SANKADAM THAVIRKUM SATTAM
TAMIL NADU HERITAGE COMMISSION (AMENDMENT) ACT, 2017
அன்றாட வாழ்வில் சந்திக்கும் சங்கடங்களை சட்டத்தின் துணை கொண்டு தவிர்ப்பதற்கான ஒரு அலசல்..
SANKADAM THAVIRKUM SATTAM
TAMIL NADU HERITAGE COMMISSION (AMENDMENT) ACT, 2017
அடிப்படை சட்டம் அறிவோம்…
savukku சங்கர் குறித்து ஒவ்வுருவருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கலாம் இருக்கலாம் .ஆனால் அவர் போல இன்றைய ஊடகம் ஆளும் தரப்பு குறித்து ஆணித்தரமாக ஆதாரத்துடன் பேசுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்போதும் கைது செய்யபட்டிருக்கிறார். தீயணைப்பு வீரர்களின் உதவியோடு வீட்டின் கதவை உடைத்து கைது செய்தது சரி..ஆனால் ..வீட்டை…அவர் தாயாரை சோதனையிட்டது ..எந்தவித நீதிமன்ற உத்தரவும் இல்லாமல்…??
அத்தோடு அன்றும் சரி…போலிஸ் காவலில் போதும், திரும்ப திரும்ப அவர் கை பேசியை கேட்டு தொந்தரவு செய்ததாகவும் அவர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
குற்றம் சாட்டப்பட்ட ஒருவரிடம் இருந்து அவரை கட்டாயப்படுத்தி ஒரு பொருளை கைப்பற்ற முடியுமா, அவருக்கு எதிரான வாக்குமூலத்தை பெற முடியுமா? அது சட்டப்படி சரியாகுமா? என்ற கேள்வி தானே நமக்கு எழும்..?
இது குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது... அந்த வழக்கில் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது...'அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்" என்பதே...
உச்ச நீதிமன்றம் அதை மறுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சியம் பெற அவரை கட்டாயப்படுத்த முடியாது.. அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கும் உரிமை சட்டரீதியாக உண்டு" என்றுள்ளது.
நான் விசாரணை நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, இது போல நடந்ததுண்டு ..குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் 'வில்லங்கத்தை ' விலைக்கு வாங்கிவிடுவார்! 'இதற்கு அந்த பருத்தி மூட்டை குடவுணிலேயே இருந்திருக்கலாமே " என்று தோன்றும் …ஆனால் வெளியே சொல்ல முடியாது !! இப்படி ஒரு வழக்கறிஞரை அமர்த்தியதற்கு அவருக்கு தண்டனை வேண்டாமா ? !
சரி , விஷயத்துக்கு வருவோம். ..
அப்படியானால் , சவுக்கு ஷங்கரிடம் போன் வழக்கோடு தொடர்புடையது என்று அதை கேட்டு கட்டாயப்படுத்துவது சட்டப்படி சரியாகுமா? என்ற கேள்வி வரும் தானே?
இதோ போன வாரம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பாருங்கள். ஏற்கெனவே அவர்கள் பலமுறை சொன்னதைத்தான் திரும்ப வலியிருத்தியிருக்கிறார்கள். {Manoj @ Munna v. State of Chhattisgarh (Neutral Citation: 2025 INSC 1466)
அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தை அனுகியவருக்கு எதிராக கொலை குற்றம் நிரூபிக்கப்படதாக விசாரணை நீதிமன்றம் ( கீழ் கோர்ட்டு என்று சொல்லக்கூடாது!!) தீர்ப்பு சொல்லியுள்ளது.
அதற்கு நீதிமன்றம் சொன்ன காரணம். கொலையானவரை கடைசியாக குற்றவாளியுடன் சேர்ந்து பார்த்திருகிறார்கள். அவரை விட்டு இவர் பிரிந்து வந்தாரா என்பதை குற்றவாளி சாட்சியத்துடன் நிரூபிக்கவில்லை என்பதால் அவருக்கு எதிராக adverse inference கொண்டு குற்றவாளி என்று தீர்மானித்திருக்கிறார்கள். இதை அந்த உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இதை தான் உச்ச நீதிமன்றம் மறுத்து , இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 1 0 6 யை சுட்டிக்காட்டுகிறது.
"ஒருவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை அவர் மட்டுமே நிரூபிக்க இயலும்" என்ற விதி தான் அது. சரி தானே?
ஆனால் கூடவே அதில் உள்ள எச்சரிக்கையையும் சுட்டிக்காட்டுகிறது.
“ இதன் காரணமாக, குற்றம் சும்மத்தப்பட்டவர் மீதான குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் கடமையிலிருந்து போலிசுக்கு விதிவிலக்கு இல்லை “ என்பது தான் அது.
இதன் மூலம் சொல்வ வருவது என்ன?
இந்த வழக்கையே பாருங்களேன். ..உச்ச நீதிமன்றம் சொல்கிறது ..”கடைசியாக சேர்ந்து பார்த்தது “ என்ற தியரி மிகவும் வலுவில்லாதது . அதை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒருவரை குற்றவாளி என்று தீர்மானிக்க முடியாது .அந்த சூழ்நிலை சாட்சியத்தோடு ஒத்துப்போகும் வேறு வகை சாட்சியங்கள் ..உதாரனமாக ...அவரிடம் கைப்பற்றப்பட்ட பொருள் , அவர் குற்ற எண்ணம் அவை குற்றத்தோடு சம்பந்தப்பட்டால் மட்டுமே இவற்றை ஒட்டுமொத்தமாகக் கொண்டு அவரை குற்றவாளி ‘ என்று முடிவு செய்யலாம்” என்று கூறி அந்த தீர்ப்பை ரத்து செய்தது.
சவுக்கு சங்கருக்கு எதிராக போடப்பட்ட இந்த வழக்கையும் பாருங்கள்.. அவர் சானலில் போட்ட வீடியோவை நீக்க பணம் கேட்டு மிரட்டி அதில் ஒரு பங்கை அவர் பணியாளர் மூலமாக பெற்றதாக வழக்கு. இதில் சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்கை கொண்டு செல்ல அவர் கை பேசி தேவை . இதை பறிமுதல் செய்யவே வீட்டில், அலுவலகத்தில் சோதனை ..எங்கும் கிடைக்காதபோது அவரிடமே விசாரணை.
இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்குக்கு எவ்வளவு பொருந்துகிறது பார்த்த்ஹீர்களா?
ஆங். சொல்ல மறந்து விட்டேனே..
இந்திய சாட்சிய சட்டம் இன்று திருத்தப்பட்டு ‘பாரதிய சாட்சிய அதினியம்” என்றாகிவிட்டது. பிரிவு 106 இப்போது ‘109’ ஆகிவிட்டது.
நமக்கான உரிமையை அறிவோம். அதை செயல்படுத்துவோம் ! !
இதற்கான பதிலை சமீபத்தில் நமது உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் தந்துள்ளார்,
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் 23.11.2021 உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்படுகிறார் ஈஸ்வரன். அதை எதிர்த்து அவர் கொடுத்த மனுவை விசாரித்த அட்வைசரி போர்டு, அவரை அந்த சட்டத்தின் கீழ் அடைக்க போதிய முகாந்திரம் இல்லையென்று 30.12.202 அன்று உத்தரவு பிறப்பிக்கிறது. ஆனாலும் அவரை உடனே விடுதலை செய்யாமல் மூன்று மாதம் தாழ்த்தி விடுவிக்கிறார்கள். அதற்கு காரணம் அதற்கான அரசு உத்தரவு போடுவதற்கு ஏற்பட்ட காலதாமதம்.
இதை எதிர்த்து , தன்னை சட்டவிரோத காவலில் வைத்ததற்கு நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்கிறார் ஈஸ்வரன்.
