சனி, 25 டிசம்பர், 2021

வழக்கறிஞர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன?

 ஆன்லைன் நீதிமன்ற விசாரணையின் போது பெண்ணுடன் நெருங்கி இருந்த நிலையில் இருந்ததாக தெரிந்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது.பற்றிய செய்தியை படித்திருப்பீர்கள். கூடுதலாக ஒழுக்கக்கேடான முறையில் நடந்தற்காக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கும் உத்தரவு இடப்பட்டது தெரிந்திருக்கலாம்.

இந்த ஆன் லைன் நீதிமன்ற விசாரணையின் போது , வழக்கறிஞர்கள் எப்படி எப்படியெல்லாம் இருந்து வழக்கு நடத்துகிறார்கள் தெரியுமா?

கார், ஸ்கூட்டரில் போகும் போது

வீட்டின் படுக்கை அறையில் .

மலையேற்றத்தின் போது

பீச்சில் அமர்ந்துள்ளபோது

ஜுஹி சாவ்லா பாடலை பாடிக்கொண்டே

ஏறக்குறைய நிர்வாண நிலையில்......

சமீபத்தில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் ஆஜரான ஒரு வழக்கறிஞர் வெறும் பனியனுடன் இருந்துள்ளார்.

இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும்போது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களின் அலுவலர்கள் தாங்கள் என்பதை மறந்து விட்டார்களோ என்று தான் நினைக்க தோன்றுகிறது....வழக்கறிஞர்கள் தங்கள் உடை விஷயத்தில் காட்டும் ஒழுங்கீனம் இப்போது தான் நடக்கிறாதா என்றால், எதிர்ப் பதமாகத் தான் பதிலளிக்க வேண்டும்.

திறந்த நீதிமன்றங்களில் வாதாடும் போது கூட சில வழக்கறிஞர்கள் வெள்ளை காலர் மட்டும் வைத்து தைத்த கலர் சட்டையை போட்டு மேலே கருப்பு கோட்டை மாட்டிக்கொண்டும், காலில் செருப்பு அணிந்தும், கோட் அனிந்தாலும் வழக்கறிஞர் கவுன் அணியாமலும், அல்லது கழுத்தில் ரோப்ஸ் என்பதை கழுத்து பட்டை இல்லாமல் அணிவதையும் பார்த்திருக்கிறேன். இன்னும் சில பெண் வழக்கறிஞர்கள் சுத்த மோசம்..... வெளியில் தான் கோ ட்டும் கவுனும் மாட் டுகிறோமே என்று வெறும் நைட்டியை உள்ளே அணிந்துக்கொண்டு நீதிமன்றத்திற்குள் நுழையும் பெண் வழக்கறிஞரையும் பார்த்துள்ளேன். இவையெல்லாம் எதை காட்டுகின்றன?

ஆடைக்கு என்ன முக்கியத்துவம் மற்றும் புனிதம் இருக்கிறது? என்ற கேள்வி எழலாம்.

"ஆள் பாதி ஆடை பாதி" என்பது தானே சொல் வழக்கு?!!

ஆடை விஷயத்தில் உள்ள நம் கவனம் இன்று நேற்றல்ல ....பண்டைய எகிப்தியர்களின் ஆடைகளிலிருந்து ஹென்றி VIII மன்னரின் கவசம் வரையம் நம் படைப்பு திறனே காட்டப்பட்டுள்ளது.

இப்படியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட இன சீருடை என்று நியமிக்கப்பட்ட காரணம் என்ன?

சீருடை தான் அந்த குழுவை கண்ணியமாகவும், மிக முக்கியமாக ஆள்மாறானதாகவும் ஆக்குவது. அது தான் உயர்ந்த குணாதிசயமுள்ள மனிதர்கள் கொண்டது அந்த குழு என்று தனித்து காட்டுவதாகவும், இருக்கும்.

என்ன வெயில் காலம் என்றாலும், சீருடையில் இருப்பதன் சிறப்பே தனி. எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்திருப்பதை பார்க்க முடியுமா? அப்படி அவர் இருந்தால், அவருக்கு தானாகவே கொடுக்கப்படும் மரியாதை தான் கிடைத்து விடுமா?

டாக்டர் தனக்கு வசதியாக இருக்கிறது என்று பெ ர்முடாஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் அறுவை சிகிச்சை செய்தால் நோயாளிக்கு எப்படி இருக்கும்?

இன்னொன்றும்....கூட...

சீருடை ஒரு சமநிலையாக செயல்படுகிறது. சீருடையில் இருக்கும் போது , பணக்காரர், ஏழை, தொழிலில், அல்லது பணியில் வெற்றிகரமானவர அல்லது ஆரம்பநிலையில் உள்ளவர் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கும்.நீதிமன்றத்தில் ஒவ்வொரு வழக்கறிஞரும் ஒரே மாதிரியாக தான் தெரிவார்கள்.

வழக்கறிஞர் சீருடையை பார்த்தாலே,யே , கருப்பு மற்றும் வெள்ளை ஆடைக் குறியீடு ஏன் ? வெள்ளை கழுத்து பட்டையின் முக்கியத்துவம் என்ன என்ற கேள்வி நிறைய பேருக்கு உள்ளது .

வரலாற்று ரீதியாக, கருப்பு என்பது அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தின் நிறமாக கருதப்படுகிறது. இந்த நிறம் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பாரம்பரியமாக பார்த்தோமேயானால், நிறங்கள் எப்போதும் எதையாவது குறிப்பதை கவனிக்கலாம். மஞ்சள் என்றால் மங்களம், வெண்மை என்றால் தூய்மை, இப்படி......

