புதன், 22 நவம்பர், 2023

ஏன் விவாகரத்தை விட நீதிமன்ற ஆணையுடன் பிரிந்து வாழ்வது சிறந்தது?

ஏன் விவாகரத்தை விட நீதிமன்ற ஆணையுடன் பிரிந்து வாழ்வது சிறந்தது?



      திருமண உறவு நம் நாட்டில் ஒரு மங்களகரமான அம்சமாக பார்க்கப்படுகின்றது. இந்து திருமண சடங்குகளில் கூட, “இவர்கள் ஏழு பிரவியுளும் ஒன்றாக இருக்க வேண்டும்” என்ற  சடங்குகள் உண்டு. அவர்களுக்குள் பிரிவு என்பது ஒருவர் இறப்பில்  தான் இருக்க வேண்டும் என்ற நிலை தான் இருந்து வருகிறது . அதனால் தான், நம் அப்பா தாத்தா காலத்தில், ஒத்துப் போகாத தம்பதியரும் சேர்ந்து வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.  

 

        பின்னர், நாகரீகம் மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாக விவாகரத்து என்ற கருத்து இந்தியாவிலும்  புகுந்து , இந்து திருமணச் சட்டம், 1955 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

      அதன்படி, கணவன்-மனைவி இடையே தவறான புரிதல் அல்லது அலட்சிய நடத்தை காரணமாக ஏற்படும்  குடும்பத் தகராறுகளில். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்க, இந்து திருமணச் சட்டம், 1955ல் சில வழிமுறைகளை காட்டுகின்றது . அதில் சொல்லப்பட்ட திருமண உறவை தற்காலிகமாகவும் நிலையாவும் முறிக்கக் கூடிய, ‘ விவாகரத்து’ மற்றும் ‘நீதிமுறை பிரிவு’  என்ற  இந்த இரண்டு முறைகளும்   திருமண உறவில் உள்ள விரிசல்களை சரி செய்துக் கொள்ளவும், அது முடியாது போகும் போது முறித்துக் கொள்ளவும் உதவுகின்றன.

 

      இதில் விவாகரத்து எனப்படும் திருமண உறவையே 
ரத்து செய்யும் முறையை பற்றி நாம் அறிவோம். இதைப் பற்றி இந்து 
திருமண சட்டத்தின் பிரிவு 13 சொல்கிறது. ஆனால் இன்னொரு
 விதமான பிரிவை பற்றி நமக்கு பெரிதும் தெரிவதில்லை. அது 
தான் JUDICIAL SEPERATION எனப்படும்  நீதிமுறை பிரிவு .
 
      ;நீதிமுறை பிரிவு ‘ என்பது, கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஒரு  
தற்காலிகமான பிரிவு தான். அதை நீதிமன்ற அனுமதியுடன் பெறுகிறோம். “விவாகரத்து பெற விருப்பமில்லை, அதே சமயம் சேர்ந்து வசிக்கவும் ஆசையில்லை” என்றால் அதற்கு உரிய ஒரே வழி இந்து திருமண சட்டத்தின் பிரிவு 1௦யை நாடுவது தான். அது தான் நீதிமன்ற பிரிவு  
 
      இதைத் தான் ஹ்ரிதிக் ரோஷன் போன்ற பாலிவுட் ஹீரோக்களும்
 நாடுவது. 
 
      ஏன என்று பார்ப்போம். 
 
      நீதி முறை பிரிவு என்பது ஒரு சட்டப்பூர்வ செயல்முறை, இது 
விவாகரத்துக்கு முந்தைய நிலை என்றும் கொள்ளலாம்.  இது 
திருமண பந்தத்தில் உள்ளவர்களை   சட்டப்பூர்வமாக பிரித்து
 வைப்பதை குறிக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டுமானால், 
நீதி முறை பிரிவு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு,... அதிகபட்சமாக
 ஒரு வருடத்திற்கு, இருவரின்  சம்மதத்துடன் பிரிக்கப்படும்
 சூழ்நிலையைக் குறிக்கிறது.   இதை கணவன்-மனைவி இருவரும் 
விவாகரத்து நடவடிக்கைக்கு முன்னர் தங்கள் திருமண உறவை  
மேம்படுத்தி கொள்வதற்கான  மற்றொரு வாய்ப்பாக எடுத்து கொள்ள 
வேண்டும். 
 
விவாகரத்தும் நீதிமுறை பிரிவு இரண்டும் ஒன்று தானா? 
       இல்லை.  இரண்டு  சொற்களும் அவற்றின் அர்த்தங்களில் 
வேறுபட்டவை, அதனால்  ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்த 
முடியாது. விவாகரத்திற்கான காரனங்களை ஒத்துத் தான் நீதி முறை 
 பிரிவு கோருவதற்கும்.  
       இருந்தாலும், விவாகரத்திற்கான காரணத்தை நிரூபிக்காத போது,
 அதன்  மறு தீர்வாக நீதி முறை பிரிவை  வழங்க  இயலாது  என்று 
கேரளா உயர் நீதிமன்றம்.சமீபத்தில் ஒரு தீர்ப்பில் சொல்லியுள்ளது.  

 

இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

·        நீதிமன்ற பிரிவு கோரி, திருமணம் முடித்த பிறகு, எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் மனு செய்யலாம்.  ஆனால், விவாகரத்து பெற, திருமணம் முடிந்து ஒரு வருடம் கழிந்த பிறகே கோர முடியும். அதுவும் மனமொத்த விவாகரத்து கேட்பது என்றால் மனு தாக்கல் செய்து, நீதிமன்ற கோப்பில் எடுத்த பின்பும், ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டும்.

·        நீதிமன்ற பிரிவு என்பது விவாகரத்திற்கான முதல் நிலை

·        நீதி முறை பிரிவு, விவாகரத்து ஆகலாம் ஆனால் விவாகரத்து ஒருபோதும் நீதி முறை பிரிவாக மாற முடியாது. அத்தோடு  நீதி முறை பிரிவு என்பது விவாகரத்துக்கான காரணமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

·        நீதி முறை  பிரிவின் போது, தரப்பினர் தங்கள் திருமணத்தைப் பற்றி யோசித்து அதைச் சரி செய்யலாம் ஆனால் விவாகரத்திற்கு பிறகு அதற்கான வாய்ப்பு கிடையாது.

·        நீதி முறைப் பிரிவில், இரண்டு தரப்பினரும் இணைந்து வாழாவிட்டாலும் சட்டப்பூர்வமான திருமண உறவில்  தொடர்ந்து இருப்பதாகத்தான் கொள்ளப்படும்.  விவாகரத்து என்னும் போது,  அவர்களின் திருமணம் ரத்து செய்யப்படுகிறது,  அவர்கள் மறுமணம் செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

·        நீதி முறைப் பிரிவின் போது, ​​மனுதாரர் சொல்லும் காரணம் 
நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உத்தரவு  வழங்கப்படுகிறது, ஆனால் விவாகரத்து கோரும்போது/ முதலில் திருமண உறவை சீர் செய்ய அவர்களுக்கு கவுன்சலிங்  செய்து, முடியாத பட்சத்தில்  விவாகரத்துக்கு உத்தரவிடப்படும்.

·        நீதி முறை பிரிவு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பாணை பிறப்பித்து விட்டால், தீர்ப்பாணை பெற்றவர், திருமண உறவில் உள்ள மற்றொருவருடன் இனைந்து வாழ வேண்டிய அவசியமில்லை. அதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினர் தனித்தனியாக வாழ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ஒரே கூரையின் கீழ் வாழலாம். நீதித்துறை பிரிப்பு என்பது வீட்டில் இருந்து அல்ல கடமைகளில் இருந்து விடுபடுவது.

·        அதேசமயம், மனைவி தன்னையும் தன குழந்தைகளையும் பராமரிக்க இயலாத நிலையில் இருந்தால், அந்த நீதிமன்ற பிரிவு காலக்கட்டத்திலும்,  கணவன்  அவன் குடுமம்பதிற்கு போதிய

 பராமரிப்பு தொகை தர வேண்டும்.

·        நீதி முறை பிரிப்பு ஆணை வழங்கிய பின், தம்பதியினர் ஒன்று சேர நினைத்தால், மீண்டும் அதே நீதிமன்றத்தில் மனு செய்து முந்தைய உத்தரவை நீக்கம் செய்து பெறலாம்.  ஆனால் விவாகரத்து பெற்ற பின், அதில் மாற்றம் செய்ய வேண்டுமாயின், உயர் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும்.

 

விவாகரத்து, நீதிமுறை பிரிவாகுமா?

      இல்லை, விவாகரத்து என்பது நீதி முறை பிரிவாக இருக்க முடியாது,
 அதே சமயம் நீதி முறை பிரிவு விவாகரத்தாக  மாறலாம். 
      ஒரு தம்பதியருக்கு  பிரிந்து வாழ நீதிமன்றத்தால் 
அனுமதிக்கப்பட்டு  உத்தரவிடப்பட்டால்.அவர்கள் வாழ்க்கையில்
 ஒருவருக்கொருவரின் முக்கியத்துவத்தை அறிந்துக் கொள்வார்கள், 
ஆனால் 1 வருடத்திற்குப் பிறகும் அவர்கள் விலகி இருக்க முடிவு 
செய்தால் திருமண உறவை முறிக்க நேரிடும்.
 
      உதாரனத்திற்க்கு A, B என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார்.
அவர்களுக்கு ஒரு சின்ன விஷயத்தில் தகராறு ஏற்பட்டது, அந்த
 வாக்குவாதம் பெரிதாகி, அவர்கள் இனி ஒன்றாக வாழ  விரும்பவில்லை.
 என்றும் விவாகரத்துக்காக நீதிமன்றத்திற்குச் சென்றனர், அவர்களது 
பிரசசினையை தீர்த்துக் கொள்ள அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால 
அவகாசம் வழங்க நீதிமன்றம் முடிவு செய்து 1 வருடத்திற்கு நீதி முறை 
 பிரிவினைக்கு உத்தரவிட்டது. 1 வருடம் கழித்து, அவர்கள் தங்களுக்குள் 
உள்ள ககுத்து வேறுபாட்டை சரி செய்து, விவாகரத்து வேண்டாம் என்று 
முடிவு செய்தனர்.      1 வருடத்திற்குப் பிறகு, தம்பதியினர் தம் திருமண 
பந்தத்தை தொடர வேண்டாம் என்று முடிவு செய்தால், 
விவாகரத்துக்கான காரணத்தையும் விவாகரத்துக்கான 
செயல்முறையையும் நீதிமன்றம் தீர்மானிக்கும் 
  பரஸ்பர சம்மதத்தின் மூலமும் விவாகரத்து பெறலாம். 
தப்பன் குமார் எதிர் ஜோத்ஸ்னா

      இந்த வழக்கில் மனைவி கணவரை தனிக்குடித்தனம் வர சொல்லி வற்புறுத்தி வந்தார்.  கணவர் முடிவாக மறுத்த பிறகு, வீட்டை விட்டு வெளியேறி  தன சகோதரருடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். கணவர் ஜாமீன் பெற்றார். விவாகரத்து கோரி மனு செய்தார். தன்னை கணவரும் அவர் குடும்பத்தினரும் கொடுமை செய்ததாக மனைவி பதில் மனு தாக்கல் செய்தார்ர்.

 கணவர் விவாகரத்திற்காக சொன்ன காரணங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளா விட்டாலும், கணவருக்கு திருமண உறவுக்கு மீறிய உறவு உள்ளதாக பொய்யான குற்றம் சுமத்திய  மனைவியின் செயல் மன ரீதியான துன்புறுத்தலாக விவாகரத்து அளிக்கக் கூடிய  ஒன்றாக அமைந்துள்ளது என்று நீதிமன்றம் விவாகரத்து அளித்து தீர்ப்பளித்தது.


மன ரீதியான துன்புறுத்தல் என்றால் என்னென்ன?

      மன ரீதியான் துன்புறுத்தல் என்பது ஒருவரின் உடல் அல்லது மன 
ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கிறது அப்படிப்பட்ட துன்புறுத்தலில்
 என்னென்னவெல்லாம் அடங்கும்?
·        மணவாழ்வில் இரக்கம், அன்பு காட்டாதது.
·        மண உறவிற்கு வெளியே தொடர்பு உள்ளதாக பொய்யாக 
குற்றம் சுமத்துவது
·        தாம்பத்திய உறவிற்கு மறுப்பது
·         ஆண்மைக் குறைவு
·        முறையற்ற குழந்தைப் பிறப்பு
·        குடி போதை
·        தற்கொலை செய்துக் கொள்ளவதாக மிரட்டல் விடுப்பது
·        கணவரின் மேலதிகாரிக்கு மனைவி  பொய் புகார் எழுதுவது
·        இணக்கமில்லா மனோபாவம்
·        மீள முடியா மண முறிவு 



 



      இதைத் தவிர நீதி முறைப் பிரிவை பெறுவதற்கான காரணங்கள் விவாகரத்து கோருவதற்கான அதே காரணங்களை ஒத்து இருக்கும்.



·        மண வாழ்க்கைக்கு எதிரான உறவை கொள்ளுதல்..இது ஆணோ
 பெண்ணோ இரு பாலருக்கும் பொருந்தும். இந்திய தண்டனைச் 
சட்டத்தில் தான்,  மனைவி கணவனை தவிர்த்து இன்னொரு
 ஆணுடன் உறவு வைப்பது குற்றம் அல்ல என்றது. ஆனால் 
விவாகரத்து கோருவதற்கு இது ஒரு காரணமாக அமையும். 
·      வேண்டுமென்றே கவனிக்காமல் விடுதல் wilful Neglect
·        வேற்று மதத்திற்கு மாறுதல்
·        மன நிலை பிறழ்ந்து இருத்தல்
·        தொழு நோய் போன்ற தொற்று நோய்கள் இருப்பது
·        உலக வாழ்வை துறத்தல்
·        ஏழு வருடங்கள் தம்பதி குறித்த விவரங்கள் ஏதும் தெரியாது, 
 காணாமல் போதல்  
 
      இவற்றை தவிர்த்து , பிரிந்து வாழ்வதற்கு மனைவிக்கென சில 
கூடுதல்  காரணங்கள்: உள்ளன:
·        மனைவி இருக்கும் போதே இன்னொரு திருமணம் செய்தல்
·        கற்பழிப்பு குற்றம் நிரூபணம் ஆதல்
·        இந்து தத்தெடுத்தல்  மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 மற்றும் குற்ற 
விசாரணை நடைமுறை சட்டப் பிரிவு 125ன் கீழ் . பராமரிப்பு தொகை 
வழங்க சொல்லி  நீதிமன்ற உத்தரவு வழங்கிய பின்பும் ஒரு 
வருடத்திற்கு மேலாக  கணவன் சேர்ந்து வாழ மறுக்கும் போது
·        15 வயதுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தால் அதை 15 
வயதிலிருந்து 18 வயதிற்குள் அந்த சிறுமி  அதை ஏற்று கொள்ள 
மறுத்தால், நீதிமுறை பிரிவு கோரி மனு செய்யலாம்.  
 
இந்த நீதி முறை உத்தரவு இறுதியானதா?
      இல்லை/ மனு தாரரின் வாக்குமூலத்தின் உண்மையைக் கண்டு, 
நீதிமன்றம் திருப்தியடைந்து, நீதிமுறை பிரிவு தீர்ப்பாணை வழங்காமல்
 இருப்பதற்கு சட்டக் காரணம் எதுவும் இல்லாமல் இருக்குமானால், 
கணவன் மனைவி பிரிந்து வாழ ஆணை வழங்கலாம். ஆனால் அதை 
எதிர்த்து அடுத்தவர்  மேற்கொண்டு போடும் மனுவில் கூறப்படும்
 காரணங்களில் நீதிமன்றம் திருப்தியடையுமானால், ஏற்கெனவே
 வழங்கிய நீதி முறை பிரிவு தீர்ப்பானையை நீதிமன்றம் நிராகரிக்கலாம்.. அல்லது இல்லாததாக்கி விடலாம். அல்லது திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
 
      அதே போல, நீதித்துறை பிரிவினைக்கான ஆணை
 நிறைவேற்றப்பட்ட பிறகு, எந்த நேரத்திலும் கூட்டு-வாழ்வை புதுப்பிக்க
 கட்சிகள் ஒப்புக்கொண்டால், நீதிமன்றத்தில் மனு செய்து அந்த பிரிவு 
ஆணையை ரத்து செய்யலாம்
 
      பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றப் பிரிவினை 
வழங்குவதற்கான ஒரே நோக்கம் , அவர்களது உறவைப் பற்றி சிந்தித்து 
விவாகரத்துக்கு முன் மற்றொரு வாய்ப்பை வழங்குவதாகும். எனவே
 நீதிமுறை  பிரிவு என்பது நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படும்  சட்டப்பூர்வ முறிவு. இதுவே 
பின்னர் அவர்கள் மீண்டும் ஒன்று  இணைவதாக   மாறலாம். 
 
      எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் , நீதி 
முறை பிரிவு என்பது குறிப்பிட்ட காலத்திற்கு திருமண  
கடமைகளிலிருந்து விடுபடுவதைக் குறிக்கிறது. எனவே தம்பதியாக 
இருக்கும் போது., தாம்பத்திய உறவுக்கு மறுப்பது, சேர்ந்து வாழ மறுப்பது
 போன்றவை விவாகரத்திற்கான காரணமாக அமையும். அதை தவிர்க்க 
நினைப்பவர்கள் இந்த வழிமுறையை கையாளலாம். 
 
ஏன் விவாகரத்தை  விட நீதிமுறை பிரிவு சிறந்தது?
·          கருத்து வேறுபாடு கொண்ட தம்பதியினர் தங்கள் உறவை 
மறு பரிசீலனை செய்து தக்க வைத்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் 
அளிக்கிறது. 
·        நீதிமுறை பிரிவின் போது, கணவன் மனைவு உறவு நீடித்து 
இருப்பதால், இருவரின் சொத்து குறித்தோ அல்லது பராமரிப்பு 
குறித்தோ எந்த வித திட்டமிடலும் தேவையில்லை  ஏனெனில் 
இருவரும் ஒருவருக்கொருவர் சட்டபூர்வ வாரிசாக தொடர்ந்து  
 இருப்பதால் 
·        அதே போல குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்ற
 கேள்விக்கும் இடமில்லை.  ஏனென்றால் இருவருக்கு சாம் 
உரிமை உள்ளது.
 
அதனால் தான் அறிவான தம்பதியியர் தங்களுக்குள் பிணக்கு ஏற்படும் 
போது, நீதிமுறை பிரிவு ஜுடிசியல் SEPERATION மட்டுமே நாடுகிறார்கள். 
 
நமக்குத் தெரிந்த அறிவான தம்பதியினர் இருக்கிறார்களா??
 



 



திங்கள், 20 நவம்பர், 2023

மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு பெறுவது எப்படி? ....பகுதி 2

 


https://images.app.goo.gl/KFazUK6YDNpi4b567

போன பகுதியில் யார் யாரெல்லாம் நஷ்ட ஈடு பெற தகுதியுடையவர்கள் என்று படியலிட்டிருந்தோம் அல்லவா?

பெரும்பாலும் விபத்தினால்  காயம் பட்ட  அல்லது இறந்த நபருக்கான இழப்பீடு கோருவது அந்த காப்பீடு பாலிசியின் ஷரத்துகளுக்குள்ள் வராது என்று வாதிடுவது  காப்பீடு நிறுவனங்களின் பொது வாதமாக இருக்கும்.

அது போன்ற ஒரு வழக்கில் தான் இன்று  கேரளா உயர் நீதிமன்றம ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

அப்துல் ரசாக் ஒரு டிப்பர் லாரி தொழிலாளி. அவர் லாரியில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு இருக்கும்போது , ஒரு தென்னை மரம் அவர் மீது சாய்ந்து, விபத்து ஏற்பட்டதால், அவருக்கு நல்ல காயம். அவரும் நஷ்ட ஈடு கேட்டு, தொழிலாளர்  இழப்பீடு சட்டம், 1923 ன் கீழ் மனு செய்கிறார். (வழக்கம் போல,)   சரக்குகளை ஏற்றி, இறக்கும் தொழிலாளர்களை பாலிசி ‘கவர்’ செய்யாது என்று வாதிட்டது.

ஆனால் அந்த வழக்கை விசாரித்த தொழிலாளர் இழப்பீட்டு கமிஷனர் , அந்த வாதத்தை ஏற்காமல், அதிகம் என்று ஒள்ள முடியாது...ரூ.1,04,000/-ஐ இழப்பீடாக நிர்ணயம் செய்து, அதற்கு 12% வட்டியும், அவர் தாக்கல் செய்த மருத்துவ சிகிச்சை ஆவணங்களை கொண்டு அந்த செலவுகளையும் சேர்த்து கொடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம்  மேல்முறையீடு செய்கிறது. ஆவணங்களை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், மோட்டார் வாகன சட்டப்பிரிவு 147(1) provison(1) © சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலாளர்களையும் குறிக்கிறது என்பதையும் காப்பீடு செய்யப்பட்ட வாகனம் சரக்குகளை ஏற்றிசெல்லும் வாகனம், எனில், அதில் பயணம் செய்யும் தொழிலாளர்களையும் அந்த காப்பீடு அடக்கும் என்று இருப்பதை  சுட்டிக்காட்டியது.

இதில் காப்பீடு நிறுவனம் எடுத்து வைத்த இன்னொரு வாதம் என்னவெனில், விபத்திற்குள்ளான வாகனம், வெறுமனே நிறுத்தப்பட்டிருந்தது என்பதாலும், அதை இயக்கியதால் விபத்து  நேரவில்லை என்பதாலும் அவர்கள் பொறுப்பு ஏற்க்க தேவையில்லை என்றனர்.

வாகனம் நிறுத்தப்பட்டிருந்தாலும், அந்த விபத்துடன் வாகனம்  தொடர்பு கொண்டிருந்தால், இழப்பீடு கொடுக்க,  காப்பீடு நிறுவனம் மறுக்க முடியாது என்று ஏற்கெனவே இன்னொரு தீர்ப்பில் சொன்னதையும் சுட்டிக்காட்டி  மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் எதிர் அப்துல் ரசாக் )

அதே சமயம் இன்னொரு விவரத்தையும் மனதில் கொள்ள வேண்டும். நிறைய சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்வதை நாம் பார்க்கின்றோம்/. குறைவான பணம் கொடுத்தால் போதும் என்பதால் தொழிலாளர்கள் நிறைய பேர் அதில் பயணம் செய்வதை பார்க்கின்றோம்.. அந்த பயணம் ஆபத்தானது மட்டுமல்ல, அது காப்பீட்டிற்கு எதிரானது என்பதால் அது போன்ற சமயத்தில் விபத்து ஏதும் நேரும் போது, அவர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், இழப்பீடு கிடைக்காது.

தீர்ப்பாயத்தின் உத்தரவு இறுதியானதா என்றால் இல்லை. அதர் மேலாக உயர்நீதிமன்றத்தையும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் திருப்தியளிப்பதாக இல்லையென்றால், உச்சநீதிமன்றம் செல்லலாம்.

 

7.  தீர்ப்\பாயத்தின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்ய வழிமுறை என்ன?

·         மோட்டார் விபத்து கோரிக்கைத் தீர்ப்பாயத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட இழப்பீட்டு தொகை போதுமானதல்ல என்று கோரிக்கையாளர் கருதினால், அவர் தீர்ப்பு தேதியிலிருந்து 9௦ நாட்களுக்குள்,  மேல் முறையீடு செய்ய வேண்டும்.  இந்த கால வரம்பிற்குள்,  தீர்ப்பு நகல் வழங்க தீர்ப்பாயம் எடுத்து கொள்ளும் காலம் அடங்காது. கால வரம்பு தாண்டி மேல் முறையீடு செய்தால் தாமதத்தை மாணிக்க தகுந்த காரணத்தை காட்ட வேண்டும்.

‘தகுந்த, போதுமான காரணம்” என்பது வழக்கிற்கு வழக்கு மாறுபடும். அதனால் போதுமான காரணத்தை,ஆதாரத்தை காட்டிவிட்டோம், என்பதாலேயே கால தாமதத்தை மன்னிக்கவேண்டும் என்று உரிமையாக கோர முடியாது.அது நீதிமன்றத்தின் discretionary power.

 

·         இழப்பீடு தொகை கொடுக்க வேண்டிய நபர், மேல்முறையீடு செய்ய வேண்டுமானால், ரூ.2௦,௦௦௦/- அல்லது தீர்மானிக்கப்பட்ட இழப்பீட்டு தொகையில் 5௦ சதவீதம் இவைகளில் எது குறைவோ அந்த தொகையை வைப்பீடு செய்தால் தான்,  மேல்முறையீடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

சட்டத்தில் முக்கியமாக சொல்லப்பட்டுள்ள இந்த நடைமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

 

·          தாவா சம்பந்தமான தொகை ரூ.1௦,௦௦௦/- க்கு குறைவாக இருந்தால் மேல்முறையீடு தாக்கல் செய்ய முடியாது.

காப்பீடு நிறுவனத்திற்கு பொறுப்பு இல்லையென்றால் , அதாவது விபத்து  தேதியில் காப்பீடு நிலுவையில் இல்லையென்றால், அவர்களை இழப்பீடு தொகையை கட்டிவிட்டு, பின்னர் வாகன உரிமையாளரிடம் வசூலித்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது.

 

8. ஓட்டுனர் பால் தவறு இல்லாவிட்டாலும், இழப்பீடு கொடுக்கும் பொறுப்பு (NO FAULT LIABILITY)  என்றால் என்ன?

ஒரு விபத்து நடக்கும் போது, ஓட்டுனர் பால் தவறு இருந்தாலும், இல்லாவிட்டாலும், மோட்டார் வாகன சட்டப்பிவு 140 ன் கீழ் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும். அந்த விபத்தில் மரணம் நேர்ந்தால், ரூ.5௦,௦௦௦/-ம்,  நிரந்தர ஊனம் நேர்ந்தால் ரூபாய் 25,௦௦௦/- மும் Fixed தொகையாக, கொடுக்கப்பட வேண்டும்.

மேலே சொன்ன தொகையை பெற கோரிக்கை எழுப்புபவர்.  வாகன ஓட்டுனரின் தவறு அல்லது குற்றம் அல்லது கவனக்குறைவை மெயபிக்கவேண்டிய வேண்டியதில்லை. அதாவது ஒட்டுனர்பால் தவறு இல்லாமல்  அந்த விபத்து நேர்ந்திருந்தாலும் இந்த நஷ்ட ஈட்டு தொகை கொடுக்கப்படவேண்டும்

நிரந்தர ஊனம் என்பது என்ன:?

      1. காது அல்லது கண் அல்லது உடலின் ஒரு பகுதி அல்லது இணைப்புகளில் நிரந்தர சேதம் ஏற்பட்டிருக்க வேண்டும்/

       2. தலையில் அல்லது முகத்தில் நிரந்தரஉருமாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

 

9.   சட்டப்பிரிவு 140 ன் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்ளில் தீர்ப்பாயங்களின் கடமைகள்:

·         எவ்வளவு விரைந்து முடிக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டும்.

·         இழப்பீடு கோருகின்ற இழப்பீடு கோருகின்ற பிரதான மனு செய்யப்பட்ட பின், அது நிலுவையில் இருக்கும் போதே பிரிவு  140 ன் கீழ் மனு தாக்கல் செய்யபட்டால், இதைத் தான் தீர்ப்பாயம் முதலில் முடிக்க வேண்டும்.

·         இழப்பீடு கோரும் மனுவில் இறுதியாக வழங்குகின்ற இழப்பீடு தொகையில் இந்த பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை கழித்துக் கொள்ள வேண்டும்.

·         ஒரு வேளை பிரதான மனுவில் நிர்ணயம் செய்யப்பட்ட  இழப்பீட்டு தொகை, பிரிவு  140 ன் கீழ் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விட குறைவாகவோ அல்லது சமமாகவோ இருந்தால், அந்த தொகையை செலுத்த கடமைப்பட்டவர் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில், பிந்தைய தொகையானது முந்தைய தொகையில் அடங்கி விடுகிறது.

 

1௦.  மோதி மறையும் (HIT AND RUN) மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு பெறுவது எப்படி?

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் அடையாளத்தை நியாயமான முயற்சிகள் எடுத்தும் கண்டறியமுடியாத போது , அதை ‘மோதி மறையும் வாகன விபத்து (HIT AND RUN ACCIDENT ) என்பர்.

இத்தகைய விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, ,மத்திய அரசு ஒரு ஆதரவு நிதியை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து அத்தைய விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டால், ரூ.25,௦௦௦/-ம் கொடுங்காயம் ஏற்பட்டால் ரூ.12,5௦௦/-ம் இழப்பீடாக பெறலாம்.

 

தொடர்ந்து மோட்டார் வாகன இழேப்பீத் தொகையை தீர்ப்பாயம் எப்படி நிர்ணயம் செய்கிறது, நாம் மனு செய்வதற்கு தேவையானவை என்னென்ன என்பது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


(தொடரும்)

 

இந்த பதிவை எங்கள் யுடியுப் சானலிலும் பார்க்கலாம்.


வியாழன், 16 நவம்பர், 2023

மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு பெறுவது எப்படி? ....பகுதி 1


1.      1.   யார் யார் மோட்டார் வாகன விபத்து சம்பந்தமான இழப்பீட்டை கோர முடியும்?

1)      விபத்தில் காயமடைந்தவர்

2)      சேதமடைந்த சொத்தின் உரிமையாளர்

3) விபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால் ,இறந்தவரின் சட்ட முறைப் பிரதிநிதிகள் (வாரிசுகள்)

 இழப்பீடு கோரும் பொருட்டு  அவர்கள் அனைவரும் தங்களுக்குள் ஒன்று சேரா விட்டால், அவர்களில் ஒருவர் மட்டுமே, அனைவர் சார்பில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யலாம். அவருடன் சேர்ந்து மனு தாக்கல் செய்யாத சட்ட முறைப் பிரதிநிதிகள் மனுவில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட வேண்டும்.

4) காயம்பட்டவர் அல்லது இறந்தவரின் சட்ட முறைப் பிரதிநிதிகளால் உரி முறையில் அதிகாரம் அளிக்க்கப்பட்ட ஒரு முகவர்


2.  எந்த நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்படவேண்டும்?

1)                         1)  விபத்து நடந்த இடத்தை தன் அதிகார எல்லைக்குள் கொண்டுள்ள மோட்டார் விபத்து கோரிக்கை தீர்ப்பாயம்.

    இதை உச்ச நீதிமன்றமும் சமீபத்திய ஒரு வழக்கில் உறுதி செய்துள்ளது.

2)         2)    இழப்பீடு கோருபவர் தொழில் நடத்துகின்ற அல்லது வசிக்கின்ற இடத்தை தன் அதிகார எல்லைக்குள் கொண்டுள்ள மோட்டார் விபத்து கோரிக்கை தீர்ப்பாயம்

                       3) எதிர் மனுதாரர் வசிக்கின்ற அல்லது  தொழில் நடத்துகின்ற இடத்தை தன் அதிகார எல்லைக்குள் கொண்டுள்ள மோட்டார் விபத்து கோரிக்கை தீர்ப்பாயம்

    இதற்கென்று உள்ள சிறப்பு தீர்ப்பாயம் அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட வில்லை எனில், அங்குள்ள சார்பு நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்யலாம்.

 

    3.   மோட்டார் விபத்து கோரிக்கைத் தீர்பாயத்துக்கான அதிகாரங்கள் என்ன?

மோட்டார் வாகன விபத்து சம்பந்தமான இழப்பீடு கோரிக்கையை பரிசீலிப்பதற்கான அதிகாரம்,  மோட்டார் விபத்து கோரிக்கைத் தீர்பாயத்துக்குத் தான் உள்ளது. 

அந்த தீர்ப்பாயம், உரிமையியல் நீதிமன்றத்தின் அதே அதிகாரத்தை கொண்டது. அதனால் எந்த  உரிமையியல் நீதிமன்றமும்,  மோட்டார் விபத்து கோரிக்கைத் தீர்பாயத்தில் நிலுவையிலுள்ள நடவடிக்கைகளை ஒரு ஏவுகட்டளை அதாவது ‘ஸ்டே; உத்தரவு பிரப்பிப்பதன் மூலமாகவோ அல்லது இதர வழியிலோ நிறுத்தி வைக்க அதிகாரம் இல்லை.  

மனுவின் கோரிக்கையின்  பேரில் விசாரணை நடத்தி,,இரு தரப்பினருக்கும் தங்கள் தரப்பை முன்னிலைப்படுத்த தகுந்த  சந்தர்ப்பம் அளித்து,  நியாயம் என கருதும் இழப்பீடு தொகையை தீர்ப்பாயம் நிர்ணயம் செய்யும்.

இந்த விசாரணை 'சம்மரி ப்ரோசீஜர்' எனப்படும் சுருக்கு நடவடிகயாக இருக்கும். அதே சமயம், விபத்து ஏற்படுதியர்தர்கான காரணம் தான் தன என்று விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளரோ அல்லது ஓட்டுநரோ ஒத்துக்கொண்டால்,  நஷ்ட ஈட்டு தொகையை மனுதாரருக்கு கொடுத்து விட முடியாது. 

பிரிவு 166 ன் கீழ் தாக்கல் செய்யும் மனுவில் விபத்தை ஏற்பட்டதற்கான காரணம் வாகன ஓட்டுனர் என்பதையும் அந்த அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவினால் தான் தனக்கு சேதம் ஏற்பட்டது என்பதையும் அதில் இறந்தவரின் வாரிசு என்றால், மரணம் அந்த விபத்தின் காரணமாக  தான் ஏற்பட்டது என்பதையும்  மனுதாரர் தான் நிரூபிக்க வேண்டும். இதை இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் உறுதி செய்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட அந்த தொகையை யாரால், யாருக்கு கொடுக்கப்படவேண்டும் என்பதையும் தீர்ப்பாயமே நிர்ணயம் செய்யும்.  இழப்பீட்டு தொகையின்  பேரில் கோரிக்கைமனு  தாக்கல் செய்த தேதியிலிருந்தே குறிப்பிட்ட வீதத்தில் வட்டி வழங்கியும் உத்தரவிடலாம்’.

 

    4.  இழப்பீடு பெற கோரிக்கை மனு தாக்கல் செய்ய கால வரம்பு ஏதும் உள்ளதா?

     மோட்டார் வாகனங்கள் சட்டம், 1988  ல் கால வரம்பு பற்றி பிரிவு 166(3) ல் குரிபிடப்படிருந்தது.   மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம், 1994ல் அந்த பிரிவு நீக்கப்பட்டது. தற்போது அதற்கான கால வரையறை ஏப்ரல்1,2022 முதல் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.  அதன்படி விபத்து  நடந்த ஆறு மாதத்திற்குள் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அதே சமயம், விபத்து நடந்த இடத்தை அதிகார எல்லைக்குள் கொண்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி விபத்து நடந்தவுடன், அது சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கையோ அல்லது அறிக்கையோ தயார் செய்ததும், அதை 3௦ நாட்களுக்குள் அதிகார வரம்பு கொண்ட தீர்பாயத்திற்கு பிரிவு 158(6) ன் படி அனுப்ப வேண்டும்.

      அவ்வாறு அறிக்கை ஆறு மாதத்திற்குள் பெறப்பட்டால்,,  அதையே விபத்து இழப்பீடுக்கான கோரிக்கை மனுவாக கருத முயும் என்பதால்,   எந்த கால வரையறையும் இல்லை என்று சமீபத்தில் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.

அதே போன்று இன்னொரு வழக்கில், ஆறு மாத கால வரையறைக்குள்  தாக்கல் செய்யப்படவில்லை என்று சென்னை மோட்டார் விபத்து கோரிக்கை தீர்ப்பாயத்தால் நிராகரிக்கப்பட்ட மனுவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டில், நீதியரசர் லக்ஷ்மி நாராயணன், தீர்ப்பாயத்தால் பெறப்பட்ட முதல் தகவல் அறிக்கையையே கோரிக்கை மனுவாக கருதலாம், என்பதால், பின்னர் விபத்தால் பாதிக்கப்பட்டவர் தாக்கல் செய்யும் கோரிக்கை மனுவை, உடனே வழக்கை கோப்பிற்கு எடுக்குமாறு நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட நினைவூட்டலாக தான் கொள்ள முடியும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். ஏப்ரல் 1, 2௦22க்கு பிறகு , விபத்து குறித்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலேயே மனு தாக்கல் செய்வதற்கான கால வரையறை குறித்த பயம் ஏதுமின்றி நஷ்டஈடு கோருபவர் இருக்கலாம்” என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

    5.  விபத்து சம்பந்தமான அறிக்கையை தீர்ப்பாயம் தானே மனுவாக கோப்பில் எடுக்க முடியுமா?

     காவல் துறையால் அனுப்பட்ட முதல் தகவல் அறிக்கையை பெற்ற தீர்ப்பாயம், அதையே இந்த சட்டப்படி இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவாக கருதி கோப்பில் எடுத்து கொள்ள வேண்டும்.

 

     6.   யார் இழப்பீட்டு தொகையை கொடுக்க கடமைப்பட்டவர்கள்?

    1)  வாகன உரிமையாளர்

     2) வாகன ஓட்டுனர்

     3)  மோட்டார் வாகனம் காப்பீடு செய்யப்பட்ட காப்பீட்டு  நிறுவனம்

   இவர்கள் மூவரும் கூட்டாகவும், தனித்தனியாகவும் இழப்பீடு கொடுக்க கடமைப்பட்டவர்கள்.

பொதுவாக இழப்பீடுத்  தொகையை , விபத்து நடந்த சமயம், அந்த வாகனத்திற்கு காப்பீடு இருப்பின், காப்பீட்டு நிறுவனம் உரியவருக்கு கொடுத்துவிடும். அந்த காப்பீடு நிபந்தனைகளுக்கு எதிராக  வாகன உரிமையாளர் செயல்பட்டிருந்தால், அவரிடமிருந்து அதை வசூல் செய்து கொள்ளும். உதாரணத்திற்கு, ஓட்டுனர் உரிமம் இல்லாத நபரையோ, அல்லது மைனர் பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதித்தோ , அல்லது சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி கொண்டோ அல்லது அனுமதிக்கப்பட்ட எடைக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிகொண்டோ ..இப்படி இன்சூரன்ஸ் பாலிசி நிபந்தனைக்கு எதிராக செயல்பட்டிருந்தால் அந்த வாகன உரிமையாளரிடமிருந்து  காப்பீடு நிறுவனம் தான் செலுத்திய தொகையை  வசூலித்து கொள்ளலாம்.

அதே சமயம், அவர்கள்  வாகன உரிமையாளர் நிபந்தனைக்கு எதிராக நடந்துக்கொண்டார் என்பதற்காக நஷ்ட ஈட்டை தாங்கள் செலுத்த முடியாது என்று கோர முடியாது. அவர்கள் கூற்று நியாயமாக இருக்கவேண்டும். மேலும் அதை நிரூபிக்க வேண்டும். உதாரணமாக உச்ச நீதிமன்றத்தின் முன் வந்த வழக்கு ஒன்றில் அந்த காப்பீடு நிறுவனம், வாகன உரிமையாளர் ஓட்டுனர் உரிமத்தை சரியாக பரிசீலிக்கவில்லை என்று கூறி, தாங்கள் நஷ்ட ஈட்டை செலுத்த முடியாது என்றது. வெறுமனே அந்த வாதத்தை முன் வைக்காமல், அதை நிரூபித்தால் மட்டுமே, காப்பீடு நிறுவனம் வாகனத்தின் உரிமையாளரிடமிருந்து அந்த நஷ்ட ஈட்டு தொகையை வசூல் செய்ய முடியும் என்றது.

 

பொதுவாக காப்பீடு நிறுவனகங்ளே நேரிடையாக விபத்தினால் பாதிக்கப்பட்ட நபர் மனு செய்யும் போது அது குறித்து விசாரித்து இழப்பீடு தொகையை வழங்குகின்றன.

ஏனெனில் ரூபாய் 10,000/-க்கு குறைவான  நஷ்டஈட்டு தொகைக்கு நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்ய முடியாது.

நீதிமன்றத்தில் தொடரப்படும் மனுவுக்கான நஷ்ட ஈட்டு தொகையை விரைவாக பெற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெறும் சமயத்தில் மனு செய்து, இரு தரப்பு ஒத்திசைந்து முடிவு செய்யும் தொகையை நஷ்ட ஈடாக பெறலாம்.

 

 (தொடரும்)

 

 

 

 

  . 

 

   

வியாழன், 19 அக்டோபர், 2023

தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு பொது தகவல் தொடர்பு அதிகாரிகள் :

 PUBLIC INFORMATION OFFICER UNDER RIGHT TO INFORMATION ACT 

S.NO     AUTHORITY/COMMITTEE            APPELLATE

                     PUBLIC INFORMATION          AUTHORITY

                                OFFICER  

 1         Tamil Nadu State Legal Services     Member Secretary, 

             Authority Senior Most                     Tamil Nadu State

            Administrative Assistant                   Legal Services                                                                                           Authority 

2       High Court Legal Services             Secretary, High Court

        Committee, Chennai Senior          Legal Services Committee,

         Most Administrative Assistant             Chennai 

3        High Court Legal Services             Officer –In- Charge, 

         Committee, Madurai Senior    High Court Legal Services

          Administrative Assistant          Committee, Madurai 4             4     District Legal Services              Chairmen of the respective            Authorities Full Time                District Legal Services                   Secretaries/     Secretaries                   Authority                    5       Taluk Legal Services                   Chairmen of District                       Committees   Chairmen                               Legal Services                                                                           Authority

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...