கணவனின் சொத்தில் எந்த அளவிற்கு மனைவியின் உரிமை உள்ளது?
சமீபத்தில் கண்ணையா நாயுடு எதிர் கம்சலா அம்மா வழக்கில் நீதியரசர் கிருஷ்ணன் இராமசாமி வழங்கிய தீர்ப்பு நாட்டில் பெரும்பான்மையோரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கணவர் சொத்துகளை வாங்குவதற்கு ஓர் இல்லத்தரசியாக
மனைவி பங்களிப்பு செய்யும் போது, அப்போது வாங்கப்பட்ட
சொத்துக்களில் சம பங்கு பெற மனைவிக்கு உரிமை உண்டு”
என்கிறார் அவர்.:
“அதனால் குடும்பத்தின் நலனுக்காக நேரிடையாகவோ மறைமுகமாகவோ சொத்து சேர்க்க தம்பதியினரில் யார் தன் பங்களிப்பை செய்தாலும். இருவருக்குமே சம உரிமை உள்ளது என்று நான் கருதுகிறேன்.
பொதுவாக, திருமணங்களில், மனைவி குழந்தைகளைப் பெற்று வளர்ப்பாள் மற்றும் வீட்டை கவனித்துக்கொள்கிறார். அதன் மூலம் அவர் தனது கணவரின் பொருளாதார நடவடிக்கைகளுக்காக விடுவிக்கிறார்.. அதனால் அந்த சொத்தில் சம பங்கு பெறும் உரிமை உள்ளதாக நான் கருதுகிறேன்.” என்கிறார்.
தான் வெளிநாட்டில் வேலை செய்து அனுப்பிய பணத்தை கொண்டு தன பெயருக்கு மனைவி சொத்துகளை வாங்கிக் கொண்டார்.அவர் வேலைக்கு போகவில்லை. வீட்டில் தான் இருந்தார். “ என்ற கணவரின் வாதுரையை கேட்டு அதற்கு பதிலாக
“குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனிப்பது 8 மணி நேர வேலை இல்லை, கணவர் வெளிநாட்டில் 8 மணி நேர வேலை தான் செய்து கொண்டிருந்தார். னால் அது அவர் மனைவி செய்தது 24 மணி நேர வேலை.
x
இது உண்மையிலேயே ஒரு சிறப்பு வாய்ந்த தீர்ப்பு. ஏனெனில் திருமணத்தின் போது
பெண்ணிற்கு அளிக்கப்படும் சொத்து குறித்துக் கூட இந்து திருமண சட்டபிரிவு 27 ன் கீழ் முடிவு
நீதிமன்றம் செய்யலாம்.. அதே போல. நீதிமன்றத்தால்
விவாகரத்து தீர்ப்பு கொடுக்கும் வரை அல்லது அவளுக்கு உண்டான ஜீவனாம்சம் குறித்தமுடிவு
தெரியும் வரை, அந்த பெண், அவள் குடும்பம் நடத்திய வீட்டில் வசிக்கும் உரிமை உள்ளது.
அதுவும் முக்கியமாக அந்த வீட்டில் அவள் கணவனுக்கு சொத்து உரிமை உள்ளதோ இல்லையோ,
அது அவள் மாமனார் வாங்கிய சொத்து என்றாலும் சரி மன முறிவு ஏற்பட்ட காலத்திலிருந்து
‘மண முறிவு’ வழங்கப்படும் வரை அவள் அங்கே தங்கியிருக்கும் உரிமை உள்ளது என்று சட்டம்
சொல்கிறது
“ இந்துப் பெண்ணின் இந்த பராமரிப்பு உரிமை என்பது ஒரு வெற்று சம்பிரதாயமோ
அல்லது மாயையான வார்த்தைகளோ அல்லது கருனையினாலோ
அல்லது தாராள மனப்பான்மையின் ஒரு விஷயமாக ஒப்புக் கொள்ளப்படுவதில்லை, அதற்கு மாறாக கணவன் மனைவிக்கு இடையேயான ஆன்மீக
உறவிலிருந்து பாயக்கூடிய ‘ சொத்துக்கு எதிரான உறுதியான உரிமையாகும். தூய சாஸ்திர
இந்து சட்டம் மற்றும் மனு வரையிலான
முந்தைய இந்து சட்ட வல்லுநர்களால் கூட வலுவாக இது வலியுறுத்தப்பட்டது. அத்தகைய
உரிமை சொத்தின் மீதான உரிமையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால்
அது சொத்துக்கு எதிரான உரிமையாகும், மேலும் கணவனுக்கு
மனைவியைப் பராமரிக்கும் தனிப்பட்ட கடப்பாடு உள்ளது மற்றும் அவருக்கோ அல்லது
குடும்பத்திற்கோ சொத்து இருந்தால், பெண்ணுக்கு சட்டப்பூர்வ
உரிமை உண்டு. ஒரு குடும்பத்தை பராமரிப்பதற்காக ஒரு பிடிமானம் உருவாக்கப்பட்டால்,
அந்த உரிமையானது சட்டப்பூர்வமாக அமலாக்கக்கூடிய ஒன்றாக மாறும்.
எவ்வாறாயினும், அந்த பிடிமானம் இல்லாமல் இருந்தாலும், பராமரிப்புக்கான
உரிமைகோரல் என்பது சந்தேகத்திற்கு
இடமின்றி முன்பே இருக்கும் உரிமையாகும்” என்கிறார் நீதியரசர் சுப்பாராவ் AIR
1957 Andh Pra 710.
சிறு வயதிலிருந்து நமக்கு சொல்லப்பட்டது
, ...அல்லது மனதில் பதிய வைக்கப்பட்டது....
“ அம்மா சமையல் செய்கிறாள், அப்பா படிக்கிறார்” என்பது.
அடுத்து வந்த தலைமுறை அம்மாவும் வேலைக்கு போக ஆரம்பித்தாள். இன்று வேலைக்கு போகும்
மனைவி இருந்தால் தான் டும்பம் நடத்த முடியும் என்ற அளவிற்கு பொருளாதார நிலை உள்ளது. ஆனால் வேலைக்கு போகும் பெண்ணின் பொருளாதார நிலை
உயர்ந்திருக்கிறதா? என்று கேட்டால் சாதகமான
பதில் சொல்ல இருது தயக்கம் ஏற்படும். ஏனெனில், அவளின் வருமானம் அந்த குடும்பத்திற்கு தேவையான
ஒன்றாக மாறியிருக்கும். அந்த குடும்பத்தின்
பொருளாதார நிலை உயர்ந்திருந்தாலும், அவளின் பெயரில் ஒரு அசையா சொத்தை அவள் தன்னிச்சையாக
வாங்கி விட முடியுமா என்பது சந்தேகமே. ஆனால் இதுவே கணவன் வாங்கி இருக்கும் வீட்டிற்கான
கடனிற்கு மனைவியின் வருமானத்தை பயன்படுத்திக் கொள்ளும் கணவர்கள் தான் அதிகம். இத்தனைக்கும் அவர் பெயரில் இருக்கும் சொத்தில் அவளுக்கு
எந்த அளவிற்கு உரிமை என்பது அவளுக்கும் தெரியாது.
சட்டமும் அதை கண்டு கொள்ளவில்லை.
வேலைக்கு போகும் பெண்ணின் நிலையே இப்படி இருக்கும் போது, வீட்டில் இருந்து குடும்பத்தை
கவனித்து கொள்ளும் பெண்ணின் நிலை?
சமீப காலங்களில் தான் வீட்டில் பெண் ‘சும்மா’
இருக்கிறாள் “ என்ற பிரமை தெளிந்து, வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்துக் கொள்ளும்
பெண் செய்யும் பணிகளை பொருளாதார ரீதியாக கணித்தால்,
எத்தகைய மதிப்பு வாய்ந்தது அது என்ற புரிதல் ஏற்பட்டிருகிறது. இதற்க்கு வித்திட்டவர்
நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் அவர்கள் தான்.
வேலைக்கு போகாமல் வீட்டிலிருக்கும் பெண்ணிற்கு விபத்து ஏற்பட்டு இறக்க நேரிட்டால்,
அவரால எந்த பொருளாதார இழப்பு ஏற்படவில்லை “
என்று இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீதிமன்றங்களை ‘மட்டை’யடித்துகொண்டிருந்ததை மாற்றியவர்.
இல்லத்தரசி செய்யும் பணிகளுக்கு பணரீதியான மதிப்பை ஏற்படுத்தி, அந்த பணிகளை செய்த ஒருவரின்
மறைவால், அன்பு, பாசத்தின் நஷ்டம் மட்டுமல்ல பணரீதியான இழப்பையும் அந்த குடும்பம் எதிர்
கொள்ள வேண்டியிருக்கும்” என்று நிதர்சனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.
பெண் என்பதால் இப்படியொரு தீர்ப்பை கொடுத்துள்ளார் என்ற விமர்சனமும் எழுந்தது. ஆனால் அந்த தீர்ப்பின் அடுத்த கட்டமாக,
நீதியரசர் கிருஷ்ணன் இராமசாமி, “ஒரு பெண் தன
கனவனுக்காக அந்த குடும்பத்திற்காக செய்யும் பணிகளினால், அவர் கணவனை பொருளாதார ரீதியான
லாபம் பார்க்க வகை செய்வதால், அதன் மூலம் வாங்கப்படும் சொத்து யார் பெயரில் இருந்தாலும்,
அதில் சம உரிமை அந்த பெண்ணிற்கு உண்டு” என்ற பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளார்.
ஏனென்றால் சட்டம் தொட்டு பார்க்காத இடங்களில் இதுவும் ஒன்று!!
திருமணத்தின் போது மணப் பெண்ணிற்கோ தம்பதியர் இருவருக்கும் பொதுவாக கிடைக்கும்
சொத்தின் உரிமையாளர் என்பது குறித்தே சட்ட சிக்கல் இருக்கும் போது, அதை தீர்க்க இந்து திருமண சட்ட பிரிவு 27
துணைக்கு வரும்.. ஆனால் அதுவும் கூட, திருமண
உறவு நீடிக்கும் காலத்தில் தனியாகவோ அல்லது சேர்ந்து தம்பதியர் வாங்கும் சொத்து குறித்து
ஏதும் சொல்லவில்லை.. அது சம்பந்தமாக ஏதேனும்
அவர்களுக்கும் உடன்படிக்கை போட்டுக் கொண்டால், அதை கவனத்தில் கொள்ளலாமா என்பதிலும் மறுப்பு சொல்கிறது
அலகாபாத் உயர் நீதிமன்றம்.
திருமணமான பிறகு புகுந்த வீட்டில், அவள் பார்த்து பார்த்து பராமரித்தும் கூட, தம்பதியினரிடையே
கருத்து நேரிட்டால், முதலில் நடப்பது, அவள் அந்த வீட்டில் இருந்து துரத்தப்படுவது தான்.
ஆனால் குடும்ப வன்முறை சட்டம் அதை தடை செய்கிறது.
இப்போதைய சட்ட நிலை... விவாகரத்து ஏற்படும் வரை, அவளின் பராமரிப்பு குறித்து முடிவாகும்
வரை மட்டுமே அவள் அங்கு தங்கும் உரிமை கோர முடியும். அது அவள் கணவன் பெயரில் இல்லா விட்டாலும், கூட. இன்னும் ஏன்
அது அவளுடைய மாமனார் பெயரில் இருந்தாலும், அவள் கணவனுக்கு அதில் சொத்துரிமை
ஏதும் இல்லை என்றாலும கூட. ,
இதில், பாசுதேவ் என்பவர் அவர் மனைவி சாயாவுக்கு
எதிராக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு முக்கியமானது. திருமணமான பிறகு சாயா, தன கணவருக்கும்
அவர் சகோதரருக்கும் பொதுவான வீட்டில் குடித்தனம் செய்கிறார். ஒரு கட்டத்தில்,
அவரிடமிருந்து பிரிந்து போய், தனியாக வசிக்க தொடங்குகிறார் அவர் கணவர். அத்தோடு நில்லாமல்,
அந்த வீட்டில் தனக்குள்ள பாதி உரிமைக்கு பாதுகாவலராக தன சகோதரரை நியமித்து சாயாவை அந்த
வீட்டை விட்டு காலி செய்ய சொல்கிறார்கள். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள போது...”திருமண
உறவு நீடித்து இருக்கும் போது , சாயா அந்த வீட்டில் வசிக்கும் உரிமையையும் பெறுகிறார்”
என்று தீர்ப்பு சொல்கிறது நீதிமன்றம்.
பொதுவாக கணவர் சொத்து வாங்குவதற்கு தான் சம்பாதித்ததில் சேர்த்த பணத்தில் தான்
சொத்து வாங்குகிறார் என்பதால் அது அவர் பெயருக்கு வாங்கப்படுவதை சமூகம் சாதரணமாக தான்
எடுத்துக்கொள்கிறது அந்த வீட்டிற்காக, தன கணவன் குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக ,
வேலைக்கு போகாமல், வீட்டில் இருந்து குடும்பத்தை நடத்தும் பெண்ணிற்கு, கடைசியில் கிடைப்பது
ஒன்றுமேயில்லை” என்பதை நீதியரசர் கிருஷ்ணன் ராமசாமி தன் தீர்ப்பில் சொல்லும் போது “அட... இதனை
இத்தனை நீதிமன்றங்கள் தவறவிட்ட போது இவர் இவ்வளவு
கூர்மையாக கவனித்திருக்கிறாரே?!”” என்கிற மெல்லிய
சந்தோஷம் ஏற்படுகிறது. .
ஏனென்றால் சொத்துக்கள் குடும்பத்திற்காக வாங்கப்படும் போது , அந்த குடும்ப தலைவர்
என்ற முறையில் ஆணின் பெயரில் தான் பெரும்பாலும் வாங்கப்படுகிறது. யார் பெயரில் சொத்து பதியப்படுகிறதோ, அவர் தான்
அதன் முழு உரிமையாளர் ஆகிறார்.
அது அவருடைய சுய சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்து என்றும் அதனால், அதனை அவர் எப்படிவேண்டுமானாலும்
பயன்படுத்தும் உரிமையை சட்டம் அவருக்கு கொடுக்கிறது. அவராக பார்த்து யாருக்கு வேண்டுமானாலும்
அதை எழுதி கொடுக்கலாம். அல்லது உயிலில் பிரித்து கொடுக்கலாம். அவர் மனைவி பெயரை அதில்
சேர்க்காமல் விட்டிருந்தால் , வாரிசு வரிசையில் முதலாக அந்த பெண் இருந்தாலும்,
உயிலில் அவருக்கும் பங்கு எழுதவில்லைஎன்றால் அவருக்கு சொத்தில் உரிமை ஏதும் கிடையாது. இது தான் இன்றைய சட்ட நிலை.
விவாகரத்து வழக்கின் போது கூட, ஒருவேளை மனைவியும் அந்த சொத்தை வாங்க தன் பங்களிப்பை
செய்திருந்தால், அதற்கான நிதி ஆதாரத்தை காட்ட வேண்டும். அது இல்லையென்றால் ஒன்றும்
சொல்ல முடியாது.
இந்த சூழலில் தான் நீதியரசர் இந்த சந்தோஷமான தீர்ப்பை அளித்திருகிறார்.
வழக்கின் சாராம்சம் இது தான்...
கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தில் மனைவி சேர்த்து வைத்து சொத்து வாங்குகிறார்
...தன் பெயரில். பின்னாளில் தாயகம் திரும்பிய
கணவனுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, விவாகரத்து வழக்கு தொடரப்படுகிறது. கணவன், மனைவி பெயரில் இருக்கும் சொத்துகள் தன் பணத்தை கொண்டு
தான் வாங்கப்பட்டவை என்பதால் அவை தனக்கு சேர
வேண்டியவை என்கிறார். ஆனால் மனைவியோ, தான் எந்த வேலைக்கும் போகாமல், வெளிநாட்டில் இருந்த
கணவன் அனுப்பிய பணத்தை கொண்டு சிக்கனமாக செலவழித்து குடும்பம் நடத்தியதால் சேகரித்த
பணத்தை கொண்டு வாங்கிய சொத்து என்பதால், அதில் தனக்கும் உரிமை உள்ளது என்று வாதிடுகிறார்.
இந்த வழக்கில் தான் நீதியரசர் சொல்வதை
கேளுங்கள்
“ மனைவிகள் தங்கள் வீட்டு வேலைகளைச் செய்வதன்
மூலம் அவர்கள் கணவர்கள் பொருளாதார ரீதியான பணிகளை செய்ய விடுவித்து அதன் மூலம் சொத்து
சேர்க்க உதவுகிறார்கள். இது குடும்பச்
சொத்துகளைப் பெறுவதற்குச் செய்யும் பங்களிப்புபையும் கவனித்தில் கொள்ள இந்த நீதிமன்றம்
விரும்புகிறது.
இது குறித்து சட்டம் ஏதும் சொல்லவில்லை. என்றாலும்., தன் கணவர் சொத்து சேர்க்க வகை செய்யும் விதத்தில்
குடும்பத்தை நடத்தி செல்லும் பெண்ணின் பங்கை
கருத்தில் கொள்ள எந்த தடையும் சட்டத்தில் இல்லை” என்கிறார்.
திருமணத்திற்கு பின் , அவள் தன் கணவன் மற்றும் குழந்தைகளை
கவனித்துக் கொள்வதற்காக தன் வேலையைத்
துறந்தால், அது நியாயமற்ற கஷ்டம் மட்டுமல்ல... கடைசியில் தனது என்று சொல்லிக் கொள்ளக் கூட ஒன்றும்
இல்லாத நிலையில் இருப்பவருக்கு சம பங்கு அளிப்பது தான் நியாயமாகும்” என்கிறார் நீதியரசர்.
‘சாமி’ அல்லவா ..வரம் கொடுத்தால் இப்படித்
தான் அள்ளிக் கொடுக்கும் “!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக