ஏன் விவாகரத்தை விட நீதிமன்ற
ஆணையுடன் பிரிந்து வாழ்வது சிறந்தது?
திருமண
உறவு நம் நாட்டில் ஒரு மங்களகரமான அம்சமாக பார்க்கப்படுகின்றது. இந்து திருமண சடங்குகளில்
கூட, “இவர்கள் ஏழு பிரவியுளும் ஒன்றாக இருக்க வேண்டும்” என்ற சடங்குகள் உண்டு. அவர்களுக்குள் பிரிவு என்பது ஒருவர்
இறப்பில் தான் இருக்க வேண்டும் என்ற நிலை தான்
இருந்து வருகிறது . அதனால் தான், நம் அப்பா தாத்தா காலத்தில், ஒத்துப் போகாத தம்பதியரும்
சேர்ந்து வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
பின்னர், நாகரீகம்
மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாக விவாகரத்து என்ற கருத்து இந்தியாவிலும் புகுந்து , இந்து திருமணச் சட்டம், 1955 இல்
அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, கணவன்-மனைவி இடையே தவறான புரிதல் அல்லது அலட்சிய நடத்தை காரணமாக ஏற்படும் குடும்பத் தகராறுகளில். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்க, இந்து திருமணச் சட்டம், 1955ல் சில வழிமுறைகளை காட்டுகின்றது . அதில் சொல்லப்பட்ட திருமண உறவை தற்காலிகமாகவும் நிலையாவும் முறிக்கக் கூடிய, ‘ விவாகரத்து’ மற்றும் ‘நீதிமுறை பிரிவு’ என்ற இந்த இரண்டு முறைகளும் திருமண உறவில் உள்ள விரிசல்களை சரி செய்துக் கொள்ளவும், அது முடியாது போகும் போது முறித்துக் கொள்ளவும் உதவுகின்றன.
இதில் விவாகரத்து எனப்படும் திருமண உறவையே ரத்து செய்யும் முறையை பற்றி நாம் அறிவோம். இதைப் பற்றி இந்து திருமண சட்டத்தின் பிரிவு 13 சொல்கிறது. ஆனால் இன்னொரு விதமான பிரிவை பற்றி நமக்கு பெரிதும் தெரிவதில்லை. அது தான் JUDICIAL SEPERATION எனப்படும் நீதிமுறை பிரிவு . ;நீதிமுறை பிரிவு ‘ என்பது, கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஒரு தற்காலிகமான பிரிவு தான். அதை நீதிமன்ற அனுமதியுடன் பெறுகிறோம். “விவாகரத்து பெற விருப்பமில்லை, அதே சமயம் சேர்ந்து வசிக்கவும் ஆசையில்லை” என்றால் அதற்கு உரிய ஒரே வழி இந்து திருமண சட்டத்தின் பிரிவு 1௦யை நாடுவது தான். அது தான் நீதிமன்ற பிரிவு இதைத் தான் ஹ்ரிதிக் ரோஷன் போன்ற பாலிவுட் ஹீரோக்களும் நாடுவது. ஏன என்று பார்ப்போம். நீதி முறை பிரிவு என்பது ஒரு சட்டப்பூர்வ செயல்முறை, இது விவாகரத்துக்கு முந்தைய நிலை என்றும் கொள்ளலாம். இது திருமண பந்தத்தில் உள்ளவர்களை சட்டப்பூர்வமாக பிரித்து வைப்பதை குறிக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டுமானால், நீதி முறை பிரிவு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு,... அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு, இருவரின் சம்மதத்துடன் பிரிக்கப்படும் சூழ்நிலையைக் குறிக்கிறது. இதை கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து நடவடிக்கைக்கு முன்னர் தங்கள் திருமண உறவை மேம்படுத்தி கொள்வதற்கான மற்றொரு வாய்ப்பாக எடுத்து கொள்ள வேண்டும். விவாகரத்தும் நீதிமுறை பிரிவு இரண்டும் ஒன்று தானா? இல்லை. இரண்டு சொற்களும் அவற்றின் அர்த்தங்களில் வேறுபட்டவை, அதனால் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்த முடியாது. விவாகரத்திற்கான காரனங்களை ஒத்துத் தான் நீதி முறை பிரிவு கோருவதற்கும். இருந்தாலும், விவாகரத்திற்கான காரணத்தை நிரூபிக்காத போது, அதன் மறு தீர்வாக நீதி முறை பிரிவை வழங்க இயலாது என்று கேரளா உயர் நீதிமன்றம்.சமீபத்தில் ஒரு தீர்ப்பில் சொல்லியுள்ளது.
