எத்தனையோ கால கனவு அது தி.மு.க அரசுக்கு...
அதுவும் தந்தையின் திட்டத்தை நிஐஐவேற்ற கிடைத்த அரிய வாய்ப்பாக தான், இதை பார்க்கிறது.
விருப்பமுள்ள அனைத்து சாதியினரையும் கோவில் பூசாரிகளாக நியமிக்கும் தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தி, அரசு சமீபத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 24 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை கோவில்களில் நியமித்தது.
இந்த நியமனம் செய்ய நாளிதழகளில் விளம்பரம் வெளியான உடனேயே அதை எதிர்த்து கோயில்களில் பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். வழக்கில் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு, ஒத்திவைக்கப்பட்டது. இது நடந்தது ஆகஸ்ட் 9.. ஆனால் அதில் இருந்து ஒரு வாரம் கழித்து சுமார் 58 பேருக்கு அர்ச்சகர், ஓதுவார் பணி நியமன உத்தரவுகளை முதல்வர் வழங்கியுள்ளார்..இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா என்ற கேள்வி தான் எல்லோரையும் சுற்றி வருகின்றது.
உண்மையில், இது போன்ற நியமனம் செய்த விவரத்தை அரசும் அந்த வழக்கின் அடுத்த விசாரணையின் போது தெரிவித்து உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை அரசே மீறியதும் இல்லாமல், அதை நீதிமன்றத்திலேயே தேர்வித்துள்ளதே நீதிமன்ற உத்தரவை அவமரியாதை செய்த தண்டனைக்குள்ளாகாதா..ஏன் நீதிமன்றமும் உடன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று கேள்வி எழலாம்.
இங்கே தான் சட்ட நுண்ணிய கூராய்வு தேவைப்படுகிறது. அரசு தாக்கல் செய்த அறிக்கையில், அர்ச்சகர் ஆக முறையாக பயிற்சி பெற்று முடித்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று சொல்லியுள்ளது
.அந்த பயிற்சியும், வேத பாடசாலையிலோ அல்லது அரசு நடத்தும் மையங்களிலோ முடித்திருக்கவேண்டும் என்ற தகுதி கொண்டவர்கள் தான் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரத்தில் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசை பொறுத்த வரை, பிராமணர்களின் கைகளுக்குள் இருந்து விடுப்பதன் ஒரு அங்கமாக, அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது என்ற தந்தை பெரியாரின் கனவை நிறைவேற்றுவது தங்கள் கொள்கை என்ற நிலைப்பாடு உள்ளவர்கள். அதுவும் இது முதல்வருக்கு அவர் தந்தையால் கூட நிறைவேற்ற முடியாமல் தவற விட்ட ஒரு அம்சம் என்பதால், மாநிலம் முழுவதும் உள்ள இந்து கோவில்களில், இந்த பணி நியமனம் செய்தது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கின்றனர்..
1970 களில் கலைஞர் தன் பதவிக் காலத்தில், கொண்டு வந்த திட்டம் இது..இப்போது தான் அது நிறைவேறும் நிலையை எட்டியுள்ளது.அவர் பிள்ளை முதல்வர் ஸ்டாலின் சொல்வது போல, "பெரியாரின் இதயத்தில் குத்தியிருந்த முள்" இது.
, அப்போதைய மு தல்வர் களைஞரால் கொண்டு வரப்பட்டு அந்த சட்டம், இரண்டு வருடம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. மாண்புமிகு உச்ச நீதிமன்றம், அது செல்லாது என்று விட்டது..
ஏன்?
அதை பற்றி தெரிந்துக் கொள்ள, சற்று பின்னோக்கி போவோம்.
