வெள்ளி, 7 ஏப்ரல், 2023

கடன் கொடுத்ததற்காக பினையாகக் கொடுக்கப்பட்ட வெற்றுக் காசோலையில் ஒருவர் காசோலை கொடுத்தவரின் அனுமதி இல்லாமல் தேதியைப் பூர்த்தி செய்தால் அது சட்டப்படி காசோலையைத் திருத்திய குற்றம் ஆகுமா?

 உங்கள் கேள்விக்கு உண்டான பதிலை சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது. 

காசோலை தொடர்பான வழக்கில் குற்றவாளியை விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு தான் அது

சுருக்கமாக அந்த வழக்கு விவரங்களை சொல்ல வேண்டுமானால், …..

மேல் முறையீடு செய்த பிணக் பாரத் என்ற பங்கு நிறுவனம் அனில் ராம ராவ் நாயக் என்பவருக்கு வீடு கட்ட வேண்டி கேட்ட ஒரு கோடி ரூபாய் கடன் கொடுக்கிறது. அது சம்பந்தமான உடன்படிக்கை கைழுத்தாகும் போது குற்றவாளி இரண்டு காசோலைகளை கையேழுத்திட்டு கொடுக்கிறார். அப்போது அதில் தேதி ஏதும் எழுதப்படவில்லை.

ஆனால் சொன்ன காலக்கெடுவிற்குள் பணம் திருப்பி கொடுக்க முடியவில்லை. அதனால் பணத்தை திருப்பி கொடுப்பதற்கான காலக் கெடுவை நீடிக்க கோரி சிவில் வழக்கை தொடுக்கிறார். 

அந்த சிவில் வழக்கை போட்ட பிறகு, நிறுவனம் அவர் கொடுத்த காசோலைகளை வங்கியில் தாக்கல் செய்து அவை 'பணம் இல்லை என்று திரும்பிய காரணத்தை வைத்து அவர் மீது ஒரு கிரிமினல் வழக்கு தொடரப்படுகிறது. 

 இதில் முக்கிய அம்சமாக, வழக்கு சாட்சியத்தின் போது,  காசோலையில் நிறுவனத்தின் பெயரையும் தேதியையும் நிரப்பி வங்கியில் தாக்கல் செய்ததை ஒத்து கொள்ளப்படுகிறது.

வழக்கு விசாரணைக்கு பிறகு, மாஜிஸ்திரேட்டு " சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, குற்ற வழக்கு தொடர்ந்தது, அதுவும் குற்றவாளியின் அனுமதியில்லாமல் அவருக்கு தெரிவிக்காமலும், காசோலையில் தேதியை நிரப்பியதும சரியில்லை "என்று கூறி அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்கிறார். 

அதை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது நிறுவனம்.

மும்பை உயர்நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வருகிறது இந்த வழக்கு.

இப்போது நீதிமன்றத்தின் முன் இருக்கும் கேள்வி

"நிறுவனம் தன்னிச்சையாக காசோலையில் பெயரையும் தேதியையும் நிரப்பியது சரியா ?" என்பது…

காசோலையில் நிறுவனத்தின் பெயரை நிரப்பியது தவறானது என்று நீதிமன்றம் கருதவில்லை.

ஏனெனில் புகார்தாரருக்கு தான் அந்த காசோலைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன..

ஆனால் தேதி?

பொதுவாக நம் அன்றாட பயன்பாட்டில் கையெழுத்திட்ட மற்றவை நிரப்பப்படாத காசோலையை பரிமாற்றம் செய்வதை பார்க்கிறோம்..

யாரிடம் அந்த காசோலை மாற்றப்படுகிறதோ அவருக்கு காசோலை கொடுத்த நபர் கடன் பட்டிருக்கிறார் என்ற அனுமானமும் பரவலாக உள்ளது.

நீதிமன்றமும் இதை ஆமோதிக்கிறது. ஆனால் "மாற்றுமுறை ஆ.வணமான காசோலை மாற்றக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மாற்றுமுறை ஆவண சட்டத்தின் பிரிவு 138ன் கீழான குற்றத்தை ஒருவர் செய்தார் என்பதற்கு அதற்குரிய முன் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்கிறது. 

ஆனால் அதே சமயம், அந்த சட்டத்தின் பிரிவு 87 உள்ளதையும் சுட்டிக் காட்டுகிறது.

"கருப்பொருளையே உருமாற்றம் செய்யக் கூடிய மாற்றத்தை, பொதுவான நோக்கத்திற்காக இல்லாமல், சம்மந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் செய்தால் அது செல்லாதது"

எந்த நேரத்திலும் குற்றவாளியின் சம்மதத்தின் பேரில் அந்த திருத்தம் செய்யப்பட்டதாகவோ அல்லது பொது நோக்கத்திற்காகவோ செய்யப்பட்டதாகவோ நிறுவனம் சார்பில் சொல்லப்படவில்லை. மேலும் காலக் கெடுவை நீடிக்க கோரி குற்றவாளி வழக்கு தொடர்ந்த பிறகு இந்த திருத்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது எனவே காசோலை கொடுத்தவரின் ஒப்புதல் இல்லாமல் மற்றும் அவரிடம் தெரிவிக்காமலேயே காசோலையில் தேதியை எழுதியுள்ளது என்பது கருப்பொருளையே திருத்தம் செய்ததாகும் அப்படியுள்ள சூழலில் அந்த காசோலை செல்லாததாகுர்ம் " என்கிறா நீதியரசர் மோடக் தன் தீர்ப்புரையில்

எனவே விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து மேல்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. .

Case no. – Criminal Appeal Nos. 1630 and 1631 of 2011.

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...