அதை மறுத்து அரசு தாக்கல் செய்த பதிலில் அவர் ஏன் அட்வைசரி போர்டு உத்தரவிட்டபின்பும் மூன்று மாதம் கழித்து விடுதலை செய்யபட்டார் என்பதற்கான விளக்கம் சொல்லப்படவில்லை. இது அரசியலைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையான ஆர்டிகிள் 21க்கு எதிராக இருப்பதால் , நஷ்டஈடு பெற அவருக்கு உரிமையுள்ளது என்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் தெரிவிக்க , அரசு தரப்பில் திரும்ப கேட்டு சொல்வதாக வாய்தா வாங்குகிறார்கள்.
பிறகு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதிலில் , அட்வைசரி போர்டு எஈஸ்வரனை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு என்று சொன்னாலும், அவரை விடுவிக்க சில சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதால் காலதாமதம் ஆனதாகவும், அவருக்கு இருந்த மூன்று வழக்குகளில் பிணை பெறுவதும் சூரிட்டி ஆஜர் செய்வதற்கும் அவருக்கே கால தாமதம் ஆனது என்றும், மேலும் அவரே ஒரு ஹிஸ்டரி ஷீட்டர்' அதாவது தொடர் குற்ற செயல்கள் புரிபவர் , அவர் மீது 23 வழக்குகள் உள்ளன என்றும் சொல்லியிருந்தார்கள்.
இதை ஏற்றுக் கொள்ளாத நீதியரசர், அடிப்படை உரிமையான 21, எந்த ஒரு குடிமகநின் வாழ்வும் தனி மனித சுதந்திரமும் , சட்டப்பூர்வமான நடைமுறையின்றி பறிக்கப்படக்கூடாது" என்று சொல்லியுள்ளதே தவிர அவன் நல்லவனா ' கெட்டவனா" என்றோ சொல்லவில்லை என்றும் சட்ட விரோத காவலில் இருந்த ஒருவர் நஷ்டஈடு பெற தகுதி பெற வேண்டும் என்றால் நல்ல குணாம்சம் கொண்டவராக மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்லமுடியாது என்றார்.
அதேபோல அரசின் கூற்றுப்படியே, சட்ட நடைமுறைகள் 04.01.2022. அன்றே முடிக்கபட்டுவிட்டபோது அவருடைய கோப்பு தாளதமதாக 14.03.2022. அன்று தான் மது விலக்கு அமைச்சரின் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அதனால் 05.01.2022 முதல் அவர் விடுதலை செய்யப்பட்ட 17.03.2022 வரையான காலம் சட்டவிரோத காவல் என்பதால் அதற்கு நஷ்டஈடு பெற , தகுதியுள்ளவர் என்று, லத்தின் சொற்றொடர் Ubi jus ibi remedium (WHERE THERE IS A RIGHT, THERE IS A WAY) சுட்டிக்காட்டி , ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய D.K.Basu v. State of West Bengal,(1997) 1 SCC 416. தீர்ப்பை மேற்கோள் காட்டி, தனது தீர்ப்பில் குறிபிட்டுள்ளார்.
பிறகென்ன,? மனுதாரர் கேட்டபடி நஷ்டஈடு கொடுக்குமாறு உத்தரவிடபட்டுளது . என்ன ..அவர் கேட்டது ....பத்து லட்சம் ரூபாய் ..ஆனால் கொடுத்தது ரூபாய் ஐம்பதினாயிரம்..
அதே போல , அந்த நஷ்டஈட்டை , தவறு செய்த அரசு அதிகாரி அல்லது அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம செய்யுமாறு உத்தரவிட்டிருந்தால் , இன்னும் நன்றாக இருக்கும்!!
இருந்தாலும், இது, அதிகார வர்க்கத்தின் துஷ்ப்ரயோகதிற்கு எதிரான சிறப்பான தீர்ப்பு.!!
குடிமக்கலின் அடிப்படை உரிமைகளை தங்கள் இஷ்டம் போல முறிக்கும் அரசு இயந்திரங்கள் இனியாவது சற்று விழிதுக்கொள்ளுமா என்று பார்ப்போம். ...
இந்த வழக்கு விவரங்களை கீழ்கண்ட லிங்கில் பெறலாம்.!!
