ஒரு குற்றம் நடந்தது என்றாலே அதில் பாதிக்கப்பட்டவர் என்று ஒருவர் கண்டிப்பாக இருப்பார். இந்த குற்றத்திற்காக தண்டிக்கும் மும்முரத்தில் பெரும்பான்மையான நேரங்களில், அவர் மறக்கடிக்கபட்ட்டிருப்பார் . அது தான் உண்மை. ஆனால் இந்திய குற்ற விசாரணை முறையில் , குற்றம் செய்தவரால், பாதிக்கப்பட்டவருக்கு நேர்ந்த பாதிப்பை சரி செய்யும் சமூக கடமையும் அந்த தண்டனையின் ஒரு அங்கம் என்றாலும் சிறையில் கழிக்கும் தண்டனை காலம் அந்த பாதிப்பை எந்த விதத்திலும் சரிப்படுத்தாது என்று நீதியரசர் கிருஷ்ணா ஐயர் 1981லேயே ஒரு தீர்ப்பில்Maru Ram vs Union of India (1981) 1 SCC 107 சொல்லியுள்ளார்.
அதனால் தான் குற்றவாளிக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதத் தண்டனையிலிருந்து குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அதிகாரத்தை குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின் பிரிவு 357 நீதிமன்றத்திற்கு வழங்குகிறது. "கு.வி.மு.ச. பிரிவு 357 இன் கீழ் இழப்பீடு வழங்குவதற்கான அதிகாரம் ஒரு முக்கிய அம்சம் என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினாலும் நீதிமன்றங்கள் அரிதாகவே அதைக் கொடுக்கின்றன. Hari Singh vs Sukhbir Singh and Others வழக்கில் கூட, இந்த அதிகாரம் என்பது துணை அல்ல. கூடுதலாக நீதிமன்றத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது. என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
குற்றவாளிக்கு அபராதம் விதிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி, நஷ்டஈடாக பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்க உத்தரவிடலாம். அப்படி அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை என்றாலும் கூட, குற்றவாளிக்கு தண்டனை வழங்கும் போது அத்தோடு கூடுதலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு என்று ஒரு தொகையை செலுத்த நீதிமன்றம் உத்தரவிடலாம்.
இந்த அதிகாரத்தின் நோக்கமே, குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்கும் மும்முரத்தில் , இந்த குற்றத்தினால் பாதிக்கப்பட்ட அவர் அல்லது அவள் மறக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவருக்கு உறுதியளிப்பது தான்.
ஆனால் அதே சமயம், குற்றவாளி, பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு வழங்குவதால், அவருக்கு கொடுக்கப்படவேண்டிய தண்டனை ஏதும் இல்லாமல் போகுமா? என்ற கேள்வி எழலாம். இதே போன்ற கேள்வி தான் உச்ச நீதிமன்றத்தின் முன்பும் சமீபத்தில் வந்தது.
இந்த வழக்கு குஜராத் அரசுக்கு எதிராக தொடரப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக