செவ்வாய், 17 மே, 2022

எனது அண்ணன் மகன் இறந்து விட்டார் அவரது பெயரில் உள்ள வீடு அவரது சட்ட படியான வாரிசுகள் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட வேண்டுமா அல்லது தந்தையாகிய எனது அண்ணன் உயில் எழுதி வைக்கலாமா?

நம் நாட்டில் சிவில் சட்டங்கள் அவரவர் சார்ந்த மதத்தை பொறுத்ததே. ஆனால் நீங்கள் எந்த மதம் என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். இருந்தாலும், மூர்த்தி பெரியசாமி, நீங்கள் பின்பற்றுவது இந்து மதம் என்ற எண்ணத்தில் கீழே பதில்:

        உங்கள் அண்ணன் மகன் இறந்து விட்டார். அவர் சொத்துக்களுக்கு  உங்கள் அண்ணன் உயில் ஏதும் எழுதி வைப்பதா? முதலில் அவருக்கே அந்த சொத்தில் உரிமை இல்லை.... அது தெரியுமா அவருக்கு?!

        இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 8 ன் படி, உயில் ஏதும் எழுதி வைக்காமல் இறக்கும் ஒரு இந்து ஆணின்  சொத்துகளை அவரின் சட்டப்பூரமான வாரிசுகள் என்று,  முதல் பட்டியலில்  இருக்கும், அவர் மனைவி, பிள்ளைகள், அவர் தாயார் என்று சமமாக  பங்கு பிரித்து கொடுக்கப்படும். 

    இந்த வாரிசுகள் யாரும் இல்லையென்றால் மட்டுமே அவரின் தந்தைக்கு அந்த சொத்தில் உரிமை உள்ளது. (இப்படியிருக்க உயிலாவது, எழுதுவதாவது!!.....

    உடனே...என்ன.".என் அண்ணன் சொத்தில் அவன் பிள்ளைக்கு பங்கு இருக்கும் போது, பிள்ளை சொத்தில் அவன் அப்பாவுக்கு பங்கில்லையா?"  என்று பொங்கக் கூடாது!! இதுவே ஒரு இந்து பெண் உயில் எழுதி வைக்காமல் இறந்து போனால், அவளின் பெயரில் உள்ள சொத்து எப்படி பங்கிடப்படும் தெரியுமா?

    அவள் பிள்ளைகள் மற்றும் கணவனுக்கு சமமாக..

அவர்கள் யாரும் இல்லையென்றால், அடுத்து அவள் கணவனின் வாரிசுகளுக்கு: அவர்களும் இல்லையென்றால் தான் அவள் அப்பாவின் வாரிசுகளுக்கு இல்லை அம்மாவின் வாரிசுகளுக்கு...இந்த வரிசையில் தான் சொத்து போய் சேரும்.

        ஆனால் இதுவே அந்த சொத்து அவள் பெற்றோர் மூலமாக பெற்றது என்றால், அவள் பிள்ளைகளுக்கும், அவர்கள் இல்லையென்றால், அவள் அப்பாவின் வாரிசுகளுக்கும் போகும்.

        அதுவே அந்த சொத்து அவள் மாமனார், மாமியாரிடமிருந்து பெற்றிருந்தால், அவள் பிள்ளைகளுக்கு முதலிலும், அவர்கள் இல்லையென்றால்,  அவள் கணவனின் வாரிசுகளுக்கு போய் சேரும்.

        இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனப் பிரிவுக்கு எதிரானது, பாலின பாகுபாடு காட்டுகிறது என்றெல்லாம் சொல்லி, வழக்கு போட்டார்கள்.. "அதெல்லாம் சரியாகத்  தான் இருக்கிறது.  எங்கிருந்து வந்ததோ அங்கேயே தான் போய் சேர வேண்டும்" என்று சொல்லி விட்டது நீதிமன்றம்...வேறு என்னத்தை சொல்ல!!