இரண்டுக்கும்
உள்ள வித்தியாசங்கள் என்ன?
·
நீதிமன்ற பிரிவு
கோரி, திருமணம் முடித்த பிறகு, எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் மனு செய்யலாம். ஆனால், விவாகரத்து பெற, திருமணம் முடிந்து ஒரு வருடம்
கழிந்த பிறகே கோர முடியும். அதுவும் மனமொத்த விவாகரத்து கேட்பது என்றால் மனு
தாக்கல் செய்து, நீதிமன்ற கோப்பில் எடுத்த பின்பும், ஆறு மாத காலம் காத்திருக்க
வேண்டும்.
·
நீதிமன்ற பிரிவு
என்பது விவாகரத்திற்கான முதல் நிலை
·
நீதி முறை பிரிவு, விவாகரத்து ஆகலாம் ஆனால்
விவாகரத்து ஒருபோதும் நீதி முறை பிரிவாக மாற முடியாது. அத்தோடு
நீதி முறை பிரிவு என்பது விவாகரத்துக்கான
காரணமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
·
நீதி முறை பிரிவின் போது, தரப்பினர்
தங்கள் திருமணத்தைப் பற்றி யோசித்து அதைச் சரி செய்யலாம் ஆனால் விவாகரத்திற்கு
பிறகு அதற்கான வாய்ப்பு கிடையாது.
·
நீதி முறைப்
பிரிவில், இரண்டு தரப்பினரும் இணைந்து வாழாவிட்டாலும் சட்டப்பூர்வமான திருமண உறவில்
தொடர்ந்து இருப்பதாகத்தான் கொள்ளப்படும். விவாகரத்து என்னும் போது, அவர்களின்
திருமணம் ரத்து செய்யப்படுகிறது, அவர்கள் மறுமணம் செய்ய சட்டப்பூர்வமாக
அனுமதிக்கப்படுகிறார்கள்.
· நீதி முறைப் பிரிவின் போது, மனுதாரர் சொல்லும் காரணம் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உத்தரவு வழங்கப்படுகிறது, ஆனால் விவாகரத்து கோரும்போது/ முதலில் திருமண உறவை சீர் செய்ய அவர்களுக்கு கவுன்சலிங் செய்து, முடியாத பட்சத்தில் விவாகரத்துக்கு உத்தரவிடப்படும்.·
நீதி முறை பிரிவு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பாணை பிறப்பித்து
விட்டால், தீர்ப்பாணை பெற்றவர், திருமண உறவில் உள்ள மற்றொருவருடன் இனைந்து வாழ வேண்டிய
அவசியமில்லை. அதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினர் தனித்தனியாக
வாழ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ஒரே கூரையின் கீழ் வாழலாம். நீதித்துறை பிரிப்பு
என்பது வீட்டில் இருந்து அல்ல கடமைகளில் இருந்து விடுபடுவது.
· அதேசமயம், மனைவி தன்னையும் தன குழந்தைகளையும் பராமரிக்க இயலாத நிலையில் இருந்தால், அந்த நீதிமன்ற பிரிவு காலக்கட்டத்திலும், கணவன் அவன் குடுமம்பதிற்கு போதிய
பராமரிப்பு தொகை தர வேண்டும்.
·
நீதி முறை
பிரிப்பு ஆணை வழங்கிய பின், தம்பதியினர் ஒன்று சேர நினைத்தால், மீண்டும் அதே
நீதிமன்றத்தில் மனு செய்து முந்தைய உத்தரவை நீக்கம் செய்து பெறலாம். ஆனால் விவாகரத்து பெற்ற பின், அதில் மாற்றம்
செய்ய வேண்டுமாயின், உயர் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும்.
விவாகரத்து, நீதிமுறை பிரிவாகுமா?
இல்லை, விவாகரத்து என்பது நீதி முறை பிரிவாக இருக்க முடியாது, அதே சமயம் நீதி முறை பிரிவு விவாகரத்தாக மாறலாம். ஒரு தம்பதியருக்கு பிரிந்து வாழ நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டால்.அவர்கள் வாழ்க்கையில் ஒருவருக்கொருவரின் முக்கியத்துவத்தை அறிந்துக் கொள்வார்கள், ஆனால் 1 வருடத்திற்குப் பிறகும் அவர்கள் விலகி இருக்க முடிவு செய்தால் திருமண உறவை முறிக்க நேரிடும்.
