புதன், 29 செப்டம்பர், 2021

எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னோடு வா நிம்மதியை காண்பிக்கிறேன் என்று ஒரு சாமியார் கூப்பிட்டால் போவீர்களா?

         சமீபத்தில் ஒரு சுவாரசியமான வழக்கு ஒன்றை படித்தேன்.

        புட்டபர்த்தி சாயிபாபா தன் பக்தர்களுக்கு விபூதி காற்றில் இருந்து பெற்று தருவார் என்பதை அறிவோம். அதே போல சில உயரிய பக்தர்களுக்கு ......தங்க , வைர ஆபரணஙகளை 

        அதை தொடர்ந்து வழக்கு போட்டார் ஒரு பகுத்தறிவாளர்.. என்னவென்று?

        லைசென்ஸ் இல்லாமல் அவர் தங்கம் உற்பத்தி செய்கிறார், அது தங்க கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிராக உள்ளது.அது குறித்து மனு செய்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் தான் உத்தரவிடவேண்டும் என்று.. !!

        இது போன்ற விலைமதிப்பில்லாதவை எவ்வளவு அவர் வைத்துள்ளார் என்று சாயீபாபா ஒரு உறுதியும் கொடுக்கவேண்டும் என்றார்..

        வழக்கு என்னவாயிற்று என்று தெரிந்திருக்கும்.

அதற்கு ஆந்திர உயர் நீதிமன்றம் கொடுத்த சில காரணங்கள்

  • தங்கம் தயாரிப்பது என்பது பல படிநிலைகளை கொண்டது.  அது போல பாபா செய்யவில்லை. அவர் தன் தெய்வீக சக்தியால் தான்,  காற்றில் இருந்து பெற்று கொடுக்கிறார்.
  • தங்கக்  கட்டுப்பாடு சட்டம், வணிக ரீதியாக நடைபெறுவதை கட்டுப்படுத்த..ஆனால் பாபா அவ்வாறு செய்யவில்லை.அதனால் அந்த சட்டம் பொருந்தாது.
  • பாபா தான் அவ்வாறு பெறும் பொருட்களை பக்தர்களுக்கு தானே கொடுத்து விடுகிறார்? அதனால் தன்னிடம் அதை வைத்துக்கொள்ளாத காரணத்தினால் உறுதி கொடுக்க சொல்லக் கேட்பது சரியல்ல!!

விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் போய் வழக்கின் முழு விவரம் படிக்கலாம்.

https://indiankanoon.org/doc/1497702/

இப்படி மாயவித்தை காட்டிய சாமியார்களில் "போலி"யுமுண்டு.

நமமூரிலும் இருந்தார்கள்..  இருக்கிறார்கள்!!

        எங்கே நிம்மதி..எங்கே நிம்மதி என்று தானே எல்லோரும் தேடிக் கொண்டிக்கிறார்கள்?

ஆட்டை தோளில் போட்டுக் கொண்டு ஊர் முழுதும் தேடிய கதையாய்..

``நம்மிடம் முன்பு இருந்தது, ஆனால் இப்போது தொலைந்து போனது, அந்த நிம்மதியை ஒரு சாமியார் காண்பிக்கிறார் என்றால் …

நம்மிடம் தொலைந்து போளதை நமக்கே காட்டுகிறாரா?

ஆனால் ஒரு நிமிடம்...........

ஒவ்வொருவருக்கும் நிம்மதி தேடுவதில் /கிடைப்பதில் வேறுபாடு உண்டே

சிலருக்கு கோயிலுக்கு போனால் நிம்மதி..

சிலருக்கு டாஸ்மாக்கிற்கு போனால நிம்மதி..

இரண்டுமே ஒரு விதமான போதை தானே..

ஆன்மீகத்துக்கு போகும் பாதையை குருவும் காட்டுகிறார்..சனியும் !!

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? யோசித்துக்கொண்டே இருங்கள்..பின்னால் சொல்கிறேன்..😬

அப்படி ஒவ்வொருவருக்கும் வேண்டிய நிம்மதியை ஒருவரே தரக்கூடியவர் என்றால் பரம்பொருளால் மட்டுமே முடியக்கூடியது.

சாமியார் மூலம் 'சாமி"யை தேட முடியுமா?

தெய்வீகம் என்பதே மறைந்த தன்மை கொண்டதல்லவா?

அதை வெளியே எங்கே போய் தேடுவது?

அதை தேடும் நானும் மறைந்து தானே போக வேண்டும்?

மறைந்து போவது என்றால்? என்னை மறந்து போதல்..

உயர்ந்த சமாதி நிலையை அடைவதற்கு இயமம் நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை , தியானம், சமாதி எனும் எட்டு படிகளில் சாதனை செய்திருக்க வேண்டுமாமே?!

எனக்கு அவ்வளவு கூட வேண்டாம்..நிம்மதி தரும் படிநிலைகளை கற்றுக் கொண்டால் போதும்.

ஆனால் அதை கற்றுக் கொடுக்கும் குருவாக இருக்கக்கூடியவர் அதையே இடைவிடாமல் பயிற்சி செய்து,, நிர்விகல்ப சமாதியின் மூலம் பிரம்ம அனுபவத்தை நேரடியாக பெற்றிருப்பார் தானே?!

அப்படிப்பட்டவர் மறைவாகத்தானே இருக்க வேண்டும்?

ஆனால் அவரோ தான் மறைந்து போக விரும்பாமல் தன்னை முன்னிலைப்படுத்திக்  கொண்டால்?

காணும் இடத்திலெல்லாம் கேளிக்கை, கண்கட்டு வித்தை காட்டுபவராக இருந்தால்?

ஒரு கார்ப்பரேட் ஆரவாரத்துடன் நடப்பதில் தியானம் தொலைந்து அல்லவா போகிறது?

சாதாரண மனிதர் அதை முயற்சி செய்யத் தடை செய்பவர்களாகததான் இந்த சாமியார்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள்.ஏன்?

"நீ த்யானத்தில் நுழைந்து இறைவனை தரிசித்து விட்டால், மத குருமர்களுக்கு வெளி இல்லாமல் போய் விடுமே.அதனால் தான் அவர்கள் அதை போதிப்பதில்லை" என்கிறார் ஓஷோ..

"இல்லையே முறையான தியானத்தை நான் அவரிடம் தான் கற்றேன்" என்கிறீர்களா?

இறைவனையே கண்டுணர்ந்து பின்பு மனது தன் வசமாகாதா? பிறகு எதுதான் தன் வசமில்லை? ஆனால் அதை பெற்றவர் பற்றற்ற சாமியாராக தானே இருக்க முடியும்?.

எனக்குள் உள்ளதை எனக்கு காட்ட எல்லாவற்றையும் விட்டுவிட்டு வரவேண்டும என்பவர்கள்

B’luru Parents Accuse Nithyananda of Kidnapping, Daughters Deny
Both daughters have uploaded videos on social media claiming that as adults, they choose to remain with the ashram.
Jaggi Vasudev's Isha Yoga Centre accused by retired professor of holding his daughter captive-India News , Firstpost
A couple on Monday alleged that their two daughters were being held captive by Jaggi Vasudev's Isha Yoga centre.

அதை பற்றிக் கொண்டு இருப்பதென்ன??😢

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம் - படங்கள் வைரலானதன் பின்னணி!
பங்காரு அடிகளாரின் மூத்த மகன் அன்பழகனின் மகள் மதுமலர். இவருக்கும் சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி-ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் மருத்துவர் பிரசன்ன வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 4-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணச் செலவு முழுவதையும் பங்காரு அடிகளாரின் குடும்பமே ஏற்றுக்கொண்டது. திருமண பத்திரிகை கொடுக்கும்போதே தட்டு, புடவை, வேட்டி சட்டை என அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்து அதகளப்படுத்தியிருந்தார்கள். தினசரி நாளேடுகளில் முழுப்பக்க விளம்பரமும் கொடுக்கப்பட்டன. மேல்மருவத்தூர் முழுக்கவே சாலை ஓரங்களில் பேனர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தன. பங்காரு அடிகளார் இல்ல திருமண வரவேற்பு 3-ம் தேதி இரவு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், யானை, குதிரை என மணமக்களுக்குக் கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. தேவாவின் இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மணப்பெண்ணை கோயிலிலிருந்து பல்லக்கில் தூக்கி வந்து, சாரட் வண்டியில் மணமேடை வரை கொண்டு வந்தனர். தாரை தப்பட்டை, செண்டை மேளங்கள், ட்ரம்ஸ் என வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

உடல் பிணியை போக்கி நிம்மதி தருகிறேன் என்பவர்கள் தனக்கு என்று வரும்போது செய்வது வேறொன்றாகத் தானே இருக்கிறது?

Viral Sach: Baba Ramdev seeking foreign treatment for knee ailment ?
Message about Baba Ramdev flying to London for the treatment of his own knees has gone viral.

சுபத்துவமான சனி, ஆன்மிகத்தில் ஒருவரை ஈடுபாடு கொள்ள வைப்பார்..ஆனால் அவர் ஆன்மிகத்தின் பெயரில் செய்வது எல்லாம் தன்னை முன்னிலைப்படுத்தியே இருக்கும்.

குருவின் மூலம் ஆன்மீகப் பாதைக்கு போகும் ஒருவர் "எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்" என்று வேண்டினால், சனி ஆதிக்கம் உள்ளவர் ஆன்மிகம் என்ற பெயரில் தன்னை முன்னிலைப்படுத்தி, "தான் நன்றாக வாழவேண்டும்" என்ற முனைப்போடு தான் இருப்பார்!!

ஆனாலும் அங்கே கூட்டம் கூடிக் கொண்டு தான் போகிறது.

ஏன் ..எல்லாம் அவசரம்.எனக்கு எல்லாம் வேண்டும்..நிம்மதி உட்பட.!!

அதற்கு ஒரு பாக்கேஜ் போல போட்டு விட்டால், பணம் கட்டிவிடுகிறேன்.நீங்கள் எனக்கு வேண்டியதை தாருங்கள்!!

டீலா .......நோ டீலா..

நாம் தான் கொரானாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவே தட்டுமுட்டு சாமான் இலவசமாக கேட்டவர்களாயிற்றே!!

அதற்கேற்ப தானே நமக்கு கிடைக்கும் குருவும் இருப்பார் !!

மாயவித்தை செய்யும் சாமியார் என்றால், தெய்வத்தோடு இவருக்கு டைரக்ட் கனெக்சன் இருக்குன்னு நம்பிவிடுவது!!

இந்த படத்தில் உடன் இருப்பவர் சட்டமேதை எனப்படும் நானா பல்கிவாளா..அவரிடம், "உங்களை போன்ற பகுத்தறிவாதிகள் இது போன்ற வித்தை காட்டும் சாமியார்களை எப்படி நம்புகிறீர்கள்?" என்று கேட்டபோது,

அவர் ஒரே வார்த்தையில் சொன்னது "நம்பிக்கை"

இது தான் நம்பிககையின் சிறப்பு..

தனக்கு ஒருவரின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டால், அவரின் எந்த மாபாதகத்தையும் சகித்துக்கொண்டு அவருக்காக முட்டுக் கொடுத்து கொண்டு இருப்போம்!!

ஆஸ்கர் வயில்ட் சொன்னது போல "ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு  .ஒவ்வொரு குற்றவாளிக்கும் ஒரு எதிர்காலம் உண்டு."

சரி.......எப்போது நமக்கு நிம்மதி தொலைகிறது?

எண்ணம், சொல், செயல் இவற்றை நாமோ மற்றவர் நமக்கு செய்தாலோ, ஏற்படுவது..

அதற்கு மனம் குறுகுறுத்து, குற்றவாளியாய் நிம்மதி தேடி வெளியே அலையத் தேவையில்லை..

உலகையே வென்ற அலெக்ஸ்சாண்டர் கூட நிம்மதி கிடைக்காமல் தன் 33 வயதிலேயே நிம்மதியை குடியில் தேடி, அந்த குடிப்பழக்கத்தால் இறந்து போனான்.

ஆனால் அனைத்தையும் துறந்து நிம்மதியை தனக்குள் தேடிய புத்தர் பரவச நிலையை பெற்று பரவசமாக வாழ்ந்தார். இன்றும் வாழ்கிறார்.

என் மனம் என் ஆளுகைக்கு உட்பட்டது. நான் அதை பழக்கக் கூடிய கமாண்டராக தான் இருக்கிறேனே தவிர, .ஒரு சிப்பாயாக, இன்னொருவரை கமான்டராக நிறுத்தும் எண்ணமுமில்லை..

இன்னொன்றும சொல்ல வேண்டுமே.......

சிறுவர்கள் சந்நியாசம் கொள்வது சட்டப்பூர்வமானது தான் என்று நேற்று ஒரு தீர்ப்பு வந்துள்ளது..

அவர்களால் முடிவது என்னால் முடியாதா? முயற்சித்து தான் பார்ப்போமே!!

அப்படியே "கைலாசா"வில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்!!😢

வியாழன், 16 செப்டம்பர், 2021

என் உடல் என் உரிமை எனும் பெண்ணியவாதிகள் சமூக சீர்திருத்தவாதிகளா?

 அவரவர் உடல் அவரவரின் உரிமை. இதில் ஆண் பெண் என வேறுபாடு என்ன? நீங்கள் சொல்வதை பார்த்தால் பெண் தன் உடலை தான் உரிமை கொண்டாடக் கூடாது என்கிறீர்களா? சுத்த அபத்தமாக இருக்கிறது..

இது சம்பந்தமான ஒரு வழக்கு எனக்கு நினைவுக்கு வந்தது.

நடிகை சரிதாவை நமக்கு தெரியும் தானே?

இவர் தாக்கல் செய்த ஒரு மனு இன்றளவும் ஒரு முக்கிய வழக்காகப் பார்க்கபடுகிறது.

கேரள நீதிமன்றத்தில் நடிகை சரிதாவின் ் கணவர் வெங்கட சுப்பாராவ் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அவர் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் தன உடல் தன உரிமை என்றும் அதனை தனக்கு விருப்பமில்லாதவரோடு பகிர சொல்வது தனது அடிப்படை உரிமையை மீறுகிறது என்று வாதிட்டார். இதனை கேரளா உயர்நீதிமன்றமும் ஏற்றுகொண்டது.

ஆனால் இதே போன்ற இன்னொரு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த கருத்தை ஒத்துக்கொள்ளவில்லை.இரண்டு வேறுபட்ட தீர்ப்புகளால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அந்த வாதம் எற்றுகொள்ளத்தக்கது என்றாலும், குடும்பத்தின் நிலையை சீராக்கவே ஒன்றாக வசிக்க இந்து திருமண சட்டப் பிரிவு 9 ன் கீழ், சேர்ந்து வசிக்க உத்தரவிடப்படுகிறதே தவிர, அவர் விரும்பாதவரோடு சேர்ந்து அவர் உடலை பகிரத் தேவையில்லை என்று தீர்ப்பளித்து, அதனால் ஏற்பட்ட குழப்பத்தை சரி செய்தது.

இப்போது உங்களேக்கெல்லாம் ஒரு கேள்வி….. குடும்ப வன்முறை மற்றும் திருமண கற்பழிப்பு அதிகமாக நடக்கும் நம் நாட்டிலே,மனசு வேறுபட்டாலும், ஒரு நீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க ஒரே வீட்டில் வசிக்கும் கணவன் மனைவி தங்கள் விருப்பம்போல வாழ முடியுமா?

ஸ்ரீஜா சுப்ரமணியன் இன் தற்குறிப்பு போட்டோ
கருத்து தெரிவி…

நீதிமன்றத்தில் 311 சி.ஆர்.பி மனு தாக்கல் செய்யப்பட்டு செலவு தொகை செலுத்தாத காரணத்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் செலுத்த தயாராக உள்ளார். மனுதார் அடுத்து என்ன செய்வது?

 

நீதிமன்றத்தில் 311 சி.ஆர்.பி மனு தாக்கல் செய்யப்பட்டு செலவு தொகை செலுத்தாத காரணத்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் செலுத்த தயாராக உள்ளார். மனுதார் அடுத்து என்ன செய்வது?

குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த செலவுத் தொகையை ஏன் கட்டமுடியாமல் போயிற்று என்பதை தகுந்த ஆதாரத்துடன் மனு செய்ய வேண்டும். நீதிமன்றம் அந்த பதிலில் திருப்தியடைந்தால் மனுவை ஏற்றுக்கொண்டு கூடுதல் கால அவகாசம் கொடுக்கும். இல்லையென்றாலும், காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், மேல்முறையீடு செய்யலாம். இரு தரப்பினருக்கும் தங்கள் தரப்பு கட்சியை நிரூபிக்க தகுந்த காலவகாசம் வழங்கப்படவேண்டும் என்ற நியதிப்படி, தங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் செலவு தொகையை கட்டாதது, வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் அல்ல என்பதை நீதிமன்றத்தில் எடுத்துரைப்பதில் தான் வழக்கறிஞரின் திறன் உள்ளது.

நான் பார்த்த வழக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. அது ஒரு கற்பழிப்பு வழக்கு. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அந்த பெண்ணை சீரழித்து விட்டார் என்று குற்ற வழக்கு அவர் மீது பதிவு செய்பட்டு வழக்கு நடந்து வந்தது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அப்போது தான், குற்றவாளி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்கிறார்கள்.. பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று.

இத்தனைக்கும், அந்த பெண் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு சில வருடங்கள் கடந்து விட்டது. அவரும் சிறு தயக்கமும் இன்றி குற்றவாளியை அடையாளம் காட்டி தெளிவாக அவர் தனக்கு செய்த தீங்கை எடுத்துச் சொல்லியிருகிறார்.

குற்றவாளி தரப்பும், குறுக்கு விசாரணை என்ற பெயரில் இரண்டு மூன்று நாட்கள் குறுக்கு கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறார்கள்.. அந்த பெண்ணும் அசராமல் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்.

வழக்கு குற்றவாளிக்கு எதிராக ஸ்ட்ராங்காக உள்ளது. நீதிபதியோ படு ஸ்ட்ரிக்டாக இருக்கிறார். இப்படியே போனால் தண்டனை நிச்சயம் என்ற நிலையில் தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

சில முக்கியமான கேள்விகளை அந்த பெண்ணிடம் கேட்காமல் விட்டுவிட்டதாகவும் இப்போதைய புது வழக்கறிஞர்{?} தான் அதை கண்டுபிடித்து உள்ளார் என்றும், அந்த கேள்விக்கான பதில்களை பெறுவது மிகவும் முக்கியம் என்பதால் அந்த பெண்ணை திரும்பவும் விசாரணைக்கு அழைக்கவேண்டும் என்றும் கேட்டு இருந்தார்கள்.

நீதிபதியும் இந்த மனுவில் உள்ள சங்கதிகள் உண்மையா என்று விசாரித்தார். அப்போது தான் ஒரு உண்மை தெரிய வந்தது. வருடங்கள் ஆனபடியால், அந்த பெண்ணின் வீட்டாருடன் பேரம் நடந்திருக்கிறது, இனிமேல் இந்த நபருக்கு தண்டனை வாங்கி தருவதால் அவர்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிட போகிறது என்ற ரீதியில் பேசி, பெண்ணின் திருமண செலவுக்கு என்று சில ஆயிரங்களை கொடுப்பதாகவு,ம அதன்படியே நீதிமன்றத்திற்கு அந்த பெண் வந்து சாட்சியத்தை மாற்றி சொல்லவேண்டும் என்று பேசி, பேரமும் படிந்துவிட்டதாக தெரிந்து கொண்டார்.

அந்த பெண்ணின் குடும்பமும் ஏழ்மையானது என்பதால் வேறு வழியில்லாமல் இணங்கி இருகிரார்கள் என்று புரிந்து கொண்டார். இப்போது மனுவின் நோக்கம் புரிந்து விட்டது. இதை காரணம் காட்டி மனுவை தள்ளுபடி செய்யமுடியாது. செவி வழி செய்தி என்பதால்....அத்தோடு எந்த காரனமும் சொல்லி மனுவை தள்ளுபடி செய்தால், அவர்கள் மேல்முறையீடு செய்ய போய்விடுவார்கள். அதனால் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுவிடும் என்று தெரிந்துக்கொண்டவர், அந்த மனுவை அனுமதித்து, அந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்தார். அவர் சாட்சியமும் பதிவு செய்யப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, அந்த பெண்ணும், அன்று சம்பவத்தில் ஈடுபட்டது இந்த நபர் இல்லை என்று சாட்சியம் அளித்தது.

வழக்கு விசாரணையும் முடிந்து, தீர்ப்புக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

குற்றவாளி தரப்பில் கண்டிப்பாக விடுதலை ஆகிவிடுவோம் என்று ஏக எதிர்ப்பார்ப்பில் இருக்க, நீதிபதி, அவருக்கு குற்றவாளி என்று தீர்பளித்தார். அந்த பெண்ணின் சாட்சியம் ஏற்கெனவே சொன்ன சாட்சியத்திலிருந்து மாற்றி பல வருடங்கள் கழித்து வந்து சொல்லியுள்ளதால், அது நம்புவதற்கு இல்லை என்று காரணம் சொல்லி அதை நிராகரித்து முன் சொன்ன சாட்சியத்தை ஏற்று தீர்ப்பு அளித்திருந்தார்!!.

அந்த மனு போல இல்லாமல், உங்கள் வழக்கில், உண்மையிலேயே செலவு தொகை கட்ட கால தாமதம் ஆனா நியாயமான காரணம் சொல்லி அதனால் தான் கால தாமதம் ஆகியது என்று நிரூபித்தால் உங்கள் மனு ஏற்றுக்கொள்ளப்படலாம்..

நிரூபிப்பத் என்பது சமயத்தில் சங்கடமான ஒன்று ...அது ஒவ்வொரு தரப்புக்கும் ஏற்றவாறு மாறக்கூடியது.!!

ஆனால் உண்மை மட்டுமே மாறாதது!! வாய்மையே வெல்லும்!!

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...