புதன், 7 ஜூலை, 2021

கர்மாவும் சட்ட சிக்கலும்

நம்  கர்மாவிற்கும் ஜாதகத்தில் உள்ள ஆறாம் பாவத்திறகும் உள்ள தொடர்பு தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

ஒரு ஜாதகத்தில் ஆறாம் இடம் எப்படி செயலாற்றுகிறது?

ஆறாம் பாவத்தை பத்தி குறிப்பா கேட்டதிலிருந்து அதனுடைய அடிப்படை விஷயங்கள் தெரியும்ன்னு நினைக்கிறேன் அதனால நேரடியா ஆறாம் பாவத்தின் குணாதியாசங்கள் பார்கலாம்.

 நோய், வம்பு வழக்கு, சிறை கடன், வயிற்றுக் கோளாறு, தண்ணீரில் மூழ்குவது இதையெல்லாம் ஜாதகர் அனுபவிப்பார்.என்ற பொது பலன் உண்டு.

எப்போது?

அந்த ஆறாம் பாவத்தின் அதிபதி, தன்னுடைய அல்லது தன் நட்பு கிரகத்தின் தசா புத்திகாலத்தில், நடக்கும்.

அது மட்டுமல்ல அந்த பாவத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்தால், அதனுடைய குணமும் மாறும்..பொதுவாக, 3, 6, 8, 11 மறைவு ஸ்தானங்கள் எனப்படும்.அங்கிருக்கும் கிரகங்களின் பொதுவான குணம் மறைந்துவிடும். என்பர்..

ஆனாலும் சில கிரகங்கள் தங்களுடைய குணத்தை விடாமல் காட்டும் பாருங்க.

சூரியன்.. சூரியன் தகப்பனை குறிப்பவர்..பிள்ளையை விட்டுக்கொடுப்பாரா?எதிரிகளை ஜெயம் கொள்ளும்.

சந்திரன்.. சாதரணமாக , இந்த சந்திரன்தான் நவக்கிரகங்களையும் வேகமாக நகரக் கூடியது அதாவது 21/2 மணி நேரத்தில் ஓர்் ராசியை கடக்க கூடியது.

ஆனால் ஆறாம் பாவத்தில் வந்து உட்கார்ந்தவுடன் மந்தம் ஆகிவிடும். வயிற்றின் ஜீரணமும் அப்படியே.

செவ்வாய் இருந்தால் தன்னை எதிர்ப்பவர்களை திறம்பட கையாண்டு வெற்றி கொள்ளுதல்

புதன் இருக்கும் போது தொழுநோய.

குரு இருந்தால்ஒரு ஸ்திரத்ன்மை இல்லாத வயிறு சேர்மானம், கடன் தொல்லைக்கு உட்படலாம்

சுக்கிரன் இருந்தால் சுகபோகத்தை அனுபவிக்க முடியாது. மோசமான உடல்நிலை உள்ள மனைவி பெண்களை வெறுப்பார்.

சனி கிரகம் ஆறாம் வீட்டில் இருக்கும்பொழுது எதிரிகளை வெற்றி கொள்வார்

இது மட்டும் இல்லே..

ஆறாம் பாவத்தின் அதிபதி எட்டாம் பாவத்தில் அதிபதியை பார்த்தாலோ, அல்லது சேர்ந்தாலோ ஜாதகரின் உடல் நிலை பாதிக்கப்படும்

அதே போல நாலாம் பாவத்தின் அதிபதி 6 8 9 11 அதிபதியுடன் எந்தவிதத்திலாவது சம்பந்தப்பட்டிருந்தால் அதாவது பார்ப்பது சேர்ந்திருப்பது, பரிவர்த்தனை செய்து இருப்பது போன்றவற்றில் தொடர்பு கொண்டிருந்தால் ஜாதகருக்கு வம்பு வழக்கு சிறையில் அடைப்பு ஆகியவைகளில் சேர்க்க சிக்க நேரலாம்

சில சமயம் அந்த சூழ்நிலை வந்தாலும், சிறைக்கு போகாமல் தப்பிக்கவும் செய்யலாம். அதற்கு அவருடைய ஜாதகத்தில் ஆறாம் பாவத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் சாரம் பெற்றிருக்கிறாரோ, அதன் அதிபதி ஜாதகருக்கு யோகாதிபதியாக இருக்கவேண்டும். முன்ஜாமீன் கிடைத்துவிடும்

சரி இந்த வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்பவர் அதில் இருந்து விடுபட்டு விடுவாரா என்றும் பார்க்கலாம் .

எப்படி?

இந்த ஆறாம் பாவத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் அந்த அதிபதி இவருக்கு நட்பாக இருந்தால் , அவர் அந்த வழக்கு வம்பு வழக்கில் இருந்தும் விடுதலை பெறலாம்

இதை எல்லாம் நேற்று பார்த்துக்கொண்டிருந்தேன்...என்று சொல்ல முடியாது..

குடைந்து கொண்டிருந்தேன். ஏன் தெரியுமா?

ஒரு கேள்விக்கான பதிலை தேடி...

சிலர் மட்டும் எந்த நல்லது செய்தாலும், அவர்கள் இறுதி நேரம் மோசமாக போகுதே..ஏன்?

ஸ்டான் சுவாமி ..

ஒரு சமூக ஆர்வலர். ஒரு சமூக சேவகர் மற்றும் பாதிரியார்,

திருச்சியை சேந்தவர்.

ஜார்க்கண்டில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக பல தசாப்தங்களாக போராடி வரூபவர். .

வந்தவர என்று எழுத முடியவில்லை. தன் கடைசி நாட்களிலும் தன்னுடைய உரிமைகளுக்காக போராடியே உயிரை விட்டதால், என்றும் நம் மனதில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்!!

இடப்பெயர்வுக்கு எதிரான மக்கள் இயக்கமான விஸ்தாபன் விரோதி ஜன் விகாஸ் அந்தோலனின் நிறுவனர்....

ஆதிவாசி மக்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து, பல காலமாக அந்த மக்களுடன் சேர்ந்து போராடுபவர்..

போன அக்டொபரில், பீமா கரோகன் வழக்கில் தொடர்பு கொண்டு, சதி ஆலோசனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஒன்பது மாதங்களாக சிறையில் இருப்பவர்..

சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டவர்....

இந்த சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்குகளில் வெறும் 2% மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரம் சொல்கிறது..

ஒரு தடவை கூட  இவரை போலீசார் விசாரிப்பதற் காக போலீஸ் காவல் கேட்கவில்லை என்கிண்றனர். ஒருவேளை அந்த அளவிற்கு அவருக்கு எதிரான தடயம் கிடைத்ததோ?

அப்படித்தான் சொல்கிறது அந்த விசாரணை அமைப்பு. அதனால் தான் அவர் பிணை மனு போட்டபோதெல்லாம் கடுமையாக எதிர்த்தார்களாம்!!

அவருக்கு எதிராக கூடுதல் ஆவணங்களை, பிணை மனு விசாரணையின் போது, தாக்கல செய்கிறார்கள்!

கடுமையான குற்றம் அவர் மீது இருக்கிறது, வயோதிகத்தை, நோயை காரணம் காட்டி தப்பிக்க பார்க்கிறார் என்று எதிர்க்கிறார்கள்..

நீதி தேவதை தான்  கண்ணை கட்டி கொண்டவள் ஆயிற்றே?

நீதீயரசர்களுக்கு அவர் உடல் நிலை மோசம் பற்றி தெரிந்தாலும், ஆவணங்கள் எதிராக காட்டுகிறது..

உடன் மருத்துவ வசதியை அதிகப் படுத்த சொல்லி உத்தரவிட்டு, எதிர்தரப்பை  பதில் தாக்கல் செய்ய சொல்கின்றனர்.

நடைமுறை என்று ஒன்று உள்ளதே..

அந்த மனு விசாரணை நடக்கும்போது தான் இடியாக வருகிறது செய்தி..

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டதாகிறதே?!

ஆனாலும் சிறை நிர்வாகம், அவர் சிறையில் போதிய மருத்துவ வசதி இல்லை என்று சொல்லி அவர் மருத்துவமனை சிகிச்சையோ, வீட்டு காவல் கோரிய போது எதிர்க்காமல் இருந்திருக்கலாம்…

அவர் பார்கின்சன் நோயால் அவதிப்படுவதால், தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் சிப்பர் பாட்டில் உள்ள பையை பறிமுதல் செய்த போலீசார், அதை அவர் கேட்ட போதாவது அவரிடம் திரும்பி கொடுத்திருக்கலாம்…

சிறை நிர்வாகமாவது , அவர் கேட்டவுடன் மற்றவர்  கொண்டு வந்து கொடுத்த போர்வையையும் சிப்பரையும் தடுக்காமல் இருந்திருக்கலாம்..

எல்லாமே ..லாம் தான்..

கடைசியில் அவர் பயந்தது போலவே தான் ஆனது..

எதுவும் செய்ய இயலாதவர்களாய் நாம்…

எல்லாம் முடிந்த பிறகு, இப்போது இதை பற்றி பேசி என்ன பயன்?

ஆனாலும், நம் வீட்டிலோ பக்கத்து வீட்டிலோ எந்த குழந்தையாவது இதை கையில் வைத்திருப்பதை பார்க்கும்போது, ஸ்டான் ஸ்வாமி அவர்கள் நம் மனக்கண்ணில் கண்டிப்பாக வந்து போவதை நம்மால் தடுக்க முடியாது!!

திங்கள், 5 ஜூலை, 2021

மின்சார விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய நஷ்டஈடு, உடனடியாக கிடைக்கிறதா?

 பெட்ரோல், டீசல் விலை எகிறினால் என்ன..முன்னால் எல்லாம் 50 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் வாங்குவோம்.இப்போது 100 ரூபாயில்!!

இது பொருளாதார வளர்ச்சி தானே!!னு வஞ்சப்புகழ்ச்சியா ஒரு மீம்ஸ் பார்த்தேன்..

ஏற்கெனவே மார்க்கெட்டில் உள்ள இரண்டு சக்கர வண்டிகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது!!

சமீபத்தில் டாடா நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்களை 2025ல் சந்தையில் கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது!!

இந்த கோடை நேரத்திலே "கரண்ட் கட்" ஆன இந்த இருட்டு இரவில்.. சட்டுனு அணில் குட்டி தான் நினைவுக்கு வருது🤣

தமிழ் நாட்டில் மட்டும் தான் இன்னமும் விவசாயத்திற்கு இலவச மின்சாரம்..

அதில் அதிகமாக பயன் பெறுவது, உண்மையான விவசாயி தானா என்ற மிகப் பெரிய கேள்வி இருந்தாலும், நான் சொல்லப்போவது அது பற்றி இல்லை.

மழைக்காலத்தில் மட்டும் தான் மின்சார கசிவில் இறப்பு, மின்சாரம் தாக்கி மரணம் என்று செய்தித்தாளில் பார்ப்போம்.

ஆனால் உண்மை தெரியுமா?

சராசரியாக தினமும் முப்பது இந்தியர்கள் மின்சாரம் காரணமாக கொல்லப்படுகிறார்கள்..

சட்டமன்றமாகட்டும்… அமுல்படுத்தும் அதிகாரியாகட்டும் , கட்டுப்படுத்துபவர்கள் /மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் என்று யாருமே தடுப்பு நடவடிக்கைகளை வகுக்கும்போது, போதுமான, தெளிவான நிலையான இழப்பீடு பெறும் நடைமுறையை உருவாக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்!!

