- இந்திய சிறைகளில் கைதிகளுக்கு வேலை கொடுப்பது என்பது ஆரம்பத்தில் தண்டனையாகத் தான் பார்க்கப்பட்டது.\ சிறை கைதிகளை வேலை செய்ய வைப்பது என்பது சிறை நிர்வாகத்தின் செலவுகளை சரி செய்வதற்காக இருக்கக் கூடாது என்பது தான் இந்த திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்த லார்ட் மெக்கலேயின் எண்ணமும் கூட PRISON-LABOUR-AND-INDUSTRY-IN-INDIA-AN-ANALYSIS-OF-WORK-Dr-Barik-1.pdf
1950 ல் இது குறித்து நடந்த ஹேக் மாநாட்டில், கைதிகளின் திறனை ஒரு பயனுள்ள நோக்கத்திற்காக மாற்றுவதற்கான சிறந்த மாற்றாக 'வேலை' உள்ளது என்பதால்
- கைதிகளை உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்துவது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.
- அவர்களிடையே தன்னம்பிக்கையை ஊட்டவும், சமூகம். பரிந்துரைத்தபடி சட்டத்தை மதிக்கும் குடிமகனாக அவர்கள் திரும்பவும் நினைக்க வைக்கலாம
- இதன் மூலம், கைதிகள் சிறைக்குள் இருந்தே தங்கள் குடும்பத்திற்கு உதவலாம்.
- சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், 'வேலை' என்பது, கைதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதே நேரத்தில் அரசுக்கு ஊதியமாக இருக்கும்.
·
அதே சமயம், மனித கண்ணியத்தின் மதிப்புகள் மதிக்கப்பட
வேண்டும் என்பதால், கைதிகளின் வேலை நிலைமைகள், இலவசமாக பணி செய்யும் தொழிலாளர்களுக்கு இணையாக
இருக்க வேண்டும் என்று யோசனை சொல்லப்பட்டது.
அதன்படியே இந்தியாவின் பொருளாதார மறுவாழ்வு திட்டத்தில், திகார் சிறை ஒரு முன்னோடியாககருதப்படுகிறது. இது கிட்டத்தட்ட 12000 கைதிகள் உள்ளடக்கியது. திகார் சிறைத் தொழிற்சாலை, தச்சு, நெசவு, தையல் மற்றும் பேக்கிங் சம்பந்தப்பட்டவைகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறது: அங்கு உற்பத்தி செய்யப்படும் சில பொருட்கள், மாநில அரசின் தேவையை பூர்த்தி செய்கின்றன. ரொட்டி மற்றும் ஊறுகாய் போன்ற பொருட்கள் டெல்லியை சுற்றியுள்ள ஜெயில் விற்பனை நிலையம் மூலம் சந்தையில் விற்கப்படுகின்றன. சிறைத் தொழிற்சாலையின் தோராயமான வருவாய் ரூ.10 முதல் 15 கோடி மேல் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. .தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் (NCRB) -2010 தரவுகளின்படி, 36,995 கைதிகள் பயிற்சி பெற்றனர். அதில் நெசவு, தையல், தச்சு, விவசாயம் மற்றும் கைத்தறி ஆகியவை முக்கிய பயிற்சிப் பகுதிகளாகும்
ஆனால் இந்தியாவில் சிறைச்
சட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு, நீண்ட காலமாக
தீண்டப்படாமல் இருந்தன சிறைகள் எண்ணற்ற பிரச்சனைகளால் பீடிக்கப்பட்டுள்ளன. கைதிகள் முறைகேடுகளுக்கும் இழிவான சிகிச்சைக்கும்
உட்படுத்தப்படுகின்றனர். ஆனாலும் சுதந்திரத்திற்குப் பிறகு, சிறைச்சாலைகளில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றிய விரிவான
அறிக்கையைத் தயாரிக்கவும், மற்றும் நடவடிக்கைகளை
பரிந்துரைக்கவும் இந்திய அரசாங்கம் பல குழுக்களை நியமித்தது. என்றாலும் சிறைச்சாலைச் சீர்திருத்தக் குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகள், எதிலும் கைதிகள்
செய்யும் பணிக்கான ஊதியம் குறித்த பிரச்சினை முன்வைக்கப்படவில்லை.
1977 ஆம் ஆண்டு தான், கைதிகளின் ஊதியப் பிரச்சினை முதன்முதலில்கியாசுதீன் முகமத் எதிராக ஆந்திரப் பிரதேச மாநிலம், வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், "ஊதியம் கொடுக்காத வேலை என்பது "கொத்தடிமை உழைப்பு என்றும் அது அவமானகரமானது" என்றும் கூறி குறைதபட்ச ஊதியம் கூட சிறைக் கைதிகளுக்கு ஆந்திர சிறை நிர்வாகம் வழங்காதது குறித்து அதன் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியது. பல தசாப்தங்களுக்குப் பிறகும் நாட்டில் ஊதிய திருத்தம் மற்றும் மறுவாழ்வு பற்றிய அனைத்து விவாதங்களுக்கு பிறகும் கூட , ஆந்திர அரசாங்கம் இன்னும் கைதிகளுக்கு சரியாம ஊதியம் வழங்குவதற்கான விதிகளை உருவாக்கவில்லை என்பது ௨௦15 தரவுகள் மூலம் இன்னமும் சிறைகைதிகளுக்கு 5௦ ரூ வழங்குவதில் இருந்து தெரிகிறது.
அந்த தீர்ப்பில் சொல்லப்பட்ட மற்ற சிறப்பம்சம்
என்னவென்றால், :
(1) கடுங்காவல் சிறைத் தண்டனை
விதிக்கப்பட்ட கைதிகளை, அவர் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும், கடின உழைப்பைச் செய்ய
வேலைக்கு அமர்த்துவது சட்டப்பூர்வமானது.
(2) மற்ற கைதிகளை அவர்கள்
செய்யத் தேர்ந்தெடுக்கும் எந்த வேலையையும் அத்தகைய கோரிக்கை விடுக்கும் போது செய்ய
அனுமதிப்பது சிறை அதிகாரிகளுக்கு உரியது
(3) கைதிகள் செய்யும் பணிக்கு
சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அந்த அளவை நிர்ணயம் செய்வதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலமானது
பரிந்துரைகளை வழங்குவதற்காக ஊதிய நிர்ணய அமைப்பு ஒன்றை. ஒவ்வொரு மாநிலத்தையும்
கூடிய விரைவில் அமைக்க வேண்டும் " என்றது.
'கைதிகளின் உழைப்பை இலவசமாக பெறுவது என்பது " அரசியலமைப்பு 23(1) சட்டப்பிரிவை
மீறுவதாகும்" என்று சிறைச் சீர்திருத்தங்கள் மற்றும் கைதிகளின் ஊதிய உயர்வு
கோரிய வழக்கில் ( AIR
1983 Kerala 261) சுட்டிக்காட்டிய கேரளா
உயர் நீதிமன்றம், 'இந்திய தண்டனைச் சட்டத்தின் 53வது பிரிவின்படி அங்கீகரிக்கப்பட்டவை கடின உழைப்பு கோரும்
தண்டனை தானே தவிர, இலவச உழைப்பு அல்ல" என்றது. மேலும், நியாயமான ஊதியத்தின் அடிப்படையிலான
ஊதியத்தின் அளவையும் நீதிமன்றம் பரிசீலித்து ஊதியத்தை தற்காலிக பணியாளர் அடிப்படையில், ஒரு நாளைக்கு ரூ. 8/-உயர்த்தியது
இந்த விதிகளின்படி, அனைத்து மாநிலங்கள் /
யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறைசாளைகளில் உள்ள கைதிகளுக்கு ஊதிய நிர்ணயம்
செய்யப்பட்டு, 2015 இன் போது. எடுக்கப்பட்ட
தரவுகளின்படி, புதுச்சேரி தான் அதிக ஊதியமாக ரூ. 180/-, ரூ. 160/-, மற்றும் ரூ.150/-என்று திறமையான கைதிகள், அரை திறன் கொண்ட கைதிகள் மற்றும்
திறமையற்ற குற்றவாளிகளுக்கு முறையே கொடுப்பதாக தெரிகிறது. தமிழ் நாடு ரூபாய் 80 கொடுக்கிறது ஆனால் சிறைக்கைதிகளுக்கு
சில மாநில சிறைகள் சரியான ஊதியம் கொடுப்பதோ அல்லது குறித்த காலத்தில் ஊதியம்
அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படுவதோ இல்லை.
1996 ஆண்டு மாண்புமிகு உச்ச நீதிமன்றம், இராமமூர்த்தி எதிர்
கர்நாடக அரசு என்ற வழக்கில், ஒவ்வொரு மாநில சிறையும்
வெவ்வேறு விதிமுறைகளை கையாளுவதை தவிர்த்து ஒரே
மாதிரி ஜெயில் கையேடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை அடுத்து, 2016ல் மாதிரி சிறை கையேடு
நடைமுறைக்கு வந்தது. அதன்படி
- கைதியின் ஊதியங்கள்
நியாயமானதாகவும், சமமானதாகவும், பெயரளவாகவோ அற்பமானதாகவோ இருக்கக் கூடாது.
- அரசாங்கத்தால்
அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை கருத்தில் கொண்டு அவ்வப்போது.சிறைச்சாலைகளில் உள்ள
ஊதிய முறையை சிறைக்கு வெளியுள்ள சுதந்திர சமூகத்திற்கு இணக்கமாக வைத்திருக்கும் நோக்கில்,ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும்
ஊதியம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் மற்றும் தேவைப்படும் போது திருத்தப்பட
வேண்டும்.
- குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் ஒரு பகுதி
அவரது பராமரிப்பிற்கும், மாநில
அரசால் உருவாக்கப்படும் விதிகளின்படி பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீட்டு நிதிக்கு ஒரு பகுதியும் கழிக்கப்பட வேண்டும் .
- ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஊதியம்
கைதியின் சேமிப்பு வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும்/
- பாஸ் புத்தகம் சம்பந்தப்பட்ட
கைதியிடம் வைக்கப்பட வேண்டும்.
கைதியின் பராமரிப்பு செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை
மாநில அரசு அவன் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய விதிகள் அனுமதிக்கபடுகின்றன.
இவ்வாறு ஏன் செய்யபடுகிறது என்பதற்கும் மேற்சொன்ன
குஜராத் வழக்கில் உச்ச நீதிமன்றம் காரணத்தை சொல்கிறது.
"குறைந்தபட்ச ஊதியச் சட்டம் (1948) நிர்ணயம் செய்யப்பட்ட
விகிதத்தில் ஒரு கைதிக்கு அத்தகைய விலக்கு ஏதும் இல்லாமல் வழங்கப்பட்டால், அதன் நிகர விளைவு என்னவென்றால், அவர் சிறைக்கு வெளியே அதே வகையான வேலையைச்
செய்யும் ஒரு தொழிலாளியின் ஊதியம் காட்டிலும் அதிகமாக ஊதியம் பெறுவார் . ஏனென்றால், பிந்தையவர் உணவு மற்றும் உடைகளுக்கான செலவுகளை அவருக்கு வழங்கப்படும்
குறைந்தபட்ச ஊதியத்தில் இருந்து சமாளிக்க வேண்டும். இதன் மூலம் கைதிகளின் உணவு, உடைகள் மற்றும் இதர வசதிகளுக்காக அரசு செய்யும் செலவினங்களுக்காக கைதிகளின்
ஊதியத்தை மாநில அரசு பிடித்தம் செய்யலாம்" என்றது.
சிறைக் கைதிகளில் ஊதியத்தில் ஒரு பகுதியை பிரித்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தான் குஜராத் மாநில அரசு எதிர் குஜராத் உயர் நீதிமன்றம் மற்றும் ஒருவர் வழக்கில், மாநிலங்களுக்கு முதன் முதலில் பரிந்துரைத்தது , AIR 1998 SC 3164 .
2008ல் CrPC திருத்தப்பட்டது . அதில் ஒரு புதிய பிரிவு, 357A சேர்க்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் குற்றத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான
திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். என்ற உச்ச நீதிமன்ற
உத்தரவு மற்றும் சிஆர்பிசி திருத்தம் ஆகிய இரண்டிற்கும் பிறகு மத்திய அரசும்
அனைத்து மாநில அரசுகளும் குற்றத்த்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க VICTIM COMPENSATION FUND என்ற தனி ஏற்பாடுகளை
செய்துள்ளது இதன்படி கைதிகளின் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கழிக்கப்பட்டு பாதிக்கப்பட்டோர் நல
நிதியில் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த விகிதா சாரமானது மாநிலம்
தோறும் வேறுபடுகிறது.
தமிழ்நாடு சிறைச்சாலைகளை
கணக்கில் எடுத்துக்கொண்டால், இதன் சிறை விதிகள், 1983 இன் விதி 481, சம்பாதித்த
ஊதியத்தைப் பயன்படுத்துதல். பற்றி
பின்வருமாறு கூறுகிறது:–
(1) ஊதியம் பெறும் திட்டத்தின் கீழ் இருக்கும் கைதிக்கு, அவரது சம்பாத்தியத்தை அவரது வரவுக்குள் வைத்திருக்கவோ அல்லது சிறைக்கு வெளியே
உள்ள அவரது உறவினர்களுக்கு அனுப்பவோ விருப்புரிமை அளிக்கப்படும். வருவாயை தனது
கிரெடிட்டில் வைத்திருப்பதற்கான அவரது விருப்பத்தை செயல்படுத்தினால், அவரது மொத்த அல்லது அவரது வருவாயின் ஒரு பகுதியை அவரது உறவினருக்கு அனுப்புவதற்கு ஆதரவாக எந்த நேரத்திலும் அவரது விருப்பத்தை
திருத்திக்கொள்ள விருப்பம் வழங்கப்படும்.
(2) கைதி, சிகரெட்,சோப்பு, எண்ணெய் போன்ற தனது
தனிப்பட்ட உபயோகத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு, மாதம் ஒன்றுக்கு ரூபாய் 10க்கு மிகாமல் பணம் எடுக்க
அனுமதிக்கப்படுவார். தேவைப்படும் பொருள்களின் பட்டியல் சிறை கண்காணிப்பாளரால்
அங்கீகரிக்கப்படும்.
(3) எந்தவொரு கைதியும் தனது வருமானத்தை மற்றொரு கைதிக்கு கடனாக
மாற்ற அனுமதிக்கப்படக்கூடாது
தமிழ்நாட்டில் சிறை கைதிகளை பராமரிப்பதற்காக கைதிகள் சம்பாதிக்கும் ஊதியத்தில் 50% பிடித்தம் செய்தும் மேலும் 20% ஊதியத்தை சிறை நிதியில் வரவு வைக்கபடுகிறது. இவ்வாறு செய்ததற்கு எதிராக திரு கே ஆர் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக (பிஐஎல்) தாக்கல் செய்தார். மனுதாரர், திரு கே ஆர் ராஜு, தமிழ்நாடு சிறை விதிகள், 1983 இன் விதி எண்.481ஐ அறிவிக்க வேண்டும் என்றும், கைதிகளை பராமரிப்பதற்காகவும், சிறை நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ள ஊதியத்தில் 20% பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட விரோதமாகவும், சட்டம் மற்றும் நீதிக்கு எதிராகவும் உள்ளதாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கைதிகள் சொத்துக் கணக்கில் குறைந்தபட்சம் 30% முதல் 75% வரை பணமாகப் பெறுவார்கள் என்று உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்..
இந்த வழக்கில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் முன்
வைக்கப்பட்ட கேள்வி,
"ஊதியத்தில்
கணிசமான குறைப்பு என்பது,
இந்திய அரசியலமைப்பின் 23 வது பிரிவை மீறுகிறதா?"
70 சதவீதத்தை (கைதிகளை பராமரிக்க 50 சதவீதமும், பாதிக்கப்பட்ட இழப்பீட்டுக்காக 20 சதவீதமும்) பிடித்தம் செய்து வருகிறது. ஒரு
பொதுநல அரசு , எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாமல் ஒரு
தனிநபரின் ஊதியத்தில் இருந்து கணிசமான கழித்தல் என்பது தீய மற்றும் மனித
உரிமைகளுக்கு எதிரானது. சிறை விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் இருந்து
கணிசமான அளவு பிடித்தம் செய்வது அரசியலமைப்பின் 23 வது பிரிவை மீறுவதாக உள்ளது. போதிய ஊதியம்
கொடுக்காமல் வேலை வாங்குவதும் பிச்சைதான். தமிழகத்தில் கைதிகளுக்கு குறைந்தபட்ச ஊதியச்
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதியம் வழங்கப்படவில்லை என்பது ஒப்புக்கொள்ள
முடியாதது.. எனவே, சிறைச்சாலை விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட
ஊதியத்தில் இருந்து கணிசமான கழித்தல் என்பது மாண்புமிகு உச்சநீதிமன்றம் வகுத்துள்ள
வழிகாட்டுதல்களுக்கு எதிரானது” என்றது சென்னை உயர் நீதிமன்றம்.