        இந்த பதிலை முடிக்கும முன் என் சிறு வருத்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.   இன்றைய உலகில் மலிவாக..இல்லையில்லை இலவசமாக  கிடைப்பது இன்னொருவருக்கு கொடுக்கும் அறிவுரை தான். ஆனால்  அதையே பனம்  கொடுத்து  நாம் பெற்று கொள்வது டாக்டரிடமும் வழக்கறிஞரிடமும் தான். ஏனெனில் இரண்டுமே அவர்களின் உயிரையே குடிக்கக் கூடியது. அதே சமயம், ஆலோசனை/அறிவுரை சொல்லும் மருத்துவரும்  வழக்கறிஞரும் தங்களை,  கண நேரமும் மாறிக்கொண்டே இருக்கும் தத்தம்  துறையில் பயின்றுக்  கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான் , அவர்கள் செய்யும் தொழிலுக்கு PRACTISE எனப்பட்டது. 

        அப்படிப்பட்ட கடினமான ஒரு துறையில் ஒருவர் சந்தேகம் கேட்கும் போது, அது பற்றிய விஷய  ஞானம் இல்லாமல்  சிலர் பதில் கூறுவது சரியானதல்ல.  அதை  விவரமில்லாத பலர் நம்பி ஏமாறக்  கூடும்..வழி மாறி போகக் கூடும்!!

( இஸ்லாந்து  எங்கேயிருக்கிறதுன்னு கண்டுபிடிககிறதுகுள்ள...!!)

  

வெள்ளி, 13 மே, 2022

18 வயதின் சிறப்பு என்ன??

         1வயது பூர்த்தியடைவது  என்பது பொறுப்பும் உரிமை தகுதியும் பெற்று விட்ட வயதாக தான்1875 ம  ஆண்டு இயற்றப்பட்ட இந்திய பருவ வயது குறித்த சட்டத்தின்படி சொல்லப்படுகிறது. அதன்படி அவர்களுக்கு என்ன தகுதிகள் ஏற்படுகின்றன  தெரியுமா?


  • ஒரு அரசை தேர்ந்தெடுக்கும் விதமாக வோட்டு போடும் உரிமை
  • அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கு உயில்  எழுதுவது
  • அவற்றை விற்பதற்கு உள்ள உரிமை 
  • அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கு 
  • பெண் என்றால் திருமணம் செய்வதற்கு தகுதி.  அதே வேளையில் ஆணுக்கு 21 வயது பூர்த்தியாகவேண்டும். 
        பெண்ணுக்கு அந்த வயது தகுதியானது என்னும்போது ஆணுக்கு ஏன் அப்படியில்லை? அதுவும் ஒரு அரசையே தேர்ந்தெடுக்கும் அளவுக்கு அவனுக்கு பொறுப்பு மற்றும் முதிர்ச்சி வந்ததாக சொல்லும் போது.... என்ற கேள்வி எழலாம்.  பெண் மனதளவில்  வேகமாக முதிர்ச்சியடையக் கூடியவள் என்பதால் தான் பெண்ணை விட  ஆணுக்கு சிறிது அதிக  வயது வித்யாசம் இருக்கும் வகையில் 1929 அம ஆண்டு ஏற்படுத்திய திருமண சட்ட அமைப்பின் படி, , 18  வயதிற்குட்பட்ட பெண்ணும் 21 வயதிற்குட்பட்ட  ஆணுமே திருமணம் செய்ய தகுதியற்றவர்கள்.  அதற்கு மேற்பட்டே திருமணம் செய்யலாம். 

        திருமணம் என்றாலே பொறுப்புகள் நிறைந்தது இல்லையா? பொறுப்பு என்பது என்ன?  ஒருவரின் செயலுடன் தொடர்புடையது. அவரின் செயல்  அவருடைய எண்ணத்துடன் தொடர்புடையது.  எனவே ஒருவர் குற்ற எண்ணத்துடன்  ஒரு காரியத்தை செய்து சட்டத்திற்கு முரணாக அது அமையும்போது அது குற்றமாகிறது.  குற்ற எண்ணத்துடன் ஒருவர் அந்த செயலை  செய்தாரா என்பதை ஆராய அவர் வயது தான் அதை நிர்ணயிக்கும் கருவியாக சட்டத்தில் உள்ளது. எந்தெந்த சமயங்களில் வயதை கணிப்பது முக்கியமானது தெரியுமா? 

  • குற்றவாளியின் அறியாமைத  தன்மையை கணிக்க/ பொறுப்பை உறுதிப்படுத்துவதற்கு ...
  •         உதாரணமாக ஏழு வயதிற்குட்பட்ட ஒரு சிறுவனோ சிறுமியோ புரியும் எந்த செயலும், அது சட்டத்திற்கு முரணாக இருந்தாலும், குற்றமாகாது.  ஏனெனில் ஏனெனில் அந்த வயதில், தான் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்று பகுத்தறியும் அறிவு வளர்ச்சி பெறுவதில்லை.  அதனால் அவர்கள் செய்யும் செயல்கள் தவறாக இருந்தாலும், அவற்றிற்கு சட்டத்தில் விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.  அதற்கு காரணம் குற்றம் செய்வதற்கான குற்ற எண்ணம் அவர்களுக்கு இல்லாதது தான். அப்படியே இருந்தாலும் அந்த தவறான காரியத்தை உடனே அந்த குழந்தை செய்து விடுவதில்லை.  அதை செய்யுமாறு ஒருவர் தூண்டினால் ஒழிய.  இந்த விதிவிலக்கு இந்திய தண்டனை சட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்..இந்த விதிவிலக்குக்கும் ஒரு விதிவிலக்கு உண்டு... இந்திய இரயில் வே சட்டத்தின் கீழ் இது பொருந்தாது. இது போன்ற குற்றம் நடப்பின், அதற்குரிய தண்டனை வழங்கப்படும். வயது  கருத்தில் கொள்ளப்படமாட்டாது.  

            அதற்கு அடுத்து வரும் ஏழு வயது முதல் பன்னிரண்டு  வயதுக்குட்பட்ட குழந்தைகள் சற்று வளர்ச்சியடைந்து இருப்பதால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது குறித்து ஓரளவு பகுத்தறியும் ஆற்றல் இருக்கும்.  அவர்கள் சட்டத்தால் தடுக்கப்பட்ட குற்றங்களை செய்யும்போது அவர்கள் கண்டிக்கப்படுவார்கள்.நன்றாக கவனியுங்கள்....... தண்டிக்கப்படமாடார்கள்.

    • நீதிமன்ற தண்டனை வழங்கும் போது.

            பதினெட்டு வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் தவறு செயும்போது அவர்களை சிறுவர் நீதிமன்றத்தில் விசாரணை செய்வர்.  குற்றம் உறுதிப்படுத்தப்டும் பட்சத்தில், அவர்கள் அந்த நீதிமன்றம் இயங்கும் அதே வளாகத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவர். அங்கு அவர்களுக்கு தேவையான நல்லொழுக்கமும் நன்னடத்தையும் கற்பிக்கப்படும்.  அத்தோடு தச்சு வேலை, தையல், நெசவு, கொல்லுவேலை போன்ற தொழில்களும் பயிற்றுவிக்கப்படும்.  

    • அதே போல  ஒருவரை அடையாளம்   கண்டு கொள்வதற்கு வயது முக்கியமானது. பெயர் நாம் வைத்துக்கொள்வது. அதை மாற்றலாம். அனால் உடலின் வயது அவர இன்னார் என்று அடையாளப்படுத்திவிடுவதில் ஒரு முக்கிய காரணி. 

