\\\\\\\\வணிகத்தின் சட்ட அம்சங்கள்
1.3 . ஒப்பந்தத்தின் வகைகள்
ஒப்பந்தங்களை பரந்த நோக்கில் வகைப்படுத்தும் போது, மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
1.
அமுல்படுத்தும்
பொறுத்து (சட்டப்பூர்வமாக
செல்லுபடியாகும் முறையில்)
2.
உருவாக்கும் முறையை
பொறுத்து (உருவாக்கும் வழி)
3.
செயல்பாட்டை பொறுத்து .
ஒப்பந்தத்தை மேற்கொண்டும் கீழ்கண்ட விதத்தில்
பிரிக்கலாம்:
1. அமுல்படுத்தும் நோக்கில் ::
i) செல்லத்தக்க ஒப்பந்தங்கள் ii) செல்லாத விழலாகும் ஒப்பந்தங்கள்/
உடன்படிக்கைகள் iv) சட்ட விரோத ஒப்பந்தங்கள் v ) செயல்படுத்தமுடியா ஒப்பந்தங்கள்
i) செல்லத்தக்க ஒப்பந்தங்கள் :: சட்டத்தால் அமுல்படுத்தக்கூடிய
உடன்படிக்கைகள் தான் செல்லத்தக்க ஒப்பந்தங்களாகும். அமுல்படுத்துவதற்கான நிபந்தனைகளை இந்திய ஒப்பந்த சட்டத்தின் பிரிவு
10ல் தெரிந்துக் கொள்ளலாம்.
அதை தான் முந்தைய பதிவான இந்திய ஒப்பந்த சட்டம் --பகுதி 2 ல் பார்த்தோம். அதன் லிங்க் அவை அத்தனையையும் நிறைவேற்றுபவை தான் செல்லத்தக்க ஒப்பந்தமாகும்.
ii)
செல்லத்தகாத ஒப்பந்தங்கள் ::
பாதிக்கப்பட்ட தரப்பினரின் தேர்வை
பொறுத்து, ஒரு ஒப்பந்தம் செல்லாததாகும் என்று இந்திய ஒப்பந்த சட்டம்., 1872 பிரிவு 2(i) கூறுகிறது.
அவர்கள் ஏற்றுக் கொண்டால். அது செல்லத்தக்கதாகவும் பிணைப்பதாகவும் இருக்கும். அது,
வற்புறுத்தல், தகாத செல்வாக்கு, சுதந்திரமான சம்மதம் இல்லாமல் திரித்து கூறியதன்
விளைவாகவோ மோசடியினாலோ ஏற்பட்டதாக இருக்கலாம்.
எந்த தரப்பின் சம்மதம் சுதந்திரமாக பெறப்படவில்லையோ அவர்கள் அதை ரத்து
செய்யவோ அல்லது அதன் படி நடக்கவோ, இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். அது போல செய்ய உரிமை கொண்ட தரப்பு
ரத்து செய்யும் வரையில், அந்த ஒப்பந்தம் செல்லத்தக்க ஒப்பந்தமாகவே இருக்கும்.
உதாரணத்திற்கு A தன் வீட்டை
ரூ.5,௦௦,௦௦௦க்கு B க்கு விற்பனை செய்வதாக
வாக்குறுதி கொடுத்தார். அவருடைய சம்மதம்
கட்டாயப்படுத்தி பெறப்பட்டது. அவர் தன் விருப்பம் போல, அந்த ஒப்பந்தத்தை ரத்து
செய்யவோ அல்லது அதன் படி நடக்கவோ செய்யலாம். அதனால், அந்த ஒப்பந்தமானது A வின்
தேர்விற்கேற்ப செல்லத்தக்காததாக ஆகும்
இன்னொரு உதாரணமும் பார்ப்போம். ஜூன் 1
அன்று (ஏனென்றால் அது தான் என் பிறந்த நாள் ):: )
A தன் காரை B க்கு ரூ.30,000க்கு விற்பனை செய்ய ஒத்துக் கொண்டார். முழுத் தொகையையும் செலுத்திய
பிறகு, ஜூன் 15 அன்று அவர் தன் காரை ஒப்புவிக்க வேண்டும். ஆனால் ஜூன் 10 அன்றே
எதேச்சையாக ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கார் எரிந்து விடுகிறது. இந்த சூழ்நிலையில்,
அவர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம், கார் எரிந்தவுடனேயே செல்லாததாகிவிடுகிறது.
iii} விழலாகும் (செல்லாத) ஒப்பந்தங்கள்/உடன்படிக்கைகள்
:: இந்திய ஒப்பந்த சட்டம்,
1872 2(j) படி, எப்போது ஒரு ஒப்பந்தம் அமுல்படுத்த முடியா
நிலைக்கு வருகிறதோ, அப்போது அது விழலாகும் ஒப்பந்தமாகிறது.
