வெள்ளி, 29 மார்ச், 2024

அரசு ஊழியருக்கு எதிராக பணியை தவிர்த்த சம்பவங்களில் FIR போட்டால் கூட, அது அவர் பணியை பாதிக்குமா?

 அரசு ஊழியர் ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்கிறார். ஆனால் அவரின் சகோதரருக்கு எதிராக தொடரப்பட்ட இலஞ்சப் புகாரில் இவரும் இணைக்கப்படுகிறார்.  இலஞ்சப் பணம் இவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை அடுத்து..கைதும் ஆகிறார்..

இதைக் காரணம் காட்டி, இவர் துறையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது .   "இது தவறு.  எனது அரசுப்பணிக்கும் இந்த குற்றத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை .அதனால் எனக்கு வழங்கப்பட்ட சார்ஜ் மெமோவை இரத்து செய்ய வேண்டும் என்று நமது உயர் நீதிமன்றத்தை   நாடுகிறார். 

அதற்கு உயர் நீதிமன்றம் சொன்னது?


"இவர் சொல்வதை ஏற்றுக் கொண்டால்,, ஒருவரை கொலை செய்ததால் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இன்னொரு அரசு ஊழியர் கூட , "இந்த குற்றம் , என் பணியோடு சம்பந்தப்பட வில்லை " என்று இதே வாதத்தை முன்வைக்கலாம்....  

பணியோடு சம்பந்தப்படாவிட்டாலும், மிகவும் மோசமான Misconduct இருப்பது தெரிய வந்தால், அந்த அரசு ஊழியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு துறைக்கு எந்த தடையும் இல்லை " என்று கூறி சமீபத்தில் மேற்படி  வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர் நீதியரசர்கள் G.ஜெயச்சந்திரன் மற்றும் C.குமரப்பன் அவர்கள்.Kramachandran v.The District Educational Officer(Elementary Education) & Another

இந்த வழக்கை சம்பந்தப்பட்ட ஆசிரியரே தாமாக வழக்கை நடத்தி இருக்கிறார்.

இந்த வழக்கின் சாராம்சத்தை பார்க்கும்போது,  அரசு ஊழியர் நடத்தை விதிகள் குறித்த சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் இது தொடரப்பட்டுள்ளது என்பது தெரிகிறது . 

ஒரு அரசு அலுவலக நடைமுறையை பற்றி  சொல்லும் கையேடு தான்   fundamental Rules.  இதில் அடிப்படை விதி 11 சொல்வதை பாருங்கள் :

Fundamental Rule 11 :: "unless in any case it be otherwise distinctprovided, the whole time of a Government servant is at the disposal of the Government which pays him and he may be employed in any manner required by proper authority without claim for additional remuneration."

ஒரு அரசு ஊழியரின் பணி நேரம் வரையறுக்கபட்டதல்ல . அது எப்போது வேண்டுமானாலும் , அவர் மேலதிகாரியினால் தேவைக்கேற்ப நிர்ணயம் செய்யப்படலாம்.  ஏற்கெனவே ஒரு பதிவில் , இந்த 'Whole" time employment குறித்து நான் பார்த்த அலுவலக குறிப்புகளை சொல்லியிருப்பேன் .  "Full" time Employee என்றில்லாமல் , "Whole Time"Employee  என்று சொல்வதில் இருந்தே இந்த  வித்யாசம் தெரிகிறதல்லவா?

இந்தப் புரிதல் இருந்தால் நிறைய அரசு ஊழியர்கள் தேவையற்ற சட்ட சிக்கல்களில் சிக்கிக் கொள்ளமாட்டார்கள்.


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...