செவ்வாய், 6 செப்டம்பர், 2022

விடுதலைப் பத்திரத்திற்கும் குடும்ப செட்டில்மென்ட் பத்திரத்திற்கும் உள்ள வித்யாசம் என்ன?

நேற்று குடும்ப நண்பர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.  தன பக்கத்து வீட்டுகாரர் என்னை பார்க்க விரும்புவதாக சொன்னார். வரச்சொன்னேன். 

அவருடைய பிரச்சினை இது தான் ..அவர் அப்பா காலமானதில் இருந்து இவர் தான் தன் தம்பிக்கு தொழில் தொடங்க உதவி செய்தது முதல், தன் குடும்ப தொழிலில் ஏற்பட்ட சரிவை சரிசெய்வது மற்றும் குடும்ப கடனை அடைப்பது என்று எல்லாம் பார்த்தும் தம்பிக்கு தன் மீது மனவருத்தம் என்றும் அதனால் பேச்சு வார்த்தை நின்றுவிட்டது, இப்போது சொத்துக்களை பிரித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம்,. என் தம்பி அவனுடைய நண்பர் மூலமாக பத்திரப்பதிவு ஏற்பாடு செய்துள்ளார், ஆனால் எங்களுக்குள் சொத்தை பிரித்துக் கொள்வது போல பத்திரம் போடாமல், விடுதலை பத்திரம் போட்டு அனுப்பியுள்ளனர். என் அம்மாவும் என் தம்பியுடன் சேர்ந்துக் கொண்டு அவனுக்கு சாதகமாக பேசுகிறார்,. அவர்கள் அவசரப்படுவதை பார்க்கும் போது, எனக்கு தயக்கமாக உள்ளது. பாகப்பிரிவினைக்கு பதிலாக விடுதலைப்  பத்திரம் போட்டுக்கொள்ளலாமா ? ""  என்றார். 

அவருக்கு  உரிய  சட்ட ஆலோசனை வழங்கி அனுப்பி வைத்தேன்.    இது சம்பந்தமான சந்தேகம் நிறையப்  பேருக்கு உள்ளது.. குடும்பத் தலைவர்  உயில் எதுவும் எழுதி வைக்காமல், இறந்து விட்டால், அந்த  சொத்துக் களை குடும்பத்தில் உள்ளவர்கள் பிரித்துக கொள்ளும்போது, என்ன மாதிரியான ஆவணத்தை தயாரிப்பது என்று பார்க்கும் முன்பு, பாகப்பிரிவினை  பத்திரத்திற்கும் விடுதலை பத்திரத்திற்கும் இடையே உள்ள வித்யாசத்தை புரிந்துக கொள்ள வேண்டும். 

தனக்கு உரிமையுள்ள பாகத்தை அறுதியிட்டு ஆவணப் படுத்திக் கொள்வது பாகப்பிரிவினை பத்திரம் என்றால், அதற்கு எதிராக க்தனக்கு அந்த பாகத்தில் உள்ள உரிமையை விட்டுக் கொடுப்பது விடுதலை பத்திரம்.



ஒரு கூட்டு குடும்பச்  சொத்தில், ஒவ்வொருவரும் தனக்குள்ள பாகத்தை ஒதுக்கி ஆவணப்படுத்தக்கூடிய பாகப்பிரிவினை பத்திரம் செய்வது நல்லதா அல்லது அந்த சொத்தில் மற்றவருக்கு உள்ள உரிமையை அவர்கள் அன்பினாலேயோ அல்லது இன்னொரு மாற்று ஆதாயத்திற்காக விட்டுக் கொடுப்பது விடுதலைப்  பத்திரம்.

இதில் எதை தேர்வு செய்யலாம்?

விடுதலை பத்திரத்தை எடுத்துக்  கொள்வோம்.  ஒருவர் தனக்கு குடும்பத்தில் மீதுள்ள உரிமையை எப்போது விட்டுக் கொடுப்பார்?

மற்ற  குடும்ப  உறுப்பினர்கள் மீதுள்ள அன்பினால், பாசத்தால்.  இங்கு தம்பிக்கும் அண்ணனுக்கும்  பேச்சு வார்த்தையே இல்லை.  . எனவே அன்பிற்காக விட்டுக் கொடுத்தேன் என்பது எடுபடாது.  அதே சமயம் எந்த பிரதிபலன் இல்லாமல் உரிமையை விட்டுக் கொடுக்கிறேன் என்று எழுதுவதும் நம்புவது போல இல்லை. உண்மையில் இன்னொரு குடும்பச்  சொத்தில் தனக்கு உள்ள உரிமையை   தம்பிக்காக இவரும் இவர் தங்கை, அம்மாவும் வ்ட்டுக் கொடுக்கிறார்கள்.  அப்படியிருக்க அதை மறைத்து தனித் தனியாக விடுதலை பத்திரங்களை ஒவ்வொருவர் சார்பாக  எழுதி பதிவு செய்துக் கொண்டு பிறகு செட்டில்மென்ட் பத்திரம் எழுதலாம் என்று அவர் தம்பி முடிவு செய்துள்ளதாக இவர் தெரிவித்தார். அப்படி பார்க்கையில் ஒவ்வொருவருக்கும் இரண்டு பத்திரங்கள் தேவைப்படும் .  அதுவும்  அம்மாவின் பெயரில் உள்ள சொத்தும் இவர் அப்பாவின் பணந்தில் வாங்கியது என்ற போது அதை தன் மகளுக்கு அவர்  தானப்பத்திரமாக எழுதிக்  கொடுப்பது போல ஆவணம் தயாரித்திருந்தனர்.

குடும்பத்திற்குள்  நடக்கும்  சொத்துப்  பரிமாற்றங்களுக்கு உகந்தது என்றால் குடும்ப செட்டில்மென்ட் பத்திரம் தான்.  ஏனென்றால் பெரும்பாலும் மனக் கசப்புள்ள குடும்ப உறுப்பினர்கள் சொத்தில் தங்களுக்கு உள்ள உரிமையை  எப்படி மாற்றிக் கொள்வது என்பது குறித்த ஒரு புரிந்துணர்வு கொண்டு போடும்  ஒப்பந்தப்  பத்திரம் என்பதால், பின்னாளில்  அதில் சம்பந்தப்பட்ட  யாரேனும் பிரச்சினை செய்தாலும், அதில் பங்கு பெற்ற மற்றவர்கள் .  சம்பந்தப்பட்ட தரப்பினரின் எண்ணக்கிடக்கையை, அதாவது  எதனால் எந்த சொத்து யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதை தெளிவு படுத்துவார்கள்.  ,

இதனால் பிரச்சினை ஏதும் வராமல் தடுக்கபடுகிறது.  ஆனால் தனித்தனியாக விடுதலை பத்திரம்  எழுறினால், ஒட்டுமொத்த குடும்ப  உறுப்பினர்களின் எண்ணவோட்டம் வெளிபடாமல், அதன் காரணமாக சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதனால் சரியான தேர்வு என்றால், குடும்ப ஒப்பந்த செட்டில்மென்ட் பத்திரம் தான். இது குறித்து அதிகம் பேருக்கு தெரியவில்லை. இத்தனைக்கும் இதற்கும் மற்ற ஆவணங்களுக்கும்  உள்ள முத்திரை தீர்வு மற்றும் பத்திரப் பதிவு செலவு எல்லாம் ஒன்று தான். அதனால் இதற்கான வாய்ப்பு இல்லாத பொது தான் விடுதலை பத்திரத்தை எழுத வேண்டும்...

கனியிருப்ப காயை நாடுவானேன்??

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...