ரோமில் உள்ள பாதிரியார்கள் கடவுளுக்கு அடிபணிவதைக் காட்ட கருப்பு ஆடை அணிவதைப் போல, வழக்கறிஞர்கள் நீதிக்கு அடிபணிவதைக் காட்ட கருப்பு ஆடையை அணிவார்கள். பொய் சொல்வதை பிழைப்பாக கொண்டாலும், அது மற்றவரின் உயிர் மற்றும் உடமையை காக்க தானே .... சனியின் நிறமும் கருப்பு தான் அவருக்கு பிடித்த உடையும் கருப்பு தான். அதனாலோ என்னவோ அவர் தான் சட்டம் என்னும் காரகத்துவத்துக்கு உரியவர்.. கறாரான நீதிமான்!!

வெள்ளை கழுத்து பட்டையை குற்றமற்ற தன்மையாக விவிலிய வரலாறு குறிக்கிறது.

வக்கீல் பாண்ட் டை உருவாக்க இரண்டு வெள்ளைத் துணிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன இல்லையா? இது எப்படி வந்தது என்று வரலாற்றை பார்க்கும்போது, , விவிலிய வரலாற்றின்படி, மோசேயால் சினாய் மலையில் எரியும் புதரிலிருந்து இதை பெற்றதாக நம்பப்படுகிறது., ஒரே மாதிரியான குறியீட்டு சட்டத்தின் முதல் உதாரணம் என்று பத்து கட்டளைகளை தான் சொல்வார்கள்.. அந்த பத்துக் கட்டளைகளை எழுதுவதற்காக அவரா ல பயன்படுத்தப்பட்டவை இவை, எனப்படுகிறது. .இப்படி அந்த வெள்ளை நிற வக்கீல் பாண்டுகள், கடவுள் அளித்த சட்டம் மற்றும் மனிதர்களின் சட்டங்களை நிலைநிறுத்துவதைக் குறிக்கின்றன.

அப்படிப்பட்ட சிறப்பான ஒரு வழக்கறிஞர்களின் சீருடையில் வழக்கறிஞர் இல்லாதது) போன்ற நிகழ்வுகள் மற்ற நாடுகளில் நடந்திருக்கிறதா, என்று பார்க்கும்போது தான் நம் உச்ச நீதிமன்ற சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹத்தா அவர்கள் எழுதிய கட்டுரையையை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன்படியே இது போன்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என்று வரலாற்றின் பக்கங்களை ஆராயும்போது தான், இந்த , பரிந்துரைக்கப்பட்ட சீருடையைத் தவிர வேறு ஆடைகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களின் சட்டபூர்வமான தன்மை அல்லது உரிமையை நீதித்துறை ரீதியாக பரிசீலிக்க கிடைக்கும் சந்தர்ப்பம் இந்தியாவில் வெகு அரிதாக தான் கிடைத்துள்ளது.

ஆனால் வெளிநாடு என்னும் போது, எதைப் பற்றியும் கவலைப்படாத வாழ்க்கை முறையை கொண்ட அமெரிகாவில் உள்ள நீதிமன்றங்களில் இத்தகைய கோரமான நிகழ்வுகள் அதிகம் காணப்படுவது தெரிகிறது,

அமெரிக்கர்கள் தான் அதிக கற்பனைத்திறன் கொண்டவர்கள் ஆயிற்றே?

அல்லது அமெரிக்க நீதிமன்றங்கள் அத்தகைய உரிமை கோரல் குறித்து விசாரிப்பதற்கு நேரமும் விருப்பமும் காரணமாக இருக்கலாம்.

அந்த வகையில் இரண்டாவது கட்ட மேல்முறையீடு வரை அட்டர்னி டாட் சி. பேங்க்கின் இந்த வழக்கு நீண்ட தால், இது முக்கித்துவம் வாய்ந்ததாக செல்லலாம்.குயின்ஸில் உள்ள சிவில் கோர்ட்டில் நீல நிற ஜீன்ஸ் மற்றும் பட்டன்-டவுன் ஷர்ட் அணிந்து "ஆபரேஷன் டெசர்ட் ஸ்டாம்" என்று எழுதப்பட்ட பேஸ்பால் தொப்பியுடன் இவர் ஒரு முறை ஆஜரானார். அவரது பொருத்தமற்ற உடை யை சரி செய்யுமாறு நீதிபதி அன்னே காட்ஸ் அவரை அறிவுறுத்தினார். ஆனாலும், தன கட்சிக்காக தானே ஆஜராவதால், தன உடை குறித்த நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் , அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தனக்குள்ள உரிமையை பாதிப்பதாக கூறி மாவட்ட நீதிமன்றத்தை அணுகினார். அப்போது அவர் வைத்த வாதம்,

" "தன்னுடைய உடை என்பது தன கருத்தை வெளிப்படுத்தும் குறியீடு என்றும் நீதிபதியின் வேலையே, தன முன் உள்ள வழக்கை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவது மட்டுமே.. வழக்கு தொடுத்தவர் என்ன உடை அணிந்துள்ளார் என்பது தேவையில்லாதது"

ஆனால் இதை மாவட்ட நீதிபதி ஏற்கவில்லை. 2009ல் அவர் வழங்கிய தீர்ப்பில், "சொந்த கருத்துக்களை வெளிப்படுத்த நீதிமன்றம் ஒரு பொது இடம் அல்ல" என்றும் ..."விதிகள் நியாயமானதாகவும் பார்வைக்கு நடுநிலையாகவும் இருக்க வேண்டும்" என்றார்.

