வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இல்லாமல் தன் வழக்கை தானே நடத்த முடியுமா?

 

         


பொதுவாக நீதிமன்றங்களில் வழக்கறிஞர் மூலமாக தான் நம் வழக்கை நடத்துகிறோம்.  ஆனால் சில வழக்குகளில் பார்க்கும் போது கட்சிக்காரரே நேரில் ஆஜராகி தன் வழக்கை நடத்தினார் என்று அங்கொன்று இங்கொன்றுமாக கேள்விப்பட்டுள்ளோம்.

    சம்பந்தப்பட்ட கட்சிக்காரரே வழக்கை நடத்தலாம் தான்.  ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால், அந்த வழக்கு சம்பந்தமான மாண்புமிகு உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற சமீபத்திய தீரப்பு குறித்தோ அல்லது, வழக்கின் உள்ள எதிர் தரப்பின்  சட்டப் பூர்வமான நிலை குறித்து தெரிந்து, அதற்கேற்றவாறு பதில் அளிக்க தெரிந்திருக்க வேண்டும். எப்படி மருத்துவர்கள் நாள்தோறும் அது குறித்து பயில்கிறார்களோ, அது போலத்தான் ஒரு வழக்கறிஞரும்.  தான் எடுத்து நடத்தும்  வழக்கில் உரிய தீர்வு காண்பதற்கு நீதிமன்றத்திற்கு உதவியாக இருக்க வேண்டும். அந்த இடத்தை தானே எடுத்துக் கொண்டு, வழக்கை தானே நடத்த நி'னைப்பவர்கள்,  அது போன்று நீதிமன்றத்திற்கு உதவியாக இருப்பதற்கு பதில், ஆர்வமிகுதியின் காரணமாகவோ அல்லது விளம்பர மோகத்தின் காரணமாகவோ, அறிந்தோ அறியாமலோ சில சமயங்களில் நீதிமன்றத்திற்கு  உபத்திரவமாக மாறிவிடுகிரார்கள். இன்னும் நுணுக்கமாக சொல்லப் போனால், நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்வதற்கு என்று ஒரு நடைமுறை இருப்பது போல, வழக்கில் வாதுரை செய்வதற்கும் ஒரு முறை உள்ளது.  சினிமாக்களில் நடப்பது போல வாதங்கள் நடப்பதில்லை. அதில் காட்டுவது போல நீதிபதிகளும் சிவப்பு அங்கி அணிந்து, கையில் சுத்தியலும் வைத்திருப்பதில்லை. புதிதாக நீதிமன்றத்தை பார்க்க வருபவர்கள், என்னிடம் கேட்கும் கேள்வி இது தான்.."சினிமாவில் காட்டுவது போல, நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக வாதங்கள் பெரும்பாலும் நடப்பதில்லையே?" என்று.  அது வெறும் 'பிம்பம்' ... நிஜத்தை பிரதிபலிக்காத 'பிம்பம்'!!  

எனவே வழக்கை தானே நடத்த எண்ணுபவர். நீதிமன்றம் குறித்த நடைமுறைகளை தெரிந்திருக்க வேண்டும்..  இதுவே, உயர் நீதிமன்றம் என்றால், கேட்கவே வேண்டாம்.  அதன் பாரம்பரியமான  மாண்பையும் மரியாதையையும் இன்னும் கூடுதலாக காக்க வழக்கை நடத்துபவர் தெரிந்திருக்க வேண்டும்  நீதிமன்றத்தில் பேசும் போது எப்படி இருக்க வேண்டும், பேச வேண்டும் என்பது குறித்த சில எழுதப்படாத நடைமுறைகள் உண்டு.இதை மறுதலித்து சம்பந்தப்பட்ட நபர்நீதிமன்றத்திற்கு அவமரியாதை செய்யும் நோக்கில் நடக்கக் கூடாது. நீதியரசரை "மை லார்ட் " என்று தான் விளிக்க வேண்டும். 'சார்' என்று விடக் கூடாது. சில இளம் வழக்கறிஞர்கள் " யுவர் ஹானர் " என்று நீதியரசரை விளிப்பதை பார்த்திருக்கிறேன்...

    உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இல்லாமல் தாமே நடத்தியவர்களில் குறிபிட்டு சொல்ல  வேண்டுமானால் டாக்டர் சுப்பிரமணிய சாமியும் 'டிராபிக்'  ராமசாமியையும் சொல்லலாம். இருவருக்கும் உள்ள வித்யாசம் மலைக்கும் மடுவுக்கும் இடையேயுள்ளது போன்றது.  ஆனாலும், அவர்கள் குறிப்பிட்டு சொல்லக் கூடிய வகையில்  இடம் பெற்றுள்ளனர். ஆனால் ஏனைய சிலர், தானே வழக்கை நடத்தும் ஆர்வத்தில், நீதிமன்றத்தில் நடந்துக் கொள்ள வேண்டிய முறையை மறந்து விடுகின்றன்னர்.  இது போன்ற வரிசையில் தான் வருகிறது, விளம்பர தாகத்தினால் 'பொது நல வழக்குகள்"  என்ற போர்வையில் போடப்படுபவை.  இவற்றினால்  நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும் நிலை ஏற்படுவதோடு மட்டுமில்லாமல், நீதிமன்றத்தின் மதிப்பிற்குரிய நேரமும் வீனடிக்கப்படுகின்றது.

    . இதை தடுக்கும் விதமாக, தன் வழக்கை நானே நடத்துபவர்கள் கடைப்பிடிப்பதற்கான விதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டு, அரசு கெஜட்டில் ,6.11.2019 ல் பகுதி  III—பிரிவு . 2 ல் வெளியிடப்பட்டது.


அதன்படி வழக்க்கறிஞர் இல்லாமல் தாமே நேரிடையாக உயர்நீதிமன்றத்தில்  ஆஜராகி வழக்கை நடத்த விரும்பும் நபர்களுக்கு இந்த விதிகள் பொருந்தும். 

ஆனால் இதுவே பிணை மனு, பரோல் மனு, 'ஆட் கொணர்வு'  மனு போன்றவற்றை தாக்கல் செய்வதற்கு பொருந்தாது. 

என்ன காரணம்? 

 சம்பந்தப்பட்ட நபரே நீதிமன்ற காவலிலோ அல்லது சட்டவிரோத காவலிலோ இருக்கிறார் இல்லையா?

சரி ..இந்த விதிகளின் படி வழக்கை தானே நடத்த விரும்புபவர் என்ன செய்ய வேண்டும்?

  • ·    வழக்கு தாக்கல் செய்யும் போது அவரே நேரிடையாக சம்பந்தப்பட்ட நீதிமன்ற அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
  • ·         அதனுடன் சேர்ந்து, வீட்டு விலாசத்துடன் உள்ள அவருடைய அடையாளத்தை உறுதி செய்யும் விதமாக ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, புகைப்படத்துடன் உள்ள  வங்கி பாஸ் புத்தகம், 'பான்'  கார்டு, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், சமீபத்திய கலர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை,, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அவருடைய மொபைல் எண்,     ஈ-மெயில் ஐ.டி. ஆகியவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும்.
  • ·         இத்தோடு சேர்த்து .  `பாரம் ஏ'' மற்றும் 'பாரம் பி " என்னும்  இரு படிவங்களை பூர்த்தி செய்து தாக்கல் செய்ய வேண்டும்.                                               `பாரம் ஏ'' என்பது, அவர் தானேகவே நேரில் ஆஜராகி வழக்கை நடத்துவதற்கான அனுமதி கோரும் பிரமாண வாக்குமூலப் படிவம்  அதை பூர்த்தி செய்து ஒரு நோட்டரி வழக்கறிஞரிடம் சான்று பெற்று தாக்கல் செய்ய வேண்டும். அந்த வாக்குமூலத்தில், தான் எதற்காக வழக்கறிஞர் உதவியின்றி வழக்கை நடத்த விரும்புவதன் காரணத்தை விளக்க வேண்டும். மேலும் நீதிமன்றத்திற்கு மேலும் சற்று உதவும் வகையிலும் வழக்கில் தீர்வு காணும் நோக்கிலும் ஒரு வழக்கறிஞரை Amicuscurie யாகவோ அல்லது அவர் இலவசமாக  வழக்கறிஞர் உதவி பெற தகுதி பெற்று இருந்தால், உயர்நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழக்கறிஞர் பட்டியலில் உள்ள  ஏதேனும் ஒரு வழக்கறிஞரை நியமிப்பதற்கு எந்த வித நிபந்தனையும் இன்றி ஒப்புக்கொண்டு உறுதிமொழி அளிக்க வேண்டும்.  அதன் மாதிரி படிவம் இதோ::

FORM – A

APPLICATION FOR PERMISSION TO APPEAR IN-PERSON (Under Rule 5) (To be duly Attested by Oath Commissioner/Notary)

      I, Sri./Smt ………………………………………………………………………………………. Party-in-Person, is Willing to accept an advocate appointed by the Court/Party-in-Person Committee / intend to argue my case in-person, in case No. ………………………………………… as Petitioner ………………………… / Respondent……………………….. Hence, I may be permitted to appear in person.

Place :                                                        SIGNATURE

 Date :                                                      (Party-in-Person)

  • ·         அத்தோடு சேர்த்து 'பாரம் பி' என்பதில், தான் எந்த விதத்திலும், உயர்நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும் வகையில் ஆட்சேபகரமான வார்தைகையை பயன்படுத்தவோ அல்லது செய்கையால் நடந்துக் கொள்ள மாட்டேன் ' என்றும, மீறி நடந்துக் கொள்ளும் பட்சத்தில், தான் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தோ அல்லது எதிரான உத்தரவு இட்டு பொருந்தக் கூடிய விதிகளின்படி மேற்கொண்டு தொடரலாம் என்று ஒரு உறுதிமொழி அளிக்க வேண்டும். அதன் மாதிரி படிவம் இதோ

FORM – B

UNDERTAKING (As per Rule 8)

      1. Sri./Smt ………………………………………………………………………………………. Party-in-Person, do hereby undertake to appear in-person or defend the matter as a Party-in-Person. That I shall maintain the decorum of the Court and shall not use or express objectionable and unparliamentary language or behaviour during the course of hearing in the Court or in the Court premises or in the further pleadings.

      2. Further, if I fail to abide by the above, the Court may dismiss the proceedings fi led by me and may pass such further adverse order and may proceed in accordance with the Rules in this Chapter or any other law

 Place :                                                        SIGNATURE

 Date :                                                        (Party-in-Person) Enclosure : Proof of Identity Proof of Address

  •    இந்த ஆவங்களுடன் தாக்கல் செய்யப்படும் போது, சம்பந்தப்பட்ட வழக்கு  பரிசீலிப்பவர் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் சரி பார்ப்பார்.
  • ·          பின்னர் இதற்கென, தலைமை நீதியரசரால் நியமிக்கப்பட்ட கமிட்டியின் முன் இந்த வழக்கு கோப்புகள் வைக்கப்பட்டு அதன் முன்னர் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் ஆஜராகுமாறு வழக்கு தொடுத்தவர் அறிவுறுத்தப்படுவார்.
  • ·         அதே சமயம் அந்த வழக்கு கோப்புகளை பரிசீலித்த அலுவலர் இது சம்பந்தமான மனு,மற்றும் ஏதுனும் ஆட்சேபனை இருப்பின், அதையும் இந்த கமிட்டியின் முன் வைப்பார்.
  • ·         இதை பரிசீலனை செய்யும் கமிட்டி, அவருக்கு நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வண்ணம் நடந்துக்  கொள்ள வேண்டிய முறையையும் பயன்படுத்த வேண்டிய வார்த்தைகளையும் நடத்தை குறித்தும்  வழிநடத்தும்.
  • ·         சம்பந்தப்பட்ட நபர் அனைத்து உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு விதிகள்,மற்றும் ஏனைய விதிகளை பூர்த்தி செய்துள்ளார் என்றும், அவர் ஆட்சேபனைக்குரிய குற்றச்சாட்டுகளை பயன்படுத்தவில்லை என்றும் இது போன்ற இன்னொரு வழக்கில் நீதிமன்றத்திலோ அல்லது நீதிமன்ற அலுவலகத்தில் ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்பதையும்  உறுதி செய்ய வேண்டும்.  மேலும் ஆஜராகும் நபருடன் அந்த சரிபார்க்கும் கமிட்டி பேசி பார்த்து, அவர் நீதிமன்றத்திற்கு வழக்கை முடிக்க உதவிகரமாக இருப்பாரா  அல்லது ஒரு வழக்கறிஞரை நியமிக்க வேண்டுமா அல்லது amicascurie நியமிக்க வேண்டுமா என்பது குறித்து தன் கருத்தை அறிக்கையாக கமிட்டி தாக்கல் செய்ய வேண்டும்.
  • ·          ஒரு வேளை அந்த நபர் வழக்கில் தீர்வு காணும் விதத்தில் உயர்நீதிமன்றத்திற்கு உதவிகரமாக இருக்க மாட்டார் என்று கருதினால், அவரை இலவச சட்ட உதவி பெறுவதற்காக  உயர்நீதிமன்ற சட்ட உதவி குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.அவ்வாறு இலவசமாக வழக்கறிஞர் உதவி பெறும் தகுதி இல்லாதிருப்பின்அவரே ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்.
  • ·         நிகழ்வில், தரப்பினர் நேரில் நீதிமன்றத்திற்கு உதவ தகுதியுடையவர் என்று சான்றளிக்கப்பட்டால், அவர் 'பாரம் பி'யில் சொன்னபடி நீதிமன்றத்திலோ அல்லது நீதிமன்ற வளாகத்திலோ அல்லது மேல்முறையீடுகளின் போது ஆட்சேபனைக்குரிய மற்றும் பாராளுமன்றத்திற்குப் புறம்பான மொழி அல்லது நடத்தையை வெளிப்படுத்த மாட்டார் என்று  எழுத்து மூலமாக உறுதியளிக்திருக்க வேண்டும்.  மேலும் அவர் / அவள் உறுதிமொழியைக் கடைப்பிடிக்கத் தவறினால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படலாம் மற்றும் பொருத்தமான செலவுகள் அல்லது பாதுகாப்பு வைப்பு நிபந்தனைகள் அவர் மீது விதிக்கப்படலாம், மேலும் அவர்/அவள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு நபராக ஆஜராக அனுமதிக்கப்படமாட்டார்.  இத்தகைய தவறான நடத்தைகள் தொடர்பாக, அத்தகைய நபரால்  தொடங்கப்பட்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்யலாம்.
  • ·         அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடலாம் என்று அந்த கமிட்டி கொடுக்கும் சான்றைக் கொண்டே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட அணுமதிக்கப்படுவார்.
  • ·          இந்த விதிகள் வழக்கை எதிர்கொள்ளும் நபரும் பின்பற்ற வேண்டும்.  அவர் வழக்கறிஞர் உதவியின்றி தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நடத்த விரும்பினால், இந்த கமிட்டியின் முன் ஆஜராக  அறிவுறுத்தப்படுவார்
  • ·         மேலும் இந்த நடைமுறைகள் தாக்கல் செய்யப்படும் எந்த மனுக்கள், இடைக்கால மனுக்கள், மேல்முறையீடு, சீராய்வு மனுக்கள் என்று அனைத்திற்கும் பொருந்தும்
  • ·         அதே போல இந்த கமிட்டி முன்பு ஆஜராகமலேயே தாங்களே வழக்கை நடத்த சம்பந்தப்பட்ட  நீதிமன்றம் அவரை அனுமதியளிக்கலாம். அல்லது கமிட்டி  அனுமதியளித்ததில் மேற்கொண்டு சில உத்தரவுகளை நீதிமன்றமும் இடலாம். அதே போல நிலுவையிலுள்ள வழக்கிலும், தன கட்சியை தானே நடத்த விரும்பும் நபரையும் இந்த கமிட்டியின் முன்பு ஆஜராகி இந்த விதிமுறைகைளின் படி நடக்குமாறு பணித்து பின்னர் வழக்கு விசாரனையை தொடரலாம்.