மின்சாரம் தொடர்பான முழுமையான சட்டம் என்றால் மின்சார சட்டம், 2003 தான். ஆனால் அதை அமுல்படுத்துவோரை துரதிஷ்டவசமாக, கட்டண நிர்ணயம், ஒழுங்குமுறை மற்றும் சில தகராறு தீர்க்கும் செயல்பாடுகளில் இருந்து கணிசமாக விலக்கிவிட்டது.

அடுத்து உள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ...இதற்கு நுகர்வோரின் குறைகளைத் தீர்ப்பதற்கோ அல்லது விபத்துக்குள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கோ அதிகாரம் இல்லை.

எனவே, இந்த சட்டம் வெறுமனே, மின்சார பயன்பாட்டு நிறுவனங்களுக்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தனியார் நிறுவனங்களுக்கும், நுகர்வோர்கள், ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட / உத்தரவாதமான பணம் செலுத்துவதை உறுதிசெய்தது..

என்ன கொடுமைடா சரவணா!!

இந்த முறையின் மிகப்பெரிய பயனாளிகள் யார் தெரியுமா?

பெரிய தொழில்துறை , வணிக நுகர்வோர் , ஆனால் இவர்கள், இந்த - ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே உள்ளனர்.!!பெரிய இலாபகரமான நுகர்வோர்களை பெறுவதற்கு , பெரிய உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள்…ஆனால் ..

சிறு / குறு நுகர்வோர், ஏகபோக விநியோக பயன்பாடுகளின் தயவுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.

இப்போது இன்னும் மோசம்…

மின்சார வர்த்தக நிறுவனங்களும் எரிசக்தி பரிமாற்றங்கள் போன்ற புதிய இடைத்தரகர்கள் எல்லாம், எந்தவொரு உள்கட்டமைப்பு முதலீடுகளும் இல்லாமல் உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தக லாபங்களை பெற்று வருகின்றனர்..

நுகர்வோர்கள் தான் பாவம்…இவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் பணம் செலுத்துகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஏதும் பயன் உண்டா?!.என்றால் விடை பூஜியம் தான்.

நாட்டு முன்னேற்றம், என்ற பெயரில், மில்லியன் கணக்கான ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்துகிறது…பெரிய மின் நிறுவனங்களுக்கு பயனளிப்பதற்காக பில்லியன்மதிப்புள்ள பரிமாற்ற உள்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

சமீபத்திய ஆய்வின் படி, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய தேவையான மொத்த நில தடம் ~ 55,000 கிமீ 2 முதல் 125,000 கிமீ 2 வரை இருக்கும்,.

இது இமாச்சல பிரதேசம் அல்லது சத்தீஸ்கரின் அளவை ஒத்தது.!!

. எல்லாம் சரி தான்.ஆனால்..

இந்த நிலங்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்டவை என்பதால், நிலம் கையகப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013 ன் கீழ் கொடுக்க வேண்டிய நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மைக்கான இழப்பீட்டு கட்டமைப்புகள் இவர்களுக்கு பொருந்தாது.!!

மின்சாரம் குறித்த முழுமையான சட்டம் எனப்படும் 2003 சட்டத்தில், எரிசக்தி திட்டங்களுக்கான உற்பத்தி நிலையங்கள், துணை மின்நிலையங்கள் மற்றும் பரிமாற்றக் லைன்கள், அதுவும் குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க காற்று மற்றும் சூரிய ஆற்றல் திட்டங்கள்.நிறுவுவதற்காக, நிலங்களை இழந்த சிறு / குறு விவசாயிகளுக்கு எந்தவொரு இழப்பீட்டு முறையும் இல்லை,!!

உண்மையில், அரசியலமைப்பு சட்டத்திற்கு முந்தைய ஒரு சட்டம் தான் - இந்த இந்தியன் டெலிகிராப் சட்டம், 1885 -இது நில உரிமையாளர்களை போதுமான இழப்பீடு இல்லாமல் நிலங்களை விட்டு கொடுப்பதை கட்டாயப்படுத்த, பயன்படுத்தப்படுகிறது!

.ஏறக்குறைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்த காலனித்துவ காலத்தின் சட்ட விதிகளை மேற்கோள் காட்டி இழப்பீடு வழங்காமல் இருக்க, மின் நிறுவனங்கள் பேரார்வம் கொள்கின்றன..

இன்று கூட, உச்சநீதிமன்றம், அரசுகள் காலாவதியான சட்டத்தை இன்னமும் பயன்படுத்துகின்றனர் என்று வேதனை தெரிவிக்கவில்லையா?!

மின் விபத்துகளால் தினமும் உயிர் இழப்பவர்களின் பாதிப்பு மோசமானது. 2015க்குப் பிறகு மின் விபத்துக்கள் குறித்த தரவுகளைத் தொகுக்க, மத்திய மின்சார ஆணையம் (சி.இ.ஏ) கூட கவலைப்படாததால் ஒன்றும் இல்லை!

2015 வரை தொகுக்கப்பட்ட தரவு கூட பெரிய இடைவெளிகளைக் கொண்டுள்ளது, பெரும்பாலான மாநிலங்கள் விபத்துக்களைப் புகாரளிக்க கூட மெனக்கெடவில்லை..அப்புறம் தானே. விபத்துகளுக்கான காரணங்களை தேடுவது!

ஆற்றல் சுதந்திரமாக பாராட்ட ப்படுகின்ற இதன் மிகப்பெரிய பலியாக சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் உலகெங்கிலும் உள்ளனர்..

முதலில், மின்சார ஆலைகள் மற்றும் இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்டரீதியான கடமையைக் கொண்ட மத்திய மின்சார ஆணையம் மற்றும் தலைமை மின் ஆய்வாளர்கள், இந்த திட்டங்களுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு பின்னரோ இந்த நிறுவல்களின் மின் பாதுகாப்பை ஆய்வு செய்ய திட்ட இடங்களுக்கு வருவதில்லை.. இதன் விளைவாக, மின்சார இணைப்புகள் மற்றும் தவறான தற்போதைய மின்மாற்றிகள் இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான உயிர்களை பாதிக்கின்றன

.எனவே, முன்கூட்டியே ஆணையிடுதல் மற்றும் அவ்வப்போது மின் பரிசோதனைகள் என்பவை எல்லாம் வெறும் மோசடியாகவே இருக்கின்றன.

எந்தவொரு பொறுப்பும் யாருக்கும் இல்லை, குறைவான எண்ணிக்கையில் அதிகாரிகள் உள்ளது, அவர்களின் அலட்சியம் காரணமாக அவர்களின் தனிப்பட்ட பொறுப்பு மிகக் குறைவு. ஒவ்வொரு மின் விபத்தும் மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்ட மின் ஆய்வாளர் மற்றும் விநியோக நிறுவனத்தின் மின் பொறியாளரிடம் கண்டறியப்பட்டால் மட்டுமே, இந்த குளறுபடியை சரி செய்யலாம்.

2002 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் மத்தியப் பிரதேச மின்சார வாரியத்தின் வழக்கில்

https://indiankanoon.org/doc/1530219/

மின்சார விபத்துக்கள் ஏற்பட்டால் மின்சார விநியோக பயன்பாட்டின் செயல்கள் மற்றும் குறைகளுக்கு கடுமையான பொறுப்புக் கொள்கை பொருந்தும் என்று கூறி மின்சார வாரியங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தனர்.

இந்த தேதி வரை இது தான் சட்டமாக உள்ளது.

இருந்தாலும், மின் விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயங்கள் (MACT கள்) வடிவத்தில் கிடைப்பது போல விரைவான அல்லது செலவு குறைந்த இழப்பீட்டு கொடுக்கும் நடைமுறை இல்லை..

தற்போது, ​​பாதிக்கப்பட்டவர்கள் சிவில் நீதிமன்றங்களுக்கு போக வேண்டியுள்ளது. அதில்

  • நீதிமன்றக் கட்டணத்தை செலுத்தி சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்
  • அபாயகரமான விபத்துச் சட்டம், 1855 இன் விதிகளைச் செயல்படுத்த வேண்டும்.
  • அதிக நேரம் செலவழிக்க வைப்பதால் ஏழையான பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஏமாற்றுகிறது.

எனவே, சில உடனடி தீர்வுகள் தேவை

  • சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் சரியான இழப்பீட்டு கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும்.
  • உற்பத்தியாளர்கள் மற்றும் மின் பயன்பாடுகள் சம்பந்தப்பட்ட கூட்டு மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் நில உரிமையாளர்கள் கையெழுத்திடுவதன் மூலம் மின் நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட இலாபத்தில் விவசாயிகளை பங்குதாரர்களாக ஆக்குவது.
  • இழப்பீடு வழங்குவதற்காக ஒரு சிறப்பு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும். அல்லது இந்த அதிகாரத்தை MACT களிடமோ அல்லது ஒழுங்குமுறை கமிஷன்களுக்கு அதிகாரம் அளிப்பதே சிறந்த வழி.
  • ஒவ்வொரு மின் விபத்துக்குமான பொறுப்பு மாநில அரசின் விநியோக நிறுவனங்கள். மற்றும் மின்சார அதிகாரிகள் மீது நிர்ணயிக்கப்பட வேண்டும்.
  • போதுமான மற்றும் சீரான நஷ்டஈடு வழங்குவது குறித்து உறுதி செய்யப்பட வேண்டும். ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும், ஆபத்தான மின் விபத்துக்களுக்கான நஷ்டயீட்டை தீர்மானித்துள்ளனர். உதாரணமாக, கர்நாடகா மற்றும் ஆந்திராவில், ஆபத்தான மின் விபத்து ஏற்பட்டால் நஷ்டயீடு ரூபாய் 5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பீகார், தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் இது 4 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டு சீரான தன்மை இல்லை.

இந்த நஷ்டஈடு தொகைகள் தவறான பொறுப்புக்காண இழப்பீடுகள் அல்ல. அதை கொடுப்பதன் மூலம், விநியோக நிறுவனங்கள் தங்கள் பொறுப்பை ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை, ஆனால் துக்கப்படுகிற குடும்பங்களுக்கு அது, உடனடி உதவியாக இருக்ககின்றது.

ஆனால் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் நஷ்டஈடு என்ற ஒன்று இருப்பதை பற்றி முற்றிலும் அறிந்திருக்க மாட்டார்கள் அல்லது இந்த அளவு ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், கூடுதல் நஷ்டஈட்டு கிடைக்காதோ என்ற தவறான எண்ணத்தில் உள்ளனர்.

இந்த குழப்பத்தை அதிகரிப்பது போல, கர்நாடகாவில் உள்ள கே.பி.டி.சி.எல், இந்த சோலட்டியம் பெற்றவர் மற்ற சலுகை பெற தடை விதித்து, ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது,

இந்த ஒழுங்கின்மையைக் கருத்தில் கொண்டு தான், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சோலட்டியம் பெறுவதில் மாற்று கருத்து கொண்டுள்ளனர். அதே சமயம், வழக்குத் தொடுப்பது கூட முடியாத வறண்ட நிலையில் உள்ளனர்.

  • இழப்பீட்டை ஒரு முறை சிறிதளவு கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை பறிக்கும் இந்த அநீதி சட்டமன்றத்தினாலும், நீதித்துறையினாலும் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.
  • இழப்பீட்டை உடனடியாக வழங்குவதற்காக ஒரு நோடல் அதிகாரி மற்றும் ஒரு ஒம்புட்ஸ்மனுடன் ஒரு ஹெல்ப்லைனையும் விநியோக நிறுவனமும் நிறுவ ஒவ்வொரு மாநில அரசாங்கமும் செய்ய வேண்டும்.
  • நுகர்வோர் குறைகளைத் தீர்ப்பதற்கான ஒரு ஒம்புட்ஸ்மேன் அமைப்பு ஏற்கனவே 2003 சட்டத்தின் பிரிவு 42 இன் கீழ் நியமிக்கப்பட்டுள்ளது. இதை விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது நீட்டிக்கப்படலாம்.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு இது வெறுமனே ஒரு சோலாட்டியம் என்பதையும், சட்டத்தின் கீழ் தங்களுக்குக் கிடைக்கும் வளங்களைப் பெறுவதற்கான ஒவ்வொரு உரிமையும் அவர்களுக்கு உண்டு என்று புரிய வைக்க வேண்டும்.
  • .அதனுடன், சட்டமன்றம் மின்சார விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயங்களை நிறுவ வேண்டும்.
  • விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நீதிமன்ற கட்டணம் செலுத்துவதை ரத்து செய்வதற்கான சட்டமன்ற தலையிட்டால், உரிமைகோருபவர்களுக்கு நீதியை உறுதி செய்யும்.

இந்த நடவடிக்கைகள் எல்லாம் ,எரிசக்தி சுதந்திர இந்தியா என்பது, ஒரு பெரிய இழப்பீட்டு கட்டமைப்பின் மேல் கட்டப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த உதவும்!!!

நன்றி.. தி வயர்

சனி, 3 ஜூலை, 2021

இட ஒதுக்கீடு என்ற ஒன்று கொண்டுவரப்பட்டதன் நோக்கம் தற்போது எவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது?

 

இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

உண்மையை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.இந்த சமூகம் ஆதிவாசிகளையும் தலித்துகளையும் ஒடுக்கியது கொஞ்சமா நஞ்சமா?

அவர்களையும் சமமாக ஆக்கும் வரையில், இட ஒதுக்கீடு வேண்டும் என்றார் டாக்டர் அம்பேத்கார்..

" சமத்துவக் கொள்கையைக் கொண்டிருப்பது நல்லது, ஆனால் நிர்வாக அமைப்பிற்கு வெளியேயுள்ள சில சமூகங்கள் உள்ளே வரும் ஏற்பாடும் இருக்க வேண்டும்" என்றார்.

ஆனால் அவருக்கு தெரிந்து இருந்தது.. இந்திய சமூகம், அதன் கீழ் சாதியினரைப் பார்க்கும் விதத்தை, அந்த சட்டம்மாற்றும் என்று அவர் நம்பவில்லை.. அதற்கு தீர்வு , இட ஒதுக்கீடு இல்லை என்று உறுதியாக நம்பினார். அதனால்தான், தலித்துகளுக்கான தனி தொகுதிகளை ஒதுக்குவது அல்லது வேலைகள் ஒதுக்குவது போன்றவை 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையில் பாராளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் இட ஒதுக்கீடு செய்ய அவர் தயக்கத்துடன் தான் ஒப்புக்கொண்டார்.

இதோ அவருடைய பயத்தை, ஒரு எச்சரிக்கை குறிப்பாக நவம்பர் 30, 1948 அன்று, எதிர்கால அரசாங்கங்களுக்கு கொடுக்கிறார்

"பெரிய அளவிலான இட ஒதுக்கீடுகள், சமத்துவத்தின் ஆட்சியை அழிக்கக்கூடும். இடஒதுக்கீடு என்பது, அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது பிரிவு (இப்போது பிரிவு 14) உடன் ஒத்துப்போக வேண்டும்"

அதன் அடிப்படையில் வந்தது தான் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 15(4) மற்றும் பிரிவு 16(4)

15(4) "இந்த பிரிவிலோ அல்லது 29 வது பிரிவின் (2) பிரிவுகளிலோ எந்தவொரு சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய குடிமக்களின் முன்னேற்றத்திற்காக அல்லது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான எந்தவொரு சிறப்பு ஏற்பாட்டையும் அரசு தடுக்காது

16 (4) வது பிரிவு பின்வருமாறு கூறுகிறது: “எந்தவொரு சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவோ அல்லது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காகவோ எந்தவொரு சிறப்பு ஏற்பாடுகளையும் செய்வதிலிருந்து அரசு 16 வது பிரிவு அல்லது பிரிவு 29 (பிரிவு2) இல் எதுவும் தடுக்காது ”.

இந்த இட ஒதுக்கீடு பல தசாப்தங்களாக இன்று வரை தொடர்கிண்றது.

ஏன்?

நம் ஆட்சியாளர்களுக்கு அதை நீக்க, பயம், குறைக்க பயம்…ஆனால் அதை கூட்ட பயமில்லை!

அப்படியானால் இட ஒதுக்கீடு பெற்ற எல்லோரும் முன்னேறிய வகுப்பாக அல்லவா மாறியிருக்க வேண்டும்.,?

ஆனால் நடந்தது என்ன?

இதோ கடைசியாக நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 புள்ளிவிவரங்களின் படி,

  • 6-13 வயதுக்கு இடைப்பட்ட 38 மில்லியன் பள்ளிக்கு போகாத குழந்தைகள்!
  • இதில் 7.1 மில்லியன் தலித் மற்றும் 4.6 மில்லியன் ஆதிவாசி குழந்தைகள் அடங்குவர்.
  • ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்த 38 மில்லியன் குழந்தைகளில், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் எந்தவொரு அடிப்படை கல்வி பெறவில்லை.

அப்படியானால் இத்தனை வருடங்களாக இருந்த இட ஒதுக்கீடு அவர்களுக்கு ஒரு பயனும் அளிக்கவில்லையா?

அப்படித் தான் தெரிகிறது..

அதற்கு ஏற்றார் போல, இட ஒதுக்கீட்டின் அளவு கூடுகிறது. அந்த பட்டியலில் உள்ள வகுப்புகள் தான் கூடுகின்றன..

சமீபத்தில் மராத்திய இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் தீர்ப்பை எழுதிய நீதியரசர்களில் ஒருவரான நீதியரசர் அசோக் பூஷன் , தன் தீர்ப்பில் "50 சதவீதத்திற்கு மேற்பட்ட இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது ஒரு சமுதாயம், சமத்துவத்தின் அடிப்படையில் , இயங்காமல் சாதியின் அடிப்படையில் மட்டுமே இயங்குகிறது என்பதைக் காட்டும்" என்றார்

அது என்ன 50% இட ஒதுக்கீடு?

1992 ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்ட இந்திரா சாவ்னி வழக்கின்

இது மண்டல் தீர்ப்பு என்றும் அழைக்கப்படுகிறது -

முக்கிய தீர்ப்பு -

  • 50% என்ற அளவிற்கு மேல் கல்வி, பணியில் இட ஓதுக்கீடு கூடாது.
  • அப்படி கொடுக்கவேண்டும் என்றால் அது அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே இருக்க வேண்டும்.

…என்றது..

ஆனாலும் இதற்கு முதலில் பிள்ளைகள் சுழி போட்டது நாம் தான்! 

69% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு, அதை எந்த சட்டமும் தடுக்க முடியாமல் அரசியல் சாசன 9ம் அட்டவணையில் கொண்டு போய் வைக்கவில்லையா?

69% இட ஒதுக்கீட்டை, 90கலீல் இருந்து அனுபவித்து வரும் நம்மை பார்த்து, மற்ற மாநிலங்களும் இட ஒதுக்கீடு கொடுக்க ஆரம்பித்தன.

அப்படி ஒரு முயற்சியாக, மஹாராஷ்டிரா அரசு, மராத்தி வகுப்பினருக்கு 16% இடம், கல்வி மற்றும் வேலைகளில் மராட்டியர்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை 2018 ல போட்டது. .

ஏற்கனவே பிற்பட்ட வகுப்பினருக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு அவர்கள் அதனை அனுபவித்துக் கொண்டு வரும் சூழ்நிலையில் அதை உடைத்தால் அவர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என்பதனாலேயே இவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், மான்புமிகு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், சமீபத்தில் மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என்று அறிவித்துள்ளது பற்றி நமக்கு நன்றாக தெரியும் .

அப்படியானால் சூழ்நிலைக்கு ஏற்ப நீதி மாறுமா?

 என்றால் ஆமாம்..

நீதி சூழ்நிலைக்கேற்ப மாறும் தன்மை கொண்டது தான்..

கொலை செய்வது குற்றம் என்றால், தற்காத்துக்கொள்ள செய்தல் குற்றமாகாது

..ஆனால் தர்மம் மட்டுமே நிலையானது..

அப்படியெனில், மரத்தியர் இட ஒதுக்கீடு வழக்கில  இட ஒதுக்கீடு அதர்மமா?

இத்தனைக்கும் அந்த அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீடு சரியானது என்று தான் பம்பாய் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது ஆனால் அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் இந்த தீர்ப்பு!!

உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் கொண்ட பெஞ்சு, இரு வேறு தீர்ப்புகளை அளித்தாலும், 

  • மராத்தா வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது என்று ஒருமனதாக தீர்ப்பு வழங்கியது
  •  அது முரண்பட்ட ஒரே விஷயம் என்னவென்றால் மாநில அரசுகளுக்கு சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் கண்டு, தக்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு 103 வது சட்ட திருத்தத்தின் கீழ் இன்னமும்  உள்ளதா என்பது குறித்த முரண்பட்ட கருத்து இருந்ததால் மட்டுமே !!

அது ஒரு தனி கதை..அதை பின்னாடி பார்ப்போம்.

அந்த வழக்கின் தீர்ப்பின் சாராம்சத்தை பார்த்தாலே, அந்த இட ஒதுக்கீட்டிற்கும் நம்முடைய தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்குமுள்ள வேற்றுமை புரியும்.

இன்னொரு விஷயம்..இந்த 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகள் விரைவில் உச்சநீதிமன்ற விசாரணைக்கு வரையுள்ளது. இது நாள் வரை மண்டல் தீர்ப்பு எனப்பட்ட இந்திரா  சகானி தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு செய்த  தீர்ப்பு வந்த பின்பு தான்,  இதை விசாரனைக்கு எடுத்து கொள்வோம் என்றனர்..

ஆனால் இந்த வழக்கில்,  சகானி வழக்கு தீர்ப்புக்கு எந்த சீராய்வு தேவையில்லை என்றனர் நீதியரசர்கள்!

அதனால் நம் 69% ஓதுக்கீடும் சீக்கிரம் சோதனைக்கு உள்ளாக இருக்கிறது!!

ஒரு சின்ன பிளாஷ் பேக் 

இந்திரா சகானி வழக்கில் (மண்டல் தீர்ப்பு) உச்சநீதிமன்றம் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்று சொல்லி இருந்ததற்கு எதிராக கெய்க்கவாட் கமிஷன் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் தான்,மராத்தா வகுப்பினருக்கு கல்வி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பிலும் 16 சதவீத இட ஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பித்தது

என்ன தவறு கண்டது நீதிமன்றம்?