சொத்தின் உரிமையை வாங்குபவர்களுக்கு சில தகுதிகளை சட்டம் விதிப்பது போல, அந்த உரிமையை பெறுபவர்களுக்கு இருக்க வேண்டிய தகுதியை குறித்து எந்த சட்டத் தடையும் இல்லை.
ஆனால் சொத்துரிமை மாற்ற சட்டத்தில், ‘உரிமை
மாற்றம் பெற தகுதியற்றவராக அவர் இருக்கக் கூடாது என்று’ மட்டுமே பிரிவு 6(h)(3)ல் சொல்லப்படுகிறது.
அப்படி சட்டப்படி தகுதியற்றவர் யார் யார்?
யார் யாரெல்லாம் ஒப்பந்தம் செய்ய தகுதி உடையவர் என்பதை இந்திய ஒப்பந்த சட்டத்தின் பிரிவுகள் 11 மற்றும் 12 சொல்கின்றன : சொத்து உரிமை மாற்று சட்டத்தில் சொல்லப்படும் ஒப்பந்தங்கள் குறித்த வாசகங்கள் , இந்திய ஒப்பந்த சட்டத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதன் பிரிவு 4 சொல்கிறது. அதே போல இந்திய ஒப்பந்த சட்டத்தில் சொல்லப்பட்ட "ஒப்பந்தம் செய்ய தகுதி உடையவர்" யார் யாரோ , அவர்களை தவிர்த்தவர்கள் "சட்டப்படி தகுதியற்றவர் என்று எடுத்துக்கொள்ளலாம்.
Ø அதன் படி பார்க்கும்போது, ஒப்பந்தம் போட தகுதி கொண்டவர்
!. 18 வயது நிரம்பியவராக
2. திட சித்தம் கொண்டவராக
3. சட்டத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக
இல்லாமல்
இருக்க
வேண்டும்.
x
o மைனர் :
சொத்தை வாங்குபவரும் ஆவணத்தில் கையேழுத்திட , வேண்டுமென்பதால் மைனர் என்னும் போது அவர் நேரிடையாக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட முடியாது. ஏனெனில் இந்திய பதிவு சட்டமும், எந்த பதிவு செய்யக்கூடிய ஆவணத்திலும் பதினெட்டு வயது நிரம்பாதவர் கையெழுத்திட முடியாது என்கிறது.
எனவே ஒரு இளவர் (Minor) ஒப்பந்தம் செய்ய ததியில்லாவர் என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்டவர் பதிவு செய்யாத ஒப்பந்தம் போட்டாலும் , அது “இல்லா நிலையது “(void ab initio” ஆகும் “ என்கிறது மொகாரி பீபி எதிர் தர்மதாஸ் கோஷ் “ என்ற வழக்கின் தீர்ப்பு. சமீபத்தில் இந்த பிப்ரவரி மாதம் வழங்கிய தீர்ப்பில் கூட, உச்ச நீதிமன்றம் ,”Sale Agreement With Minor Void, Not Enforceable In Law” என்றுள்ளது.
அதே போல ஒரு மைனருக்கு தானப்பத்திரம் மூலம்,
அவர் உறவினர் சொத்தை கொடுத்தாலும், தானம் பெறுபவர் அதை சட்டப்படி ஏற்றுக்கொள்ளும்
நிலையில் இருக்க வேண்டும். இது போன்ற சட்டத்தடை இருந்தாலும் , அவர் சார்பாக அவரின்
பாதுகாவலர் அதில் கையெழுத்திடலாம். கோடை என்னும் போது , அந்த மைனர் சார்பாக அவரின்
பாதுகாவலர் அந்த தானத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
இது போன்ற உரிமை மாற்றம் சட்டப்படி
செல்லக்கூடியது .அதற்கு நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க தேவையில்லை ஏனென்றால்,
-èஇந்த உரிமை மாற்றத்தின் முக்கிய அம்சமான மறு
பயன் “ எனப்படும் consideration அந்த மைனரால் செய்யப்பட்ட செயல்களாக இருக்கும்.
(அதாவது ‘அவரின் பால் கொண்ட ‘அன்பு’, பாசம்’
..போன்றவை )
è மைனர் செய்ய வேண்டிய கடமை ஏதும் இருக்காது.
ð இந்த உரிமை மாற்றம் மைனருக்கு நன்மை அளிக்கக்கூடியதே
ð அதே சமயம், ஒரு மைனரால்,ஒரு சொத்தை குத்தகைக்கு எடுக்க முடியாது. குத்தகை
ஒப்பந்தத்தில் அவரின் பாதுகாவலர் கையெழுத்திட முடியாது. ஏனென்றால், குத்தகை
பெறுபவரின் பேரில் சில கடமைகள் உள்ளன. அதனால் மைனர் குத்தகைதாரராக முடியாது.
மைனருக்காக மேலே சொல்லப்பட்ட விதிமுறைகள் அனைத்தும்,
ஒப்பந்தம் போடத் ததியில்லாத திட சித்தம் இல்லாதவருக்கும் பொருந்தும்.
Ø சொத்துரிமை மாற்ற சட்டமும் சொத்துரிமை பெறுவதற்கு
சில தடைகளை விதிக்கிறது.
·
பிரிவு 136, Actionable Claim ‘ எனப்படக்கூடிய தொடர்தகு பாத்தியத்தை நீதிமன்றத்துடன்
தொடர்படைய நீதிபதி, வழக்கறிஞர்கள் , அதன் அலுவலர்கள் அதை பெற தடுக்கிறது.
·
உரிமையியல் நடைமுறை தொகுப்பின் ஒழுங்கு 21 விதி 73ன் கீழ் இந்திய பொறுப்புரிமை
சட்டம் (இந்தியன் டிரஸ்ட் ஆக்ட் பிரிவு 62 ன் கீழ் அதன் Trustee என்கிற
பொரறுப்புரிமையரோ அல்லது அவர் முகவரோ பொறுப்புரிமை சொத்துகளை வாங்கக் கூடாது.
இந்த தகுதி நீக்கம் பெறாத, சட்டப்படி தகுதி கொண்ட
நபர்கள் என்றாலும், மேலும் சில காரணங்களுக்காக சொத்துரிமையை பெற தடை இருக்கிறது . அவை:
Ø உரிமை மாற்றத்தின் நோக்கம்
·
சட்டப்பூர்வமானாதாக இருக்க வேண்டும் ..பிரிவு 6
·
ஒப்பந்த சட்டத்தின் பிரிவு 23 ல் சொல்லப்பட்ட பொருளின் படி தான் அதன்
நோக்கமும் மறுபயன் எனப்படும் consideration இருக்கவேண்டும். அவை சட்ட விரோதமானதாக
இருந்தால், உரிமை மாற்றம் செய்ததே “இல்லா நிலையது”’ என்றாகி விடும்.
· இந்த சட்டத்தின் பிரிவு 6 (h) (2) ல் சொல்லப்பட்டவை நொடிப்புநிலை சட்டத்தின்
(Insolvency Act) வாசகங்களை முறியடிக்கும் நோக்கத்துடன், மறுபயனுடன் கூடி
செய்திருந்தாலும், அதன் நோக்கம் சட்ட விரோதமானதாக இருபதால், அப்படி செய்யப்பட்ட
உரிமை மாற்றம் ‘இல்லா நிலையது’ என்றாகும்.
சட்டத்தின் நோக்கம், சமுதாயத்தின் நன்மையை மேம்பட செய்ய வேண்டுமென்பது தானே!!.
ஒரு குற்றம் நடந்தது என்றாலே அதில் பாதிக்கப்பட்டவர் என்று ஒருவர் கண்டிப்பாக இருப்பார். இந்த குற்றத்திற்காக தண்டிக்கும் மும்முரத்தில் பெரும்பான்மையான நேரங்களில், அவர் மறக்கடிக்கபட்ட்டிருப்பார் . அது தான் உண்மை. ஆனால் இந்திய குற்ற விசாரணை முறையில் , குற்றம் செய்தவரால், பாதிக்கப்பட்டவருக்கு நேர்ந்த பாதிப்பை சரி செய்யும் சமூக கடமையும் அந்த தண்டனையின் ஒரு அங்கம் என்றாலும் சிறையில் கழிக்கும் தண்டனை காலம் அந்த பாதிப்பை எந்த விதத்திலும் சரிப்படுத்தாது என்று நீதியரசர் கிருஷ்ணா ஐயர் 1981லேயே ஒரு தீர்ப்பில்Maru Ram vs Union of India (1981) 1 SCC 107 சொல்லியுள்ளார்.
அதனால் தான் குற்றவாளிக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதத் தண்டனையிலிருந்து குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அதிகாரத்தை குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின் பிரிவு 357 நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. "கு.வி.மு.ச. பிரிவு 357 இன் கீழ் இழப்பீடு வழங்குவதற்கான அதிகாரம் ஒரு முக்கிய அம்சம் என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினாலும் நீதிமன்றங்கள் அரிதாகவே அதைக் கொடுக்கின்றன. Hari Singh vs Sukhbir Singh and Others வழக்கில் கூட, இந்த அதிகாரம் என்பது துணை அல்ல. கூடுதலாக நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது. என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
குற்றவாளிக்கு அபராதம் விதிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி, நஷ்டஈடாக பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்க உத்தரவிடலாம். அப்படி அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை என்றாலும் கூட, குற்றவாளிக்கு தண்டனை வழங்கும் போது அத்தோடு கூடுதலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு என்று ஒரு தொகையை செலுத்த நீதிமன்றம் உத்தரவிடலாம்.
இந்த அதிகாரத்தின் நோக்கமே, குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்கும் மும்முரத்தில் , இந்த குற்றத்தினால் பாதிக்கப்பட்ட அவர் அல்லது அவள் மறக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவருக்கு உறுதியளிப்பது தான்.
ஆனால் அதே சமயம், குற்றவாளி, பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்குவதால், அவருக்கு கொடுக்கப்படவேண்டிய தண்டனை ஏதும் இல்லாமல் போகுமா? என்ற கேள்வி எழலாம். இதே போன்ற கேள்வி தான் உச்ச நீதிமன்றத்தின் முன்பும் சமீபத்தில் வந்தது.
இந்த வழக்கு குஜராத் அரசுக்கு எதிராக தொடரப்பட்டது.
மாஜிஸ்திரேட்டு நீதிமன்றமா முன்சீப் நீதிமன்றமா ...இரண்டில் எதற்கு அதிக அதிகாரம் என்ற கேள்வி எழும்போதெல்லாம், ஒருவரை சிறைக்கு அனுப்பும் அதிகாரம் இருப்பதால், மாஜிஸ்திரேட்டுக்கு தான் அதிகாரம் நிரம்ப என்று பெரும்பாலானவர் நினைத்திருப்பதை கண்டுள்ளேன்.
ஆனால் உண்மை அதுவல்ல.
நீதிமன்ற அதிகார அமைப்பின்படி உள்ள அடுக்குகளில் , முதன்மையானது தான் இந்த சிவில் வழக்குகளை விசாரிக்கும் முன்சீப், மற்றும் குற்ற வழக்குகளை பொறுத்து விசாரிக்கும் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்கள்.
இந்த நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் , ஒரே தரத்தில் இருந்தாலும், இவை வழக்குகளை விசாரிக்கும் முறையில் முற்றிலும் வேறுபட்டது.
சிவில் வழக்குகளை பொறுத்தவரையில் சாட்சிகளையும் ,சாண்றாவனங்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தத்தம் தரப்பு கட்சிகளை நிரூபிக்கவேண்டியது இரண்டு தரப்பையும் சாரும். ஆனால் குற்ற வழக்குகளை பொறுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் ஏதும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவர் தான் இன்னின்ன குற்றம் செய்தார் என்று அரசு தரப்பில் , சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டியது கடமை. குற்றவாளி ஏதும் பேசக்கூட தேவையில்லலை. மவுனமாக நின்றாலே போதும்.