நீதிமன்றத்தில் ஆ டை அணிவது என்பது "நீதிமன்றத்தின் நாகரீகத்தைப் பராமரிப்பது மற்றும் நீதித்துறை செயல்முறைக்கான மரியாதை ஆகியவற்றுடன் நியாயமான முறையில் தொடர்புடையது" என்று மாவட்ட நீதிபதி கூறினார்.

இவரும் விடாமல் மேல்முறையீடு செய்ய, அங்கும் 2011ல் எதிரான தீர்ப்பே கிடைத்தது. நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவர் தனது பேஸ்பால் தொப்பியை அகற்ற வேண்டும் என்ற நீதிபதியின் அறிவுறுத்தல், நீதிமன்ற அறையில் ஒழுங்கையும் மாண்பையும் காக்கும் நீதிமன்றத்தின் நியாயமான நோக்கத்துடன் தொடர்புடையவை என்றும் . மாவட்ட நீதிமன்றம் சரியாக தான் நிராகரித்தது என்றும் கூறி .

"உடையைத் தேர்ந்தெடுப்பது பாதுகாக்கப்பட்ட உரிமை என்று வாதிட்டால், நீதிமன்றத்தில் பேசுவதற்கான கட்டுப்பாடு இருக்கும் வரை நியாயமான மற்றும் நடுநிலை.நிலைநிறுத்தப்படும்." என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர் .

இதே போன்ற இன்னொரு முக்கிய வழக்கு, கெல்லி vs ஜான்சன் [425 U.S. 238 (1976)] என்ற அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வந்தது. , இது காவல்துறையினர் வைத்துக் கொள்ளவேண்டிய முடி ஒழுங்கு பற்றியது.

ஒரு நபர் தனது தனிப்பட்ட தோற்றத்தில் அரசியலமைப்பு சட்ட ரீதியாக எந்த அளவிற்கு உரிமை கொண்டிருக்கிறார் என்பது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்ட முக்கியமான கேள்வி.. .நீதிமன்றம் காவலர்களுக்கான முடி ஒழுங்கை உறுதி செய்ததும் அல்லாமல், ஒரு போலீஸ் அதிகாரியின் வேலை நிலை மற்றும் போலீஸ் படையில் "ஒழுக்கம், மற்றும் சீரான தன்மை ஆகியவற்றின் தேவை" உள்ளதை வலியுறுத்தியது.

இதே போன்ற நிலையில் தான் ஒரு வழக்கறிஞரோ அல்லது நீதிபதியோ உள்ளனர். ஏனெனில் இரண்டிலும் குறைந்தபட்சம் ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை தேவை.

2003 ஆம் ஆண்டில் இதேபோன்ற ஒரு வழக்கு எழுந்தது, இது உடையைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமையாக எழுந்தது, நியூயார்க்கின் சல்லிவன் கவுண்டியில் டிரைவராகப் பணிபுரியும் ஜலேவ்ஸ்கா என்றஒரு பெண்மணி, அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் சீருடையின் ஒரு பகுதியாக பேன்ட் அணிவதைக் கட்டாயப்படுத்திய ஆடைக் குறியீட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். . இந்த விவகாரம் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், 2வது சர்க்யூட் வரை சென்றது.

10.01.2003 தேதியிட்ட ஜலேவ்ஸ்கா V. கவுண்டி ஆஃப் சல்லிவன், நியூயார்க்கின் வ ழக்கில், "பாவாடை அணிவது ஆழ்ந்த கலாச்சார மதிப்பின் வெளிப்பாடாகும்" என்ற மனுதாரரின் வாதத்தை நிராகரித்தது.

"மேல்முறையீட்டாளரின் முதல் வாதம், பாவாடை அணிவது என்பது அவரது "ஆழமான கலாச்சார மதிப்பின் வெளிப்பாடு" என்ற கூற்றில் உ ள்ளது. தனது கலாச்சார விஷயங்களை வெளிப்படுத்தும் அவரின் விருப்பம் மிகவும் வலுவாக உள்ளது, அவர் ஒரு போதும் பேன்ட் அணிந்ததில்லை என்கிறார்.

பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரை - ஆடை அணிபவரைப் பற்றிய எண்ணங்கள் மற்றும் தகவல்கள் அவர் அணியும் ஆடை மற்றும் தனிப்பட்ட தோற்றம் பொறுத்தது. கன்னியாஸ்திரி முதல் நீதிபதியின் அங்கிகள் வரை, ஆடைகள் பெரும்பாலும் ஆடை அணிந்த நபரைப் பற்றி ஏதாவது சொல்லக்கூடும். இருப்பினும், ஏதோ ஒரு வகையில் தன எண்ணத்தை வெளிப்படுத்துவது என்பது மட்டுமே என்பது தானாகவே அதற்கு அரசியலமைப்புப் பாதுகாப்பை அளிக்காது." என்றார்கள்.

.பரிந்துரைக்கப்பட்ட சீருடையைத் தவிர வேறு ஆடைகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களின் சட்டபூர்வமான தன்மை அல்லது உரிமையை நீதித்துறை ரீதியாக பரிசீலிக்கும் சந்தர்ப்பம் எப்போதாவது தா கிடைத்துள்ளது.

1997 ஆம் ஆண்டில்சேத் பெர்னர் என்ற ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில், தனது உடையில் அரசியல் பொத்தான்களை அணிவதற்கு பாதுகாக்கப்பட்ட முழுமையான உரிமை இருப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்த போது எழுந்தது. பெர்னர் v. டெலாஹன்டி என்ற இந்த வழக்கில் . யுனைடெட் ஸ்டேட்ஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர் கோரிக்கையை நிராகரித்தது:

"அனைத்து அமெரிக்கர்களைப் போலவே ஒரு வழக்கறிஞர் அரசியல் உணர்வுகளை வைத்திருக்க சுதந்திரமானவர். இருப்பினும், நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தங்கள் சட்டைகளில் (அல்லது மடிப்பில், அத்தகையவற்றை அணிவதற்கு முழுமையான உரிமை இல்லை" என்றது..பெர்னர் வி. டெலஹந்தி 1997

நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தது டேவிட் பர்ன்ஸ் என்ற மற்றொரு புளோரிடா வழக்கறிஞரிடமிருந்து வந்தது. அவர் ஒரு வழக்கின் நீதிமன்ற விசாரணையில், அனைவரையும் காத்திருக்க வைத்து சரியான நேரத்தில் நீதிமன்றத்திற்கு வராமல், . திடீரென கதவுகள் திறக்கப்பட்டு கோர்ட்டுக்குள் நுழைந்தார். வழக்கறிஞரின் உடையை அணியாமல், பைஜாமாக்களை அணிந்து ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டார். புளோரிடாவின் உச்ச நீதிமன்றம் இந்த நடத்தையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை,

"நீதிமன்றத்தில் ஸ்ட்ரெச்சரில் தோன்றுவதும், படுக்கையில் இருப்பதும், சரியில்லாத ஆடை அணிவதும் நீதி நிர்வாகத்திற்கு பாதகமான நடத்தையை உருவாக்குகிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தகுதியை எதிர்மறையாக பிரதிபலிக்கிறது." என்று கூறி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக 30 நாள் தடை விதித்தது.

இந்தியாவில், மாண்புமிகு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பிரயாக் தாஸ் எதிராக சிவில் நீதிபதி, புலந்த்ஷாஹர் (AIR 1974 அலஹாபாத் . 133) வழக்கில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் எழுந்தது. அவர் தனது மனுவில், நீதிமன்றங்களில் தான் வேஷ்டி சட்டையில் ஆஜராக அனுமதிக்க கோரினார்.!! நல்லவேளையாக, அது ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்ப ட்டது.

காலம் சென்ற மாண்புமிகு நீதியரசர் ஸ்ரீனிவாசன் அவர்கள், தன கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும் தவறவில்லை. அதேசமயம், சீ ருடையின் மாண்பையும் கைவிடவில்லை....

அவர் புகைப்படத்தை பதிவிட தேடியபோது இணையத்தில் இல்லை!! ஏன்?

நீதிமன்றமோ , வீடியோ கான்ஃபரன்ஸிலோ எதுவாக இருந்தாலும், வழக்கறிஞர் சீருடை முக்கியம் அல்லவா?

  • வழக்கறிஞரின் உடை கம்பீரத்தையும், தனித்துவத்தையும், சிறப்பையும், கொண்டது,
  • அதை அணிபவருக்கு ஒரு தனித்துவமான ஆளுமையை அளிக்கிறது.
  • ஒரு வக்கீலின் கோட், கவுன் மற்றும் கழுத்து பட்டை போன்றவை மதிப்பில்லாதவை..
  • அந்த உடையில் தான் உள்ளது தனித்துவமான ஒற்றுமை, தொழில் கண்ணியம் மற்றும் மகத்துவம்!!

அதை உணர்ந்தவருக்கே அதன் மகத்துவம் புரியும்.


எங்கள் நிலத்துக்கு பக்கத்தில் இருக்கும் நிலம் விற்பனைக்கு வருகிறது. நான் வெளிநாட்டில், விற்பவரும் வெளிநாடு போகவேண்டும்.என் தந்தையின் பெயரில் பதிவு செய்யப் போகிறோம். பதிவு செய்யும் போது இது என் சம்பாத்தியத்தில் வாங்கியது என பதிவு செய்ய முடியுமா?

 நிலத்தை உங்கள் தந்தை பெயரில் வாங்கவுள்ளது நல்லது தான்.ஆனால் அவருக்கு கிரயம் செய்ய பணம் எப்படி வந்தது என்று பதிவு செய்வது…அது தேவையில்லாதது என்றாலும் கூட , அதன் உள்ளே ஒரு அவநம்பிக்கையும் தொக்கியுள்ளதே? 
அவர் பெயரில் சொத்து வாங்கினால், பின்னாளில், அதை அவர் விருப்பப்படி மாற்றி விடுவார் என்றா? 
பின்னாளில் சொத்தை அப்பா வேறு யாருக்காவது மாற்றி எழுதிவிட்டால், கேஸ் போட ஒரு ஆதாரம் என்று நினைப்பா?  
மற்றபடி, அப்படி எழுதுவதால் மட்டுமே பணம் கொடுத்தவருக்கு உரிமை வந்துவிடாது.

நமக்கு முன் பின் அறியாத ஒருவர், திருமணம் ஆகி நம் துணை ஆனவுடன், அவர் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கிறோம்? அவருக்கு நகை வாங்கி கொடுக்கவோ செலவழிக்கவோ யோசிப்பதுண்டா? 
ஏனெனில் அவர் நம்மில் பாதி.. 
ஆனால் அப்பா அம்மாவுக்கு என்றால், ஏன் இந்த தயக்கம்?
 நாம், நம் பெற்றோரின் "பிரதி"யல்லவா? 
அதை எப்படி மறந்தோம்?
 நம் அண்ணன் தம்பிக்கு எழுதி கொடுத்துவிடுவார் என்றா??

இதே அவநம்பிக்கையை நம் மீது அவர் வைத்து இருந்தால், இன்று வெளிநாட்டில் வேலை செய்யும் அளவிற்கு நம் கல்வி தகுதி கூடியிருக்குமா?

போன மாதம் ஒரு தம்பியிடம் பேச நேர்ந்தது..தன் அம்மா சொத்தில் பங்கு கொடுக்காமல், ஒத்தி போடுவதால், தான் வீட்டுக் கடனை தொடர்ந்து கட்டி அல்லல் படுவதாக "அலட்டி"க்கொண்டார்.

"உன் அம்மாவிற்கு இப்போது மாதம் மாதம் பணம் கொடுக்கிறாயா? "

"ஒரு தடவை என் க்ரெடிட் கார்டை போய் கொடுத்தேன்.செலவழித்துக்கொள்ள.. வேண்டாம் என்று விட்டார்கள்.".

"நீ அவர்களுக்கு பணமாகக் கொடுத்திருக்கலாம்.. மற்றவரை படிக்கக் கூட வைக்காமல், .உன்னை மட்டும் தான் தனியார் கல்லூரியில் படிக்க வைத்தார். கூடவே கம்புயூட்டர் டிப்ளோமா..பி.ஜி.படிக்க வைத்தார். அது தானே உன்னுடைய இந்த வேலைக்கு அடிப்படை?"

"என்ன பெரிதாக செல்வழித்து விட்டார்? சில ஆயிரங்கள் இருக்குமா? அதை வேண்டுமானால் இப்போது தந்து விடுகிறேன்"

சற்றென்று "காலத்தினால் செய்த சிறு உதவி" நினைவுக்கு வந்தது. பேச்சை நிறுத்தி விட்டேன்.

இதை தான் இந்த வினாவை படிக்கும் போதும் தோன்றியது..

தனக்கு பின்னால் தேவைப்படும் இந்த பணம் என்று சேமித்து வைக்காமல், அப்பா நம் படிப்புக்கு உதவி செய்தது ஏன் நினைவுக்கு வரவில்லை?

"அவர் ஒன்றும் பெரிதாக செலவழிக்கவில்லை.உபகார சம்பளம் பெற்று தான் படித்தேன்"…
இல்லை "பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டே படித்தேன்" என்போமா?

ஆனாலும், அதற்கு தகுதியான உடல் நலததை கொடுத்தது அவர் போட்ட உணவு அல்லவா?

"பிள்ளையை காப்பது அவருடைய கடமை" என்போமா? அப்படியானால் வளர்ந்த பிள்ளை, அப்பாவுக்கு திரும்ப செய்வதும் கடமை தானே?

"அவருக்கு உண்டான செலவுக்கு தான் பணம் கொடுக்கிறேனே?" என்போமா?

தன்மானம், சுய மரியாதை தராத பணம் உவப்பாக இருக்குமா அவருக்கு?

"தான் இனி இந்த குடும்ப
த்திற்கு வேண்டாத நபராகி விட்டோம்" என்ற உணர்வு தான் வீட்டின் குடும்ப தலைவராக இருந்த ஒருவருக்கு கிடைக்கும் மரண அடி!!
முன்னர் திருமணமான பெண்ணிற்கு கொடுக்கும் சொத்தை, அவள் வாழும் காலம் வரைக்கும் தான் அனுபவிக்கலாம்,. அதை தவிர்த்து அதை கிரயம் செய்யவோ, அதில் வில்லங்கம் ஏற்படுத்தவோ முடியாத அளவிற்கு தான் அவள் உரிமை ஒரு வரையரையுடன் இருந்தது..
இன்று அப்படி நிர்ணயம் செய்ய முடியாது.. 
பெண்ணுக்கே சொத்தில் முழு உரிமை என்னும்போது பெற்றவருக்கு?

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, "தனியொரு மனிதன்" படம் டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அரவிந்த சாமி தன் அப்பாவை தன்னுடைய கைப்பாவையாகவே வைத்திருப்பார்.. அவரை முழுதும் நம்பும் அவர் அப்பா..கடைசியில் பிள்ளை தான் தன்னை "முடிக்க" ஏற்பாடு செய்தான் என்னும் போதும், அவரின் பேச்சு பெருந்தன்மையாக இருக்கும். அது தான் ஒரு அப்பா, பிள்ளையின் மீது வைக்கும் பாசத்தின் வெளிப்பாடு..எந்த பணமும் சுகமும் அதை ஈடு செய்யாது.!!.

அப்பாவின் சட்டைப்பையில் பணம் எடுக்க பிள்ளைக்கு இருக்கும் சுதந்திரம், பெற்றவனுக்கு இருப்பதில்லையே?
அதை அவரும் கோருவதில்லை என்பது தான் உண்மை.
 பிள்ளை கொடுத்து பெறவேண்டும் என்றே நினைப்பார்..அதில் தான் அவரின் பெருமையும் அடங்கியுள்ளது..அதுவும் கணக்கு கேட்காமல், மகன் பணம் கொடுக்கிறான் என்றால், அவரின் பூரிப்புக்கு அளவேயிருக்காது. இதில் சொத்து வாங்கி அவர் பெயரில் எழுதுகிறீர்கள் என்றால், உற்சாகத்தின் உச்சிக்கே போய் விடுவார்..இதில், "பணம் வந்த வழியை" "இடைசெருகலாக" நுழைத்ததன் காரணம் தெரிந்தால்???

எந்த அப்பா தன் பிள்ளையின் முன்னால் அழுதிருக்கிறார்??!!

இன்று நாம் உலகத்தையே சுற்றலாம்..ஆனால், அவர் உயிரின் ஒரு துளியில் இருந்து தானே, நம் உலகமே தொடங்கியது..

இன்று நாம் போய் கொண்டிருக்கும் பாதையின் ஆரம்பத்தில், கைபிடித்து நம்மை நடக்க பழக்கியவரே அவர் தானே?
 சற்றென்று ஒரு தருணத்தில் நம் பிடியை அவர் விட்டார் தான்...
அவர் பிடித்துக் கொண்டு இருப்பதாக எண்ணிக் கொண்டு தானே நம் பயணமும் தொடர்ந்தது?? 
இன்று வரை அந்த எண்ணத்தில் மாற்றம் இருக்குமா?
 பிடியை விட்டாலும், நின்ற இடத்திலிருந்தே நம் பயணத்தை அவர் கண்காணித்து வரவில்லை?? 
அவர் நம் கையை பிடித்துக்கொண்டு இருப்பதாகத்தானே இன்னமும் நினைத்துக்கொண்டு பயணத்தை தொடர்கிறோம்?

அவருடைய தன்னம்பிக்கை தானே நம் நம்பிக்கையும் கூட??!!

"என்ன… ஒரு சந்தேகத்தை கேட்டதற்கு இவ்வளவு சொல்ல வேண்டுமா?" என்னும் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.
இது எல்லாமே தன் அப்பாவை தன்னருகில் வைத்துக்கொண்டு, அவருக்கு வேண்டியதை செய்ய முடியாமல் போன, அவர் வாழும் காலத்தில் அவரிடம் தனக்கு உள்ள பிரியத்தை பலமுறை நினைத்தும் சொல்ல முடியாமல் போன ஒரூ மகளின் எண்ணக்குமுறல்..அதைத்தான் இங்கே பதிவு செய்கிறேன்.

என் பிரிய சகோதரர் நா.முத்துக்குமார் சொன்னது போல,
"கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் இல்லையா?"

வியாழன், 16 டிசம்பர், 2021

என் தாத்தாவின் சுய சம்பாத்திய சொத்தை அவர் இறந்த பிறகு, என் அப்பா உட்பட 4 பெரியப்பா, பாகப்பிரிவினை பத்திரத்தின் மூலம் பங்கு பிரித்து கொண்டனர். இப்பொழுது என் அப்பாவின் பெயரில் உள்ள பங்கை, அப்பா என் பெயருக்கு மாற்றும்போது, என் சகோதரி கையெழுத்து அவசியமா?

 நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடவில்லை என்றாலும், பெரும்பான்மையோர் பின்பற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற அனுமானத்தில் விடையளிக்கிறேன்.

இந்து வாரிசு (திருத்தம்) சட்டம், 2005 மூலம் மூதாதையர் சொத்தில் பெண்களுக்கான உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், பரம்பரை சொத்திற்கு உங்களோடு சேர்ந்து உங்கள் சகோதரியும் இணையான உரிமையாளர் என்ற அந்தஸ்தையும் வழங்குகிறது.
 இதை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனம்மா v. அமன் & ஓர்ஸ்.; (2018)3SCC343. என்ற வழக்கில் உறுதிப்படுத்தியும் உள்ளது.

என்ன சட்டம் இயற்றினாலும், ஆண், பெண் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கும்போது உங்கள் அப்பா, பூர்வீக சொத்தை உங்கள் சகோதரியை தவிர்த்து விட்டு உங்களுக்கு மட்டும் கொடுக்க விரும்புவது பெரும்பாலோரின் மனப்பான்மையை ஒட்டியது தான் என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள்..

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ஆண் மட்டுமே தன சந்ததியை கொண்டு செல்பவன் என்பதால் ஆண் பிள்ளையை மட்டுமே வாரிசாகப்  பார்க்கும் வழக்கம் இன்று நேற்றல்ல, முற்காலத்திலிருந்தே இருந்து வருகிறது என்று தங்கள் செயலுக்கு நியாயம் சொல்வார்கள்.

ஆனால் வேத காலப் பெண்களுக்கு எந்த சொத்து உரிமையும் இல்லை என்றும் இந்து வாரிசுரிமைச் சட்டம் போன்ற சட்டங்கள் தான் புதிதாக இந்த உரிமைகளை பெண்களுக்கு கொடுத்தன என்றும் . ஒரு பொதுவான தவறான கருத்து உள்ளது. அதற்கு அவர்கள் சுட்டிக் காட்டுவது மனுஸ்மிருதியை தான். 

ஆனால் மனு கூட , பெண்களின் தனியுரிமைகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கண்டிக்கவில்லை
வரலாற்றை பார்க்கும் போது, வேத காலத்தில் பெண் வாரிசுகளுக்கு பரம்பரையாக வந்து சேரும் சொத்து குறித்து ஒரு பாரபட்சம் இருந்ததென்னவோ உண்மை தான். . 

அசையாச் சொத்தைப் பெறுவதற்கான உரிமை ஒரு கட்டுபாட்டிற்கு உட்பட்டதாக தான் இருந்தது. இன்று போல் மகள்கள் சொத்தில் இணைப் பங்காளிகளாகக் கருதப்படவில்லை. இதற்கு முதன்மைக் காரணம், மகள்கள் திருமணம் செய்து வைக்கப்பட்டவுடன், அவரது கணவரின் குடும்பத்தில் இணைகிறார் என்பதாலும் குடும்ப சொத்தைப் பிரிக்க யாரும் விரும்பவில்லை என்பதுமே ..

தந்தையின் சொத்தை வாரிசாக அனுபவிக்கும் உரிமை ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே அங்கீகரிக்கபட்டது, ரிக் வேத காலத்திலிருந்து தான் இது கி.மு 400 வரை தொடர்ந்து அசையாச் சொத்தைப் பெறுவதற்கு சகோதரர்களைக் கொண்ட மகள்களை அனுமதிக்கவில்லை.  இருந்தாலும், திருமணமாகாத மகளுக்கு ஒரு சகோதரன் இருந்த போதிலும், சொத்தில் அவளுக்கு பங்கு இருந்தது.

ஆனால் இன்று?

"உனக்கு என்று எந்த குடும்பமும் இல்லாத போது, தனியாக உனக்கு சொத்து எதற்கு" என்கிறோம்!!

"உனக்கு தனியாக வசிப்பிடம் கூட எதற்கு? என் வீட்டிலேயே ஒரு மூலையில் இருந்து கொள்" என்று தாராளம் காட்டுகிறோம்!!

இந்த நான்கு வேதங்கள் மற்றும் ஸ்மிருதிகளைக் கொண்ட பழங்கால நூல்களின் அடிப்படையில் டாக்டர் ஏ.எஸ் அல்டேகர் மற்றும் உபாத்யா,நடத்திய ஆய்வில், வேதகால இந்தியாவிள் குடும்பத்தில் பெண்களின் நிலைப்பாட்டை ப் பொறுத்து, சொத்து மீது அவர்களுக்கு பல்வேறு வகையான உரிமைகள் இருந்ததை காட்டுகின்றன.

"அசையும் சொத்துகள்" என்றாலே சொல்லப்படும் சீதனத்தின் மீது பெண்களுக்கு முழு உரிமை இருந்தது. 

" சீதனம்" என்றால் என்ன? என்பதை குறிப்பிட்டு வரையறுக்க முடியாததாய் இருந்தது. அதை மனு தான் வரையறுத்தார்.  பெண்ணிற்கு அவள் பெற்றோரும், சகோதரரும் திருமணத்தின் போதும் அவளை கணவனின் வீட்டிற்கு செல்லும் போதும் , திருமணத்திற்கு பிறகு கணவனும் அவளுக்கு கொடுக்கும் பரிசுகள் அனைத்தும் சீதனமாக கொள்ளப்பட்டன. அதில் அசையா சொத்துகளும் இருந்தன . இந்த சீதனப் பொருட்களின் மீது அவளுக்கு மட்டுமே ஏகபோக உரிமை இருந்தது. அதை அந்த பெண் தன விருப்பம் போல அனுபவித்துக் கொள்ளலாம். கணவனுக்கு கூட அதில் உரிமை இல்லை.!! அப்படியே அவள் கணவனுக்கு அது தேவை எனில், அதை அவன் வட்டியுடன் கூடிய கடனாக தான் பெறலாம்.!!

தற்போதும் சீதனப் பொருட்களுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டு இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 14 கீழ் பெண்ணுக்கு உள்ள தனி சட்ட உரிமையாகவும் ஆக்கப்பட்டது. அந்த சீதனத்தின் விளக்கத்தை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் Pratibha Rani vs. Suraj Kumar, 1985 (2) SCC 370 என்ற வழக்கில் கொடுத்துள்ளதை ஆர்வமுள்ளவர்கள் படித்து பார்க்கலாம்.

முடியாதவர்கள் ……………அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன சாராம்சத்தை கீழே படிக்கலாம்!!
“ திருமணமான இந்துப் பெண் தனது ஸ்ரீதன சொத்தின் முழு உரிமையாளராக இருக்கிறார், அதை அவள் விரும்பும் விதத்தில் பராமரிக்க முடியும், அது அவளுடைய கணவன் அல்லது அவளது மாமியார் பாதுகாப்பில் வைக்கப்பட்டாலும், அவர்கள் அதன் காவலர்களாகக் கருதப்படுவார்கள் . அவள் கேட்டால், அதையே திருப்பித் தரவும். அவர்கள் கட்டுப்படுவார்கள்"

ஆனால் இன்றைய நிலை?

அதை அப்படியே :தட்சணை" என்று மாற்றி கட்டாயபடுத்தி கணவன் வீட்டார் பெற்றதாலேயே, அதை தடுக்கும் சட்டமும் பின்னால் வந்து சேர்ந்தது.!!

இன்றும் கூட , பெண்ணிற்கு போட்டு அனுப்பும் நகையை கணவன் எடுத்து தனக்கும் தன குடும்பத்திற்கும் உபயோகப்படுத்துவதை பார்க்கிறோம்!!
கேட்டால், மனைவியிடம் உள்ளதில் கணவனுக்கு இல்லாத உரிமை என்று உள்ளதா என்ன? என்று திருப்பி கேட்கிறார்கள் பாவம்…

கணவனின் சொத்து என்றால் அதில் அவனுக்கு ஏகபோக உரிமையும் பின்னர் அவனின் வாரிசுகள் என்று சொல்லப்பட்டது போல, வாழும் காலத்தில் கணவனின் சொத்தில், கணவனும் மனைவியும் அந்த சொத்தின் கூட்டு உடைமை என்ற கருத்து வேத காலங்களில் இருந்தது தெரியுமா?
இன்று எத்தனை பேர் தன பெயரில் உள்ள சொத்தில், மனைவியையும் பங்குதாரராக மாற்றுவது இருக்கட்டும் அப்படி நினைக்காவாது செய்கின்றனர்?

அதே போல வேத காலத்தில், கணவனும் மகனும் இல்லாத நிலையில், கணவனின் சொத்தில் இருந்து அவளை பராமரித்துக் கொள்ளும் உரிமை அவளுக்கு இருந்தது. மைனர் மகனாக இருந்தால்,அவன் பாதுகாவலராகச் சொத்தை வாரிசாகப் பெற்று அதை அவனுக்காக பராமரிக்கும் உரிமை மட்டுமே அவளுக்கு உண்டு, சொத்தை மாற்றும் உரிமை இல்லை. மகனும் இல்லாத போது, அவள் வாழும் காலத்தில் அனுபவித்து முடித்த பிறகு, மீண்டும் அந்த சொத்து கணவனின் குடும்பத்திற்கே சென்று சேர்ந்து விடும்!! அது அவளின் கணவனின் சொத்தே என்றாலும், அவள் விருப்பம் போல கையாள முடியாது!! இந்த சட்ட நடைமுறை தான் இன்றும் தொடர்கிறது. இது குறித்து நான் எழுதிய விரிவான விடை சங்கடம் தவிர்க்கும் சட்டம் ப்ளாக்கில் உள்ளது. அதை திரும்பவும் இங்கே பதிவிட வேண்டாம் என்று நினைக்கிரேன்.


வேத காலத்துக்குப் பிறகு பெண்களின் உரிமைகள் படிப்படியாகக் குறைந்து, ஆங்கிலேயர் காலத்தில் மிகக் குறைந்த நிலையை அடைந்தன. அதற்கு காரணம் கல்வியில் சமூகத்திற்கு பெண்களின் பொருளாதார பங்களிப்பு ஆகியவை படிப்படியான சரிவு, அதன் பிறகு தான் ஆங்கிலேயர்கள் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு என்று தனி பள்ளிகள், கல்லூரிகள் நிறுவினார்கள். நான் படித்த பள்ளி மற்றும் கல்லூரியும் அவர்கள் நிறுவியது தான் !!

சொத்துரிமை என்று பார்த்தால், சுதந்திரத்திற்குப் பிறகுதான், இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 போன்ற சட்டரீதியான தலையீடுகள் மூலம் பெண்களுக்கு பல்வேறு சொத்துரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

நவீன இந்தியாவின் இந்துப் பெண்கள், வேதகாலப் பெண்களை விட அதிக உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் சொத்துரிமை பற்றிய கருத்து வேத காலப் பெண்களுக்கும் அந்நியமாக இருக்கவில்லை. அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை எஎன்பதும் தவறானது.

ஆனாலும் இன்று எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், பெண்களின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம், அவள் பிறந்த வீட்டிலும் சரி……….. கணவன் வீட்டிலும் செய்யத்தான் செய்கிறார்கள் அதற்கு இந்த வினாவும் ஒரு உதாரணம்,

வினாவிற்கு திரும்ப வரும்போது, அப்பாவின் சுய முயற்சியால் பெற்ற சொத்தை மட்டுமே அவர் தன் விருப்பம் போல இன்னொருவருக்கு மாற்ற முடியும். இது உங்கள் தாத்தாவின் சொத்து என்பதால், உங்கள் சகோதரிக்கும் அதில் பங்கு உண்டு. அவர் தனக்கு உண்டான உரிமையை விட்டுக்  கொடுத்தால் மட்டுமே உந்களுகு மட்டுமாக அந்த சொத்தை உங்கள் அப்பா எழுதி கொடுக்க முடியும்.

தாய் தகப்பன் மற்றும் சகோதரனின் அன்பையும் பாசத்தையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் உங்கள் சகோதரியும் தனக்கிருக்கும் சொத்தின் மீதான உரிமையை விட்டு கொடுக்கலாம்... அவள் கணவனும் அவள் குடும்பத்தாரும் அவள் கொண்டு வந்த சீதனப் பொருட்களின் மீது உரிமை பாராட்டலாம். அவள் உழைப்பில் சேர்த்த சொத்துகளுக்கு கணவன் உரிமை கொண்டாடலாம்... வாரிசு இல்லாத நிலையில், கணவனை இழந்த பிறகு தன்னை பராமரிக்க மட்டுமே அவன் சொத்துகளை அவள் பயன்படுத்தமுடியும் என்று முட்டுக்கட்டை போடலாம்....

ஆனால்…..

சக்கரம் சுழன்றுக் கொண்டு தான் இருக்கிறது. ..

இன்று அநாதரவாய் நம் சகோதரி…

நாளை அதே நிலையில் நம் மகள் அல்லது நம் பிரியத்துக்கு உரிய ஒரு பெண்?!!

கர்மா மிகவும் பொல்லாதது!!


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...