செவ்வாய், 14 ஜனவரி, 2025

தவறாக கைது செய்யப்பட்டால் அதற்கு நஷ்டஈடு கோர முடியுமா ?

 இதற்கான பதிலை சமீபத்தில் நமது உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் தந்துள்ளார், 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் 23.11.2021 உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்படுகிறார்  ஈஸ்வரன். அதை எதிர்த்து அவர் கொடுத்த மனுவை விசாரித்த அட்வைசரி போர்டு, அவரை அந்த சட்டத்தின் கீழ் அடைக்க போதிய முகாந்திரம் இல்லையென்று 30.12.202 அன்று உத்தரவு  பிறப்பிக்கிறது.  ஆனாலும் அவரை உடனே விடுதலை செய்யாமல் மூன்று மாதம் தாழ்த்தி விடுவிக்கிறார்கள். அதற்கு காரணம் அதற்கான அரசு உத்தரவு போடுவதற்கு ஏற்பட்ட காலதாமதம்.

இதை எதிர்த்து , தன்னை சட்டவிரோத காவலில் வைத்ததற்கு  நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்கிறார் ஈஸ்வரன்.

அதை மறுத்து அரசு தாக்கல் செய்த பதிலில் அவர் ஏன்  அட்வைசரி போர்டு உத்தரவிட்டபின்பும் மூன்று மாதம் கழித்து விடுதலை செய்யபட்டார் என்பதற்கான விளக்கம் சொல்லப்படவில்லை. இது அரசியலைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையான ஆர்டிகிள் 21க்கு எதிராக இருப்பதால் , நஷ்டஈடு பெற அவருக்கு உரிமையுள்ளது என்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் தெரிவிக்க , அரசு தரப்பில் திரும்ப கேட்டு சொல்வதாக வாய்தா வாங்குகிறார்கள். 


பிறகு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதிலில் , அட்வைசரி போர்டு எஈஸ்வரனை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு என்று சொன்னாலும், அவரை விடுவிக்க சில சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதால் காலதாமதம் ஆனதாகவும், அவருக்கு இருந்த மூன்று வழக்குகளில் பிணை பெறுவதும் சூரிட்டி  ஆஜர் செய்வதற்கும் அவருக்கே கால தாமதம் ஆனது என்றும், மேலும் அவரே ஒரு ஹிஸ்டரி ஷீட்டர்' அதாவது தொடர் குற்ற செயல்கள் புரிபவர் , அவர் மீது 23 வழக்குகள் உள்ளன என்றும் சொல்லியிருந்தார்கள்.

இதை ஏற்றுக் கொள்ளாத நீதியரசர், அடிப்படை உரிமையான 21, எந்த ஒரு குடிமகநின்  வாழ்வும் தனி மனித சுதந்திரமும் ,  சட்டப்பூர்வமான நடைமுறையின்றி  பறிக்கப்படக்கூடாது" என்று சொல்லியுள்ளதே தவிர  அவன் நல்லவனா '  கெட்டவனா"  என்றோ சொல்லவில்லை என்றும் சட்ட விரோத காவலில் இருந்த ஒருவர் நஷ்டஈடு பெற தகுதி பெற வேண்டும் என்றால் நல்ல குணாம்சம் கொண்டவராக  மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்லமுடியாது என்றார்.   


அதேபோல  அரசின் கூற்றுப்படியே, சட்ட நடைமுறைகள் 04.01.2022. அன்றே முடிக்கபட்டுவிட்டபோது அவருடைய கோப்பு தாளதமதாக  14.03.2022. அன்று தான் மது விலக்கு அமைச்சரின் அலுவலகத்திலிருந்து  பெறப்பட்டது  என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது  என்றும் அதனால் 05.01.2022 முதல் அவர் விடுதலை செய்யப்பட்ட  17.03.2022 வரையான  காலம் சட்டவிரோத காவல் என்பதால் அதற்கு நஷ்டஈடு பெற , தகுதியுள்ளவர் என்று, லத்தின் சொற்றொடர் Ubi jus ibi remedium  (WHERE THERE IS A RIGHT, THERE IS A WAY)  சுட்டிக்காட்டி ,  ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய D.K.Basu v. State of West Bengal,(1997) 1 SCC 416. தீர்ப்பை மேற்கோள் காட்டி,  தனது தீர்ப்பில்  குறிபிட்டுள்ளார். 

பிறகென்ன,?   மனுதாரர் கேட்டபடி நஷ்டஈடு கொடுக்குமாறு உத்தரவிடபட்டுளது .  என்ன ..அவர் கேட்டது ....பத்து லட்சம்  ரூபாய் ..ஆனால் கொடுத்தது ரூபாய் ஐம்பதினாயிரம்..

அதே போல , அந்த நஷ்டஈட்டை , தவறு செய்த அரசு அதிகாரி அல்லது அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம செய்யுமாறு உத்தரவிட்டிருந்தால் , இன்னும் நன்றாக இருக்கும்!!

இருந்தாலும், இது, அதிகார வர்க்கத்தின் துஷ்ப்ரயோகதிற்கு எதிரான சிறப்பான தீர்ப்பு.!!

நீதிமன்றம் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை  மீண்டும் மீண்டும் உறுதி செய்து கொண்டு வருகிறார் நமது நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் !!

குடிமக்கலின் அடிப்படை உரிமைகளை தங்கள் இஷ்டம் போல முறிக்கும் அரசு இயந்திரங்கள் இனியாவது சற்று   விழிதுக்கொள்ளுமா  என்று பார்ப்போம். ...

இந்த வழக்கு விவரங்களை கீழ்கண்ட லிங்கில் பெறலாம்.!!

W.P.(MD)No.4804 of 2023 R.Eswaran ... Petitioner Vs. 1.The Government of Tamil Nadu, Rep. by its Secretary to Government, Home Prohibition and Excise (XIII) Department, Chennai

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...