இத்தகைய பெரிய வேறுபாடு கொண்டதனால், சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பு , மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை கட்டுப்படுத்துமா ? அல்லது அதற்கு நேர்மாறா? என்ற கேள்வி எழும்.
இந்த கேள்வி, இன்று நேற்றல்லை...1954 லேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டு இதற்கான விடையை நமது உச்ச நீதிமன்றமும் வழங்கிவிட்டது. M.S.Sheriff vs.State of Madras என்ற வழக்கில் அரசியலமைப்பு பெஞ்ச் , "ஒரு நீதிமன்றத்தின் உத்தரவை இன்னொரு நீதிமன்றத்தை கட்டுப்படுத்தும் என்று சட்டம் வெளிப்படையாக சொல்லாததற்கு காரணம் , அது ஏற்படுத்தக்கூடிய தர்மசங்கடம்" என்றது. ஆனால் அப்போதும், அதற்கு விதிவிலக்கு என்று " சிறை தண்டனை மற்றும் அபராதங்கள் " என்றும் சொன்னது.
இதுவே 1970 ல் உச்ச நீதிமன்றத்தின் பார்வை சற்று மாறி, சிவில் நீதிமன்றங்களின் தீர்ப்பு, குற்றவியல் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும். ஆனால் குற்றவியல் நீதிமன்றங்களிந தீர்ப்பு அப்படியல்ல " என்றது.
ஆனால் இது காலப்போக்கில் மாற்றப்பட்டது என்பதை Vishnu Dutt Sharma verses Daya Sapra வழக்கில் தெளிவாக்கியது.
கடைசியில் , Premshankar verses Inspector of Police வழக்கில் சிவில் நீதிமன்றம் கூட , குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை பரிசீலிக்கலாம்" என்றது.அத்தோடு M.S.Sheriff vs.State of Madras வழக்கையும் மேற்கோள் காட்டி ,'ஒரே மாதிரி தன்மையுடன் எல்லாவற்றையும் அணுகமுடியாது என்றும் மாறுபட்ட தீர்ப்புகளை சிவில் நீதிமன்றமும் குற்றவியல் நீதிமன்றமும் வழங்கினாலும், சிறைத்தண்டனை மற்றும் அபராதம் தவிர்த்து , ஏனைய சமயத்தில் பொருட்படுத்தவேண்டியதில்லை என்றது.
கடைசியாக இந்த விஷயமாக Iqbal Singh Morwah verses Meenakshi Morvah வழக்கில் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு பெஞ்ச் கூட , ஒரே விஷயமாக தொடரப்பட்ட குற்ற வழக்கு மற்றும் சிவில் வழக்கில் எதை நிறுத்தி வைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, "குற்றவியல் அமைப்பு தான் வேகமாக செயல்பட வேண்டியது. ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, 'நிரபராதிபதி " என்று நிரூபிக்கும் வரையில், அவர் அந்த பழியை சுமக்க வேண்டிஇருக்கும் என்பதாலும், சாட்சியங்கள், சாட்சிகளிடையே பசுமையாக இருக்கும்போதே விசாரணை நடைபெரவெந்டிஉம் என்பதாலும், அதுவே சிவில் வழக்கேன்றால், வருடக்கணக்கில் நீளும் என்பதால் குற்ற வழக்கிர்க்கே முன்னுரிமை கொடுத்து சிவில் வழக்கை நிறுத்தி வைக்கவேண்டும் என்றது. ஆனாலும் இது பொதுவானது அல்ல. முக்கால் வாசி சிவில் வழக்கு முடிந்திருந்தால், அதையே நடத்தலாம்' என்றும் சொன்னது.இந்த வழக்கில் கூட மM.S.Sheriff வழக்கு மேற்கோள் காட்டப்பட்டது.
எனவே இப்போதைக்கு பிரேம்ஷங்கர் வழக்கை தான்
இதையெல்லாம்
மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...