  • இந்த மராத்திய வகுப்பினர் தான், அரசு வேலைகளில்  பெரும்பான்மையான இடங்களில் உட்கார்ந்து உள்ளனர்.
  •  அரசாங்க பணியில் முதல் வகுப்பு பணியான ஏ கிரேடு அலுவலர்கள் என்ற பிரிவில் மட்டுமே இந்த மராத்திய வகுப்பினர் 33 சதவீத இடத்தை பணிகளில் அமர்ந்துள்ளனர் அதுமட்டுமல்ல பிரீ பி கிரேடு பணியில் 29 சதவீதமும் சி கிரெடில்37 சதவீதமும் டி கிரேடில் 37 சதவீதமும் இந்த மராத்தா வகுப்பினர் தான் கைப்பற்றியுள்ளனர் எனவே அவர்களை பிற்பட்ட வகுப்பினர் என்று கருத முடியாது
  • அவர்கள் வகுப்பை பொருத்து, போதுமான அளவு பிரதிநிதித்துவம் அரசு பணிகளில் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தது
  • இந்த அரசாணையை இவர்கள் கெய்க்வாட் கமிஷனின் தரவுகளின் அடிப்படையில் தானே பிறப்பித்தார்கள் எங்கே தவறு நடந்தது என்றால் அந்த கமிஷன் ஓபன் கேட்டகிரியில் இருக்கும் பணி களுக்கு எதிராக மராத்தா வகுப்பினருக்கு உள்ள பணி விகிதாச்சாரத்தை ஒப்பீடு செய்வதற்கு பதிலாக இரண்டையும் ஒன்றிணைத்து கணக்கீடு செய்தது தவறு .
  • அதனால் தான் கமிஷன் மராத்தா வகுப்பினருக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்ற முடிவை எடுக்க நேர்ந்தது ஆனால் உண்மையில் மராத்தா வகுப்பினர் அரசு பணிகளில் 30 சதவீதத்திற்கு அதிகமாக பிரநிதித்துவம். பெற்றிருந்தனர் என்பதை உச்ச நீதிமன்றம் கண்டறிந்தது
  • கமிஷன் செய்த இன்னொரு தவறு என்னவென்றால் அரசியல் சாசன பிரிவு 16 (4 )இன் கீழ், சதவீத பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதை தவறாக போதுமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று சொன்னதாக தப்பாக அர்த்தம் கொண்டு விட்டது
  • அதே போல இன்னொரு தவறையும் கமிஷன் செய்தது . இதற்கு முன்னர் முன் தங்கிய வகுப்பாக கணக்கில் கொள்ளப்பட்ட மராத்தா வகுப்பு, இடைப்பட்ட காலத்தில் எப்படி பின்தங்கிய வகுப்பாக கணக்கில் எடுக்கப்பட்டது என்பதற்கான சமூக பொருளாதார மாற்றங்களை தரவுகள் அடிப்படையில் நியாயப்படுத்த தவறிவிட்டது
  • தேசிய நீரோட்டத்தில் வெளியிலுள்ள சமுதாய வாழ்வு" என்ற இந்த சமுதாய சோதனைக்கும் அந்த குறிப்பிட்ட வகுப்பு உட்படுத்தப்பட வேண்டும்
  • அதேபோல ஒரு வகுப்பின் சமுதாய மற்றும் கல்வியில் பின் தங்கியதாக உள்ளதா என கணக்கிடும் பொழுது அந்த சமுதாய மக்கள் திறந்தவெளி போட்டி தேர்வில் மற்ற சமுதாய மக்களுடன் போட்டியிடும் அளவிற்கு இருந்து அந்தப் பதவிகளில் 30 சதவீதத்திற்கு மேல் அமர்ந்து இருக்கின்றது என்பதை கவனிக்கவும் தவறிவிட்டது
  • எனவே பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்ற அரசியல் சாசன விதியின் கீழான விதியை மராத்தா வகுப்பினருக்கு கொடுக்க இயலாது
  • அதேபோல இந்திரா சகானி வழக்கில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனில் அசாதாரணமான சூழலில் மட்டுமே வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கும்பட்சத்தில் அதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலை மராத்தி வகுப்பினருக்கு நிலவவில்லை என்ற முடிவுக்கு வந்தது.
  • கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த தீர்ப்பில், 50 சதவீதத்துக்கு மிகாமல் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற இந்த தீர்ப்பின் அடிப்படையே சமத்துவம் என்ற கொள்கைக்கும், மேற்பட்ட மக்களை முன்னேற்றுவதற்காக அளிக்கப்படும் இட ஒதுக்கீடு இரண்டையும் சமன் செய்யும் போது, எந்தவித எதேச்சதிகாரம் கொண்டதாகவும் இருக்க கூடாது .
  • மேலும் உச்ச நீதிமன்றம் கெய்க்கவாட் கமிஷன் தரவுகளின் அதிகப்படியான எண்ணிக்கை இருக்கும் பொழுது, நாகராஜ் வழக்கின்அடிப்படையில் அந்த 50 சதவீதத்தை தாண்டும் என தவறாக கருதி விட்டது உண்மையிலேயே நாகராஜ் வழக்கில் அது போன்ற தீர்ப்பு ஏதும் வழங்கப்படவில்லை எனவே 85 சதவிகித பின்தங்கிய மக்கள் தொகையில் 30 % மராத்திய வகுப்பினருக்கு 50% க்குள் ஒதுக்கீடு ஏதும் வழங்காமல் தனியாக ஒதுக்கீடு வழங்கப்பட்டது தவறு என்ற முடிவுக்கு வந்தது
  • அதனால் அவர்களின் சமூக மற்றும் கல்வி அறிவில் பின் தங்கியவர்கள் என்ற முடிவை எடுத்த அரசின் முடிவு சரியல்ல என்றும் தீர்ப்பளித்தது
  • 85% பிற்பட்ட வகுப்பினரில் 35 சதவீதம் பேர் மராத்தியர் உள்ளதால் அவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ரத்து செய்தது

இந்திரா சகானி வழக்கில் ஆறு தீர்ப்புகள் தனித்தனியாக வழங்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் ஒரே அம்சத்தை தான் வலியுறுத்தின. அது என்னவென்றால்

" அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே 50 சதவீதத்திற்கு மேற்பட்ட இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். அந்த அசாதாரண சூழ்நிலை என்பதை கணக்கிடும் போது மிகுந்த கவனம் கையாளப்பட வேண்டும்" என்றது 

  • அசாதாரண சூழ்நிலை என்பதை கணக்கில் எடுக்கும் பொழுது ,👇அவர்கள் அரசியல் வாழ்விலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பது மறுப்பதற்கில்லை 
  • மேலும் தேசிய நீரோட்டத்தில் அவர்கள் இருக்கும் பட்சத்தில் அந்த வகுப்பு அசாதாரண சூழ் நிலைக்கு உட்படுத்தப்பட்டது என்றும் கருதுவது இல்லை
  •  ஓபிசி எஸ்சி எஸ்டி ஆகியோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பு வழங்கும்போது ஒரு விதிவிலக்காக அது போன்ற ஏரியாக்களில் இருக்கும் சாதியினரின் நலனை பொறுத்து விதிவிலக்கு அளிக்கலாம் என்றும் குறிப்பிட்டது.

இந்த இட ஒதுக்கீடுகள் எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிண்றன?

அரசியல் சாசன பிரிவு 14 இன் கீழ் கொடுக்கப்பட்ட சமத்துவம என்ற உரிமைக்கு விிதிவிலக்காக,  14(1) கீழாக ,  பிரிவு 16 (4),15(4) படி வழங்கப்படும்..

எல்லா பணியையும் அப்படி இட ஒதுக்கீட்டில் கொடுக்க முடியுமா? 

என்றால். முடியாது....

இந்திரா சயானி தீர்ப்பில், தேசிய நலன் மற்றும் பொது நலன் அடிப்படையில் சில மிக உயரிய பதவிகள் அனு ஆராய்ச்சி போன்றவை, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்ப முடியாது என்று சொல்லப்பட்டுள்ளது.

அது சரி, 10 சதவீத பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒன்று கொண்டு வந்ததே அரசு. அது மட்டும் சரியானதா?

அரசியல் சாசன பிரிவில் கொண்டு வரப்பட்ட 103 ஆவது திருத்தததை குறித்து ஏற்கனவே ஒரு வழக்குJanhit Abhiyan v Union of India நிலுவையில் இருக்கிறது.

..அரசியல் சாசன பிரிவில் செய்த 102 ஆவது திருத்தத்தின் படி மாநில அரசுகளுக்கு, பின்தங்கிய வகுப்பு எது என்று அடையாளம் காணும் அதிகாரம் எடுக்கப்பட்டு விட்டதா?

இது குறித்த முரண்பட்ட கருத்து தீர்ப்பில் உள்ளதால் குழப்பம் நிலவுகிறது.

நீதியரசர்கள் அசோக் பூஷன் மற்றும் நசீர் ஆகியோர், இந்த திருத்தம் மாநில அரசின் அதிகாரத்தை எடுக்கவில்லை என்ற பொழுது, மற்ற மூன்று நீதியரசர்கள், மாநில அரசுக்கு இருந்த அதிகாரம் அந்த சட்டத் திருத்தத்தின் மூலமாக எடுக்கப்பட்டு விட்டது எனறுள்ளனர்!!

நீதியரசர் நாகேஸ்வரராவ் மற்றும் ஏனைய இரண்டு நீதியரசர்கள் கருத்துப்படி

" பின்தங்கிய வகுப்பினர் குறித்த பட்டியலில் சேர்ப்பது, நீக்குவது மாற்றுவதில் மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் அது குறித்த இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் முதலில் ஜனாதிபதிக்கும் அதற்குப் பின்னர் பாராளுமன்றத்துக்கு உள்ளது" என்கின்றனர்

  • தேசிய பிற்பட்டோர் நல கமிஷன், தயாரித்து வெளியிடும் பின்தங்கிய சமுதாயத்திற்கான பட்டியல் தான் இறுதியானது.
  • 342 A அரசியல் சாசன பிரிவின்படி ஜனாதிபதி தயாரித்து வெளியிடும் அறிக்கையில் உள்ள சாதியினர் மட்டுமே சமுதாய மற்றும் கல்வியில் பின் தங்கிய வகுப்பினர் அதில் பட்டியல் எனப்பட்டது " மத்திய பட்டியல்" மட்டுமே. எனவே மாநிலங்களுக்கு இதர்்குண்டான அதிகாரம் எடுக்கப்பட்டுவிட்டது என்றனர்

ஆனால் ஆர்டிகள் 15 (4) மற்றும் 16 (4 ) படி , மாநில அரசுகளுக்கு அந்த மாநிலத்தில் உள்ள பின்தங்கிய வகுப்பினரை அடையாளம் கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டம் தீட்டுவது அவர்களுடைய அதிகாரத்தில் உள்ளது தானே என்ற கேள்வி எழும்.

அது போன்ற வாதத்தை எடுத்துக்கொண்டால் அது அரசின் இறையாண்மைக்கு எதிரானதாக இருக்கும் என்கின்றனர் நீதியரசர்கள்

ஆனாலும் இந்த மாநில அரசுகள் தொடர்ந்து தரவுகளை சேகரித்து அதற்குண்டான யோசனைகளை தங்கள் மாநில பிற்பட்டோர் நல கமிஷன் மூலமாகவும் பார்லிமென்டில் உள்ள தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாகவும் சொல்லி மந்திரிசபை மூலமாக ஜனாதிபதிக்கு யோசனை தெரிவிக்கலாம் இதுவே கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த அரசியல் அமைப்பு என்கின்றனர்.

