சனி, 20 ஜூலை, 2024

சொத்தை விற்க முன் பணம் வாங்கிய பிறகு விற்பனை செய்ய மறுத்தால் , என்ன செய்வது?

 

 சொத்தை வாங்க முன் பணம் கொடுத்து விட்டு அதை பதிவும் செய்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் கிரையம் செய்யலாம் என்று இருந்தபோது, அதை அவர் இன்னொருவருக்கு விற்றுவிட்டால் ...?

இது போன்ற அசாதாரண சூழல் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

அப்போது , அந்த முன் பணத்தை மட்டும் திரும்ப தர அவர் தயாராயிருக்கலாம். ஆனால், அந்த பணத்தால் ஈடு செய்ய முடியாத நஷ்டம் நமக்கு எற்பட்டிருந்தால்... 

அந்த சொத்தை திரும்ப நமக்கு தான் விற்க வேண்டும் என்று அவரை கட்டாயபடுத்த முடியுமா?

அது எப்படி... அவர் தான் இன்னொருவருக்கு விற்றுவிட்டாரே  என்று தானே சொல்கிறீர்கள். ஆனாலும் திரும்ப அவர் நமக்கே அந்த சொத்தை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தை சட்டம் அவருக்கு ஏற்படுத்தும்.

அந்த சட்டத்தின் பெயர் தான் குரித்ட நிவாரண சட்டம், 1963.

ஆனால் அந்த உரிமையை பெறுவதற்கு முன், நான் சட்டம் சொல்கிற சில கடமைகளை செய்திருக்க வேண்டும்.அவை

1. அந்த முன் பணம் ஒரு பதிவு செய்யப்பட்ட கிரைய ஒப்பந்தத்தின் மூலம் அவருக்கு கொடுத்திருக்க வேண்டும்.

2. அந்த ஒப்பந்தத்தில் கொடுத்த காலக் கெடுவிற்குள் மீதி பணத்தை ஏற்பாடு செய்து விட்டு, தான் கிரைய பத்திரம் பதிவு செய்ய தயாராக இருப்பதாக சொல்லி அவரை கிரையம் செய்து கொடுக்க அழைத்திருக்க வேண்டும். இதை வாய் மொழியாக மட்டும் இல்லாமல் ஒரு எழுத்து மூலமாகவும் தெரியபடுட்டியிருக்க வேண்டும்.

3. அவர் ஒப்பந்தம் படி நடக்க மறுக்கும் பட்சத்தில் , குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றத்தை நாட வேண்டும்.

இவற்றை சரியாக செய்தால் அந்த சொத்து நமக்கே கிடைப்பது உறுதி.

இதை உறுதிபடுத்தும் விதத்தில் தான் சென்ற வாரம் நீதிபதிகள் அபை S.ஒகா மற்றும் சஞ்சய் கரோல் அடங்கிய  உச்ச நீதிமன்ற பெஞ்ச் 

மகாராஜ் சிங் மற்றும் பலர் எதிர் கரண் சிங் (இறந்தவர்) மற்றும் பலர் என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

அந்த வழக்கில் ,1981 ஆம் ஆண்டு , உத்தர்காண்ட்டில் உள்ள  தன் நிலத்தைவாதிகளுக்கு இருபதாயிரம் ரூபாய்க்கு   விற்க ஒத்துக் கொண்டு முதல் பிரதிவாதி கிரைய ஒப்பந்தத்தை பதிவு செய்தார். ஆனால்  1983ல் அதற்கான கிரைய பத்திரத்தை பதிவு செய்யாமல் அதே நிலத்தை  இரண்டு கிரைய பத்திரங்களின் மூலம் மற்ற பிரதிவாதிகளுக்கு மாற்றம் செய்தார்.

