சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம, திருமணமான பெண் கணவருடன் வேறு ஊருக்கு குடித்தனம் செய்யப் போவதாலேயே, பிறந்த வீட்டில் வசிக்கும் உரிமையை இழந்து விட்டதாக கொள்ள முடியாது" என்றுள்ளது.
இது நிறைய பேருக்கு ஒரு குழப்பத்தையே ஏற்படுத்திள்ளது.
திருமணமான பெண்ணுக்கு, சீர் வரிசை கொடுத்து வசதியாக, ஆடம்பரமாக திருமணம் செய்துக் கொடுத்தாலும், சொத்தில் அவளுக்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுக்கத் தான் வேண்டும் என்றிருக்கும்போது, இப்போது என்ன..புதிதாக ?....
"திருமணமான பின்னும், அவள் அங்கே வசிக்கும் உரிமை உள்ளது என்றால்...அவள் கணவனுடன் வந்து தங்கினால்...அது அங்கு வசிப்பவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாதா?
திருமணம் செய்து, சீர் கொடுத்து, சொத்தில் சம பங்கும் கொடுத்து, வாழும் வீட்டிலும் தங்க இடமும் கொடுக்க வேண்டும் என்றால் எப்படி? என்று நிறைய பேருக்கு ஆதங்கம் உள்ளது
சமூக கண்ணோட்டத்தை தவிர்த்து, சட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்தால்,
இந்து வாரிசுரிமை சட்டப் பிரிவு 23 யை பார்ப்போம்.
திருமணமான பெண் பிறந்த வீட்டில் , சொத்தில் பங்கு கேட்கும் முதல் உரிமை கிடையாது என்கிறது. அதாவது, அந்த வீட்டில் அவளுடன் பிறந்த சகோதரர்கள் இருக்கும்போது, அவர்கள் என்று சொத்தை பங்கு பிரிக்க நினைகிரார்களோ, அப்போது தான், அவளுக்கும் அதில் பங்கு கொடுக்கும் நிலை ஏற்படும்" என்கிறது.
அப்படியானால், ஆணுக்கு சமமாக பெண் வைக்கப்படவில்லையா?
அவள் சகோதரர்கள் விரும்பும் போது தான் சொத்து பங்கீடு செய்யலாம் என்றால், அவள் சட்டத்தின் பார்வையில் சற்று இறக்கமாகத் தானே வைக்கபடுகிறாள்?" என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் பதிலளித்துள்ளது.
குடும்ப சொத்து துண்டுபட்டு விடக்கூடாது என்பதைத் தான் சட்டம் இயற்றியவர்கள் கருத்தில் வைத்துள்ளனர் என்றது.
ஆனாலும், இந்த விஷயத்தில் தமிழ் நாடு புண்ணியம் கட்டிகொண்டது.
தமிழ்நாட்டில், பெண்களுக்கான சரி சமமான சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டதால், அவளும், இந்து கூட்டு குடும்பத்தில் , உரிமையாளர் ஆகிறாள் என்பதால், அவளுக்கும் அவள் சகோதரர்களை போலவே சம உரிமை வருகிறது என்பதால், அவர்களை போலவே, அவளுக்கு சொத்தில் பங்கு கேட்கும் முதல் உரிமையும் வந்துவிடுகிறது.
சரி, அது தான் அப்படி என்றால், திருமணமான பெண்னுக்கு பிறந்த வீட்டில் வசிக்கும் உரிமை , அவள் கணவன் இறந்து விட்டாலோ, பிரிந்து சென்றாலோ அல்லது கைவிட்டுவிட்டாலோ , தான் கிடைக்கும்.
அதாவது...அவள் கணவனுடன் வாழும் போது இந்த உரிமை கிடையாது என்கிறது.
இதிலும் ஒன்று கவனித்தீர்களா....
திருமணம் ஆன பெண்ணுக்கு தான் இந்த நிபந்தனைகள்
திருமணமாகாத பெண்ணுக்கு அப்படியில்லை. பிறந்த வீட்டில் வசிக்கு உரிமை அவளுக்கு உள்ளது.
இது பெண்களுக்குள்ளேயே பாகுபாடு பார்ப்பதாகிடவில்லையா?
திருமணமான பெண்ணுக்கு வசிக்கும் உரிமை கிடையாது ஆனால் திருமணம் ஆகாத பெண்ணுக்கு என்றால்?
இது போன்ற வித்தியாசம் ஆணுக்கு இல்லையே..
அவனுக்கு திருமணம் ஆனாலும் சரி, ஆகவில்லை என்றாலும், அவனுக்கு பிறந்த வீட்டில் வசிக்கும் உரிமை உண்டு.
ஆனாலும் இந்த வேறுபாடு அப்படியே நிலைத்து இருக்கும் போது வந்தது குடும்ப வன்முறை சட்டம்.
அதில் பிரிவு 17 ல் சொல்லப்பட்ட "பகிர்ந்து குடியிருக்கும் வீட்டில்" அவளுக்கு உரிமை உள்ளதோ இல்லையோ, ஆனால் அந்த வீட்டில் உள்ளவர்களுடன் அவளுக்கு குடும்ப ரீதியான உறவு, ...அதாவது தாய், மாமியார், மருமகள், சகோதரி என்று இருந்தால், அங்கு வசிக்கும் உரிமை உள்ளது?" என்று சமீபத்தில் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.
அப்படியானால், திருமணமான பெண்ணுக்கு அவள் தாய் வீட்டில் வசிக்கும் உரிமை வந்து விடுகிறது.
இது கொஞ்சம் ஓவர் இல்லையா என்பீர்கள் சிலர்.
ஆனால், இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் போது சொன்ன காரணத்தை சற்று கவனியுங்கள்...
"இந்தியாவில், ஒரு பெண், தனது திருமணத்தின் போது தனது கணவருடன் வசிப்பது ஒரு சமூக விதிமுறையாகும், தொழில் அல்லது வேலை உறுதிப்பாடுகள் அல்லது பிற உண்மையான காரணங்களுக்காக, கணவனும் மனைவியும் வெவ்வேறு இடங்களில் வசிக்க முடிவு செய்கிறார்கள். ஒரு குடும்ப உறவில் இருக்கும் பெண் நியாயமான காரணத்திற்காக வேறு இடத்தில் வசிக்கும் சந்தர்ப்பத்தில் கூட, பகிரப்பட்ட குடும்பத்தில் வசிக்க அவளுக்கு உரிமை உண்டு."
அப்படியானால்....
கேள்விக்கு பதில் "ஆம்"..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக