வியாழன், 30 மார்ச், 2023

மோட்டார் வாகன விபத்தில் கணவர் இறந்ததற்கு நஷ்டஈடு கோரிய பெண், மறுமணம் செய்தால், அது கிடைக்குமா? சட்டம் என்ன சொல்கிறது ?

    கணேஷ் ஒரு மோட்டார் பைக்கில் பின்புறம் உட்கார்ந்து செல்லும் போது , விபத்து ஏற்படுகிறது.  விபத்தை ஏற்படுத்தியதென்னவோ மோசமாக ஓட்டி வரப்பட்ட ஒரு ஆட்டோவினால் தான். சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இறந்து விடுகிறார். 

அப்போது அவர் மனைவி பாக்கியஸ்ரீக்கு 19 வயது தான். விபத்துக்கான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுக்கிறார்.  வழக்கு நிலுவையில் இருக்கும்  போது மறுமணம் செய்துக் கொள்கிறார். இதை தான் காரணமாக கொண்டு நஷ்டஈடு தர மறுக்கிறது இன்சூரன்ஸ் நிறுவனம்.  இத்தனைக்கும் இந்த வாதத்தை எடுத்து வைத்த அந்த இப்கோ டோக்கியோ நிறுவனத்தின் அதிகப்படி பங்குகளை வைத்திருப்பது டோக்கியோவில் உள்ள பெரிய காப்பீடு நிறுவனம் .

ஒரு வேளை ஜப்பான் பெண்கள் அவர்கள் கணவர் இறந்த பின் மறுமணம் செய்ய மாட்டார்களா என்ன?  

அதே சமயம், வேறு ஒரு காரணத்தையும் சொன்னது மறுப்பதற்கு.  

அந்த ஆட்டோ அனுமதிக்கப்பட்ட எல்லையை தாண்டி பயணம் செய்ததாம்...

அதற்கான சாட்சியம் கொடுக்காததால், அந்த வாதம் ஏற்கப்படவில்லை .

மிஞ்சி நிற்கும் ஒரே காரணம், அவள் மறுமணம் செய்துக் கொண்டாள் என்பது தான். 

இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் 

இறந்து போன கணவனுக்குண்டான நஷ்டஈடு கிடைக்கும் காலம் வரைக்கும் ஒரு பெண்  மறுமணம் செய்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது.  விபத்து நடந்த போது, இறந்தவரின் மனைவியாக அவர் இருந்தார் என்பதே போதுமானது. மறுமணம் செய்ததாலேயே  நஷ்டஈடு பெறுவதில் இருந்து  அவரை விலக்க முடியாது " என்று நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.


இதை படிக்கும் போது என் மனதில் தோன்றிய எண்ணம் ...

"மனைவி இறந்த பின் மறுமணம் செய்துக் கொண்ட கணவனுக்கு நஷ்டஈடு கிடையாது " என்று யாரும் வாதிட்டதாக தெரியவில்லையே ?

 இதே போல தானே அரசாங்க ஊழியரான கணவன் இறந்த பின் கருணை அடிப்படையில்   வேலை கோருவதற்கு மறுமணம் செய்துக் கொண்ட மனைவிக்கு உரிமை இல்லை என்ற வாதத்தை உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் நிராகரித்து வருகின்றன. இருந்தும் இந்த அவல நிலை ஆங்காங்கே வரும் போது நீதிமன்றங்கள் தலையிட்டு அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி அளிக்கின்றன.

 சமீபத்தில் அலஹாபாத் உயர்  நீதிமன்றம் கூட  இது போன்ற ஒரு தீர்ப்பை கொடுத்துள்ளது.  அது துணை நின்றது பெண்ணிற்கல்ல... ஒரு ஆணிற்கு ..

  இந்த வழக்கு சற்று சுவாரசியமானது .. இறந்த மனைவியினால் கருணை அடிப்படையில் வேளை பெறுகிறார் முஹம்மத் ஹைதர்.  பின்  இறந்த மனைவியின் தங்கையை திருமணம் செய்ய வரும்பி அனுமதி கோருகிறார்.  அது மறுக்கப்படுகிறது. நிவாரணம் கோரி நீதிமன்ற படியில் கால் வைக்கும் அவருக்கு அனுசரணையாக சொல்கிறது உயர் நீதிமன்றம்...

மறுமணம் செய்ய அனுமதி வாங்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. கருணை அடிப்படையில் வேலை கொடுக்கபடுவதே, இறந்த ஊழியரின் குடும்பத்தை அவர் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே . மற்றபடி  திருமணமோ, மறுமணமோ அது அவரின் அடிப்படை உரிமை அதில் எந்த விதியும் குறுக்கிட முடியாது . அதனால் மறுமணம் செய்ய அனுமதி கோர வேண்டிய தேவையே இல்லாத போது, மனுதாரர் அதை கேட்டு நீதிமன்றம் வந்ததும் தேவையில்லாதது " என்றது. 

உண்மையில் விதவை மறுமண சட்டம் தான் கொண்டுவரப்பட்டது... மனைவியை இழந்த கணவன் மறுமணம் செய்ய எந்த தடையும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. 

அதனால் பெண்ணிற்கு மட்டுமே சிறப்பு சலுகையை சட்டமும் நீதிமன்றங்களும் காட்டுகின்றன என்று பொதுவாக நினைக்காமல், தேவைப்படும்  நேரத்தில் தேவைப்படும் இடத்தில், இன வித்யாசம் இல்லாமல் தான் நீதிமன்றங்கள் உத்தரவுகள் போடுகின்றன என்பதை நாம் அறியவேண்டும் . 

  நாம் தான் ஆணிற்கு திருமணம் ஆனாலும் தந்தையில் சொத்தில் பங்கு உண்டு:  ஆனால் அதுவே திருமணமான பெண்ணிற்கு அது கிடையாது என்று பிரித்து வைத்தோம்.  அந்த வித்தியாசத்தை களைய உச்ச நீதிமன்றம் வர வேண்டியிருந்தது.  

  திருமணமான ஆண், திருமண உறவிற்கு வெளியில் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை சமூகம் அங்கீகரித்தது . அதற்கு "சின்ன வீடு", "தொடுப்பு" , "சக்களத்தி " ,என்றுமம் சற்று கவுரமாக 'துணைவி'  பெயர் சூட்டி அழகு பார்த்தது. அது அவன் ஆண்மைக்கு அடையாளமாம். இதில் அந்த முதல் மனைவி புகார் கொடுத்தால் தான் அந்த கணவன் மீதே புகார் பதியும்  

  ஆனால்  பெண்ணின் நிலை. ..

 1881 -1886 ல் சென்னை மாகாண கவர்னராக இருந்த ராபர்ட் பவுர்க்கின் மனைவி லேடி கன்னிமரா, தன கணவனின் வெளி தொடர்பை நேரில் கண்டு கோபமுற்று,  தன் இல்லத்தை விட்டு நீங்கி தனியாக கிளமிபி வந்து இந்த மாளிகையில் தங்கினார்(அந்த காலத்தில் அது அபூர்வம்)  என்பதால் தானே அதற்கு 'கன்னிமாரா ஹோட்டல் " என்ற பெயரே வந்தது என்று சென்னை வரலாறு தெரிந்தவர்கள் சொல்வார்கள்.!! 


இந்த வேறுபாட்டை களையத்தான் , பெண்ணை 'ஒரு பண்டமாக ' ஆண் கொண்டிருந்த நிலையை 

ஒருவனுடைய பொருளை இன்னொருவன் திருடினால் தானே அது 'திருட்டு'  அதுவும் ஒரு பெண்ணின் கணவனை இன்னொரு பெண் கவர்வது குற்றமாக இல்லாத நிலையில், 

  சமன் செய்யவே ' கள்ள உறவு ' கொள்வது குற்றம் என்று இருந்த பிரிவை உச்ச நீதிமன்றம் நீக்கியது  ஆனால் அதற்கு எழுந்த விமர்சனங்கள் இருக்கிறதே...அப்பப்பா .ஏதோ நீதிமன்றம் தான் இவர்கள் உறவில் ஏற்பட்ட விரிசலை அதிகப்படுத்தியது போல... 

 முன்னர் பெண்ணிற்கு இருந்த நிலை என்ன? 
கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டால், பிடித்தால் தொடர்ந்து அவனுடன் குடும்பம் நடத்தலாம்.  இல்லையெனில் விலகி விடலாம்.  அதே போன்ற நிலையை இன்று ஆணிற்கும் அளித்துள்ளது. திருமண உறவிற்கு வெளியே தொடர்பு கொள்ளும் பெண்ணிற்கு எதிராக இதை காரணம் காட்டி அவன் விவாகரத்து பெறலாம். 

இது தானே சம நீதி ....இதை சரியான மனப் பக்குவத்தொடு அணுகினால் தான் விவரம் புரியும். 

உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆணிற்கு எளிதாக கிடைக்கும் எதையும் ஒரு பெண் போராடி தான் பெற முடிகிறது என்பது தான் நிதர்சனம்.

எத்தனை சிறப்பு சட்டங்கள் போட்டும் என்ன.  

இன்றைய தேதியில் ஒரு பெண் நீதிபதி கூட எந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை தானே !!??

 

 



 

 

ஞாயிறு, 19 மார்ச், 2023

If the judgement based on which a Court verdict is passed is reversed, whether this judgement also fails?


Profile photo for Shirijha Subramanian

Hon’ble Justice BV Nagarathna

I like her way of interpretatition of Law which are to the point.

Two days back, the Divison Bench consisting of M.R.Shah along with Justice BV Nagarathna decided on the scope of Review ஒப் judgements where the judgment relied on in the impugned order and all subsequent judgment that followed it is, are overruled by a Superior court. While Justice Shah allowed the Petitions that it can be a ground for Review, Her Lordship disagreed with the same and pointed towards the Explanation to Order 47 Rule 1 of Civil Procedure Code which deals with applications seeking review of the Judgements.

Before going into that, I want to say that how this Judgement is a breaking one and long awaited decision, though due to split verdict, still it has not reached the finality.

what is the purpose of bring a New Act?

because,…

We all know though Acquisition of Lands from the Private owners is an ultimate necessity one, yet, The Old Act, i.e. Land Acquisition Act 1894 made government's acquisition of land possible, even without adequate…what without any compensation and employment opportunities for the displaced people. Therefore the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act Of 2013 was ratified with an intent for regulation of land acquisition. it laid down the process and directions for reimbursement, reintegration and relocation of the affected persons in the Land Acquisition proceedings.

Though this Act was brought in 2013, it came into force from 1.1.2014. But what about the land Acquisition proceedings that were initiated and pending at that time?

for that purpose only, section 24 of the said Act is introduced which deals with the saving clause of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement, 2013.

it says

(1) where no award has been made, then, all provisions of this Act relating to the determination of compensation shall apply; when award is made, the Earlier Act will continue.

But what about the Award passed, but no compensation given (as usual) cases??

that is dealt by Section 24 (2) which says that,

>> where award is passed and no compensation awarded five years or more prior to the commencement of this Act but if the physical possession of the land has not been taken or the compensation has not been paid, then the said proceedings shall be deemed to have lapsed and the Government, if it so chooses, shall initiate the proceedings of such land acquisition afresh in accordance with the provisions of this Act:

>> where an award has been made and compensation in respect of a majority of land holdings has not been deposited in the account of the beneficiaries, then, all beneficiaries specified in the notification for acquisition under section 4 of the said Land Acquisition Act, shall be entitled to compensation in accordance with the provisions of this Act.

This above mentioned proviso has been dealt by Three Judges Bench of Hon’ble Supreme Court comprising of Justice Lokur, Justice Joseph and Justice Lodha in 2014 In the case of Pune Municipal Corpn. v. Harakchand Solanki (2013 (3) SCC 183) and held that “ deposit of compensation amount in the government treasury is of no avail and cannot be held to be equivalent to compensation paid to the landowners/persons interested”. The court remarkably said that “ if such compensation is not paid to the landowner then “the subject land acquisition proceedings shall be deemed to have lapsed under Section 24(2) of the 2013 Act”.

This case was a breaking one at that time as most of the Government departments were in continuing habit of proceeding with Land Acquisition proceedings without worrying about the handing over of the compensation to the rightful owners.

But in 2020 came a twist.

In Indore Development Authority v. Shailendra another Three Judge Bench of the Hon’ble Supreme Court disagrees with the said ruling and held that “ even the deposit of money in Government treaty it self is sufficient and it is not necessary it should be in Court derposit and hence can be concluded that compensatiuon has been duly made by the government’

But Now another Question arise….

Whether a Three judge bench can reverse another three Judge Bence decision?

hence the case was referred to a larger Bench. But the larger Bench ( 5 Judges) also consists of Justice Arun Mishra who headed the earlier Three Judge Bench. in Indore case. Inspite of specific request made, he refused to recuse from the case and passed the verdicit confirming (!!) the ruling passed by the Three Judge Bench headed by him.

  1. Former Chief Justice of India, Sharad A. Bobde also questioned the infallibility of the Constitution Bench judgment in Indore 
  2. Development Authority (5-Judge Bench) delivered by Justice Arun Mishra. Justice Bobde said the order gifted the Government “laxity” in several aspects, which even Parliament did not bother to provide under the 2013 Act. “The judgment has given the Government laxity, which Parliament did not want the Government to have. Parliament had said the Government cannot do this, the law said the compensation should not be kept pending … the Government cannot just take over land and not pay compensation.” Chief Justice Bobde said:  

So what next……

after getting a favourable verdict on their side, will government keep quiet??

the present batch of petitions have been filed by land acquiring authorities/States seeking reviewof the judgements passed on the basis of Pune Municipal Corpn ruling, dismissing their petitions.

But When a Review of Judgements passed, will be considered?

only when the following situations arise….

(1) due to discovery of new and important matter or evidence which, after exercise of due diligence was not within the knowledge of the person aggrieved and could not be produced in time before the Court.

(2) due to the mistake or error apparent on the face of the record

(3) on account of any other sufficient reasons

On the Background of these facts only Her Lordship has considered and passed her verdict which becomes the Breaking News recently…

the petitions are filed on the ground of “other sufficient reasons”. Her Lordship felt that though the said reason is a wider one, it should be analogous to the other grounds.

She felt that though the case law on the basis of which the Judgement is reversed in a subsequent period, still the verdict is applicable to the concerned parties.

I still remember that In Atam Prakash v. State of Haryana, the Apex Court held that the suits which have been decreed and such decrees have become final since no appeals have been filed against the same, the said decrees are binding inter-parties and the declaration made by the Supreme Court is of no avail to the parties thereto.

  1. In this case The court was dealing with some suits which were pending in various courts, where decrees have been passed, appeals were pending in appellate courts. In this regard, the Court opined that: (…) 
  2. Such suits and appeals will now be disposed of in accordance with the 
  3. declaration granted by us. We are told that there are a few cases where suits have been decreed and the decrees have become final, no appeals having been filed against those decrees. The decrees will be binding inter-parties and the declaration granted by us will be of no avail to the parties thereto.  

She recalled The doctrine of res judicata which we know, is based on three Roman maxims:

(a) Nemo debet bis vaxari pro una et eadem causa (no man should be vexed twice for the same cause);

(b) interest reipublicae ut sit finislitium (it is in the interest of the State that there should be an end to a litigation);

(c) re judicata pro veritate occipitur (a judicial decision must be accepted as correct).

Pointing out The Explanation to Order XLVII Rule 1 of Civil Procedure Cose reads as

"a fact that the decision on a question of law on which the judgment of the Court is based has a fact that the decision on a question of law on which the judgment of the Court is based has been reversed or modified by the subsequent decision of a Superior Court in any other case shall not be a ground for review of the reversed judgement"

She opined that if the decision of a case is to be reopened based upon the subsequent decison, then there would not be any finality of the judgements. even if a judgement is subssequently held toi be erroneaous, it is binging upon the partiesd concerned. she has opined that there must an end to an litigation.

Imagine.. if cases are allowed as the judgements relied on in their verdict is reversed, Will it not open the flood gates of the Litigation and when can we reach the finality??

More often, We forget that the Courts are here only to declare whether a Law is constitutional or not..

not to enact or repeal it..

It can only pass a Judgement having a prospective effect. i.e. which will have an impact on subsequent decisions.

and cannot be on retrospective effect and it is the job of the Parlimentarians and Legislatures….

Have We sent such Worthy People Representatives??

A question to ponder….

Case Law:: Govt. of NCT of Delhi Through the Secretary, Land and Building Department And Anr. v. M/s. K.L. Rathi Steels Limited And Ors


My answer to  https://www.quora.com/Can-you-give-an-example-of-something-a-judge-has-written-in-a-court-ruling-or-opinion/answer/Shirijha-Subramanian?ch=15&oid=1477743651407445&share=522a23e4&srid=PdVt&target_type=answer

ஞாயிறு, 12 மார்ச், 2023

ஒப்பந்தத்தை மீறுவது ஏமாற்றுவது இல்லையா?

ஒப்பந்தத்தை மீறுவது மட்டுமே ஏமாற்றுவதாகாது  என்று தான் சமீபத்திய வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.  

அப்படியானால் எது தான் ஏமாற்றுவது?   

ஒப்பந்தத்தை மீறுபவர்கள் , அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மீறியது போலத் தானே..அப்படியானால் அது ஏமாற்றுதல் இல்லையா? உச்ச நீதிமன்றம் ஏன் அப்படி சொன்னது என்ற கேள்விகள் எழலாம்.  

அதற்கு நாம் அந்த தீர்ப்பு வந்த வழக்கின் விவரத்தை பார்க்க வேண்டும்.  

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தை நாடியவர் பெயர் சரப் ஜீத் கவுர் . இவர் மீது தான் ஏமாற்றுதல்,  குற்ற எண்ணத்துடன் சதி செயல்,  தூண்டுதல்  போன்ற குற்றங்களை செய்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. . அதற்கு காரணமே புகார்தாரர் கொடுத்த மூன்றாவது புகார் தான்.  

மூன்றாவது புகாரா?

அப்படியானால் முதல் இரண்டு இரண்டு புகார்கள்??

அவைக்கு மூலமும கூட ,  இதே சம்பவங்கள் தான். ஆனால் அவற்றில் எல்லாம், ஒப்பந்தப்படி கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று தான் கேட்டிருந்தார் புகார்தாரர்/ . அவற்றில் மேல்முறையீட்டாளர் ஏமாற்றியதாக சொல்லப்படவேயில்லை.  இன்னொன்று அந்த புகார்கள் எல்லாம், அந்த சொத்துகளை கவனித்துக் கொண்டவர்கள் மீது தான் கொடுக்கப்பட்டன. இந்த நபரின் மீது அல்ல. 

போலிஸ் விசாரணையின் போது,  இதில் எந்த குற்ற சம்பவமும் இல்லை என்பதால், புகார்தாரர் சிவில் நீதிமன்றத்தை நாடுமாறு சொல்லப்பட்டது.

இரண்டாவது புகாருக்கும் இதே நிலை தான். 

இதில் தோல்வியுற்ற புகார்தாரர் தான்  மூன்றாவது புகாரரில், இவரின் பெயரையும் சேர்த்து, மேற்சொன்ன குற்றங்கள் செய்ததாக புகார் கொடுக்க இவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு விட்டது.

இவர் உடனே இந்த சம்பவம் நடந்த ஆளுகை கொண்ட பஞ்சாப் உயர் நீதிமன்றத்தை நாடுகிறார். .. இந்த எப். ஐ/ ஆர் ஐ ரத்து செய்ய.  ஆனால் உயர் நீதிமன்றம் மறுத்து விடுகிறது.  அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் உச்ச நீதிமன்றம் முதல் வரியில் சொன்ன தீர்ப்பை சொன்னது. 

அதற்காக ஏமாற்றியவர்களை எப்படி தான் தண்டிப்பதாம்? என்ற கேள்வி உள்ளுக்குள் எழலாம். 

வழக்கு சம்பவங்களை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் தெரிந்துக்  கொண்டது என்னவென்றால், தன் பணத்தை திரும்ப கொடுக்குமாறு இவர் மீது அழுத்தம் கொடுக்கவே புகார்தாரர் இப்படியொரு  புகாரை கொடுத்திருக்கிறார் என்பதே.  

இதில் என்ன தவறு..சொத்து வாங்க கொடுத்த முன்பணத்தை திரும்ப பெற நினைத்து அவர் செய்ததில்  தவறென்ன? என்று நீங்கள் கேட்கலாம். 

வழக்கு ஆவணங்களை பரிசீலனை செய்த போது, தெரிந்த விவரம் என்னவென்றால்...

௧/  கிரைய ஒப்பந்தம் போட்ட புகார்தாரர், கிரைய பத்திரம் பதிவு செய்ய வைக்க ,எந்த சிவில் வழக்கையும் போடவில்லை 

௨.  அதற்கு பதிலாக, வரிசையாக ஒரே மாதிரியான மூன்று புகார்களை தான் கொடுத்திருக்கிறார்,  

௩.  அவற்றில் சொல்லப்பட்டவை எல்லாம் சிவில் தன்மை கொண்டவை. 

இவற்றை அறிந்த உச்ச நீதிமன்றம், " ஒரு சிவில் வழக்கை குற்ற வழக்காக மாற்றுவது தான் ஒட்டுமொத்த எண்ணம் என்பதும், அதன்மூலம், தான் கொடுத்தாக சொல்லும் பணத்தை மேல்முறையீட்டாளர் திரும்பக் கொடுக்குமாறு  அழுத்தம் கொடுக்க வைப்பதும் தான் காரணம்.  

        அவர்களுக்குள் உள்ள பகையை தீர்த்துக் கொள்வதற்கோ அல்லது சிவில் தகராறுகளை சரி செய்வதற்கோ குற்றவியல் நீதிமன்றங்கள் பயன்படுத்தப்பட க்  கூடாது.  குற்ற செயல்பாடுகள் இருப்பதாக உள்ளவற்றில் மட்டுமே குற்றவியல் நீதிமன்றங்கள் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.  அதுவும் இந்த வழக்கில் கிரைய பத்திரம் பதிவு செய்ய கடைசி தேதி என்று குறிப்பிடப்பட்ட தேதிக்கு மூன்று வருடங்களுக்கு பிறகு தான் இந்த புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.  " என்றது.  

(சிவில் வழக்கு தொடர மூன்று வருடம் தான் காலக் கெடு  என்பது நமக்கு தெரிந்திருக்கும்.  அதனால் , சிவில் வழக்கு ஏதும் தொடர முடியா நிலையில், குற்ற வழக்கு தொடர்ந்து குறுக்கு வழியில் நிவாரணம் பெற்றுக்கொள்ள புகார்தாரர் நினைத்திருக்கலாம். )

அதனால் தான் , "இந்த எப். ஐ. ஆர் மீதான நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர அனுமதிப்பது என்பது நீதிமன்ற நடவடிக்கைகளை துஷ்பிரயோகம் செய்ய உதவுவதாக அமைந்து விடும்" என்று கூறி  மேல்முறையீட்டு வழக்கை அனுமதித்து எப்.ஐ.ஆரை ரத்து செய்தது.  

இப்போது நமக்கு ஒரு கேள்வி எழலாம்.. ..

ஒப்பந்தம் என்பதே பின்னாளில் செய்யப்போகும் அல்லது செய்யாது விடப்போகும் செயலுக்காக இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்படும் ஒரு புரிந்துணர்வு  உடன்படிக்கை தானே? 

அந்த  ஒப்பந்தத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறுவது ஏமாற்றுவது ஆகாதா? என்பது தானே?

அதற்கு தான் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் விளக்கம் கொடுத்துள்ளது. 

"ஒப்பந்தம் மீறப்பட்டது மட்டுமே ஏமாற்றிய குற்ற செயலுக்கு உள்ளாகாது. அதற்கு இந்த ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே ஏமாற்றும் கெட்ட எண்ணம் குற்றவாளிக்கு இருந்தது என்பது இருக்க வேண்டும்.  கொடுத்த வாகுறுதியை காப்பாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு மட்டுமே குற்ற நடவடிக்கை எடுக்க போதுமானது இல்லை"  என்றுள்ளது.  

அடுத்து உங்களுக்கு இன்னொரு கேள்வி எழுமே....

 


ஆளும் அரசு , தேர்தலில் வாக்குறுதிகளை  மக்களிடம் கொடுத்து தானே ஆட்சிக்கு வந்தது.  அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமா இல்லையா என்பது அந்த அறிவிப்பு  செய்த காலத்திலேயே தெரியும் தானே ...அப்படியானால், ஆளுங்கட்சிக்கு எதிராக,  ஏமாற்றிய குற்ற வழக்கு போட முடியுமா? என்பது தானே ? 

இதற்கு  யாராவது பதில் சொல்லுங்களேன்.  

திங்கள், 23 ஜனவரி, 2023

ஒப்பந்தங்களின் வகைகள் என்ன ?

 



\\\\\\\\வணிகத்தின் சட்ட அம்சங்கள்

 
1.3 . ஒப்பந்தத்தின் வகைகள்

ஒப்பந்தங்களை பரந்த நோக்கில் வகைப்படுத்தும் போது,  மூன்று வகைகளாக பிரிக்கலாம். 

1.              அமுல்படுத்தும் பொறுத்து (சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் முறையில்)

2.              உருவாக்கும் முறையை பொறுத்து (உருவாக்கும் வழி)

3.              செயல்பாட்டை பொறுத்து .

 

ஒப்பந்தத்தை மேற்கொண்டும்  கீழ்கண்ட விதத்தில்   பிரிக்கலாம்:

         

 1. அமுல்படுத்தும் நோக்கில் ::

 i) செல்லத்தக்க ஒப்பந்தங்கள் ii) செல்லாத    விழலாகும் ஒப்பந்தங்கள்/ உடன்படிக்கைகள் iv) சட்ட விரோத ஒப்பந்தங்கள்                v )  செயல்படுத்தமுடியா ஒப்பந்தங்கள்

 

i) செல்லத்தக்க ஒப்பந்தங்கள் :: சட்டத்தால் அமுல்படுத்தக்கூடிய உடன்படிக்கைகள் தான் செல்லத்தக்க ஒப்பந்தங்களாகும். அமுல்படுத்துவதற்கான நிபந்தனைகளை இந்திய ஒப்பந்த சட்டத்தின் பிரிவு 10ல் தெரிந்துக் கொள்ளலாம்.

அதை தான் முந்தைய பதிவான இந்திய ஒப்பந்த சட்டம் --பகுதி 2  ல்  பார்த்தோம். அதன் லிங்க் அவை அத்தனையையும் நிறைவேற்றுபவை  தான் செல்லத்தக்க ஒப்பந்தமாகும். 

 

ii)  செல்லத்தகாத  ஒப்பந்தங்கள் ::  பாதிக்கப்பட்ட தரப்பினரின் தேர்வை பொறுத்து, ஒரு ஒப்பந்தம் செல்லாததாகும் என்று இந்திய ஒப்பந்த சட்டம்., 1872 பிரிவு 2(i) கூறுகிறது. அவர்கள் ஏற்றுக் கொண்டால். அது செல்லத்தக்கதாகவும் பிணைப்பதாகவும் இருக்கும். அது, வற்புறுத்தல், தகாத செல்வாக்கு, சுதந்திரமான சம்மதம் இல்லாமல் திரித்து கூறியதன் விளைவாகவோ மோசடியினாலோ ஏற்பட்டதாக இருக்கலாம்.  எந்த தரப்பின் சம்மதம் சுதந்திரமாக பெறப்படவில்லையோ அவர்கள் அதை ரத்து செய்யவோ அல்லது அதன் படி நடக்கவோ, இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்வு  செய்யலாம். அது போல செய்ய உரிமை கொண்ட தரப்பு ரத்து செய்யும் வரையில், அந்த ஒப்பந்தம் செல்லத்தக்க ஒப்பந்தமாகவே இருக்கும்.   

 

உதாரணத்திற்கு A தன் வீட்டை ரூ.5,௦௦,௦௦௦க்கு   B க்கு விற்பனை செய்வதாக வாக்குறுதி கொடுத்தார்.  அவருடைய சம்மதம் கட்டாயப்படுத்தி பெறப்பட்டது. அவர் தன் விருப்பம் போல, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ அல்லது அதன் படி நடக்கவோ செய்யலாம். அதனால், அந்த ஒப்பந்தமானது A வின் தேர்விற்கேற்ப   செல்லத்தக்காததாக  ஆகும்

 

இன்னொரு உதாரணமும் பார்ப்போம். ஜூன் 1 அன்று (ஏனென்றால் அது தான் என் பிறந்த நாள் ):: )  A தன் காரை B க்கு ரூ.30,000க்கு விற்பனை செய்ய ஒத்துக் கொண்டார். முழுத் தொகையையும் செலுத்திய பிறகு, ஜூன் 15 அன்று அவர் தன் காரை ஒப்புவிக்க வேண்டும். ஆனால் ஜூன் 10 அன்றே எதேச்சையாக ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கார் எரிந்து விடுகிறது. இந்த சூழ்நிலையில், அவர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம், கார் எரிந்தவுடனேயே செல்லாததாகிவிடுகிறது.

 

iii} விழலாகும் (செல்லாத) ஒப்பந்தங்கள்/உடன்படிக்கைகள் :: இந்திய ஒப்பந்த சட்டம், 1872 2(j) படி, எப்போது ஒரு ஒப்பந்தம் அமுல்படுத்த முடியா நிலைக்கு வருகிறதோ, அப்போது அது விழலாகும் ஒப்பந்தமாகிறது.

உதாரணமாக ஒரு ஒப்பந்தம் அது ஏற்படுத்தப்பட்ட போது செல்லத்தக்கதாக இருந்து,  பின்னர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் இரு நாடுகளுக்கிடையில் போர் மூண்டதால் அந்த ஒப்பந்தம் விழலாகும். 

 

iv) சட்ட விரோத ஒப்பந்தங்கள் :: குற்றத்தன்மை கொண்டதாகவோ ஒழுக்கக்கேடானதாகவோ இருந்து, பொது கொள்கைக்கு எதிரானதாகவுள்ளது சட்டவிரோத உடன்படிக்கையாகும். அது போன்ற உடன்படிக்கைகள் செல்லாத ஒப்பந்தங்களை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.    

 

அனைத்து சட்ட விரோத உடன்படிக்கைகளும் செல்லாததாக கருதப்படும். ஆனால் அனைத்து செல்லாத உடன்படிக்கைகளும் அல்லது ஒப்பந்தங்களும் சட்டவிரோதமானதாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு சட்ட விரோத உடன்படிக்கை செல்லத்தகாததாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அந்த ஒப்பந்தத்திற்கு இணையான பரிவர்த்தனைகளும் சட்டவிரோதமானதாகிவிடும்.        

 

உதாரணத்திற்கு, X என்பவர் Y இடமிருந்து  ரூ.5000/- கடன் பெறுகிறார். அவர்  Z என்பவருடன் பொருட்களை கடத்தல் செய்வதற்கு ஒப்பந்தம் போடுகிறார். Yக்கு கடன் வாங்குவதன் நோக்கம் தெரியும். X மற்றும் Yக்கும் இடையே நடக்கும் பரிவர்த்தனைகள் முதன்மை ஒப்பந்தத்தோடு இணைந்தது. முதன்மை ஒப்பந்தமே சட்டவிரோதமானது என்பதால், Yக்கும் Zக்கும் இடையேயான பரிவர்த்தனையும் சட்ட விரோதமானது

 

v) அமுல்படுத்த முடியா ஒப்பந்தங்கள்    ; சில தொழில்நுட்ப காரணங்களினால் நீதிமன்றத்தில் அமுல்படுத்த முடியாத  ஒப்பந்தங்கள், இந்த வகையில் வரும்.  சில சமயங்களில், சிறப்பு சட்டங்கள்  சில நடைமுறைகளை பின்பற்ற சொல்லும். உதாரணத்திற்கு, ஒப்பந்தங்கள் எழுத்து மூலமாகவோ அல்லது பதிவு செய்தோ அல்லது போதிய முத்திரை கட்டணம் செலுத்தியோ அல்லது சான்றொப்பம் இடப்பட்டோ இருக்க வேண்டும்.  சில சிறப்பு சட்ட விதிகளின் நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படாவிட்டால், நீதிமன்றத்தால் அமுல்படுத்த முடியா நிலை ஏற்படும்.  மற்றபடி, அந்த ஒப்பந்தம் மிக சரியானதாக செல்லக்கூடியதாக இருப்பதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும்.  ஆது போன்ற சில ஒப்பந்தங்களில் இருக்கும் சில தொழில்நுட்ப குறைகளை சரி செய்தால், அதனை அமுல்ப்படுத்த முடியும்.  உதாரணத்திற்க்கு போதிய முத்திரைக்கட்டணம் செலுத்த வேண்டிய ஒப்பந்தத்திற்கு, அந்த குறைபட்ட முத்திரைக  கட்டணத்தை செலுத்தினால் அது செல்லக்கூடிய நீதிமன்றத்தால் அமுல்படுத்தக்கூடிய ஒப்பந்தமாக ஆகும்.


2. உருவாக்கும் முறையை பொறுத்து (உருவாக்கும் வழி) 

ஒப்பந்தங்களை இன்னும் நுட்பமாக கீழ்கண்டவாறு பிரிக்கலாம்:

i)            வெளிப்படையான ஒப்பந்தம்

ii)           மறைமுகமான ஒப்பந்தம்

iii)      அரை ஒப்பந்தம்

i)           வெளிப்படையான ஒப்பந்தம்ஒரு ஒப்பந்தத்தின் ஷரத்துகள் எழுத்து மூலமாகவோ வாய்மொழியாகவோ இருக்கலாம்.  அதன் ஷரத்துகள் வெளிப்படையாக ஒப்பந்தத்தின் தரப்பினரால் ஒத்துக கொள்ளபட்டால் அந்த ஒப்பந்தம், வெளிப்படையான ஒப்பந்தம் எனப்படும்.  

 

ii)     மறைமுக ஒப்பந்தம்: எழுத்து மூலமாக இல்லாதது மறைமுக ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தத்தின் தரப்பினரின் நடத்தையைக் கொண்டோ அல்லது சூழ்நிலையைக் கொண்டோ அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளையும் நிபந்தனைகளையும் அறிந்துக கொள்ளலாம். .

உதாரணம் :

1) ஒரு இரயில் நிலையத்திற்குள் நுழைபவரிடம் பயண சீட்டோ அல்லது நடை மேடை சீட்டோ இருக்க வேண்டும் என்பது மறைமுகமானது..   

2) ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்து உணவை எடுத்துக கொள்ளும் நபர்  அதற்காண பணம் செலுத்த வேண்டும் என்பதும் மறைமுகமானது. . 

 

iii) அரை ஒப்பந்தம்: உறுதியான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அரை ஒப்பந்தம் என்பது ஒப்பந்தமே அல்ல. அரை ஒப்பந்தம் என்பது சட்டத்தால் உருவாக்கபட்டது. இது போன்றவற்றில், ஒரு சட்டப்பூர்வமான கடமையை நிறைவேற்றும் பொறுப்பு கொண்ட ஒரு தரப்பு அதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். இதன் உள்ளார்ந்த பொருள் என்னவென்றால், யாருமே இன்னொருவரின் செலவில் தன்னை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்க முடியாது என்பதே.   

உதாரணம்: A என்ற வணிகர் தற்செயலாக  B’ன் வீட்டில் தன் பொருட்களை தவற விட நேர்ந்தது.  B அந்த பொருட்களை தன்னுடையதைப் போலவே பாவிக்கிறார். . B அந்த பொருட்களை திருப்பிக் கொடுபதற்காக   A வை அடையாளம் காணும பொறுப்புக்குள்ளாகிறார் அல்லது அவர் தன் காரியத்திற்காக அந்த பொருட்களை பயன்படுத்தியிருந்தால், அந்த பொருட்களின் மதிப்பை திருப்பிக் கொடுக்கும் கடைமைக்குள்ளாகிறார் .

 

3. செயல்பாட்டை பொறுத்து::

ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படும் போது, அவற்றை மேலும் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்:

 

 i) நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தங்கள்:: ஒரு ஒப்பந்தம் முற்றிலுமாக நிறைவேற்றப்படும் போது, அது "நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம்" எனப்படும். அதாவது, ஒப்பந்தத்தின் ஷரத்துகளின்படி, வேறு ஏதும் எந்த தரப்பாலும் செய்ய வேண்டிய  நிலை ஏற்படாத ஒப்பந்தம் அது. ஒரு ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றலாம். அதாவது அது ஏற்படுத்தப்பட்ட அந்த சமயமே.. உதாரணத்திற்க்கு, ரொக்க விற்பனையின் போது, அந்த ஒப்பந்தம் அந்தக் கணமே நிறைவேற்றப்படும். ஒப்பந்தத்தின் ஷரத்துகள் நிறைவேற்றப்படும்   பின்னாளில் அது நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தமாகும்.

உதாரணம் : A தன் வீட்டை B க்கு ரூபாய் 1000 க்காக விற்க ஒத்துக் கொள்கிறார். B அந்த விலையைக் கொடுக்கிறார். A வீட்டை  ஒப்படைக்கிறார் . இரண்டு தரப்பினரும் தத்தம் செயலை செய்து முடித்ததால் அது ஒரு நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தமாகும். 

 

ii)  நிறைவேற்றப்பட வேண்டிய ஒப்பந்தம் : ஒப்பந்தத்தின் தரப்பினரால் இன்னமும் தத்தம் கடமைகளை செய்து முடிக்காமல், சிலவற்றை செய்து முடிக்க வேண்டிய நிலையில் இருக்கும் போது, அதை நிறைவேற்றப்படவேண்டிய ஒப்பந்தம் என்பர். சில சமயத்தில், சில ஒப்பந்தங்கள் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டதாகவும் மற்றொரு பகுதி நிறைவேற்றப்பட வேண்டியதாகவும் இருக்கும்.    

மேலே சொன்ன உதாரணத்தில்,  K பணத்தை கொடுத்திருந்து, G வீட்டை R ன் பெயருக்கு  பதிவு செய்துக் கொடுக்காமல் இருந்தால், அந்த ஒப்பந்தம் R யை பொறுத்த வரையில் நிறைவேற்றப்பட்டதாகவும், G யை பொறுத்த வரையில் நிறைவேற்றப்படவேண்டியதாகவும் இருக்கும். 

 

iii)  ஒரு தலைபட்சமான ஒப்பந்தம் : ஒரு ஒப்பந்தத்தில் ஒரு தரப்பு மட்டுமே தன் கடமையை நிறைவேற்ற வேண்டிய  நிலையில் இருந்தால், அதை ஒரு தலைப்பட்சமானது என்பர். அது போன்ற ஒப்பந்தங்களில், ஒரு தரப்பின் வாக்குறுதி மற்றொரு தரப்பின் செயலுக்கு பிரதிபலனாக பரிமாறப்படும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு தலைபட்சமான ஒப்பந்தம் உருவான பிறகு, ஒரு தரப்பு மட்டுமே அவர் தரப்பு கடமையை நிறைவேற்ற கடமைப்பட்டவர்.  ஏனெனில், மற்றொரு தரப்பு ஏற்கெனவே சில செயலை செய்து,  தன் தரப்பு கடமையை முடித்திருப்பார். ஒரு தலைபட்சமான ஒப்பந்தங்களை 'நிறைவேற்றப்பட்ட பிரதிபலன் கொண்ட ஒப்பந்தங்கள்' என்றும் சொல்வர்.   

உதாரணம்: A ஒரு இரயில்வே சுமைதூக்கியை தன் சாமான்களை எடுத்து  ஒரு இரயில்வே கம்பார்ட்மென்ட்டில் வைக்க  அனுமதிக்கிறார். அந்த சாமான்கள் நகர்ந்து இரயில்வே கம்பார்ட்மென்ட்டில் வைக்கப்படும் போது,   ஒரு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறது. சுமை தூக்கி தன் கடமையை முடித்து விடுகிறார். அதே சமயம், ஒப்பந்தம் செயல்பாடிற்கு வருகிறது.  இப்போது Aக்கு  மட்டுமே சுமைதூக்கிக்கு கொடுக்க வேண்டிய நியாயமான கூலியை கொடுக்கும் கடமை ஏற்படுகிறது.

 

iv) இருதரப்பு ஒப்பந்தம் : இருதரப்பு ஒப்பந்தம் என்பது இரண்டு தரப்பினரும் தத்தம் கடமையை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ள  'இரண்டு தரப்பு ஒப்பந்தம்' எனப்படும். அதாவது, ஒரு தரப்பு உருவாகும் போது, இரண்டு தரப்பினரும் தத்தம் கடமையை நிறைவேற்ற வேண்டிய நிலையில் உள்ள போது.  அது போன்ற\ ஒப்பந்தங்களில், ஒரு தரப்பினரின் வாக்குறுதி மற்றொரு தரப்பினரின் வாக்குறுதிக்கு ஈடாக பரிமாறப்படும். இந்த இருதரப்பு ஒப்பந்தம் என்பது, 'நிறைவேற்றப்பட வேண்டிய பிரதிபலன் கொண்ட ஒப்பந்தங்கள்' என்றும் சொல்லப்படும்

உதாரணம் :  A,  B க்காக ஒரு படம் வரைந்துக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.  B யும் A க்கு  ரூ. 100 கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார். ஒப்பந்தம் உருவாகும் போது, வாக்குறுதிகள் பரிமாரிக் கொள்ளப்பட்டு இரண்டு தரப்பிலும் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இருந்ததால், அது, ஒரு இருதரப்பு ஒப்பந்தமாகும்.   


                                                                        ...தொடரும்...



தொடர்புடைய முந்தைய பதிவுகள் 

1இந்திய ஒப்பந்த சட்டம் பகுதி 1 


௨ இந்திய ஒப்பந்த சட்டம் பகுதி 2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...