உதாரணமாக ஒரு ஒப்பந்தம் அது ஏற்படுத்தப்பட்ட
போது செல்லத்தக்கதாக இருந்து, பின்னர்
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் இரு நாடுகளுக்கிடையில் போர் மூண்டதால் அந்த
ஒப்பந்தம் விழலாகும்.
iv) சட்ட விரோத ஒப்பந்தங்கள் ::
குற்றத்தன்மை கொண்டதாகவோ ஒழுக்கக்கேடானதாகவோ இருந்து, பொது கொள்கைக்கு
எதிரானதாகவுள்ளது சட்டவிரோத உடன்படிக்கையாகும். அது போன்ற உடன்படிக்கைகள் செல்லாத
ஒப்பந்தங்களை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
அனைத்து சட்ட விரோத
உடன்படிக்கைகளும் செல்லாததாக கருதப்படும். ஆனால் அனைத்து செல்லாத உடன்படிக்கைகளும்
அல்லது ஒப்பந்தங்களும் சட்டவிரோதமானதாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம்
இல்லை. ஒரு சட்ட விரோத உடன்படிக்கை செல்லத்தகாததாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அந்த
ஒப்பந்தத்திற்கு இணையான பரிவர்த்தனைகளும் சட்டவிரோதமானதாகிவிடும்.
உதாரணத்திற்கு, X என்பவர் Y
இடமிருந்து ரூ.5000/- கடன்
பெறுகிறார். அவர் Z என்பவருடன் பொருட்களை கடத்தல் செய்வதற்கு ஒப்பந்தம் போடுகிறார். Yக்கு கடன்
வாங்குவதன் நோக்கம் தெரியும். X மற்றும் Yக்கும் இடையே நடக்கும் பரிவர்த்தனைகள்
முதன்மை ஒப்பந்தத்தோடு இணைந்தது. முதன்மை ஒப்பந்தமே சட்டவிரோதமானது என்பதால்,
Yக்கும் Zக்கும் இடையேயான பரிவர்த்தனையும் சட்ட விரோதமானது
v) அமுல்படுத்த முடியா ஒப்பந்தங்கள் ; சில தொழில்நுட்ப காரணங்களினால் நீதிமன்றத்தில் அமுல்படுத்த முடியாத ஒப்பந்தங்கள், இந்த வகையில் வரும். சில சமயங்களில், சிறப்பு சட்டங்கள் சில நடைமுறைகளை பின்பற்ற சொல்லும்.
உதாரணத்திற்கு, ஒப்பந்தங்கள் எழுத்து மூலமாகவோ அல்லது பதிவு செய்தோ அல்லது போதிய
முத்திரை கட்டணம் செலுத்தியோ அல்லது சான்றொப்பம் இடப்பட்டோ இருக்க வேண்டும். சில சிறப்பு சட்ட விதிகளின் நடைமுறைகள் சரியாக
கடைபிடிக்கப்படாவிட்டால், நீதிமன்றத்தால் அமுல்படுத்த முடியா நிலை ஏற்படும். மற்றபடி, அந்த ஒப்பந்தம் மிக சரியானதாக
செல்லக்கூடியதாக இருப்பதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும். ஆது போன்ற சில ஒப்பந்தங்களில் இருக்கும் சில
தொழில்நுட்ப குறைகளை சரி செய்தால், அதனை அமுல்ப்படுத்த முடியும். உதாரணத்திற்க்கு போதிய முத்திரைக்கட்டணம்
செலுத்த வேண்டிய ஒப்பந்தத்திற்கு, அந்த குறைபட்ட முத்திரைக கட்டணத்தை செலுத்தினால் அது செல்லக்கூடிய
நீதிமன்றத்தால் அமுல்படுத்தக்கூடிய ஒப்பந்தமாக ஆகும்.
2. உருவாக்கும் முறையை
பொறுத்து (உருவாக்கும் வழி)
ஒப்பந்தங்களை இன்னும் நுட்பமாக கீழ்கண்டவாறு
பிரிக்கலாம்:
i) வெளிப்படையான
ஒப்பந்தம்
ii) மறைமுகமான ஒப்பந்தம்
iii) அரை ஒப்பந்தம்
i) வெளிப்படையான ஒப்பந்தம்: ஒரு ஒப்பந்தத்தின்
ஷரத்துகள் எழுத்து மூலமாகவோ வாய்மொழியாகவோ இருக்கலாம். அதன் ஷரத்துகள் வெளிப்படையாக ஒப்பந்தத்தின்
தரப்பினரால் ஒத்துக கொள்ளபட்டால் அந்த ஒப்பந்தம், வெளிப்படையான ஒப்பந்தம்
எனப்படும்.
ii) மறைமுக ஒப்பந்தம்: எழுத்து மூலமாக
இல்லாதது மறைமுக ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தத்தின் தரப்பினரின் நடத்தையைக் கொண்டோ
அல்லது சூழ்நிலையைக் கொண்டோ அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளையும் நிபந்தனைகளையும்
அறிந்துக கொள்ளலாம். .
உதாரணம் :
1) ஒரு இரயில் நிலையத்திற்குள் நுழைபவரிடம்
பயண சீட்டோ அல்லது நடை மேடை சீட்டோ இருக்க வேண்டும் என்பது மறைமுகமானது..
2) ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்து உணவை
எடுத்துக கொள்ளும் நபர் அதற்காண பணம்
செலுத்த வேண்டும் என்பதும் மறைமுகமானது. .
iii) அரை ஒப்பந்தம்: உறுதியான
வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அரை ஒப்பந்தம் என்பது ஒப்பந்தமே அல்ல. அரை
ஒப்பந்தம் என்பது சட்டத்தால் உருவாக்கபட்டது. இது போன்றவற்றில், ஒரு சட்டப்பூர்வமான
கடமையை நிறைவேற்றும் பொறுப்பு கொண்ட ஒரு தரப்பு அதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.
இதன் உள்ளார்ந்த பொருள் என்னவென்றால், யாருமே இன்னொருவரின் செலவில் தன்னை
மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது என்பதே.
உதாரணம்:
A என்ற வணிகர் தற்செயலாக B’ன் வீட்டில் தன்
பொருட்களை தவற விட நேர்ந்தது. B அந்த பொருட்களை தன்னுடையதைப் போலவே பாவிக்கிறார். .
B அந்த பொருட்களை திருப்பிக் கொடுபதற்காக A வை அடையாளம் காணும
பொறுப்புக்குள்ளாகிறார் அல்லது அவர் தன் காரியத்திற்காக அந்த பொருட்களை
பயன்படுத்தியிருந்தால், அந்த பொருட்களின் மதிப்பை திருப்பிக் கொடுக்கும் கடைமைக்குள்ளாகிறார்
.
3. செயல்பாட்டை பொறுத்து::
ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படும்
போது, அவற்றை மேலும் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்:
i) நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்கள்:: ஒரு ஒப்பந்தம்
முற்றிலுமாக நிறைவேற்றப்படும் போது, அது "நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம்"
எனப்படும். அதாவது, ஒப்பந்தத்தின் ஷரத்துகளின்படி, வேறு ஏதும் எந்த தரப்பாலும்
செய்ய வேண்டிய நிலை ஏற்படாத ஒப்பந்தம்
அது. ஒரு ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றலாம். அதாவது அது ஏற்படுத்தப்பட்ட அந்த
சமயமே.. உதாரணத்திற்க்கு, ரொக்க விற்பனையின் போது, அந்த ஒப்பந்தம் அந்தக் கணமே நிறைவேற்றப்படும்.
ஒப்பந்தத்தின் ஷரத்துகள் நிறைவேற்றப்படும்
பின்னாளில் அது நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தமாகும்.
உதாரணம் : A தன் வீட்டை B க்கு ரூபாய் 1000 க்காக விற்க
ஒத்துக் கொள்கிறார். B அந்த விலையைக் கொடுக்கிறார். A
வீட்டை ஒப்படைக்கிறார் .
இரண்டு தரப்பினரும் தத்தம் செயலை செய்து முடித்ததால் அது ஒரு நிறைவேற்றப்பட்ட
ஒப்பந்தமாகும்.
ii) நிறைவேற்றப்பட வேண்டிய
ஒப்பந்தம் : ஒப்பந்தத்தின் தரப்பினரால் இன்னமும்
தத்தம் கடமைகளை செய்து முடிக்காமல், சிலவற்றை செய்து முடிக்க வேண்டிய நிலையில்
இருக்கும் போது, அதை நிறைவேற்றப்படவேண்டிய ஒப்பந்தம் என்பர். சில சமயத்தில், சில
ஒப்பந்தங்கள் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டதாகவும் மற்றொரு பகுதி நிறைவேற்றப்பட வேண்டியதாகவும்
இருக்கும்.