தமிழ்நாடு இந்து மத மற்றும் அறநிலையச் சட்டம் 1959 இல் இயற்றப்பட்டது.. அதன் மூலம் இந்து கோவில்கள் அரசின் நிர்வாகத்தின் கீழ கொண்டுவரப்பட்டது.. எந்த மதத்திற்கும் பொதுவாக இருக்கவேண்டிய ஒரு அரசு, அதுவும் மதசார்பின்மையை தன் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பிலேயே கொண்ட ஒரு நாட்டின் மாநில அரசு, ஒரு குறிப்பிட்ட மதம், அதுவும் பெருன்பான்மை மக்கள் பின்பற்றும் மதத்திற்கு உரிய கோயில்களை நிர்வகிக்க ஏன் முடிவு செய்தது? அதை நீதிமண்றங்களும் எப்படி அனுமதிக்கின்றன? அது தனி வரலாறு.அதை இநன்னொரு பதிவில் பார்ப்போம்.
இந்த தமிழ்நாடு இந்து மத மற்றும் அறநிலையச் சட்டம் 1959, வந்த போது, இந்து கோவில்களில் பூசாரிகள் பரம்பரையாக பூஜை செய்து வந்தனர். அவர்களை அப்படியே நியமனம் செய்ய சட்டம். அனுமதித்தது.
இதை தான், 1971 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அ ரத்து செய்து, இந்து கோவில்களில் சாதி வேறுபாடின்றி யாரையும் அர்ச்சகராக அனுமதித்து சட்டத்தை திருத்தியது.
இதை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் (1972), சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை ரத்து செய்தது. அத்தொடு பூசாரிகளின் பரம்பரை நியமனங்களையும் ரத்து செய்தது. இருப்பினும், கோவிலை நிர்வகிக்கும் ஆகம விதிகளின் அடிப்படையில் அந்த நியமனங்களை நீதிமன்றம் அனுமதித்தது. பின்னர், ஆதித்தாயன் வழக்கில் (2002), உச்சநீதிமன்றம், மத ரீதியான பதவிகளுக்கான நியமனங்களில் சாதி ஒரு காரணியாக இருக்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்தியது.
2006 ல் ஜெயலலிதாவை தோற்கடித்து ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி, இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தார். இந்த முறை, வெகு கச்சிதமாக, " சாதி, மதம், பழக்கம் அல்லது பயன்பாடு பாகுபாடு இல்லாமல் "தகுந்த பயிற்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த இந்துக்கள்" தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் கோவில்களுக்கு அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம்." என்றது அவசர சட்டம். .கூடவே போடப்பட்ட நிர்வாக உத்தரவு ஒன்று " தேவையான தகுதி மற்றும் பயிற்சி பெற்ற எந்த இந்து நபரும் இந்து கோவில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படலாம்." என்றதுஇதற்காக பயிற்சி வகுப்புகள் அரசின் மையங்களில் தொடங்கப்பட்டன.
ஆனால் அந்த அவசர சட்டம், சட்டசபையில் வைத்து சட்டமாக்கப்படாமல் விடுபட்டது. அந்த நிர்வாக உத்தரவை மட்டும் எதிர்த்து போடப்பட்ட வழக்கில், ஏறக்குறைய ஒரு பத்து வருட கால சட்டப் போருக்குப் பிறகு, மாண்புமிகு உச்சநீதிமன்றம் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு அனுமதி அளித்தது ஒரே நிபந்தனை..
அவர்கள், பயிற்சியின் மூலம் உறுதி செய்யப்பட்டால்.
ஆனாலும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அந்த உத்தரவு தமிழ்நாட்டில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. இப்போது இந்த பணி நியமனங்கள் ஏற்பட்டபிறகு தான் பெரிய விவாதங்கள் ஆரம்பித்துள்ளன.
இத்தனைக்கும் முந்தைய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையலான அரசே , அர்ச்சகர் பயிற்சி முடித்த பத்து வருடங்களாக பணிநியமனம் இல்லாமல் இருந்த இந்த 207 நபர்களில் சிலருக்கு பணி உத்தரவு போட்டுள்ளது. 2018ல் நியமிக்கப்பட்ட மதுரை மாரிச்சாமி தான் அரசால் கொடுக்கப்பட்ட பயிற்சி பெற்று நியமனமான முதல், பிராமணரல்லாத அர்ச்சகர்.
