சனி, 30 ஏப்ரல், 2022

வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரமா? சாபமா?










மனைவியை விவாகரத்து செய்தால் ஒரு பைசா கூட ஜீவனாம்சம் தர தேவையில்லை என்றால் தமிழ்நாட்டில் விவாகரத்து வழக்குகள் ஒரே நாளில் ஒரு கோடி தொடும் அல்லவா?

 மனைவியை விவாகரத்து செய்தால் ஒரு பைசா கூட ஜீவனாம்சம் தர தேவையில்லை எனபது இப்போதும் சட்டத்தில் இருக்கிறது. என்ன...அதற்க்கு தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் நிரூபிப்பது.

  1.  மனைவி திருமண உறவை தாண்டிய உறவில் உள்ளார் என்று  அவள் கள்ளத்தொடர்பு  கொள்வது குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியபோத்து, பொங்கி எழுந்த ஆண் குலம், அதற்க்கு முன்னர் தாங்கள் அதை அனுபவித்து வருவதை வசதியாக மறந்து போனார்கள்!!  ஆனாலும் ஒன்று  அந்த காலத்திலிருந்து ஒரு ஆணை இகழ்வாக பேச வேண்டும் என்றால் அவன்  வீட்டில் உள்ள பெண்ணின் ஒழுக்கத்தை தான் தரக்குறைவாக பேசுவது இன்றும் நடக்கிறது. திருமண உறவில் விரிசல் தொடங்கும் பொத்து ஆண் உபயோகப்படுத்தும் முதல் அஸ்திரமே இது தான்.... பெரும்பான்மையான பெண்கள் இந்த அடியிலேயே 'விழுந்து'விடுவார்கள்!1 இன்னொன்றும் கூட..இந்த திருமணத்திற்கு வெளியேயான இந்த உறவை நிரூபிப்பதும் சற்று கடினம்...
  2. தன் வருமானத்தை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறாள் என்னும்போது 
  3. வாழ்க்கை துன்னை இன்னொரு திருமணம் செய்தது கொள்ளும் போது.
  4. ஜீவனாமச  உத்தரவு போட்ட பின்பு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றத்தால், அதாவது வேலையை இழப்பது, நொடித்து போவத்து போன்ற நிலையில், அதனை தெரிவித்து நீதிமன்றத்தில் உத்தரவில் மாற்றம் கோரலாம். அடகே போல மனைவியும், இந்த நிரந்தர வாழ்க்கை  பராமரிப்பு தொகை உத்தரவு போட்டபின்பு, கணவரின் ஊதியத்தில் உயர்வு ஏற்பட்டால், தனக்கு உள்ள பரமாரிப்பு சிக்கலை விவரித்து, ஏற்கனவே நிர்ணயத்த தொகையை உயர்த்த கோரலாம்.

  5. ஒரு மனைவி மற்றவரை விட அதிகமாக சம்பாதிக்கும் போது, ​​அதிக வருமானம் ஈட்டும் மனைவி மற்றவருக்கு நிதிப் பொறுப்பாக இருப்பார்.உதாரணமாக, அவள் வாழ்வதற்கு மட்டுமே போதுமான பணம் சம்பாதிப்பாள், ஆனால் திருமணத்தின் போது சிறந்த வாழ்க்கை முறையை வழிநடத்துகிறாள் என்றால், அந்த வாழ்க்கைத் தரத்தை பராமரிப்பதற்காக அவளுடைய சம்பாதிப்பிற்கு கூடுதலாக பணம் செலுத்துமாறு கணவனை நீதிமன்றம் கேட்கலாம்.
  6.  ஜீவனாம்சத் தொகையைப் பெறும் முன்னாள் மனைவி மறுமணம் செய்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் இறக்கும் வரை அல்லது பணம் செலுத்தும் மனைவி மறையும் வரை கொடுப்பனவுகள் தொடரும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணம் செலுத்துபவர் அவர்களின் இயற்கையான வாழ்நாள் முழுவதும் செலுத்த முடியும். பணம் பெறுபவர் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாத குறிப்பிடத்தக்க மற்றவருடன் வாழ்ந்தாலும், அவர்கள் தொடர்ந்து பணம் பெறலாம். இது அதிகமாக நடக்கும் ஒன்று.குறிப்பாக அந்த ஊனம் முன்னாள் மனைவி வேலையிலிருந்து பணம் பெறுவதைத் தடுக்கிறது அல்லது வேலை செய்யும் திறன் குறைவாக இருந்தால்.

இந்தியாவில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்களின் மதத்திர்கேற்ப அவர்களின் சட்டங்களும் மாறுகின்றன

எப்போதும் கணவர் மட்டுமே நிரந்தர வாழ்க்கை படி கொடுக்க வேண்டுமா?

பொதுவாக, கணவன் தன் மனைவியை அவள் வாழ்நாள் வரை பராமரிக்க வேண்டும் என்றாலும் இந்து திருமண சட்டத்தின் படி, கணவனோ மனைவியோயருவரில் யார் வேண்டுமானாலும், தன்னை தானே பாதுகாத்து கொள்ள இயலா

சமீபத்தில் பாக்யஸ்ரீ v ஜகதீஷ் மேற்கோள் : 2022 லைவ் லா (போம்) 112 என்ற வழக்கில் , கணவர் தன மனைவி மாதம் பதினைதாயிரம் ரூஒபாய் ஜீவனாம்சம் தரவேண்டும் என்று இந்த சட்டபிரிவின் கீச்ழ் வழக்கு தொடர்ந்தார். தன மனைவி கலூரி பெராரிசிரியராக இருப்பாதாக சினார். கணவருக்கு ஒரு மளிகை கடை வைத்திரோதாகவும், ஆட்டோ வைத்து இதன் மூலம் வருமானம் ஈடுவதாக மனைவி தரப்பில் சொல்லப்பட்டாலும், இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இத்தனைக்கும் விவாகரத்து பெறப்பட்ட்ட 23 வருடங்கள் கழித்து இந்த மனுவை தைகள் செய்தார்.





த பொது, மற்றவரிடம் இருந்து இந்த தொகையை கோரி பெறலாம்..இதுவே இருவரும் மனமொத்து விவாகரத்தி கோரும்போது, இருவருக்கும் இடையில் ஏற்படும் ஒப்பந்தப்படி யாருக்கு யார் கொடுப்பது என்பது தீர்மானிக்கப்படும். 
இதுவே இரண்டு தரப்பும் எதிர்த்து வழக்கு நடத்தும்போது, நீதிமன்றம் இந்த தொகையை முடிவு செய்யும். 

அப்போது என்னவெல்லாம் கணக்கில் கொள்ளும் தெரியுமா? 

  1. கணவரின் நிலை அவரது வருமானம், அவரது சொத்துக்கள் மற்றும் அவரது வாழ்க்கை முறை
  2. மனைவியின் நியாயமான தேவைகள்\
  3.  நீதிமன்றம் கணவரின் நிலை மட்டுமல்ல, மனைவியின் நிலை மற்றும் சூழ்நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும். மனைவி வேலை செய்து நல்ல சம்பளம் வாங்கும் பட்சத்தில், நீதிமன்றம் அதை கணவரின் வருமானத்துடன் கருத்தில் கொண்டு, வழக்கின் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனைவிக்கு ஜீவனாம்சம்  வழங்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும்.  


ஆனால்.....சிறப்பு திருமண சட்டம் .  1954 படி மனைவி மட்டுமே இத கோரி பெறலாம்.\\ 
இதுவே ஜீவனாம்சம் சரியான நேரத்தில் வழங்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றியதும், துணை வாழ்க்கைத் துணைக்கு ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும். சரியான நேரத்தில் பணம் செலுத்தப்படாவிட்டால், விளைவுகள் உள்ளன; தண்டனைகள் போன்ற மனைவிக்கு எதிராக நீதிமன்றம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம்


புதன், 27 ஏப்ரல், 2022

எனது தந்தை சொத்தின் மீது நான் எனக்கு (பணம் கட்டியவர்) உரிமை உள்ளதா? என் தந்தை வாங்கிய அடமான விட்டு கடன் கூட்டு வட்டி மற்றும் அசல் என முழு கடனையும் என் சுய சம்பாத்தியம் முலம் அடைத்து அடமான கடன் பத்திரத்தை மீட்டேன்


 https://www.youtube.com/channel/UCVWEar2R5mwMTP7YBlbRL3Q                   நண்பர்களுக்கு  வணக்கம். 

பெரும்பான்மையான நபர்களின் மனதில் உள்ளது  தான் இந்த கேள்வி.  ஆனால்  இது பற்றி கேட்டால் எங்கே நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ, சொத்திற்கு ஆசைப்படுகிறான் என்ற பேர்  கெட்டு விடுமோ என்று  கேட்காமலும், உள்ளுக்குள்ளே இந்த கேள்வி மனதை அரித்துக் கொண்டும் இருக்கும்.

நம் கூட பிறந்தவர் சிலர் இருப்பார்கள்.  ஆனால் நாம் மட்டுமே அப்பாவின் கடனை அடைத்து, வீட்டை கடனிலிருந்து மீட்டிருப்போம். இதற்கு உரிய முன்னுரிமை,  வீட்டின் சொத்து உரிமை மாறும்போது, கிடைக் குமா ? என்ற கேள்வி உள்ளுக்குள் இருக்கும்.  அப்படி கிடைக்காமல் போனால்.... என்ன செய்வது? நீதிமன்றத்திற்கு போகலாமா என்ற தடுமாற்றம் இருக்கும்....

அதுவும்  பரம்பரை சொத்து என்றாலாவது பரவாயில்லை உறுதியாக நம் பங்கு கிடைக்கும், ஆனால் அப்பாவின் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்து என்றால்... அதை அவர் விருப்பம் போல யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். என்று சட்டம் சொல்லும் போது ...!!

இதே போன்று, எனக்கு தெரிந்தவர் வீட்டில் நடந்தை சொல்கிறேன். 

அந்த குடும்பத்தின் வருமானம் ஈட்டக்கூடிய ஒரே நபரான அந்த குடும்பத்  தலைவர்   இறந்து விடுகிறார்.  பிள்ளைகள் எல்லாம் பள்ளிப் பருவத்தில் தான் உள்ளனர். இருக்கும் ஆண் பிள்ளைகளில் மூத்தவன் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். அடுத்து என்ன செய்ய...?  அவன் படிப்பு நிறுத்தப் படுகிறது.... அப்பா பார்த்துக் கொண்டிருந்த  கடையை இவன் பார்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். வீடு ஓட்டு வீடு என்றாலும் சொந்த வீடு.  வாடகை பிரச்சினை இல்லை.  ஏதோ வாழ்க்கை வண்டி மெதுவாக அசைந்து நகர ஆரம்பிக்க, , இவனும் கடையை நன்றாக நடத்த ஆரம்பித்து, அதில் வரும் இலாபத்துடன் வீட்டின் பேரில் கடனும் வாங்கி,  இரண்டு மாடி வீடாக கட்டுகிறான். அடுத்து திருமணம் ....ஒவ்வொருவருக்காக நடக்க ஆரம்பிக்க. வீட்டின் உரிமை பிரச்சினை தலை எடுக்கிறது. 

வீட்டின் தற்போதைய நிலைக்கு மூத்தவன் காரணம் என்றாலும், அப்பாவின் கடையால தானே அந்த பணமே வந்தது, அதனால் அதிகபட்ச உரிமை எடுத்துக்  கொள்ள முடியாது, எல்லோருக்கும் சம பங்கு தான் என்கிறார்கள் மற்றவர்கள்...

இவன் நினைத்தால்,  இதை பெரும் பிரச்சினை ஆக்கி, சண்டை யிட்டு, அதிக பங்கு கேட்டு கோர்டுக்கு மற்றவர்களையும் இழுத்து, வருடக்கணக்கில் இழுத்தடித்து இருக்கலாம்.  அதற்கு மாறாக அவன் எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொண்டான். மூத்த  ஆண் பிள்ளையாக, தன்  கடமையைத் தான் செய்தேன் என்றான்.   தனக்கு கொடுத்த பங்கை வாங்கிக் கொண்டு, தனியே வீடு வாங்கி  தன் குடித்தனத்தை தொடர்ந்தான்.  சட்டத்தின் பார்வையில் இது தான் நடக்கும்.  ஆனால் தர்மம் என்று ஒன்றுள்ளதே...அதன் பார்வையில், அவன் பிள்ளைகள் இன்று நன்றாக படித்து, பெரிய உத்தியோகத்தில் உள்ளனர். மற்றவர்களின் குடும்பம் பற்றி ..........ஒன்றும்  சொல்ல வேண்டாம்.

இதை எதற்கு இங்கு சொல்கிறேன் என்றால், சிலவற்றிற்கு கணக்கு பார்க்கக்  கூடாது.."உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது"  என்பார்கள் அதைத்  தான் இங்கு நான் சொல்ல வருவது.  பெற்ற தாய், தந்தை, எந்த குழந்தைக்கும் குறைவில்லாமல் பராமரிப்பது அவர்கள் கடமை என்றால், 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்" என்னும்  குறள் நி னைவிற்கு வருகிறதா? 

தந்தையின் கடமை என்று வரும் போதே மகனுக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது தானே...மற்ற பிள்ளைகள் தங்கள் கடமையை செய்தார்களா என்ற கேள்வி வேண்டாம். நாம் சரியாக நம் கடமையை செய்தோமா?  அப்பா வாங்கிய கடனை பிள்ளை அடை ப்பது அவன் கடன் தானே? அப்பா நம்மை வளர்ப் பதற்கு ஆன செலவை நம்மிடம் எதிர்பார்த்தாரா? இல்லையே ..... அது போலத்  தான் இதுவும்....

 "இது எப்படி சரியாகும்," கடனை அடைக்க உதவாத மற்ற பிள்ளைகளும் கடனை அடைத்த நானும் ஒரே பங்கு தான்  பெற வேண்டுமா?   எனக்கு கூட எழுதி வைக்காமல் வேறு ஒரு பிள்ளைக்கு அப்பா எழுதி வைத்தால் என்ன செய்வது| ? செலவு செய்த பணத்திற்கு கூட கொஞ்சம் கொத்தில் பங்கு  கிடைப்பது தானே நியாயம்? எ ன்று கேட்கலாம்.  ஆனால்  நீதி தேவதை கண்ணை மூடிக்  கொண்டிருக்கிறாள் தானே?  . அவளுக்கு நீங்கள் செலவு செய்தது தெரியாது.    பரம்பரை சொத்து என்றால், அனைத்து பிள்ளைகளுக்கும் சம உரிமை என்பதும்  சுய சம்பாத்திய சொத்து என்றால் அப்பா அவருக்கு பிடித்த யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம் என்பது மட்டும்  தான் தெரியும்.  வேண்டுமானால் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு , அந்த சொத்திற்காக நாம் செலவு செய்ததை காட்டி , கூட கொஞ்சம் பங்கு கேட்கலாம் தான்,,,அல்லது மொத்த சொத்தும்  நமக்கே சொந்தம் என்று வழக்கு போட்டு வாதாடலாம் தான். ..நீதி தேவதை அதையெல்லாம் குறித்து கொள்வாள்...அதற்கேற்ப தன நிலைப் பாட்டை  மாற்றி தீர்ப்பு  சொல்லலாம் தான் ...

ஆனால் ...நம் நாட்டின் தலை நீதிமன்றமான மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் கொள்கை என்ன தெரியுமா??

யதோ தர்மஸ்ததோ ஜயா


"எங்கு தர்மம் இருக்கறதோ அங்கு ஜெயம் (வெற்றி) உண்டு".

உச்ச நீதிமன்றத்தின் நோக்கமே இது வென்றால் நீதி வழங்குவது இல்லையா என்ற கேள்வி வரலாம்.  நீதி எண்பது சூழ்நிலைக்கேற்ப மாறக்  கூடியது.  கொலை செய்வது குற்றம் என்றால் அதை தன்  தற்காப்புக்காக செய்தால் அது குற்றம் அல்ல என்கிறது சட்டப்  புத்தகம்.  ஆனால் தர்மம் என்பது என்றும் நிலைத்தது. அதனால் தான் ,  நீதியின் வழியில் சென்று தர்மத்தை அடைவதே நீதிமன்றங்களின் தலையாய பணி  எனப்படுகிறது.   அதன் அடிப்படையில்சொத்து உரிமையை அப்பா மாற்றி எழுதும்போது,  நமக்கு வேண்டுமானால்,  நாம் செலவு செய்த பணம் நமக்கு கிடைக்காமல் போகலாம்.  ஆனால் அதை அமைதியுடன் ஏற்றுக் கொண்டால், தர்மம் தலை காக்கும்.  நம் குடும்பத்தின் தலையும் நிமிரும்.. இது அனுபவ பூர்வமாக நான் கண்டுணர்ந்த  உண்மை. 

எல்லாவற்றிற்கும் நீதிமன்றத்தின்  கதவை தட்டி, நம் கைப் பொருளையும் நேரத்தையும் வீணாக்கி,மனம் நொந்து அலைக்கழிக்கப் படுவதை விட,  மாறக்கூடியது எது,  மாறாதது எது ,இரண்டிற்கும்  உள்ள வித்யாசம் என்ன என்பதையும் உணர்ந்து செயல் படுவது தான் விவேகம் உள்ளவரின் வழி. 

நாமும் அந்த வழியை சார்ந்தவர்கள் தானே?


ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

கணக்கில் பணம் இல்லையென காசோலையை திருப்பினால் சட்டப்படி குற்றம் என்பதை மத்திய நிதி அமைச்சகம் ஏன் குற்றமில்லை என திருத்துகிறது ?

 இந்தியாவில் தொழில் செய்வதை சுலபமாக்கவும், நீதிமன்றகளிலும் சிறையிலும் உள்ள வழக்கு தேக்க நிலையை குறைக்கவும் நிதித்துறை அமைச்சகம் சமீபத்தில் , வெவவேறு சட்டங்களில் உள்ள 39 குற்றப்பிரிவுகளை குற்றத்தன்மையிலிருந்து நீக்க ஆலோசனை /கருத்து கேட்டு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் தான் செலாவணிச் சட்டம்… அதாங்க Negotiable Instruments Act, பிரிவு 138 தான் அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.

இந்த சட்டம் 1881 இயற்றப்பட்டாலும். இந்த குற்றப் பிரிவுகள் 138 முதல் 142 ஆகியவை 1988 ஆண்டு ஒரு சட்டத்திருத்தம் மூலம் கொண்டு வரப்பட்டது..

அப்படி என்ன முக்கியத்துவம் அந்த பிரிவு 138 ல் உள்ளது?

காசோலை பணம் இல்லை அல்லது வேறு குறிப்பிட்ட காரணத்தினால் திருப்பப பட்டால், தவறிழைத்தவர் இரண்டு வருடம் வரை நீளக்கூடிய சிறைத் தண்டனையோ, காசோலைப் பணத்தைப்போல இரு மடங்கு விதிக்ககூடிய அபராதமோ, அல்லது இரண்டுமோ தண்டனையாகப் பெற வேண்டும். .

நன்றி கூகிள்

சரி திடீரென இந்த குற்றத்தன்மை நீக்கம் குறித்த ஆலோசனை எதற்கு?

சட்டக் கமிசனின் சமீபத்திய அறிக்கையின்படி 38 லட்சத்திற்கும் மேற்பட்ட காசோலை மோசடி வழக்குகள் நாடெங்கிலும் உள்ள பல்வேறு நீதிமன்றகளில் நிலுவையில் உள்ளது என்றும் 7.6 லட்சம் வழக்குகள் டெல்லியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மட்டும் நிலுவையில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

(1) இந்த அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் உள்ளது, நம்முடைய தொழில் முன்னேற்றத்தில் பெரும் தேக்க நிலையை உருவாக்கி உள்ளது.

(௨) அதோடு இல்லாமல், அவை மற்ற முக்கியமான, சீரியசான வழக்குகள் பின் தள்ளப்பட்டு அதனால் பொதுமக்களுக்கும வழக்கு நடத்துபவர்களுக்கும் நீதித்துறையின் மேல் நம்பிக்கை குறைய காரணமாகிறது என்றும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

எனவே சிறு வழக்குகள் என்ற தரம் பிரிக்ககூடிய குற்றப் பிரிவுகள் குறித்து பட்டியல் தயார் செய்யப்பட்டது.

  1. இந்த 138 பிரிவு என்பது குற்றத்தன்மைக் கொண்டு பார்க்கும்போது, சிறிய குற்றமாகும். மேலும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 420 (Cheating) கீழும் பாதிக்கப்பட்டவர் புகார் மனு கொடுக்கலாம் என்று இருக்கும்போது இன்னொரு குற்றப் பிரிவு அதே குற்றத்திற்கு தேவையில்லை எனக் கருதப்பட்டது.
  2. மேலும் இந்த குற்றப் பிரிவின் தீவிரத்தன்மையானது ஏற்கெனவே, இந்த சட்டத்தில் பிரிவு 147 புகுத்தப்பட்டபோது , குறைக்கப்பட்டுவிட்டது. அது என்னவென்றால், இரண்டு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்திக் கொண்டால், குற்றவாளி மீதிருக்கும் குற்றம் விலக்கி கொள்ளலாம் என்பதே.
  3. அடுத்து, இந்த குற்றப் பிரிவு பெரும்பாலும் சிவில் தன்மை கொண்ட பிரச்சினைகளுடன் இனைந்து வருகிறது என்னும்போது அதற்கான தீர்வு சிவிலிலேயே கிடைக்கிறது.
  4. எனவே சிவில் தன்மை கொண்ட நடவடிக்கைகளுக்கு சிறைத் தண்டனை போன்றவை சொல்லப்படும்போது, அது அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே சிவில் தன்மை கொண்ட ஒரு வழக்கை குற்றத் தன்மை கொண்டதாக காணும்போது, நியாயமான நீதி விசாரணை என்பதும் அடிபடுகிறது.

இவையெல்லாம் தான் இந்த அறிவிப்பு வெளியாகக் காரணம்.

ஆனால் அதே சமயம், ஒரு சிவில் சட்டத்திற்கும் குற்றவியல் சட்டத்திற்கும் உள்ள வேறுபாடே, சமூகத்தில் 'குற்றவாளி' என்ற அடைமொழி கொடுப்பதால், ஏற்படும் பாதிப்பு ஆகும். அந்த பெயருடன், வேலை கிடைப்பதில் உள்ள சிரமம், பொதுப் பணியில் ஈடுபட உள்ள தடை, ……இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் தான் இந்த காசோலை மோசடி வழக்கினை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தினை குற்றவாளிக்கு கொடுப்பது. ஆனால் சிவில் தன்மை கொண்ட வழக்கு நிலுவையில் இருந்தால் எந்த வித கெட்ட பெயரும் ஒருவருக்கு ஏற்படுவதில்லை.

இன்னொரூ முக்கிய விஷயம் குற்ற வழக்குகளை பொறுத்து, அவர் குற்றவாளி என்பதை நிரூபிப்பது அரசுத் தரப்பை சேர்ந்தது. ஆனால், சிவில் வழக்கைப் பொறுத்து யார் எந்த கட்சி செய்கிறாரோ அவரை பொறுத்தது.

இவையெல்லாம் காசோலை மோசடி வழக்கின் குற்றத் தன்மையை மாற்றும் முன் கவனிக்க வேண்டியது.

எந்த வித மாற்றம் கொண்டு வந்தாலும், அது தெளிவாகவும், ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், துரித பலன் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதே நம்முடைய அவா.

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...