மேலே சொன்ன உதாரணத்தில், K பணத்தை கொடுத்திருந்து, G வீட்டை R ன்
பெயருக்கு பதிவு செய்துக் கொடுக்காமல்
இருந்தால், அந்த ஒப்பந்தம் R யை பொறுத்த வரையில் நிறைவேற்றப்பட்டதாகவும், G யை
பொறுத்த வரையில் நிறைவேற்றப்படவேண்டியதாகவும் இருக்கும்.
iii) ஒரு தலைபட்சமான
ஒப்பந்தம் : ஒரு ஒப்பந்தத்தில் ஒரு தரப்பு மட்டுமே தன்
கடமையை நிறைவேற்ற வேண்டிய நிலையில்
இருந்தால், அதை ஒரு தலைப்பட்சமானது என்பர். அது போன்ற ஒப்பந்தங்களில், ஒரு
தரப்பின் வாக்குறுதி மற்றொரு தரப்பின் செயலுக்கு பிரதிபலனாக பரிமாறப்படும்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு தலைபட்சமான ஒப்பந்தம் உருவான பிறகு,
ஒரு தரப்பு மட்டுமே அவர் தரப்பு கடமையை நிறைவேற்ற கடமைப்பட்டவர். ஏனெனில், மற்றொரு தரப்பு ஏற்கெனவே சில செயலை
செய்து, தன் தரப்பு கடமையை முடித்திருப்பார்.
ஒரு தலைபட்சமான ஒப்பந்தங்களை 'நிறைவேற்றப்பட்ட பிரதிபலன் கொண்ட ஒப்பந்தங்கள்'
என்றும் சொல்வர்.
உதாரணம்: A ஒரு இரயில்வே சுமைதூக்கியை தன் சாமான்களை
எடுத்து ஒரு இரயில்வே கம்பார்ட்மென்ட்டில்
வைக்க அனுமதிக்கிறார். அந்த சாமான்கள்
நகர்ந்து இரயில்வே கம்பார்ட்மென்ட்டில் வைக்கப்படும் போது, ஒரு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது. சுமை
தூக்கி தன் கடமையை முடித்து விடுகிறார். அதே சமயம், ஒப்பந்தம் செயல்பாடிற்கு
வருகிறது. இப்போது Aக்கு மட்டுமே சுமைதூக்கிக்கு கொடுக்க வேண்டிய
நியாயமான கூலியை கொடுக்கும் கடமை ஏற்படுகிறது.
iv) இருதரப்பு ஒப்பந்தம் : இருதரப்பு
ஒப்பந்தம் என்பது இரண்டு தரப்பினரும் தத்தம் கடமையை நிறைவேற்ற வேண்டிய கடமை
உள்ள 'இரண்டு தரப்பு ஒப்பந்தம்'
எனப்படும். அதாவது, ஒரு தரப்பு உருவாகும் போது, இரண்டு தரப்பினரும் தத்தம் கடமையை
நிறைவேற்ற வேண்டிய நிலையில் உள்ள போது.
அது போன்ற\ ஒப்பந்தங்களில், ஒரு தரப்பினரின் வாக்குறுதி மற்றொரு
தரப்பினரின் வாக்குறுதிக்கு ஈடாக பரிமாறப்படும். இந்த இருதரப்பு
ஒப்பந்தம் என்பது, 'நிறைவேற்றப்பட வேண்டிய பிரதிபலன் கொண்ட ஒப்பந்தங்கள்' என்றும்
சொல்லப்படும்
உதாரணம் : A, B க்காக ஒரு படம் வரைந்துக் கொடுப்பதாக
வாக்குறுதி கொடுத்தார். B யும் A க்கு ரூ. 100 கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். ஒப்பந்தம் உருவாகும் போது,
வாக்குறுதிகள் பரிமாரிக் கொள்ளப்பட்டு இரண்டு தரப்பிலும் நிறைவேற்ற வேண்டிய
கடமைகள் இருந்ததால், அது, ஒரு இருதரப்பு ஒப்பந்தமாகும்.
...தொடரும்...
தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1இந்திய ஒப்பந்த சட்டம் பகுதி 1
௨ இந்திய ஒப்பந்த சட்டம் பகுதி 2