இன்றைய தேதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும்போது, அரசு மேற்கொண்டு பணிநியமனங்களை செய்துக்கொண்டு போவதற்கு, அவர்கள் காட்டும் அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?
இப்போது மனு போட்ட ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் தான் அப்போதைய வழக்கிலும் மனுதாரர்கள். தமிழக அரசையும் அறநிலையத்துறையையும் எதிர் பார்டியாக உள்ள வழக்கு அது.
அவர்கள், சேஷம்மாள் வழக்கில் தீர்ப்பு இட்டது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் என்பதால், அந்த பெஞ்சின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கட்டுப்பட வேண்டும் என்று வாதிட்டனர்.
அவர்களின் கூற்றுப்படி, அர்ச்சகர்களை நியமிப்பது என்பது புனிதமான ஒன்று, ஆகமங்களில் அது சம்பந்தமான தொகுதிகளில் இருந்து விலகுவது என்பது அந்த மதத்தை பின்பற்றும் அவர்களுக்கு உள்ள அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 மற்றும் 26 ன் கீழ் அவர்களின் உரிமைகளை என்று வாதிட்டனர்.
சேஷம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம், ஒரு சைவ அல்லது வைஷ்ணவர் கோவிலில் அர்ச்சகரின் நியமனம் அந்த கோவில்களை நிர்வகிக்கும் ஆகமங்களின் வழிகாட்டுதல்களின்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினர், பிரிவு அல்லது குழுவிலிருந்து செய்யப்பட வேண்டும்."
"அவ்வாறு செய்யத் தவறினால் அது, பிரிவு 28 (1) Hr&ce சட்டத்திற்கு முரணானது மட்டுமல்லாமல், ஒரு மத நடைமுறையில் தலையிடுவதாகவும், இதன் தவிர்க்க முடியாத மோசமான விளைவு ஏர்படுத்தும்"என்றது
தன் தரப்பு நியாயமாக, மேலே சொன்ன ஆதித்தாயன் வழககை அரசு மேற்கோள் காட்டியது அந்த வழக்கில் கேரள அரசு அப்போது அங்கிருந்த ஒரு சிவன் கோவிலில் பிராமணர் அல்லாத ஒருவரை அர்ச்சகராக நியமித்ததை எதிர்த்து போடப்பட்ட வழக்காகும் அதன்படியும் சமூக நீதி மற்றும் நாட்டு நலன் என்னும் அரசியல் சாசன கடமையின்படி தான் அந்த உத்தரவு இடப்பட்டது.அதில் தவறு ஏதும் இல்லை என்று வாதிட்டனர்..
அந்த வழக்கின் தீர்ப்பு தான், அரசுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய டிரம்ப் கார்டு.
வழக்கின் தீர்ப்பில், அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் கோகாய் தலைமையிலான பெஞ்சு,
- ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த/ அல்லது வழிபாட்டுமுறை கொண்டவர்கள் தான் பூஜை செய்யும் அர்ச்சகராக நிடமிக்கப்படவேண்டுமா, அவர்களுக்கு தான் அது தனிப்பட்டஉரிமையா என்பது குறித்து ஆகமங்கள் ஏதும் சொல்கின்றனவா என்பது குறித்து சேஷம்மாள் வழக்கில் ஏதும் குறிப்பாக இல்லை.
- ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவரை விடுத்து, மற்ற ஒரு பிரிவை அர்ச்சகராக நியமிப்பதற்கு, அவர் பிறப்பு மற்றும் இனம் மட்டும் காரணமில்லை எனில், அரசியல் அமைப்பு சட்டத்தின் சமஉரிமை கொடுக்கப்படவில்லை என்று கோர முடியாது.
- இருந்தாலும் ஆகம்விதிகளுக்கு உட்பட்டு பயிற்சி பெற்றவர் தான் நியமிக்கப்படவேண்டும்.
..