மேலும் அந்த தீர்ப்பில் "சிறைச்சாலைகளில் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத அத்துமீறல் மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைக்கு இது ஒரு அங்கீகாரம். நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத் திட்டம் இருக்க வேண்டும் என்று கூறி கைதிகளின் மறுவாழ்வு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பீடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள சமநிலையை மனதில் கொண்டு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பிடித்தம் செய்ய அனுமதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியே கைதியின் ஊதியத்தில் இருந்து இந்த பாத்திக்கபட்டவருக்கான நஷ்டஈட்டு நிதிக்கு கைதிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யபடுவதால் அதில தவறேதும் இல்லை என்றது. " ஊதியத்தின் ஐந்தில் ஒரு பங்கு இதற்காக பிடித்தம் செய்யபடுவதில் எந்த தவறும் உள்ளதாக தெரியவில்லை. ஆனால் அதே சமயம் ஐம்பத்து சதவீதம் ஊதியத்தில் இருந்து அவர பராமரிப்பிற்காக பிடித்தம் செய்வது சட்ட விரோதமானது என்றது .
இதில் கொடுமை என்னவென்றால், கோடிக்கணக்காக இவ்வாறு வசூலிக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் கிடப்பதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது தான் தில்லி திஹார் கேயிலில் கூட இது போல திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் ஊதியத்தில் இருந்து 2006- ஆம் ஆண்டு முதல் வசூலிக்கப்பட்ட ரூ.15 கோடியில், பாதிக்கப்பட்ட 194 பேருக்கு சுமார் ரூ.80.73 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ.14 கோடிக்கு மேல் பயன்படுத்தப்படாமல் கிடப்பதாகவும் காத்யாயினி என்பவர தொடர்ந்த பொதுநல மனுவில் கூறியுள்ளார்.
பெரும்பாலோனோருக்கு இது போன்ற ஒரு நிதி உள்ள விவரமே தெரிவதில்லை. ஒரு குற்றத்தில் பாதிக்கபட்டோர்ர் யார் என்றால், அந்த குற்றத்தினால், மனதாலோ உடலாலோ அல்லது அவர் சொத்திற்கு தீங்கு நடந்திருந்தால், அந்த குற்றத்தை செய்த நபர் அடையாளம் காடபட்கிறாரோ இல்லையோ, நீதிமன்றத்தில், அந்த குற்றவாளிக்கு எதிராக வழக்கு தீர்ப்பாகிறதோ இல்லை அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டாரோ இல்லையயோ , அந்த குற்றத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு அரசு நஷ்டஈடு கொடுக்க வேண்டிய கடமை உண்டு. அதேபோல, அந்த குற்றத்தை செய்ததாக ஒருவர் தண்டனை பெற்று சிறைவாசம் செய்யும்போது,குற்றத்தை செய்ததாக ஒருவர் தண்டனை பெற்று சிறைவாசம் செய்யும்போது, அங்கு அவர் செய்யும் வேலைக்கு கொடுக்கப்படும் ஊதியத்தில் இதற்கென பிடித்தம் செய்யப்படும் தொகையை பெறும் உரிமையும் இந்த பாதிக்கப்பட்டவருக்கு உண்டு இதில் அந்த குற்றவாளி சிறை சென்றதால் பாதிக்கப்பட்ட அவரை நம்பி உள்ள குடும உறவினரும் அடங்கும். குற்றவாளியின் மைனர் குழந்தைகளுக்காக அவர்களை பராமரிக்கும் பாதுகாவலர்கள் இந்த நிதியின் கீழ் அந்த குழ ந்தைகளுக்கு நஷ்டஈடு கேட்டு பெறலாம்.
நீதிமன்றத்தின் மூலமாக பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு பெற குற்ற விசாரணை நடை சட்டம் இருந்தாலும், இந்த நிதி அரசின் பாதுகாப்பில் இருப்பதால் எளிதில் பெற முடியும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டது என்றாலும இத்திட்டம் தற்போது பெரும் கால தாமதத்தையே ஏற்படுத்துகிறது.
“