உதாரனத்திற்க்கு A, B என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார்.அவர்களுக்கு ஒரு சின்ன விஷயத்தில் தகராறு ஏற்பட்டது, அந்த வாக்குவாதம் பெரிதாகி, அவர்கள் இனி ஒன்றாக வாழ விரும்பவில்லை. என்றும் விவாகரத்துக்காக நீதிமன்றத்திற்குச் சென்றனர், அவர்களது பிரசசினையை தீர்த்துக் கொள்ள அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க நீதிமன்றம் முடிவு செய்து 1 வருடத்திற்கு நீதி முறை பிரிவினைக்கு உத்தரவிட்டது. 1 வருடம் கழித்து, அவர்கள் தங்களுக்குள் உள்ள ககுத்து வேறுபாட்டை சரி செய்து, விவாகரத்து வேண்டாம் என்று முடிவு செய்தனர். 1 வருடத்திற்குப் பிறகு, தம்பதியினர் தம் திருமண பந்தத்தை தொடர வேண்டாம் என்று முடிவு செய்தால், விவாகரத்துக்கான காரணத்தையும் விவாகரத்துக்கான செயல்முறையையும் நீதிமன்றம் தீர்மானிக்கும் பரஸ்பர சம்மதத்தின் மூலமும் விவாகரத்து பெறலாம். தப்பன் குமார் எதிர் ஜோத்ஸ்னாஇந்த வழக்கில் மனைவி கணவரை தனிக்குடித்தனம் வர சொல்லி வற்புறுத்தி வந்தார். கணவர் முடிவாக மறுத்த பிறகு, வீட்டை விட்டு வெளியேறி தன சகோதரருடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். கணவர் ஜாமீன் பெற்றார். விவாகரத்து கோரி மனு செய்தார். தன்னை கணவரும் அவர் குடும்பத்தினரும் கொடுமை செய்ததாக மனைவி பதில் மனு தாக்கல் செய்தார்ர்.
மன ரீதியான் துன்புறுத்தல் என்பது ஒருவரின் உடல் அல்லது மன ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கிறது அப்படிப்பட்ட துன்புறுத்தலில் என்னென்னவெல்லாம் அடங்கும்?· மணவாழ்வில் இரக்கம், அன்பு காட்டாதது.· மண உறவிற்கு வெளியே தொடர்பு உள்ளதாக பொய்யாக குற்றம் சுமத்துவது· தாம்பத்திய உறவிற்கு மறுப்பது· ஆண்மைக் குறைவு· முறையற்ற குழந்தைப் பிறப்பு· குடி போதை· தற்கொலை செய்துக் கொள்ளவதாக மிரட்டல் விடுப்பது· கணவரின் மேலதிகாரிக்கு மனைவி பொய் புகார் எழுதுவது· இணக்கமில்லா மனோபாவம்· மீள முடியா மண முறிவு
இதைத் தவிர நீதி முறைப் பிரிவை பெறுவதற்கான காரணங்கள்
விவாகரத்து கோருவதற்கான அதே காரணங்களை ஒத்து இருக்கும்.
· மண வாழ்க்கைக்கு எதிரான உறவை கொள்ளுதல்..இது ஆணோ பெண்ணோ இரு பாலருக்கும் பொருந்தும். இந்திய தண்டனைச் சட்டத்தில் தான், மனைவி கணவனை தவிர்த்து இன்னொரு ஆணுடன் உறவு வைப்பது குற்றம் அல்ல என்றது. ஆனால் விவாகரத்து கோருவதற்கு இது ஒரு காரணமாக அமையும். · வேண்டுமென்றே கவனிக்காமல் விடுதல் wilful Neglect· வேற்று மதத்திற்கு மாறுதல்· மன நிலை பிறழ்ந்து இருத்தல்· தொழு நோய் போன்ற தொற்று நோய்கள் இருப்பது· உலக வாழ்வை துறத்தல்· ஏழு வருடங்கள் தம்பதி குறித்த விவரங்கள் ஏதும் தெரியாது, காணாமல் போதல் இவற்றை தவிர்த்து , பிரிந்து வாழ்வதற்கு மனைவிக்கென சில கூடுதல் காரணங்கள்: உள்ளன:· மனைவி இருக்கும் போதே இன்னொரு திருமணம் செய்தல்· கற்பழிப்பு குற்றம் நிரூபணம் ஆதல்· இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 மற்றும் குற்ற விசாரணை நடைமுறை சட்டப் பிரிவு 125ன் கீழ் . பராமரிப்பு தொகை வழங்க சொல்லி நீதிமன்ற உத்தரவு வழங்கிய பின்பும் ஒரு வருடத்திற்கு மேலாக கணவன் சேர்ந்து வாழ மறுக்கும் போது· 15 வயதுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தால் அதை 15 வயதிலிருந்து 18 வயதிற்குள் அந்த சிறுமி அதை ஏற்று கொள்ள மறுத்தால், நீதிமுறை பிரிவு கோரி மனு செய்யலாம். இந்த நீதி முறை உத்தரவு இறுதியானதா? இல்லை/ மனு தாரரின் வாக்குமூலத்தின் உண்மையைக் கண்டு, நீதிமன்றம் திருப்தியடைந்து, நீதிமுறை பிரிவு தீர்ப்பாணை வழங்காமல் இருப்பதற்கு சட்டக் காரணம் எதுவும் இல்லாமல் இருக்குமானால், கணவன் மனைவி பிரிந்து வாழ ஆணை வழங்கலாம். ஆனால் அதை எதிர்த்து அடுத்தவர் மேற்கொண்டு போடும் மனுவில் கூறப்படும் காரணங்களில் நீதிமன்றம் திருப்தியடையுமானால், ஏற்கெனவே வழங்கிய நீதி முறை பிரிவு தீர்ப்பானையை நீதிமன்றம் நிராகரிக்கலாம்.. அல்லது இல்லாததாக்கி விடலாம். அல்லது திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதே போல, நீதித்துறை பிரிவினைக்கான ஆணை நிறைவேற்றப்பட்ட பிறகு, எந்த நேரத்திலும் கூட்டு-வாழ்வை புதுப்பிக்க கட்சிகள் ஒப்புக்கொண்டால், நீதிமன்றத்தில் மனு செய்து அந்த பிரிவு ஆணையை ரத்து செய்யலாம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றப் பிரிவினை வழங்குவதற்கான ஒரே நோக்கம் , அவர்களது உறவைப் பற்றி சிந்தித்து விவாகரத்துக்கு முன் மற்றொரு வாய்ப்பை வழங்குவதாகும். எனவே நீதிமுறை பிரிவு என்பது நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படும் சட்டப்பூர்வ முறிவு. இதுவே பின்னர் அவர்கள் மீண்டும் ஒன்று இணைவதாக மாறலாம். எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் , நீதி முறை பிரிவு என்பது குறிப்பிட்ட காலத்திற்கு திருமண கடமைகளிலிருந்து விடுபடுவதைக் குறிக்கிறது. எனவே தம்பதியாக இருக்கும் போது., தாம்பத்திய உறவுக்கு மறுப்பது, சேர்ந்து வாழ மறுப்பது போன்றவை விவாகரத்திற்கான காரணமாக அமையும். அதை தவிர்க்க நினைப்பவர்கள் இந்த வழிமுறையை கையாளலாம். ஏன் விவாகரத்தை விட நீதிமுறை பிரிவு சிறந்தது?· கருத்து வேறுபாடு கொண்ட தம்பதியினர் தங்கள் உறவை மறு பரிசீலனை செய்து தக்க வைத்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறது. · நீதிமுறை பிரிவின் போது, கணவன் மனைவு உறவு நீடித்து இருப்பதால், இருவரின் சொத்து குறித்தோ அல்லது பராமரிப்பு குறித்தோ எந்த வித திட்டமிடலும் தேவையில்லை ஏனெனில் இருவரும் ஒருவருக்கொருவர் சட்டபூர்வ வாரிசாக தொடர்ந்து இருப்பதால் · அதே போல குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்ற கேள்விக்கும் இடமில்லை. ஏனென்றால் இருவருக்கு சாம் உரிமை உள்ளது. அதனால் தான் அறிவான தம்பதியியர் தங்களுக்குள் பிணக்கு ஏற்படும் போது, நீதிமுறை பிரிவு ஜுடிசியல் SEPERATION மட்டுமே நாடுகிறார்கள். நமக்குத் தெரிந்த அறிவான தம்பதியினர் இருக்கிறார்களா??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக