அன்றாட வாழ்வில் சந்திக்கும் சங்கடங்களை சட்டத்தின் துணை கொண்டு தவிர்ப்பதற்கான ஒரு அலசல்..
வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022
வெள்ளி, 24 ஜூன், 2022
வாரிசு சான்றிதழ் இனி தேவையில்லாததா?
வாரிசு சான்றிதழைக் கொண்டு தனக்கு வர வேண்டிய சொத்துக்களை, தன் பேருக்கு மாற்றும் நடைமுறை தான், இங்கு நடந்து வருகிறது. அப்படியிருக்க நேற்று, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, "வாரிசு சான்றிதழ்" என்று அதன் பெயர் இருந்தாலும், அது இறந்தவருக்கும், சான்றில் உள்ளவர்களுக்கும் உள்ள உறவுமுறையை குறிக்கும் சான்று மட்டும் தான் என்றும் அதைக் கொண்டு இன்னார் தான் இறந்தவரின் வாரிசு என்று நிர்ணயிக்க முடியாது என்று சொல்லியுள்ளது.
நீதியரசர்கள் பி.என் பிரகாஷ், ஹேமலதா மற்றும் நக்கீரன் அடங்கிய முழு பெஞ்ச், பி,வெங்கடாசலம் எதிர் தாசில்தார். 2022 livelaw (Mad) 265 வழக்கில் நேற்று அளித்த தீர்ப்பில், வாரிசுரிமை என்பது வெல்வேறு சட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப் பட வேண்டிய ஒன்று என்றும் அவரவர் தனி சட்டங்களின் மூலம் பெற்ற சட்டப் பூர்வமான உரிமையை தாசில்தாரில் வாரிசு சான்று மாற்றி விட முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இனி இந்த சான்றைக் கொண்டு சொத்து பரிமாற்றங்களை செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திடீரென இது போன்ற ஒரு தீர்ப்பு வர வேண்டிய தேவை என்ன என்று பார்த்தால் , தமிழ்நாட்டில் வருவாய் துறையை சேர்ந்த தாசில்தார், வாரிசு சான்றை கொடுப்பது என்பது 27.04.1979 தேதியிட்ட வருவாய் போர்டு செயல்முறைகளின்படி தாசில்தார்களின் பணிகளின் ஒன்றாக சொல்லப்பட்டு, அதன்படியே செயல்பட்டு வருகின்றனர். பாண்டிச்சேரியில் தாசில்தாருக்கு இந்த அதிகாரம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் வாரிசு சான்றை நீதிமன்றத்தில் மனு செய்து தான் பெற வேண்டும்.
1991 ல் வருவாய் துறையின் சிறப்பு கமிஷனர், அந்த சான்றை கொடுக்கும் போது பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை வழங்குகிறார். அடுத்து 2017ல் வருவாய் துறை கமஷனருக்கான முதன்மை செயலாளர், சில கூடுதலான வழிகாட்டிகளுடன் ஒரு சுற்றறிக்கை அனுப்புகிறார். அதே சமயம், சில வகையில் வருபவைக்கு மட்டும் இந்த வாரிசு சான்றை அளிக்க தடை செய்கிறார். அதன் பின்னே 2019ல் வழங்கப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கை, இறந்தவரின் வாரிசுகளை கிளாஸ் ஒன்று , கிளாஸ் இரண்டு என்று இருவிதமாக வகைப்படுத்தி இரண்டாம் பிரிவு வாரிசுகளுக்கு சான்று தர தடை விதிக்கிறது. இங்கு தான் முரண்பாடு ஆரம்பிககிறது.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகின்றன. திருமூர்த்தி எதிர் சென்னை கலெக்டர் 1998 Wrut L.R. 347 என்ற வழக்கில் இதே நீதி மன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், தாசில்தாருக்கு வாரிசு சான்று கொடுக்க அதிகாரம் இல்லை என்ற போது, பாபு எதிர் தாசில்தார் W.P.no. 5940/2017 வழக்கில் 27.7.2020 அன்று இன்னொரு டிவிஷன் பெஞ்ச், இரண்டா ம் வகுப்பு வாரிசு சான்றை கொடுக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது. இது ஒரு விதத்தில், ஏற்கெனவே அவர்கள் துறையில் போட்ட சுற்றறிக்கைக்கு எதிரானது. இந்த இரு வேறு முரண்பட்ட தீர்ப்பின் காணமாக, ஃ புல் பெஞ்சுக்கு இந்த சட்டப் பிரச்சினை அனுப்பட்டு அதற்கான தீர்ப்பு தான் நம் முன் இப்போது....
சாதாரணமாக ஒரு வாரிசு சான்று கேட்டு மனு செய்யும்போது பின்பற்றப்படும் நடைமுறை என்ன? வருவாய் ஆய்வாளர் இறந்தவருக்கு சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்து ஒரு அறிக்கை தருவார். அதன் அடிப்படையிலேயே தாசில்தாரால் இந்த சான்று வழங்கப்படும். ஆனால் வருவாய் ஆய்வாளரும் தாசில்தாரும், இந்து வாரிசுரிமை சட்டத்தினையும், முஸ்லிம்களுக்கு பொருந்தும் முல்லாவின் முகமதியர் சட்டத்தில் வரக்கூடிய பங்குதாரர்களையும், இந்திய வாரிசுரிமை சட்டத்தின் இரண்டு மற்றும் மூன்று பகுதிகளில் சொல்லப்பட்டுள்ள பங்கு பிரிக்கும் முறையைக் குறித்தும் பரிசீலித்து தீர்வு தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது இல்லையா? அதே சமயம், . ஒரு நிர்வாக ரீதியான இந்த பணியை ஒரு தாசில்தார் ஒரு குவாசி ஜுடிசியல் தன்மை கொண்ட ஒன்றாக நீடிக்க முடியாது . அப்படி செய்தால் அது தேவையற்ற குழப்பத்தையும் அதிகப்படியான சட்டப் பிரச்சினைகளுக்கும் உள்ளாகும் என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது.
இதில், நீதிமன்றம், சில கேள்விகளை தனக்குத் தானே எழுப்பிக் கொண்டு அதற்கான தீர்வு காண முனைந்துள்ளது.
1. தனி நபர் சட்டத்தின் மூலமாக ஒருவர் பெற்ற வாரிசு அந்தஸ்தை இந்த சான்று நிர்ணயிக்கிறதா?
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, சான்றில் இடம் பெற்ற ஒருவரின் பெயர், இறந்தவருக்கும் அவருக்கும் உள்ள உறவுமுறையை மட்டுமே குறிக்கிறது என்றும், அதற்கு மேல் அந்த சான்றுக்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது என்றுள்ளது. ஏற்கெனவே தனி நபர் சட்டத்தின் மூலம் ஒருவர் பெற்ற வாரிசு அந்தஸ்தை இந்த சான்று மாற்றி விட முடியாது.
அப்படியானால் 'வாரிசு சான்று' என்ற பெயருடன் கொடுக்கப்படும் அந்த சான்று?
அது தவறான பெயர் என்றும் உண்மையில் அது இறந்தவருக்கும் மற்றவருக்கும் இடையே உள்ள உறவுமுறையை குறிக்கும் சான்று தான் என்றும் சொல்லியுள்ளது.. வாரிசு சான்றில் ஒருவரின் பெயர் இடம்பெற்றதாலேயே சம்பந்தப்பட்டவர்களின் தனி சட்டத்தின் மூலம் சட்டரீதியான வாரிசு உரிமை பெற்ற ஒருவரின் நிலையை, ஒரு சுற்றறிக்கை என்ற பெயரில் உள்ள நிர்வாக ரீதியான குறிப்புகளை கொண்டு மாற்றி விட முடியாது என்றும் சொல்லியுள்ளது. அதே போல இறந்தவரின் வாரிசு என்று எந்தவித சட்ட அங்கீகாரத்தையும் அந்த சான்றில் உள்ளவருக்கு கொடுத்து விட முடியாது என்கிறது.