இது உண்மையில் மிக பாதகமான பின்விளைவுகளை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தக் கூடும்.
  • அரசியல் சாசன பிரிவு 342 A படி ஜனாதிபதி தான் பிற்பட்டோர் பட்டியல் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் ஆனால் இந்த அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆன போதிலும் இது குறித்து ஜனாதிபதி அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.!!
  • அதனால் தற்போது மாநில அரசுகள் தயாரித்துள்ள பின்தங்கிய வகுப்பினர் பட்டியல், ஜனாதிபதி வெளியிடும் வரை செல்லும் என்று அரசியல் சாசன பிரிவு 142 ன் கீழ் உத்தரவுடப்பட்டுள்ளது.
 ஏனெனில் அவை எல்லாம் செல்லாது என்று அறிவிக்கும் பட்சத்தில் அது மிகப்பெரிய மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால்!
  • மாநில அரசின் அதிகாரத்தில் இருந்து, தற்போது 342 (A ) மூலமாக, ஜனாதிபதிக்கும், சிறு மாறுதல்களுடன் பார்லிமென்ட்க்கும் அதிகாரம் மாற்றப்பட்டு இருந்தாலும் அது அரசியல் சாசனத்தின் அடிப்படை தன்மையை எந்த விதத்திலும் பாதிக்காது
  • அதே போல 102 வது சட்டத்திருத்தம் என்பது, ஆர்டிகள் 368 பிரிவு 2 க்கும் எதிரானது அல்ல ஏனெனில் மாநில நலன் பாதிக்கும் என்றால், அதுபோன்ற திருத்தங்கள் வருவதாயின் பெருமையான பெரும்பான்மையான மாநிலங்களில் ஒப்புதல் பெற வேண்டும் என்று உள்ளதால்

இவை ஒரு பக்கம் இருக்கட்டும்..

கூட்டாட்சி தத்துவத்துக்கு குந்தகம் விளைவிக்கும் இந்த இட ஒதுக்கீடுகள் அதிகரித்து வருவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

"அனைத்து தரப்பு சமுதாய மக்களும் எதிரான தரவுகள் இருந்தாலன்றி , அனைத்து ரீதியாகவும் முன்னேறி வருகின்றனர் என்று தான் கருதவேண்டும்

ஆனால் ஒவ்வொரு சமுதாய மக்களும் தாங்கள் முன்னோக்கி செல்லவில்லை  பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறோம் என்று சொல்ல வருவார்களேயானால் இந்த அரசியல் கொள்கைக்கு எதிரான ஒரு நிலையில் நாடு சிக்கி தத்தளிக்க வேண்டிவரும்" என்றது.

உண்மைதான்..மிக சிக்கலான ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.

அம்பேத்கர்,  ஜனநாயகத்தின் தரம் குறித்து அக்கறை கொண்டிருநதார். ஆனால், நேரு நிர்வாகத்தின் தரம் குறித்து அக்கறை கொண்டிருந்தார்

உண்மையை சொல்வதானால், இந்த இரண்டு விஷயங்களிலும் நாம் தான் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இத்தனை வருடங்கள் ஆகியும், இட ஒதுக்கீடு,  இந்தியாவை எந்த விதத்திலும் மாற்றவில்லை என்றால், அது தெளிவாக செயல்படாத ஒரு தோல்வியுற்ற கொள்கையலவா,?

இவை மட்டுமே ஒரு சமுதாயத்தை உயர்த்தி விடுமா?..

"ஒரு பிற்பட்ட சமுதாயத்திற்கு கல்வி நிறுவனங்களிலும் அரசு பணிகளிலும் ஒதுக்கீடு கொடுப்பதால் மட்டுமே அவர்களை முன்னேற்ற முடியாது அந்த சமுதாய மக்கள் படிப்பதற்கு தேவையான கல்வி வசதிகளை செய்து கொடுப்பதற்கும், அந்தகல்வி கட்டணத்தில் சலுகை காட்டுவதன் மூலமும் அவர்களின் தொழில் கல்வி கற்று சுயமாக யாரையும் சார்ந்து இல்லாமல் சமுதாயத்தில் நிற்க ஏதுவாக செய்வது மட்டுமே அவர்களை எல்லாவிதத்திலும் சமுதாயத்தில் முனைக்குச் செல்ல உயர்த்தும் என்று உச்ச நீதிமன்றம், கருத்து தெரிவித்ததை  கவனிக்க வேண்டும்.

அரிஸ்டாட்டில் சொன்னதை நினைவில் கொள்வோம்

: "சமமில்லாதவரை சமமாக கருதுவது மட்டும் அநீதி அல்ல.,  சமமானவர்களை சமமில்லாதவராக கருதுவதும் அநீதியாகும்".

இந்த இட ஒதுக்கீட்டு கொள்கை பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரம் இது.

.

வெள்ளி, 2 ஜூலை, 2021

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், இது குறித்து உங்கள் கருத்து என்ன?

 என் கருத்து இருக்கட்டும்..

இதோ, இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து போட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த,போது, எடுத்து வைத்த வாத்ங்களை பாருங்கள்..

  • அனைத்து சட்டமன்ற விதிமுறைகள், தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறை, சட்டத்தின் சரியான செயல்முறை எல்லாவற்றையம் மீறி, ஒரு குறிப்பிட்ட சாதியினரிடமிருந்து தேர்தல் ஆதாயங்களை வென்றெடுப்பதற்காக தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறி, இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
  • எந்தவிதவுகளும் இல்லாமல் வன்னியர் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது
  • இந்த தரவுகள் திரட்ட அமைக்கப்பட்ட குலசேகரன கமிட்டி இன்னமும் அறிக்கையே கொடுக்கவில்லை. அதற்குள் இந்த அறிவிப்பு?
  • இந்த உத்தரவால் 20% இட ஒதுக்கீட்டில் தகுதி பெற்றிருக்கவேண்டிய மாணவி மனுதாரருக்கு வெறும் 10.5% மட்டும் பெற வேண்டியதாயிற்று.இது அரசியல் சாசன சட்ட பிரிவு 14க்கு எதிரானது
  • தமிழ்நாடு பின்தங்கிய வகுப்புகள், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்களில் இடங்களை ஒதுக்குதல் மற்றும் மாநிலத்தில் சேவைகளில் நியமனங்கள் அல்லது பதவிகள்) சட்டம், 1993 மற்றும் தமிழ்நாடு பின்தங்கிய வகுப்புகள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (தனியார் கல்வி நிறுவனங்களில் இடங்களை ஒதுக்குதல்) சட்டம், 2006, இரண்டுக்கும் எதிரானது
  • பெரும்பாலான பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் துணை வகைப்பாடு என்பதில் பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள தீர்க்கப்பட்ட சட்டத்திற்கு எதிரானது
  • ஏற்கெனவே உச்சநீதிமன்றம் : எஸ்.சந்தீப் குமார் எதிர் சட்ட செயலாளர், தமிழக அரசு மற்றும் இன்னொருவர்; ஜே.முத்துகுமார் Vs சட்ட செயலாளர், தமிழக அரசு மற்றும் இன்னொருவர் வழக்குகளில் சொன்ன தீர்ப்புகளுக்கு எதிரனது

தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சாலையில் விபத்து நடந்ததை பார்க்கும்போது, உடனே நீங்கள் செய்வது என்ன?

 எழுத்தாளர் சமுத்திரத்தை நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் .சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றினார்..

அவர் 2003 இல் ஒரு சாலை விபத்தில் சிக்கி ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்

வேதனை என்னவென்றால் அந்த மருத்துவமனை நிர்வாகம் ஒரு பெரும் தொகையை சொல்லி அதை உடனடியாக கட்டினால் தான் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று தீர்மானமாகச் சொல்லி விடுகிறது அந்தப் பணத்தை ஏற்பாடு செய்து கட்டி அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள மேற்கொள்வதற்கு அந்த பொன்னான நேரம் அழிக்கப்படுவதால் அவர் காலமாகிறார்

பிரபலமானவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதரின் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம் .

உண்மையிலேயே கொரானா சாலை விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையை, கடந்த இரண்டு வருடங்களாக கட்டுப்படுத்தி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.. ஏனென்றால் இந்தியாவில்வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் பேர் இந்த சாலை விபத்தால் இறப்பார்கள் என்று புள்ளிவிவரம் காட்டுகிறது

இதில் முக்கால்வாசி பேர் அந்த பொன்னான நேரம் கடந்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதால் தான் தங்களுடைய உயிரை இழக்கின்றனர்

விபத்து நடந்த உடனேயே அந்த வண்டியின் ஓட்டுநர் உயிருடன் இருந்தால், விபத்தில் காயமடைந்தவர்கள் இறந்தவர் என்று மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்க எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அந்த இடத்தை விட்டு ஓடி விடுவதால் தான் இது போன்ற துர் மரணங்கள் அதிகளவில் நடக்கின்றன.

இந்த பொன்னான நேரம் என்று சொல்கிறார்களே அது என்ன என்றால் விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் அதாவது 60 நிமிடத்திற்குள், ஒரு மருத்துவமனைக்கு விபத்தில் பாதிக்கப்பட்டவரை அழைத்து சென்றால், அவருடைய உயிரை காப்பாற்றி விடலாம் என்று தான் மருத்துவர்கள் கூறுகின்றனர் .

.சாலையில் விபத்து நடக்கும் பொழுது பெரும்பாலானவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்வதோடு தன் கடமை முடிந்து விட்டதாக நினைக்கின்றனர் ஆம்புலன்ஸ் வருவதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த பொன்னான நேரம் வீணடிக்கப்படுகிறது அப்படியே துரிதகதியில் ஆம்புலன்ஸ் வந்து அவர்களை ஏற்றிச் சென்று மருத்துவம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தாலும் அந்த மருத்துவமனை சிகிச்சையை  உடனடியாக தொடங்குவதில்லை அங்கு சிகிச்சைக்கு உண்டான கட்டணத்த்தில் முன் பணத்தை கட்டுமாறு நிர்ப்பந்திக்கிறது இதற்கான பணத்தை ஏற்பாடு செய்வதிலும் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை இன்னும் சீர்கெடுகிறது

இதற்காக தான், இது போன்ற உடனடி மருத்துவ செலவுகளை  மோட்டார் வாகன சட்ட திருத்த சட்டத்தின் பிரிவு 162ல், இந்தியாவில் காப்பீடு தொழில் நடத்தும் காப்பீடு நிறுவனங்கள் இந்த சட்டத்தின் கீழ் உருவாக்ககப்பட்ட திட்டத்தின் கீழ் அனுமதிக்க சொல்கிறது.

இதன் படி, மத்திய அரசோ மாநில அரசோ, இதற்கான ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யப் செய்யவும் வேண்டும்

தமிழ்நாட்டில் இது போன்ற திட்டம் எதுவும் மாநில அரசு கொண்டு வந்ததாக விவரம் தெரியவில்லை ஆனால் சமீபத்தில் மகாராஷ்டிராவில் இது போன்ற ஒரு திட்டம் "தாதாசாகிப் விபத்து காப்பீடு திட்டம்" என்ற பெயரில் தொடங்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இதன்படி விபத்து நடந்த 72 மணி நேரத்திற்குள் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தால் 30 ஆயிரம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளுக்கு அந்த நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என சொல்லப்படுகிறது .