குறித்த வகை பரிகாரம் கோரி அதாவது கிரைய ஒப்பந்தத்தின் படி நிலையத்தை தனக்கே பதிவு செய்து தரவேண்டும் என்று வாதி  நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். அவருக்கு சாதகமாக விசாரணை நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏன் உயர் நீதிமன்றம் கூட தீர்பளித்தது. அதற்கும் மேலாக, அந்த சொத்தை  வாங்கியவர்கள் தொடர்ந்த மேல்முறையீடு தான் உச்ச நீதிமன்றம் முன்பு வந்தது.

 அப்போது அவர்கள் நீதிமன்றத்தின் முன்னாள் மூன்று கேள்விகளை வைத்தார்கள். 

1. குறித்த வகை பரிகாரம்  கோரும் சட்டம், 1963  (Specific Relief Act)ண் கீழ் தொடர்ந்த  வழக்கில்,  அதற்கு முன்பே  போட்ட கிரைய பத்திரத்தை நீக்க கோரியும் பரிகாரம் கேட்காதால் , வாதியின் வழக்கை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது.

இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், 1953லேயே ,   லாலா துர்கா பிரசாத் மற்றும் பளார் எதிர் லால தீப் சந்த் மற்றும் பலர் என்ற வழக்கில் , "அசல் ஒப்பந்தத்தை நிறைவேற்ற சொல்லி உத்தரவிடும்போது,, அடுத்து சொத்துரிமை மாற்றம் செய்யப்பட்டவரும் அந்த சொத்து உரிமை மாற்றத்தின் போது சேர்ந்துக் கொள்ள வேண்டும்" என்று உத்தரவிடுவதே சரியான தீர்ப்பாணை "என்றது.

மேற்கண்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி “அதனால், தாவாவில், அடுத்து செய்யப்பட்ட கிரைய பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும்” என்ற பரிகாரத்தை வழக்கில் கேட்க வேண்டிய தேவை இல்லை” என்றது.

 

2. அசல் ஒப்பந்தத்தை அறியாமல்  நியாயமாக வாங்கியவர்கள் என்று அடுத்து வாங்கியவர்களை கருத வேண்டும்?

அதற்கு நீதிமன்றம், "அப்படி கருத முடியாது , ஏனென்றால் சொத்துரிமை மாற்றச் சட்டத்தின் பிரிவு 3ன் படி  அசல் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டதே ஒரு ஆக்கபூர்வமான அறிவிப்பாக (Constructive Notice) என்று  கருத வேண்டும். அதனால் தெரிந்தே வாங்கிய அவர்களை அப்படி கருத முடியாது என்றது. 

3.  இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 91, 92 இருந்தாலும் அசல் ஒப்பந்தம் போலியானது என்று நிரூபிக்க சாட்சியம் தாக்கல் செய்ய முடியுமா?

"ஆவணப்படி ஒப்பந்தம் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட பார்டிகள் எண்ணினார்களா என்பது குறித்து சாட்சியம் தாக்கல் செய்யலாம் என்றாலு ம் இந்த வழக்கில் இந்த வாதம்  சரியாக நீதிமன்றத்தில் வைக்கப்படவில்லை  என்பதால் பின்னாளில் சிந்தித்து சொன்னதாக் தான் கொள்ள வேண்டும்" என்றும் கூறி ஒரு வழக்கில், பிரதிவாதிகள் “ தாங்கள்  தாவா ஒப்பந்தத்தை அறியாமல், நல்ல என்னத்த்துடன் /நல்ல நம்பிக்கையுடன் நியாயமாக சொத்தினை வாங்கியவர்  என்று நிரூபிக்காத போது, குறித்த பரிகாரம் கோரும் சட்டத்தின் பிரிவு 19(b) ன் படி குறித்த வகை பரிகாரம் கொடுக்கும் தீர்ப்பானையை அந்த பார்டிகளுக்கு  எதிராக வழங்கலாம்” என்று அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்தது. 


இது சம்பந்தமான நமது யு டியுப் சானலில் வந்த வீடியோ பதிவு இதோ 


 

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...