந்தது தெரிய வரும். .

அதே போல, அரசியலமைப்பு சட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்க 19 (1) (சி) பிரிவு திருத்தப்பட்டு, அவை தொடர்பான பிரிவு 43 பி மற்றும் பகுதி IX பி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது,.

அதன்படி,

  • சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பிரிவு 19(1(சி)யானது, சங்கம் / தொழிற்சங்கங்கள்/ கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவதற்கான சுதந்திரத்திற்கு உத்தரவாதம் கொடுக்கும்.
  • புதிய பிரிவு 43 பி, தன்னார்வ உருவாக்கம், தன்னாட்சி செயல்பாடு, ஜனநாயக கட்டுப்பாடு மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தொழில்முறை மேலாண்மை ஆகியவற்றை ஊக்குவிக்க மாநிலங்கள் முயற்சிக்கும் என்று கூறுகிறது

  • சேரக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி IX Bயானது , ஒருங்கிணைத்தல், குழு உறுப்பினர்கள் மற்றும் அதன் அலுவலர்களின் விதிமுறைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் திறமையான மேலாண்மை ஆகியவற்றைக் குறிக்கிறது.


ஆனால் , 2013ல் இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து, மாணபுமிகு குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு போடப்பட்டது

அதில் மனுதாரர் தரப்பில் எழுப்பட்ட வாதமானது:

அரசியலமைப்பு சட்டத்தின் 368 வது பிரிவின் படி, ஏழாவது அட்டவணையில் உள்ள எந்தவொரு பட்டியலையும் பாராளுமன்றம் திருத்தவோ அல்லது நீக்கவோ விரும்பினால், அத்தகைய திருத்தம் சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்தகைய திருத்தத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யும் மசோதா ஜனாதிபதிக்கு ஒப்புதலுக்காக வழங்கப்படுவதற்கு முன்னர் மாநிலங்களவையில் பாதியளவு ஆதரவு கிடைத்திருக்க வேண்டும்".


கூட்டுறவு தொடர்பாக சட்டங்களை இயற்றுவதற்கான மாநிலங்களின் அதிகாரத்தை இந்த விதி மறுக்கவில்லை என்று ஒன்றிய அரசு வாதிட்டது.

 மாண்புமிகு உயர்நீதிமன்றமும், விசாரணை முடித்து, ஏப்ரல் 22, 2013 அன்று வழங்கிய தீர்ப்பில், "97 வது அரசியலமைப்பு திருத்தத்தின் சில விதிமுறைகளை ரத்து செய்ததோடு , ​​ ஒரு மாநில விஷயமாக இருப்பதால் பாராளுமன்றம்கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக சட்டங்களை இயற்றவோ அல்லது அறிவிப்பை வெளியிடவோ முடியாது என்று கூறியது.கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான திருத்தத்தின் சில விதிகள் கூட்டாட்சி முறையின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக உயர் நீதிமன்றம் கூறியது 97 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தது.

97 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் சில விதிகளை ரத்து செய்யும் குஜராத் உயர்நீதிமன்றத்தின் 2013 தீர்ப்பை எதிர்த்து ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

கூட்டுறவு துறை ஒரு மாநில விஷயம என்பதால் கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக பாராளுமன்றம் சட்டங்களை இயற்ற முடியாது என்ற தீர்ப்பை எதிர்த்து போடப்பட்ட வழக்கு அது.

அதே சமயம், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கையாள்வதற்கு சட்டங்களை இயற்றுவதற்கான மாநிலங்களின் பிரத்யேக அதிகாரத்தை இந்த விதி மறுத்துவிட்டதா என்ற கேள்வியையும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்தது.

விசாரணையின் போது, ஒன்றிய அரசிற்காக (வழக்கில் Union of India என்று தான் தாக்கல் செய்யப்பட்டது. அது தான் முறையும் கூட) ஆஜரானஅட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூட்டுறவு தொடர்பாக சட்டத்தை இயற்றுவதற்கான 97 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் மாநிலங்களின் அதிகாரங்களுக்கு எதிரான நேரடி அல்லது கணிசமான தாக்குதல் அல்ல என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொண்டு வாதிட்டவர்கள், கூட்டுறவு தொடர்பாக சட்டங்களை இயற்றுவதற்காக இந்தத் திருத்தம் மாநிலங்களின் பிரத்தியேக களத்திற்குள் பல தலையீடுகள் நேரடியாகச் செய்ததாக வாதிட்டனர்.

இதை மறுத்து, ஒன்றிய அரசு, "கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தில் சீரான தன்மையைக் கொண்டுவருவதற்காக இந்தத் திருத்தம் இயற்றப்பட்டதாகவும், அது மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.

இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசு, சீரான தன்மையை அடைய விரும்பினால், அதற்கு கிடைக்கக்கூடிய ஒரே வழி, அரசியலமைப்பு சட்டத்தின் 252 வது பிரிவின் கீழ், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு சட்டப்பூர்வமாக சட்டமியற்றும் அதிகாரத்தை பாராளுமன்றம எடுத்துக் கொள்வதே சரியானது என்றது.

ஆனால் இந்த திருத்தத்தின் மூலம், கூட்டுறவு பொறுத்தவரையில் சட்டங்களை இயற்றுவதற்கான மாநிலங்களின் அதிகாரம் இனி பிரத்தியேகமானதல்ல என்று ஆக்கப்பட்டுள்ளது என்று அது கூறியது.

சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் , 2: 1 பெரும்பான்மை தீர்ப்பில், 97 வது அரசியலமைப்பு திருத்தத்தின் கூட்டுறவு சங்கங்களின் திறமையான மேலாண்மை தொடர்பான சிக்கல்களைக் கையாளுவது குறித்த திருத்தத்தின் செல்லுபடியை உறுதிப்படுத்தியது, ஆனால், அவை அமைத்தல் மற்றும் செயல்படுவது தொடர்பான ஒரு பகுதியை செல்லத்தக்கதல்ல என்று நீக்கியுள்ளது.

நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், கே.எம். ஜோசப் மற்றும் பி.ஆர். கவாய் "கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான அரசியலமைப்பின் IX B பகுதியை நாங்கள் நீக்கியுள்ளோம், ஆனால் ஏனைய திருத்தத்தை காப்பாற்றியுள்ளோம்" என்று கூறினர்,

இந்த தீர்ப்பிற்கு மாறாக நீதிபதி ஜோசப் ஓரளவு கருத்து வேறுபாடு கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். அவர் 97 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் முழுவதையும் நீக்கியுள்ளார்.

இந்த தீர்ப்பே கடந்த செவ்வாயன்று தான் வந்துள்ளது. ஆனால் அதற்கும் முன்னரே ஒன்றிய அரசு, தனியாக இதற்கென ஒரு மந்திரி சபையை துவக்கியுள்ளது!!

வாழ்க ஜனநாயகம்!!



மூலம்..https://thewire.in/
 

செவ்வாய், 20 ஜூலை, 2021

(Question of Law) சட்டத்தின் பால் கேள்வி (Question of Fact) பொருண்மையின் பால் கேள்வி, எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?

 வினாவை பார்க்கும்போது பயமுறுத்துவது போல இருக்கும்..ஆனால் அதன் பொருள் ரொம்ப எளிமையானது.

ஒரு பிரச்சினைக்கு தீர்வு வேண்டி தான் கோர்ட்டுக்கே போவோம். எதில் பிரச்சினை வரும்?

சில சம்பவங்கள் குறித்து, அதை ஒட்டி உள்ள சட்ட பிரச்சினைகளுக்கு இல்லையா°?

இந்த சம்பவங்கள் குறித்து முன் வைக்கும் வினாக்களை தான் பொருண்மையின் பால் வினா என்றும் சட்ட தீர்வு வேண்டுபவைகளுக்கு, சட்டத்தின் பால் வினா என்றும் பெயர்..

இந்த எழுவினாக்களுக்கு உண்டான தீர்வை தான் தீர்ப்பாக தருவார்கள்…

அத்தோடு முடிந்ததா?

தீர்ப்பு எந்த சாராருக்கு பாதகமாக உள்ளதோ, அவர்கள், அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வர். விசாரணை செய்த நீதிமன்றதிர்கபோஉ அடுத்த உயர்ந்த அடுக்கில் உள்ள நீதிமன்றம், இதை விசாரிக்கும். அப்போது, இந்த எழு வினாக்களுக்கு விடை காணும்போது, விசாரணை நீதிமன்றம் இதையெல்லாம் கவனிக்க தவறிவிட்டது என்பதை தங்களின் முறையீடாக வைப்பர். சில சமயத்தில், தீர்ப்பு சாதகமாக பெற்றவரும் கூட, தீர்ப்பில் அவர்களுக்கு பாதகமாக உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி, மேல முறையீட்டு வழக்கில், க்ராஸ் ஆப்ஜெக்ஸன் என்று மனு போடலாம்.

மேல்முறையீட்டு நீதிமன்றம், இவற்றை ஆரராய்ந்து, தீர்வு காணும்..

அந்த தீர்ப்பிலும் உடன்பாடு இல்லாதவர்கள், இரண்டாம் மேல்முறையீடு செய்யலாம்.இதை முதல் மேல்முறையீடு செய்த நீதிமன்றதிற்கு மேல் அதிகாரம் கொண்ட நீதிமன்றம் விசாரிக்கும்.இந்த இரண்டாம் மேல்முறையீட்டில், சட்டத்தின் பால் வினாக்களை மட்டுமே எழுப்ப முடியும். மற்றதை குறித்து முதல் மேல்முறையீடு நீதிமன்றம் முடிவு செய்ததே இறுதியானது.

இந்த மூன்று அடுக்கு விசாரணை முறையால், கால தாமதம் ஆனாலும், ஒரு தெளிவான தீர்வு நிச்சயம் கிடைக்கும்…

சமீபத்தில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ஒரு சம்பவத்தை வேடிக்கையாக குறிப்பிட்டார்.

ஒரு நீதியரசரின் பேரன், அவரிடம் வந்து, "தாத்தா என்னுடைய பந்தை அக்கா தூக்கி போய் விட்டாள்" என்றானாம்.

நீதிபதி உடனே, "அவள் தான் கொண்டு போனாள் என்பதற்கு என்ன சாட்சி?" என்றாராம்..😁

நீதியரசர்களின் கவனம் எப்போதும் சாட்சியததை தேடுவதிலேயே இருக்கும் என்று காட்டுவதற்கு சொன்னது!!

உண்மையில், எல்லா இடங்களிலும், இந்த பொருண்மையின் பால் வினா கேட்கப்படுகிறது..அதற்கு விடை கண்டுகொண்டே அடுத்த செயலில் இறங்குவோம்..

ஆனால் அத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு சட்ட சிக்கலுக்கு தீர்வு தேடுவது தான் சட்டத்தின் பால் வினாவாயிருக்கும்.

சில சமயம் இந்த இரண்டும் கலந்து, தனித்தனியே பிரிக்க முடியாது இருக்கும்.

ஒரு பெண்ணை கடத்தியதாக ஒருவன் மீது வழக்கு…

அந்த பெண்ணை நான் கடத்தவேயில்லை. அவளாக தான் என்னுடன் வந்தாள.அதுவும் அவள் ஒரு மேஜர்" என்ற வாதத்தை முன்வைத்தான்..((பொருண்மையின் பால் வினாவுக்காணது)

இப்போது நீதிபதிக்கு குழப்பம்..

"அப்படியானால் யார் புகார் கொடுத்தது? ஏன் புகார் கொடுத்தார்?".

"அவள் கணவன்"(சட்டத்தின் பால் வின)☺️

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...