இது மகாராஷ்டிராவில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமல்ல விபத்தில் காயமடைந்தவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி , விபத்து நடந்த இடம் மகாராஷ்டிரா எல்லைக்குள் நடந்து இருப்பின் அதற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் இலவசமாக மேற்குறிப்பிட்ட நிதி அளவிற்குள் இலவச சிகிச்சை செய்யப்படும் .இது விபத்தினால் பாதிக்கப் அடைந்தவரின் உயிருக்கு தேவையான அந்த பொன்னான நேரத்தை வீணடிக்கக் கூடாது என்ற கருத்தில் கொண்டு வரப்பட்டது ஆனால் இது மற்ற விபத்துகள் அந்த தொழிற்சாலை விபத்து ரயில் விபத்து போன்றவற்றில் காயமடைந்தவர்களுக்கு  பொருந்தாது

சரி.. விபத்து நடந்தவுடன் விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது?  என்று கேட்டால் சாலையில் மோட்டார் வாகனம் இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது விபத்து ஏற்படின் அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் நபரோ அல்லது அந்த வாகனத்தின் உரிமையாளரோ தான் உடனடியாக காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கும் பொறுப்பு ஏற்படுகிறது .அவர்கள் மருத்துமனைக்கு செல்ல மறுக்கும் பட்சத்திலேயே இவர்களுக்கு அந்த கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

அடுத்து விபத்து நடந்த 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் விபத்து நடந்த தகவல் குறித்து தெரிவிப்பதும் இந்த வண்டியின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளரின் கடமையாகவும் ஆகிறது.

பிரிவு 132 ன்படி, விபத்து நடந்தவுடன் வண்டியை நிறுத்தி விட்டு, மேற்கொண்டு செயல்முறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அவர்.

இல்லை என்றால் அதுவும் ஒரு கேஸ் ஆகிவிடும்!!

அந்த வண்டியின் காப்பீடு விவரம் போன்றவற்றையும் கொடுக்க வேண்டியது வேண்டியது அவருடைய கடமை என்று மோட்டார் வாகன சட்டத்தில் தெளிவாக உள்ளது.

வண்டி ஓட்டுனருக்கு மட்டும் தானா கடமையாக்கப்பட்டுள்ளது?

இந்த சிகிச்சைக்காக எடுத்து செல்லப்பட்டவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்யவேண்டியது அந்த மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவருடைய கடமையாகும்.

எந்த சட்டப்பூர்வமான நடைமுறை முடியும் வரை காத்திருக்காமல், உடனடியாக மருத்துவ சிகிச்சையை காயமடைந்தவருக்கு செய்ய தொடங்குவது, அவருக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட கடமையாகும் .

போலீஸ் வந்த பிறகுதான் மருத்துவ சிகிச்சையை ஆரம்பிக்க முடியும் என்று சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்குவதற்கு தயங்குகின்றனர் என்ற செய்திகள் வருகின்றன ஆனால் பண்டிட் கட்டாரா எதிர் இந்திய யூனியன் வழக்கில்,https://indiankanoon.org/doc/498126/

உச்சநீதிமன்றம் நீண்ட காலத்திற்கு முன்பே காயமடைந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் தான் குற்றவியல் சட்டம் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

"காயமடைந்த நபருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும் போது , ஒரு மருத்துவ நிபுணரை அழைத்து, கேட்டுக் கொள்ளும்போது அவருக்கு எந்த சட்டரீதியான தடையும் இல்லை. நபரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிக்கு தான், மருத்துவ நிபுணர் மட்டுமல்ல, காவல்துறை மற்றும் பிற குடிமக்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும். காவல்துறையினரின் வருகைக்கு முன்னர், காயமடைந்த நபர்கள் மற்றும் விபத்து வழக்குகளில் மருத்துவர்கள் உடனடியாக செயல்படுவதைத் தடுப்பது போல, இந்திய தண்டனைச் சட்டம் / குற்றவியல் நடைமுறை / மோட்டார் வாகனச் சட்டத்தில் எந்த விதிகளும் இல்லை, "

சரி..பொதுவாக விபத்தை பார்க்கும் பலர், விபத்தில் காயம்பட்டவருடன் மருத்துவமனைக்கோ போலீஸ் நிலையத்துக்கோ செல்ல நினைக்காததன் காரணம்?

போலிஸ் துன்புறுத்தல், மருத்துவமனைகளில் காக்க வைக்கப்படுதல் மற்றும் நீண்டகால சட்ட முறைகள் இதற்கு பயந்து காயமடைந்த விபத்துக்குள்ளானவர்களுக்கு சாலையில் உதவ தயங்குகின்றனர்.

ஆனாலும் சிலர் இருக்கிறார்கள்.. இடர்ப்பாட்டில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர் என்று பிறவி எடுத்தது போல இருப்பர். நம்பிக்கையுடன், அவசரகால மருத்துவ பராமரிப்பு அல்லது விபத்து நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவி அல்லது அத்தகைய பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, என்று தானாக முன்வந்து, எந்தவொரு வெகுமதியையும் அல்லது இழப்பீட்டையும் எதிர்பார்க்காமல் செய்வர்.

இப்படிப்பட்டவர்கள் குறைந்து வருகிறார்கள்..ஏனென்றால் பிள்ளைகள் அப்படி சிறுவயதிலேயே சூதனமா இருக்குமாறு வளர்க்கப்படுகின்றனர்.

இந்த நிலையை மாற்றவும், இது போன்ற நபர்களை பாதுக்காகவும், ஒரு சட்ட கட்டமைப்பை நிறுவி, பாதகமான விளைவுகள் அல்லது துன்புறுத்தல்களுக்கு அஞ்சாமல் செயல்பட அதிகாரம் பெறவும்,, அவர்களை காவல்துறை அல்லது வேறு எந்த அதிகாரத்தின் கைகளிலும் பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்களை அங்கீகரிப்பதன் வேண்டியதன் அவசியத்தை உச்சநீதிமன்றமும் . மார்ச் 2016 இல் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், https://indiankanoon.org/doc/79865001/ வலியுறுத்தியது.

அதன் பிறகு , இந்த சட்டத்தில் பிரிவு 134 (ஏ) 2019 ஆம் ஆண்டில சேர்க்கப்பட்டது.

01.10.2020 மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019

இது அப்படிப்பட்டவர்கள் பாதுகாப்பைக் குறிப்பிடுகிறது,  அதன்படி, 

ஒரு மோட்டார் வாகனம் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டவரின் காயம் அல்லது மரணம், இத்தகைய நபர்களின் செயல்பாட்டில் அலட்சியம் அல்லது அவசர மருத்துவ அல்லது மருத்துவ அல்லாத பராமரிப்பு அல்லது உதவியை வழங்கும்போது செயல்படத் தவறியதன் விளைவாக ஏற்பட்டது என்று எந்தவொரு சிவில் அல்லது கிரிமினல் நடவடிக்கைகளுக்கும், எந்தவொரு காயம் அல்லது இறப்புக்கும் பொறுப்பேற்காது.

.அவர்களை கேள்வி கேட்பது, அல்லது அவர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவது போன்ற விஷயங்களுக்கு மத்திய அரசு விதிகள் விதிக்கும் ஒரு திட்டமும் , சாலை-பாதுகாப்பில் உதவுபவருக்கு விருதுகளை வழங்கவும் திட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது..💐

நம் மாநில அரசின் தரப்பில்?!!

ஒன்றும் சொல்ல முடியாது...

.எஜமானன் எப்படியோ அப்படி தான் அவன் அடிமையும் இருப்பான்!

நாம் தானே நம்மை ஆளுபவரை தெரந்தெடுக்கிறோம்.?

மனிதன்.பொதுவாக சுயநலம் கொண்டவன் தான். .தனக்கு, தன் குடும்பத்திற்கு என்று மட்டும் பார்ப்பவன் தான்..ஆனால் சில சமயங்களில், அவனுக்குள்ளிருந்து ஒரு மூன்றாவது நபர் வெளியே வருவான்.தனக்கு துன்பம் வந்தாலும், பிறருக்காக உதவ முன்வருவான்.அவன் எந்த அளவிற்கு வெளியே அடிக்கடி தலைக்காட்டுகிறானோ , அப்போது தான்.அவன் போகும் பாதை சரியானது எனலாம்.

"எங்கே பாதை தொடங்கும்..

அது எங்கே எப்படி முடியும்?".

என்று குழம்பவே தேவையில்லை!!

ஏனென்றால், அவனுடன் சேர்த்து கட்டி செல்வது.எது என்று தான் அவனுக்கு தெரியுமே…

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்

…அவ்வையார்

திங்கள், 28 ஜூன், 2021

ஐந்து பேருக்கு வர வேண்டிய சொத்தை ஒருவர் மட்டும் பெற்றோரிடம் சாதகமாகப் பேசி எழுதி வாங்கியுள்ளார், இது UDR சர்வே சட்டம் மூலம் போனால் மீதி உள்ள நான்கு பேருக்கும் சொத்து கிடைக்குமா?

         யூ.டிஆர். சர்வே விதிகளுக்கும் நில உரிமை மாற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை.

        யூடிஆர் என்ற இந்த டேட்டா அபடேட் ரெஜிஸ்ட்ரி, என்பது 1979_ 89 வாக்கில் தமிழ்நாட்டில் உள்ள நிலங்கள் எல்லாம் வகைப்படுத்தப்பட்டு  அளவிடப்பட்டு ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவற்றின் விஸ்தீரணம் , உரிமையாளர் எல்லாம் கணினியில் ஏற்றப்பட்டது .அப்போது கொடுக்கப்பட்ட து தான் யூடிஆர் பட்டா எனப்படுவது

        அதே சொத்தில் நாங்களும் தானே 30 வருடமாக கூட்டாக அனுபவித்து கொண்டு இருந்தோம், ஒருவருக்கு பெயர் மாற்றி, மற்றவரை விட்டால் எப்படி அது சரி? என்கிறீர்களா?

        அதுவும் சரி தான்.ஆனால் அதை கேட்டிருக்க வேண்டியது யு.டி.ஆர் பட்டா கொடுத்த போதே.. முன்று தசாப்தம் கழித்து வந்து கேட்டால்?

        நல்ல தூக்கத்தில் இருந்தோமா?


        நமக்கு அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமைகளை கொடுத்திருக்கிறது தெரியும் அல்லவா ?

        நாம் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை ஆர்டிகில் 21 மூலம் பெற்றிருக்கிறோம். இந்த "தூங்குவது" கூட அந்த அடிப்படை உரிமைகளில் உள்ளடக்கியது . தூங்கிக் கொண்டிருக்கும் நம்மை தேவையில்லாமல் யாரும் தொந்தரவு செய்வது என்பதை சட்டம் அனுமதிக்காது . அதை உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சு
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.timesofindia.com/india/right-to-sleep-a-fundamental-right-says-supreme-court/articleshow/12025358.cms&ved=2ahUKEwjC4-TtjbzxAhVGT30KHYiKAXQQFjABegQIAxAC&usg=AOvVaw3g1oX4K0ayqff3n9NDulH3

        அதேபோல தன் உரிமைகளை கேளாமல், தூங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கும்/, இருந்தவர்களுக்கும் ,சட்டம் உதவாது!!

Vigilantibus non dormientibus jura subveniunt

        இது ஒரு லத்தீன் மாக்ஸிம் . இதன் பொருள் என்னவென்றால் "சட்டம் விழிப்போடு இருப்பவர்களுக்கு அவர்களுடைய உரிமைகளை பெறுவதற்கு உதவி செய்யும் தூங்குபவர்களுக்கு அல்ல" என்பது

        அவரது உரிமையைப் பொருட்படுத்தாதவர்களுக்கு சட்டம் உதவாது.. ஒருவர் தன் உரிமையை கோர, அந்த உரிமையைக் கவனிக்க வேண்டும். . அவரது உரிமைகளைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே சட்டத்தின் நன்மைகளை பெற தகுதியுடையவர்கள்.. அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புடன் இருக்கும் நபர்களுக்கு சட்டம் அவர்களுக்குண்டான உரிமைகளை வழங்குகிறது.

        வழக்கமாக, ஒருவர் மற்றொருவருக்கு எதிராக நிவாரணம் பெற, செயல்படுத்துவதற்கு , சட்டரீதியான வரம்புகளை, சட்டம் பரிந்துரைக்கிறது. இல்லையென்றால்,கால வரையற்றதாக போய்க்கொண்டே இருக்குமே..பிரசுனைக்கு தீர்வு என்று ஏதாவது ஒரு இடத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டாம்?

        ய.டி.ஆர் பட்டா கொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஆகிவிட்டது . சட்டப்படி, தொடர்ச்சியாக 30 வருடங்கள் ஒரு பட்டா ஒருவரின் பெயரில் இருக்கும் பொழுது, அந்த சொத்து அவருக்கு ஏகபோக உரிமையாகவும் ஆகிவிடும் .

        நிர்ணயிக்கப்பட்ட சட்டரீதியான காலத்திற்குப் பிறகு ஒருவர் வழக்குத் தொடுகக முடியாது. சட்டரீதியான காலக்கட்டத்தில் "சும்மா" இருந்த ஒருவர், சட்டரீதியான வரம்புக்குப் பிறகு உரிமை கோர முடியாது.   எனவே யு.டி.ஆர்.பட்டாவில், இப்போது உரிமை மாற்றம் என்று கேட்பதை கால வரையறை சட்டம் அனுமதிக்காது .

        என் தாத்தா பாட்டிக்கு அந்த அளவிற்க்கு விவரம் தெரியாது அப்பா அம்மாவுக்கு. தெரியாது .அந்த அளவிற்கு எங்களுக்கு எல்லாம் சட்ட அறிவு அப்போது இருக்கவில்லை என்று சொல்லப் போகிறீர்களா?    அதையும் சட்டம் அனுமதிக்காது .

ஏனென்றால் ...

Ignorantia juris non excusat

இதுவும் ஒரு லத்தீன் மாக்ஸிம் தான்! .இதன் பொருள்
"சட்டத்தின் அறியாமை என்பது தவிர்க்கக் கூடிய காரணம் இல்லை ”.

        நாமெல்லாம் பொதுவாக நினைத்து கொள்கிறோம்..
"இந்த சட்டம் அப்படிங்கிறது எல்லாம் வக்கீல்களுக்கும் ஜட்ஜ்களும் மட்டும்தான் தெரிஞ்சுக்க வேண்டியது நமக்கு ஏதாவது பிரச்சினை வரும்போது வக்கில போய் பார்த்து, கோர்ட்டுக்கு போனா போதும் அப்போ அவர் சொல்ற சட்ட விதிகளின்படி நடந்தா போதுமம்னு" நினைக்கிறோம் ஆனால் உண்மை அப்படி கிடையாது

        ஒரு குடிமகனாக இருப்பவன், அந்த நாட்டின் அடிப்படை சட்ட விதிகளை தெரிந்துக் கொண்டு இருக்கவேண்டும் என்பது அவனுடைய கடமைகளுள் ஒன்று. அந்தக் கடமை தவறி, அதனால் அதனை காரணமாக வைத்து உரிமையும் கோரவும் முடியாது!
சட்டத்தின் கடுமையிலிருந்து தப்பிக்க அறியாமையை ஒரு பாதுகாப்பாக மன்றாட உங்களுக்கு அனுமதி இல்லை. அப்படி அனுமதித்தால், எல்லோரும், சட்டத்தையும் அதன் விளைவுகளையும் தெரிந்துக்  கொண்டு கூட, அறியாமையை ஒரு பாதுகாப்பாக முன்  வைக்க முடியும் இல்லையா?,

        நிறைய இடங்களில், இந்த பட்டாவில், தாத்தா பெயரில் அப்பா பெயரில் பங்காளி பெயரில் பட்டா இருப்பதை பெயர் மாற்றம் செய்யாமலும், அதில் உள்ள அளவுகள், சர்வே எண் தவறாக குறிக்கப்பட்டுள்ளதை திருத்தம் செய்யாமலும் இருக்கிறார்கள்.  அப்படியே திருத்தம் செய்ய கோரிக்கை மனுக்களும் நிலுவையில் இருக்கின்றன .அவற்றை பொருத்துதான் சரி செய்து கொடுப்பார்களே ஒழிய, 30 வருடங்களுக்கு முன்னர் ,பட்டா யார் பெயரில் இருந்ததோ அதனை தற்போது உரிமை மாற்றம் செய்துக் கொள்வதற்கான சட்டத்தில் வழிவகை இல்லை. அதற்கான நடவடிக்கை எடுத்தாலும் பலன் கிடையாது என்பதே நிதர்சனம்..

        அதுக்காக, அஞ்சு பேருக்கு உரிமையிருக்கிற சொத்தை, நான்கு பேரை விட்டுவிட்டு தன் பெயருக்கு மட்டும் மாற்றி இருக்காரே. அதை, நீக்குவதற்கான வழியாவது இருக்கான்னு கேட்டால், அதுவும் கிடையாது

        இங்கே ஒண்ணு சொல்ல வேண்டி இருக்கும். "கெடுவான் கேடு நினைப்பான்" அப்படிங்கறது நம்முடைய மூதுரை
எல்லாருக்கும் கிடைக்க வேண்டியதை தனக்கு மட்டுமே ஒருத்தர் வாங்கிக் கொண்டு போனாலும், அதற்கு உண்டான கர்மங்களை அவர் அனுபவிப்பார்.   அதை நாம தான் போயி அவருக்கு காட்டணும் அப்படிங்கறது கிடையாது. ஒவ்வொரு கர்மாவுக்கும் உண்டான பலன்களை , அது முதிர்ச்சி அடைந்து சரியாக போய் காட்டும் என்பதை தான் "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" அப்படின்னு சொல்றாங்க..

        இப்படித்தான்..சீடர்கள் குருவிடம் கல்வி கற்று முடித்து, கிளம்பும்  போது, "தர்மத்தைக் காத்து நீதியின் வழியாக நடங்கள்" என்று ஆசீர்வாதம் சொல்றாரு. இதைக் கேட்ட சீடர்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது "என்ன குருவே நீதி வேறு தர்மம் வேறா?" அப்படின்னு கேட்கும் பொழுது அவர் சொல்றாரு
"நீதி, சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மாறக் கூடியது. ஒருத்தர கொலை செய்தது சட்டப்படி குற்றம் என்றாலும் கூட ,அது அவருடைய தற்காப்புக்காக அந்த கொலையை செய்தா, அது குற்றமாகாது அது போல நீதி அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறக்கூடியது ஆனால் தர்மம் அப்படி அல்ல அது நிலைத்து நிற்கக் கூடியது அதனால்தான் தர்மத்தை காத்து நீதியின் வழியில் நடந்து"ன்னு ஆசீர்வாதம் சொன்னேன் என்றார்

        நம்ம உச்ச நீதிமன்றத்தின் லோகோ கூட என்ன தெரியுமா?
"Yato Dharma Tato Jaya
  

பொருள்: "தர்மம் இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கிறது"



நன்மையே விளையட்டும்!

தமிழ் வழி பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற அரசு அறிவிப்பு சரியானதா? இதன் சாதக, பாதக விளைவுகள் என்னவாக இருக்கும்?

 தமிழ் வழி பயின்றவருக்கு, அரசு பள்ளியில் படிப்பவருக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை!


இந்த உத்தரவு போடும் எண்ணம் அரசுக்கு வரக் காரணம்?

ஆங்கில மொழி வழி கல்வி மேல் அதிகரித்து வரும் மோகம்.அது இப்போது தீவிரமாகி, மார்க் அதிகம் எடுக்க வேண்டும் என்று தமிழ மொழியை தவிர்த்து, வேறொரு மொழியை பாடமாக எடுத்து படிக்கும் போக்கு அதிகமாகியுள்ளது. மூன்றாவது மொழியை அடிப்படை நிலை மட்டும் கற்றால் போதும் என்பதால், நகரத்து பள்ளி பிள்ளைகள் அதிகம் பேர், அதில் மட்டுமே தாய் மொழியை படிக்கிறார்கள். இது ரொம்ப ஆபத்தான போக்கு.

என் பிள்ளைகளை பள்ளியில் எல்.கே.ஜி.சேர்க்க போகும்போது, பள்ளியில் தெளிவாக சொல்லிவிட்டார்கள்..வீட்டு பாடம் எதுவும் கிடையாது.நீங்கள் வீட்டில் எதுவும் சொல்லிக்கொடுக்க வேண்டாம் என்று!! நானும் பெரிய கவலை விட்டது என்று இருந்துவிட்டேன்.

நம் காலத்து வீட்டு பாடம் ஞாபகத்துக்கு வந்து விட்டதால்!

ஆனால் பாருங்கள்..பிள்ளைகளின் மனதை இயக்கி, ஆங்கிலத்திலேயே எண்ணங்களை வர செய்து, பிள்ளைகளின் படிக்கும் முறையையே அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

அதனால், பிள்ளைகள் ஆறாம் வகுப்பு வந்த போது, இரண்டாவது மற்றும் மூன்றாம் மொழியை தேர்வு செய்ய சொன்னர். பெருன்பான்மையான பிள்ளைகள் வீட்டில் இரண்டாம் மொழியாக ஹிந்தியையும் பிரென்ச்சையும் எடுக்க, நாங்கள் தமிழை தேர்வு செய்தோம்.!!

தாய் மொழி வழி கல்வி கற்பதன் சாதகங்களை மாண்புமிகு உச்ச நீதிமன்றமே பட்டியலிட்டுள்ளதே..அதை முதலில் பார்ப்போம்.

2019ல், ஆந்திர அரசு, ஒரு அரசு உத்தரவு போட்டதே." 2020-21 முதல் அனைத்து நிர்வாகங்களின் கீழ் வரும் முதன்மை, மேல்நிலை , உயர்நிலைப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை ஆங்கில நடுத்தரக் கல்வியை கட்டாயமாக்கியது.இதன் விளைவாக பின்வரும் கல்வி ஆண்டுகளில் இருந்து படிப்படியாக ஒவ்வொரு வகுப்பிற்கும் இது விரிவாக்கப்பட வேண்டும். "

இந்த உத்தரவை ரத்து செய்த மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மான்புமிகு உச்சநீதிமன்றத்த்தை அணுகியது இல்லையா? அப்போது தான் தாய் மொழி கல்வி வழியின் பாதகங்கள் என்று ஆந்திர அரசு சிலவற்றை பட்டியலிட்டது.

ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசாங்கத்தின் " ஆங்கிலம் கற்காததால் தான், குழந்தைகள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்’.

அத்தோடு நின்றதா அரசின் வாதம்?

"ஒடுக்கப்பட்டவர்களான தலித்துகள், அரசின் இந்த முடிவை முற்போக்கான நடவடிக்கையாகக் கருதுகின்றனர். அவர்கள் தீவுகளில் வைக்கப்பட்டுள்ளது போல தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.. தனியார் ஆங்கில நடுத்தர பள்ளிகளில்] கட்டணமும் அதிகம்" என்றது.

அந்த வழக்கின் விசாரணையின் போது தான், தலைமை நீதியரசர் பாப்டே,, அரசின் தர்க்கத்தை மறுத்து, " ஒரு அடித்தளத்தைப் பெற வேண்டுமானால் ஒரு குழந்தை தனது தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்..அத்தோடு இந்த விஷயத்தில் "மிகப்பெரிய மாறுபட்ட பிரச்சினைகள்" இருப்பதாகக் கூறி, இது விரிவாக கவனிக்கப்பட வேண்டும்," என்றும் கூறி, வழக்கை விசாரணக்கு ஏற்றுக்கொண்டுள்ளார்...

இந்த வழக்கில், தாய் மொழியில் பயிலும் பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை திணிப்பதால், அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21 ஏ (கல்விக்கான அடிப்படை உரிமை) இன் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட பயனுள்ள கல்வியை அவர்கள் இழக்க நேரிடுமா?" என்பதை ஆராய உள்ளது உச்சநீதிமன்றம்.

ஒரு விஷயம் கவனித்தோமா?

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கை 2020" பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஊடகமாக “தாய்மொழி” பயன்படுத்துவது, அறிவாளிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் என்றதே !!

தேசிய கல்வி கொள்கை 2020 , தாய்மொழியில் உயர்தர பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள் இருமொழி அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

NEP 2020 “பன்மொழி” மீது கவனம் செலுத்துகிறது. சிறு குழந்தைகளுக்கு “அற்பமான கருத்துக்களை விரைவாகக் கற்றுக் கொள்ளவும் புரிந்துகொள்ளவும்” உதவும் தாய் மொழிகளின் சக்தியை இது அங்கீகரிக்கிறது.

அது கூட ஏன்?

2005 ஆம் ஆண்டின் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பும், 2009 ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின் 29 வது பிரிவும் கூட, முடிந்தவரை நடைமுறையில், கல்வி கற்பிப்பது, குழந்தையின் தாய்மொழியில் இருக்க, அறிவுறுத்தவில்லையா?

சில குடும்பங்களில் சில நேரங்களில், குடும்ப உறுப்பினர்களால் பேசப்படும் வீட்டு மொழி ஒன்று இருக்கலாம், அவை சில சமயங்களில் தாய்மொழியாகவோ அல்லது உள்ளூர் மொழியாகவோ கூட இருக்கலாம். குறைந்த பட்சம் 5 ஆம் வகுப்பு வரை, முடிந்த வரை 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு அப்பால், தாய்மொழி / உள்ளூர் மொழி / பிராந்திய மொழியாக இருக்கும் ”என்று NEP 2020 சொல்கிறதே?!

."தாய் மொழி வழி கற்பித்தல் " தான் "ஆற்றல்மிக்க வளர்ச்சிக்கான உந்துதல்," என்பதை இப்போது தானா அரசுகள் கண்டுகொண்டார்கள்? அதன் முலம் NEP 1968 லிருந்து வருகிறது!!

ஆனாலும், இன்றளவும், ஆங்கில வழி கல்வி கற்கும் பிள்ளைகளுடன், தமிழ் வழி கல்வி கற்கும் பிள்ளைகள், அதுவும் அரசு பள்ளியில் பயிலும் பிள்ளைகள், போட்டி போட முடியாமல் தடுமாறி நிற்பதெனவோ உண்மை..

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகள் தவிர, பெரும்பாலான அரசு உதவி பெறும் பள்ளிகளும் ,அனைத்து அரசு பள்ளிகளில் தமிழ்,ஆங்கிலம் இரு வழிக் கல்வியுமே போதிக்கப் படுகிறது.இளங்கலை,முதுகலை கலை அறிவியல் உயர் படிப்புகள் பல கல்லூரிகளில் தமிழ்வழியில் வழங்கப் படுகிறது.

நான் ஊருக்கு போகும் போதெல்லாம், வீட்டிற்கு பக்கத்திலுள்ள அரசு பள்ளிக்கு போவதுண்டு..அவர்களுடன் பேசும்போது, அடிப்படை ஆங்கில அறிவு அவர்களுக்கு போதுமான அளவில் வழங்கப் படுவதில்லை என்று தெரிய வரும்.அவர்களுக்கு பரிட்சை நோக்கோடு மட்டுமே ஆங்கிலம் கற்பிக்கப் படுகிறது.புரிந்து படிப்பது இல்லாமல், மனப்பாடம் செய்வதே பெரும்பாலும் நடக்கிறது..

அது ஓராசிரியர் பள்ளி.பல வகுப்பு பிள்ளைகள்.. அவர் எதை தான் சொல்லி கொடுப்பார்?!.சரி பக்கத்திலுள்ள பெரிய ஊரில் உள்ள பள்ளியின் கதையம் அது தான்.ஆசிரியர் நிறைய இருந்து என்ன?

இதை சொல்வதற்காக யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம்.!!
"சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" என்பது போல கற்றுக் குடுப்பவர்களும் போதிய ஆங்கில அறிவு இருப்பதில்லை.!! அப்படியே இருந்தாலும் தேர்ச்சி விழுக்காடு மட்டும் தானே நோக்கம்? அதனால் தேவைக்கு மேல் போதிப்பதில்லை.!! அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டுமா வேலை? அரசு கொடுப்பது பத்தாது என்று, அவர்களாக ஈடுபடும் வேலைகள்!

அட..ஆங்கில மொழியை விடுங்கள்..பிள்ளைகள் தமிழ் மொழியையவது இலக்கண சுத்தமாக படிக்கிறார்களா என்றால் வருத்தம் தான்..எட்டாம் வகுப்பு வரை "ஆல் பாஸ்". ஒன்பதாம் வகுப்பில் தான் சீரியசாக, தமிழ் எழுத கற்றுக் கொள்பவர் அநேகம்!!

இது போல, நடைமுறை சிக்கல் இருக்கும் போது, உயர் கல்வியை தமிழ் வழியில் படிக்க அரசு தன் தரப்பில் செய்துள்ளதா?

+2 கணிணி அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு அந்த பாடப் புத்தகம், தமிழில் உள்ளதா?.மற்ற பாடங்களை தமிழ் வழி கற்றாலும் கணிணிப் பாடத்தை ஆங்கிலம் மூலம் தான் கற்க,எழுத வேண்டும்…

பொறியியல்,மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தமிழ் வழி கல்வி முழுமையாக சாத்தியப் படுமா? தெரியவில்லை…

+2 வரை தமிழ் மொழி வழியில் படித்து அதிக மதிப்பெண் பெற்று, தனியார் பொறியியல் கல்லூரியில் சேரும் பிள்ளைகள், மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.சில பொறியியல் கல்லூரிகளில் முதல் வருடம் அடிப்படை ஆங்கிலம் கற்றுக்கொடுக்க முயற்சி செய்கிறார்கள். உண்மை தான்.அவர்களால் முயற்சி செய்ய தான் முடிகிறதாம்..வெற்றி?..பிள்ளைகள் கையில் அல்லவா உள்ளது?

தமிழ் இன்னும் பள்ளிக் கூடத்தைத் தாண்டி வரவில்லை என்பது தான் நிஜம். .
தமிழில் படித்து புதிதாக ஆங்கிலவழி படிக்க வரும் மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கும் சூழல் நம் நாட்டில் இல்லை .

இதில் , வேலை வாய்ப்பு என்று வரும்போது அது எந்த அளவு கை கொடுக்கும் சாத்தியப் படும்? தெரியவில்லை..

இந்த நிலையில் தான் அரசின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதை பார்த்ததும் எனக்கு ஒரு கதை தான் நினைவுக்கு வந்தது..

பரிகாரங்களே குறைகளின் நிவாரணம் என்ற எண்ணத்தில் பரிகாரங்களை மட்டும் செய்து விட்டு மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்து கொள்ளலாம் என நினைத்திருந்த சீடர்களுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினார் ஒரு குரு. பாவங்களைக் கழுவ புனித நதிகளில் நீராடிவர யாத்திரை கிளம்பிய சீடர்களிடம் ஒரு பாகற்காயைக் கொடுத்து அதையும் அந்த புனித நதிகளில் நீராட்டிக் கொண்டுவரச் சொன்னார். அதேபோல், அவர்களும் செய்தனர். புனித நீராடிய பாகற்காயைச் சமைத்து மதிய உணவுடன் பரிமாறச் செய்தார் குரு. அதை உண்ட சீடர்களின் முகத்தில் அந்த கசப்பு ருசி தெளிவாகத் தெரிந்தது.

குரு சீடர்களைப் பார்த்து 'புனித நதிகளில் நீராடியதும் உங்கள் பாவங்கள் தொலைந்து விட்டதாகச் சொல்கிறீர்கள். அதேபோல் புனித நீராடிய பாகற்காயின் கசப்பும் மாறியிருக்க வேண்டுமே, அது மாறி விட்டதா?' என அமைதியாகக் கேட்டார். சீடர்கள் பதில் சொல்லாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

குரு கூறினார், 'புனிதத் தலங்களில் நீராடுவதால் நம் உடலின் அழுக்குப் போகலாம். ஆனால், பாவங்கள் மாறுவதில்லை. அன்பும் கருணையுயே நம் பாவத்தை மாற்ற வல்லவை. பாகற்காயின் கசப்பு எதனாலும் மாறுவதில்லை. அதைப் போலவே நம் இயற்கைக் குணங்களும் புனித நீராடுவதால் மாறாது. மெல்ல மெல்ல முயற்சி செய்துதான் அவற்றை மாற்ற வேண்டும்."பரிகாரங்கள் நிவாரணம் ஆகாது' என்றார்…

அரசு பணியில்,, தமிழ் தான் ஆட்சி மொழி என்பதால், தமிழ் வழியில் கற்றவனுக்கு முன்னுரிமை கொடுப்பது சரி தான்..

ஆனால் .அடிப்படையை சரி செய்யாமல் மேல் மட்டட்த்தை மட்டும் மாற்றியமைக்க வேண்டும் என்பது எப்படி சரியாகும்.?

எந்த மொழிவழி அடிப்படைக் கல்வியைப் பெற்றாலும் பள்ளி இறுதியில் அவன் ஆங்கிலம் தமிழ் இரண்டுலும் தேர்ச்சி பெற்றவனாக்குவது தானே அவனுக்கு அளிக்கப் படும் சிறந்த கல்வி?.

அவன் மேற்படிப்பை (தொழிற் படிப்பு) ஆங்கில மொழிவழியில் கற்க, அவனை தயார் படுத்த வேண்டியது அடிப்படைக் கல்வி தான். அதனால், முதலில் சீர்திருத்தப் படவேண்டியதும் அது தான்.

பரிகாரங்களே நிவாரணமாகுமா?

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...