 வழக்கு தொடுப்பவர் இந்த விதிமுறைகளை பின்பற்றுவது எளிது போல தோன்றினாலும்,உண்மை அதுவல்ல.

அதில் உள்ள சில நடைமுறை சிக்கல்களை பார்க்கலாம்:

  • ·         பிரமாண வாக்குமூலத்தை ஒரு 'நோட்டரி' முன்பு தான் அளிக்க 'வேண்டும் என்றுள்ளது.(அதாவது அவர் சான்றளிக்க வேண்டும்!!) அதற்காக அவர்களை தொடர்பு கொள்ளும் 'போது, தாங்களோ அல்லது தாங்கள் சொல்லும்  வழக்கறிஞரோ அந்த வழக்கை நடத்தி தருவதாக 'நெருக்கடி' கொடுக்கிறார்கள். அதற்காக தங்கள் ஃபீசை !!குறைத்துக்கொள்வதாகக் கூட வாதிடுகிறார்கள்..!! (வழக்கறிஞரே  வேண்டாம் என்பதற்கு சான்றளிக்க ஒரு 'நோட்டரி' வழக்கறிஞர் தேவை..விந்தையாக இல்லை??!!
  • ·          ஒரு வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்யப்படும் வழக்கு, வெகுவேகமாக 'பரிசீலனை' செய்யப்பட்டு வழக்கு எண்' கொடுக்கப்பட்டு, அடுத்தடுத்த கட்டங்களை தாண்டி, நீதிமன்ற விசாரணைக்கு வந்துவிடுகிறது. ஆனால் வழக்கு கோப்புகள் கமிட்டிக்கு போய் வந்து ஒப்புதல் கொடுக்கப்பட்டு எப்போது வழக்கு எண் கொடுக்கப்படும் என்பதிலிருந்து எப்போது அது நீதிமன்றத்தின் விசாரணைக்கு வரும் என்பது வரை ஆமை வேகம் தான் !!
  • ·         நீத்மன்றத்தின் முன்பு அவமரியாதையாக நடந்துக் கொள்வதை தடுக்கவே இந்த கமிட்டி.. வழக்கு தொடுப்பவர். வழக்கறிஞராக இருந்தால், இதன் முன்னர் ஆஜராவதிலிருந்து,  விலக்கு அளிக்கப்படுகிறது..  ஆனால், உயர்நீதிமன்றத்தின் நடைமுறைகளை நன்கு தெரிந்த, அதை மீறவே முடியாத, கட்டுப்பட்டு நடக்கின்ற நீதிமன்ற ஊழியர்களுக்கும், ஏன் ...மாவட்ட அளவில் உள்ள நீதிபதிகளுக்கும் கூட இந்த விலக்கு இல்லை. அவர்களும்  இந்த 'கமிட்டியின் முன்பு ஆஜராக வேண்டுமாம்!!

 ஒரு விதத்தில் பார்க்கும் போது, இந்த விதிமுறைகள், வழக்கறிஞர் இல்லாமல் வழக்கு நடத்த முனைபவருக்கு ஒரு முட்டுக்கட்டையாகத் தான் இருக்கிறது!!

வழக்கறிஞருக்கு கொடுக்க வேண்டிய 'நிதி\ இல்லையென்றால் 'நீதி'யை பெற முடியாதா?'

 

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...