இன்னும் ஒரு விஷயத்தை நீதிமன்றம் கூர்ந்து கவனித்துள்ளது.
2019 சுற்றறிக்கையிலேயே சில முரண்பாடுகள் உள்ளன. இறந்த நபரின் தந்தை வாரிசு சான்று கேட்டு மனு செய்யலாம். ஆனால் அதே சமயம் தந்தையை உள்ளடக்கிய கிளாஸ் இரண்டு பிரிவினருக்கு வாரிசு சான்று கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொன்றையும் கவனித்தது நீதிமன்றம், கிளாஸ் இரண்டு பிரிவினரை வகைப்படுத்துவதில் சிரமம் இருப்பதால் தான் அவர்களுக்கு சான்று வழங்க தடை கொடுக்கப்பட்டது என்னும் வருவாய் துறை, ஒரு எளிதாக அறியக்கூடிய உறவுமுறையான இறந்தவரின் தந்தையை இரண்டாம் பிரிவில் வருகிறார் என்பதால் நிராகரிக்கும் போது, அவரின் இறந்து போன மகளின் வயிற்று பேத்தி(அவரின் தாய் இறந்து விட்டிருக்கும் போது ) முதல் பிரிவு வாரிசு என்று சான்று வழங்குவது எப்படி என்று தன ஆச்சரியத்தை பதிவு செய்கிறது.
ஒரு மனுதாரர், இறந்தவரின் தந்தை என்பது குறித்து ஆய்வு செய்வது , இறந்து போன மகளின் இறந்து போன மகனின் மகன் என்று தீர்மானிப்பதை விட சுலபம் என்று எல்லோருமே ஒத்துக்கொள்ளும்போது தந்தை உள்ளிட்ட உறவுமுறையை நீக்கியது நியாயமற்றது என்கிறது.
இதில் இன்னொன்றையும் நீதிமன்றம் கவனிக்காமல் இருக்கவில்லை.
மேற்படி சொன்ன வாரிசுரிமை எல்லாம் இந்து வாரிசுரிமை சட்டத்தின் கீழ் வருபவை. அந்த சில பிரிவுகளை அப்படியே இந்த சுற்றறிக்கையில் எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதை கண்டுணர்ந்த பின், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியே சட்டம் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கானது, பொதுவாக எப்படி செயல்படுத்தமுடியும் என்ற கேள்வியையும் எழுப்பியது. எனவே சுற்றறிக்கையின் சில பகுதிகள் தவறாக கருதப்பட்டவை என்றும் ஆனாலும் அவை வெறும் நிர்வாக ரீதியாக கொடுக்கப்பட்ட வழிகாட்டிகளே தவிர சட்ட ரீதயாக உரிமைபெற்றவருக்கு எதிராக செயல்பட முடியாது என்றது.
இதில் இன்னொரு பிரச்சினையும் உள்ளது.
2. அந்த சுற்றறிக்கையை கொண்டு ஒரு நிர்வாக ரீதியாக உத்தரவு பிறப்பிக்கும் போது, அந்த சுற்றறிக்கையை அல்லது அரசு ஆணையை எதிர்க்காமல், அந்த சுற்றறிக்கையை மீறி உத்தரவு இடுமாறு நீதிமன்றம் தன் எல்லையை தாண்டி உத்தரவு இட முடியுமா?
முடியாது என்றாலும், ஏற்கெனவே தனி சட்டத்தின் வழியாக சட்ட உரிமையை பெற்ற ஒருவரிடமிடமிரும் பறிக்கும் வண்ணம் ஒரு சுற்றறிக்கை இருக்குமேயானால், அதில் நீதிமன்றம் தலையிடலாம் என்ற அடிப்படையில் இவை எல்லாவற்றிற்கும் காரணமான 2019 சுற்றறிக்கையில் உள்ள குறைபாடுகளை களைந்து புதிதான சுற்றறிக்கையை வெளியிடுமாறு நீதிமன்றம் அறிவுரூத்தி]யுள்ளது.
3. வாரிசு சான்றிதழா அல்லது நீதிமன்றத்தில் பெறப்படும் சக்க்ஷஷன் சான்றிதழா எதற்கு சட்ட ரீதியான அதிகாரம் கொண்டது>"
இரண்டுக்கும் உள்ள வித்யாசம் என்னவென்றால், கடன் அல்லது செக்க்யுரிக்காக வழங்கப்படுவது பின்னது. அதை பற்றி பற்றி இந்திய வாரிசுரிமை சட்டத்தில் சொல்லப்பட்டுளது. ஆனால் தாசில்தாரால் கொடுக்கபடும் இந்த வாரிசு சான்றுக்கோ எந்த வித சட்ட அங்கீகாரமும் இல்லை..
இப்போது சொல்லுங்கள் வாரிசு சான்றை பெறுவது இனி தேவை தானா?
செவ்வாய், 7 ஜூன், 2022
"சங்கடம் தவிர்க்கும் சட்டம்" இன்று முதல் ஒரு பதிவு பெற்ற அரசு சாரா தன்னார்வ அமைப்பு (NGO) ஆக மாறியுள்ளது..
ஒரு மகிழ்ச்சியான செய்தி!!!!
"சங்கடம் தவிர்க்கும் சட்டம்" இன்று முதல் ஒரு பதிவு பெற்ற அரசு சாரா தன்னார்வ அமைப்பு (NGO) ஆக மாறியுள்ளது..
உங்கள் அனைவரின் ஆதரவுடன் தொடர்ந்து மக்கள் பணியில்…
வெள்ளி, 3 ஜூன், 2022
வெள்ளி, 27 மே, 2022
புதன், 18 மே, 2022
செவ்வாய், 17 மே, 2022
எனது அண்ணன் மகன் இறந்து விட்டார் அவரது பெயரில் உள்ள வீடு அவரது சட்ட படியான வாரிசுகள் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட வேண்டுமா அல்லது தந்தையாகிய எனது அண்ணன் உயில் எழுதி வைக்கலாமா?
நம் நாட்டில் சிவில் சட்டங்கள் அவரவர் சார்ந்த மதத்தை பொறுத்ததே. ஆனால் நீங்கள் எந்த மதம் என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். இருந்தாலும், மூர்த்தி பெரியசாமி, நீங்கள் பின்பற்றுவது இந்து மதம் என்ற எண்ணத்தில் கீழே பதில்:
உங்கள் அண்ணன் மகன் இறந்து விட்டார். அவர் சொத்துக்களுக்கு உங்கள் அண்ணன் உயில் ஏதும் எழுதி வைப்பதா? முதலில் அவருக்கே அந்த சொத்தில் உரிமை இல்லை.... அது தெரியுமா அவருக்கு?!
இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 8 ன் படி, உயில் ஏதும் எழுதி வைக்காமல் இறக்கும் ஒரு இந்து ஆணின் சொத்துகளை அவரின் சட்டப்பூரமான வாரிசுகள் என்று, முதல் பட்டியலில் இருக்கும், அவர் மனைவி, பிள்ளைகள், அவர் தாயார் என்று சமமாக பங்கு பிரித்து கொடுக்கப்படும்.
இந்த வாரிசுகள் யாரும் இல்லையென்றால் மட்டுமே அவரின் தந்தைக்கு அந்த சொத்தில் உரிமை உள்ளது. (இப்படியிருக்க உயிலாவது, எழுதுவதாவது!!.....
உடனே...என்ன.".என் அண்ணன் சொத்தில் அவன் பிள்ளைக்கு பங்கு இருக்கும் போது, பிள்ளை சொத்தில் அவன் அப்பாவுக்கு பங்கில்லையா?" என்று பொங்கக் கூடாது!! இதுவே ஒரு இந்து பெண் உயில் எழுதி வைக்காமல் இறந்து போனால், அவளின் பெயரில் உள்ள சொத்து எப்படி பங்கிடப்படும் தெரியுமா?
அவள் பிள்ளைகள் மற்றும் கணவனுக்கு சமமாக..
அவர்கள் யாரும் இல்லையென்றால், அடுத்து அவள் கணவனின் வாரிசுகளுக்கு: அவர்களும் இல்லையென்றால் தான் அவள் அப்பாவின் வாரிசுகளுக்கு இல்லை அம்மாவின் வாரிசுகளுக்கு...இந்த வரிசையில் தான் சொத்து போய் சேரும்.
ஆனால் இதுவே அந்த சொத்து அவள் பெற்றோர் மூலமாக பெற்றது என்றால், அவள் பிள்ளைகளுக்கும், அவர்கள் இல்லையென்றால், அவள் அப்பாவின் வாரிசுகளுக்கும் போகும்.
அதுவே அந்த சொத்து அவள் மாமனார், மாமியாரிடமிருந்து பெற்றிருந்தால், அவள் பிள்ளைகளுக்கு முதலிலும், அவர்கள் இல்லையென்றால், அவள் கணவனின் வாரிசுகளுக்கு போய் சேரும்.
இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனப் பிரிவுக்கு எதிரானது, பாலின பாகுபாடு காட்டுகிறது என்றெல்லாம் சொல்லி, வழக்கு போட்டார்கள்.. "அதெல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. எங்கிருந்து வந்ததோ அங்கேயே தான் போய் சேர வேண்டும்" என்று சொல்லி விட்டது நீதிமன்றம்...வேறு என்னத்தை சொல்ல!!
இந்த பதிலை முடிக்கும முன் என் சிறு வருத்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். இன்றைய உலகில் மலிவாக..இல்லையில்லை இலவசமாக கிடைப்பது இன்னொருவருக்கு கொடுக்கும் அறிவுரை தான். ஆனால் அதையே பனம் கொடுத்து நாம் பெற்று கொள்வது டாக்டரிடமும் வழக்கறிஞரிடமும் தான். ஏனெனில் இரண்டுமே அவர்களின் உயிரையே குடிக்கக் கூடியது. அதே சமயம், ஆலோசனை/அறிவுரை சொல்லும் மருத்துவரும் வழக்கறிஞரும் தங்களை, கண நேரமும் மாறிக்கொண்டே இருக்கும் தத்தம் துறையில் பயின்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான் , அவர்கள் செய்யும் தொழிலுக்கு PRACTISE எனப்பட்டது.
அப்படிப்பட்ட கடினமான ஒரு துறையில் ஒருவர் சந்தேகம் கேட்கும் போது, அது பற்றிய விஷய ஞானம் இல்லாமல் சிலர் பதில் கூறுவது சரியானதல்ல. அதை விவரமில்லாத பலர் நம்பி ஏமாறக் கூடும்..வழி மாறி போகக் கூடும்!!
( இஸ்லாந்து எங்கேயிருக்கிறதுன்னு கண்டுபிடிககிறதுகுள்ள...!!)
சிறப்புடைய இடுகை
பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??
மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...
-
பரம்பரை சொத்து என்னும் போது .இந்து வாரிசு உரிமை சட்டத்தின் படி, பேரப்பிள்ளைகளுக்கு அவர்கள், தாய் வயிற்றில் ஜனிக்கும்போதே அந்த சொத்தின் மீத...
-
சொத்தின் உரிமையை வாங்குபவர்களுக்கு சில தகுதிகளை சட்டம் விதிப்பது போல, அந்த உரிமையை பெறுபவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதியை குறித்து ...