    • வேலை வாய்ப்பின் போது 
             1948  தொழிசாலைகள் சட்டத்தின்படி, 14  வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமாகும். அதே சமயம்  16 வயது பூர்த்தியான குழந்தைகளை சில குறிப்பிட்ட வகை தொழிசாலைகளில் பணியாற்ற சட்டம் அனுமதிக்கிறது.  ஆனால் அரசு பணிகளுக்கு குறைந்தபட்ச தகுதியான வயதாக 18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    • கடத்தல் 
            வயது தான் பருவம் அடைந்த நிலையை கணிக்க பெரும்பாலும்  உதவுகிறது என்றேனில்லையா?  அதன்படி  "கடத்துதல்"  என்ற குற்றத்தை ஒருவர் செய்தாரா என்பதற்கும் கடத்தப்பட்ட ஆனனோ பெண்ணோ, அவர்களின்  வயதை கொண்டு குற்றத்தின் தன்மை தீர்மானிக்கபடுகிறது. 
           
             16 வயதிற்குட்பட்ட ஆணையோ அல்லது    18   வயதிற்குட்பட்ட பெண்ணையோ கடத்துவது குற்றம் என்று சட்டம் சொல்கிறது.  ஆண் பிள்ளைகளும் பெண்பிள்ளைகளை போல பாலியல துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதை வெகு தாமதமாக உணர்ந்த சட்டவியலாளர்கள் 2012 லிருந்து இரு பாலின குழந்தைகளுக்கும் பொதுவான பாதுகாப்பு சட்டங்கள் இயற்ற தொடங்கினர்.அதன்படி பாலியல் தொடர்பு கொள்ள சம்மதம் தெரிவிக்கும் அளவிற்கு முதிர்ச்சி அடைந்த வயதாக 18  வயது நிர்மாணிக்கப்பட்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இன்னமும் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட ஆண் குழந்தையின் வயது மாற்றம் செய்யப்படவில்லை.

    • கற்பழிப்பு:                                                                               பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதாக 18  வயது என்று போக்சோ சட்டத்தில் சொல்லப்பட்டாலும், இந்திய தண்டனை சட்டத்தில்,  15  வயதிற்குட்பட்ட தன மனைவியுடனோ அல்லது   16 வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணுடனோ, அவள் சம்மதம் தெரிவித்தாலும் கூட, பாலியல் ரீதியாக தொடர்பு கொள்வது 'கற்பழித்தல்' என்ற குற்றமாகும். 
            1860 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, பெண்களுக்கான இந்த சம்மதத்தின் வயது முதலில் 10 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டது. இது 1891 இல் 12 ஆகவும், 1925 இல் 14 ஆகவும், 1940 இல் 16 ஆகவும், 2013 இல் 18 ஆகவும் உயர்த்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயதுக்குக் குறைவான ஒரு பெண்ணுடன் அவள் சம்மதத்தைப் பெற்றும் பாலியல் செயல்பாடு கொள்வது , கற்பழிப்புக்கு சமம். இதில் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், சிறுவர்களுக்கு அவ்வாறு வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

            21 ஆம் நூற்றாண்டில் தான், மைனர் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நமது சட்டமியற்றுபவர்கள் விழித்துக் கொண்டதாலும், 2012 ல் நாட்டையே உலுக்கிய டெல்லி கூட்டு வன்புணர்வு நிகழ்வால், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான பாலின-நடுநிலைச் சட்டத்தைப் பெற்றோம். POCSO ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பாலியல் ரீதியான தொடர்பு கொள்வதற்கான சம்மதத்தின் வயதை 18 ஆக அந்த சட்டம் நிர்ணயித்துள்ளது.  அதை தொடர்ந்து 2013ல் குற்றவியல் சட்ட திருத்தம் வந்த போது,  இந்த வயது 18 ஆக மாற்றப்பட்டது.    ஆனாலும் பாலியல் ரீதியான தொடரபுக்கு சம்மதிக்கும் வயது குறித்த சர்ச்சை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. 

    • திருமணத்தின் போது
             பதினெட்டு வயதிற்கு குறையான சிறுமிகளை திருமணம் செய்து கொள்வது குற்றமாக்கப்பட்டுள்ளது.   

           " சாரதா சட்டம்" என்று பிரபலமாக அறியப்படும குழந்தை திருமண தடைச் சட்டம், 1929, திருமண வயதை பெண்களுக்கு 14 ஆகவும், ஆண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயித்தது. இது பின்னர் 1978 இல் முறையே 18 மற்றும் 21 என்று பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உயர்த்தப்பட்டது. இது இப்போது ரத்து செய்யப்பட்டு, குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006 வரப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்பு மாநாட்டின் (CEDAW) பிரிவு 16 திருமணம் மற்றும் குடும்பம் பற்றி கூறும்போது, குழந்தைத் திருமணங்கள் சட்டப்பூர்வ விளைவை ஏற்படுத்தக் கூடாது என்கிறது. இந்தியா 1980 இல் CEDAW இல் கையெழுத்திட்டது. இன்னும், குழந்தை திருமணங்கள் செல்லத்தக்கதாக மட்டுமே கருதப்படுகின்றன. எனவே, ஒரு சிறுமி தனது திருமணத்தை ரத்து செய்ய விண்ணப்பிக்கும் வரை, அந்தத் திருமணம் சரியானதாகக் கருதப்படும். அதையும் அவள், பருவ முதிர்ச்சி வயது அடைந்த இரண்டாண்டுகளுக்குள் செய்ய வேண்டும்.

            இந்திய தண்டனைச் சட்டம், Marital Rape என்னும் திருமண பலாத்காரத்தை அங்கீகரிக்க வில்லை என்பதால் தற்போதைய சட்ட நிலவரப்படி, மைனரான தன மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள சட்டப்படி கணவன் அதிகாரம் பெறுகிறான். 2017 ஆம் ஆண்டில், சுப்ரீம் கோர்ட் சுதந்திர சிந்தனை எதிர இந்திய யூனியன் வழக்கின் தீர்ப்பை வழங்கிய பிறகு, 15-18 வயதுக்குட்பட்ட மணப்பெண்களுடன் அவர்கள் கணவர் பாலுறவு கொள்ள செய்து கொள்ள அனுமதிக்கும் பிரிவு 375 க்கு விதிவிலக்கு சேரக்கப்பட்டது. இன்னும், இந்திய மனைவிகளுக்கு பாலுறவு கொள்வதற்கான ஒப்புதல் விருப்பத்தைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. 18 வயதுக்குக் கீழே, அவள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டாலும், அவள் உடலுறவு கொள்ள அனுமதிக்கவில்லை, 18 வயதுக்கு மேல் திருமண உறவில் சம்மதத்தின் அனுமானம் உள்ளது என்பதால் அவளால் இல்லை என்று சொல்ல முடியாது.

                நேற்று முன்தினம் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த இது குறித்த தீர்ப்பு நமக்கு தெரிந்திருக்கும். மைனரல்லாத மனைவி என்றாலும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டு இருந்தாலும், அவள் விருப்பம் இல்லாமல் உடலுறவு கொண்டாலும் அது கற்பழிப்பு ஆகாது என்ற இந்த பிரிவை எதிர்த்து தோற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதியரசர் ராஜீவ் ஷக்தேவ் , திருமண உறவில் நுழையும் இருவருமே வாழ்க்கை துணைவர்கள் என்பதால் பரஸ்பரம் அன்பு, மரியாதை இருக்கவேண்டும் என்பதால் சமதமில்லாத தாம்பத்ய உறவு என்பது கற்பழிப்புக்கு ஒப்பானது என்றார். இதை இன்னொரு நீதியரசர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கெனவே கர்நாடகா உயர்நீதிமன்றம், மனைவியை செக்ஸ் அடிமை போல நடத்துவதை கண்டித்து திருமணம் என்பதற்கு அதற்கான லைசென்ஸ் அல்ல என்று கடுமையாக சொல்லியுள்ளது. இந்த வழக்கில் இரண்டு நீதியரசர்களும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் இனி இது குறித்து உச்ச நீதிமன்றம முடிவு எடுக்க வேண்டும்.

           தற்போது பெண்களுக்கான திருமண வயதை உயர்த்துன் யோசனையில் அரசு உள்ளது. இது, பெரும்பான்மையான பெண்களின் உடல், பதினெட்டு வயது ஆனாலும், மருத்துவ ரீதியாக , பேறு காலத்திற்கு தயாராகவில்லை என சொல்லபபட்டாலும், திருமண உறவிற்கு அப்பால் பாலியல் ரீதியான உறவை நம் இந்திய சமூகம் இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால்,  திருமணத்திற்கு முந்தைய பாலியல் செயல்பாடு அதுகுறித்த வெளிப்படையான விவாதம் இல்லாத  மௌனம் மற்றும் மறுப்பு ஆகியவற்றால் மறைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள தரவுகள், இளம் பருவத்தினர் 18 வயதிற்கு முன்பே பாலுறவில் ஈடுபடுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. NFHS-4 (2015–16) பதிவுகளில் 11% பெண்கள் 15 வயதிற்கு முன்பும், 39% பெண்கள் 18 வயதிற்கு முன்பும் முதல் உடலுறவைக் கொண்டிருந்தனர் என்றும்  அதே கணக்கெடுப்பில், 6.3% பெண்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் திருமணம் செய்து கொண்டவர் என்றாலும் 15 வயதுக்கு முன் தங்கள் முதல் உடலுறவைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றன. 

                இந்தியாவில் உள்ள இளைஞர்கள்: சூழ்நிலை மற்றும் தேவைகள் 2006–07 ஆய்வு ............இது இந்தியாவின் முதல் விரிவான இளைஞர் ஆய்வு, இந்த ஆய்வும்,  பாலியல் செயல்பாடுகளை அனுபவிப்பதற்கான நிகழ்தகவு,  இளம் பருவ வயதினரிடமிருந்து    இளம் பெண்கள் முதல் வயது முதிர்ந்த இளம் பருவத்தினர் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

            எனினும் இன்றைய சமூக நிலை, பாலியல் கல்வி குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாத மவுனம் ஆகியவை , பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்  இளைஞர்களிடையே காணப்படும் பெண் மீதான  வெறுப்பு, பாலின பாகுபாடு மற்றும் ஆணாதிக்க மனப்பான்மையை அதிகப்படுத்தி,  உடலுறவு, அதில் கிட்டும்  இன்பம்,  உடலைச் சுற்றியுள்ள உரிமைகள்,   மற்றும் பாதுகாப்பு பற்றிய அறியாமை,   சட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய   மோசமான அறிவுக்கு தான்  வழிவகுக்கும்.

    •   பதினெட்டு வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மருத்துவமனையில் செய்யப்படும் கருச்சிதைவு விகிதம் குறைந்துள்ளதாக  தரவுகள் காட்டப்பட்டாலும், இதன் பின்னணியில் உள்ளது கவனிக்கத்தக்க ஒரு அம்சம். 
                குழந்தை திருமண தடை சட்டம் இருந்தாலும், இருதரப்பு பெற்றோரின் ஒத்துழைப்புடன் இந்த திருமனங்கள் பெருமளவில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இவை பெரும்பாலும் வெளியே  தெரிய வருவது அந்த பெண் தாய்மை பேறு  பெற்று மருத்துவ சிகிச்சைக்கு வரும்போது தான்.  அப்படி வரும்போது, அது குறித்த தகவலைகளை மருததுவமனைகள் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் இருபபதாலும், பதினெட்டு வயதிற்கு முன்னர் பாலியல் ரீதியாக உறவில் இருக்கும் பெண்கள் மருத்துவ  பரிசோதனை, சிகிசசை எடுக்க மருத்துவமனை செல்ல தயங்குகின்றனன்ர்.  வெளியே யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு , பிரசவம் செய்ய துணியும்போது, உயிர்சேதமே அதிகம் நேருகிறது.  இது ஒரு விதத்தில் அவர்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்துகிறது.  
             
                இன்னொரு புறம், தங்களுக்கு விருப்பம் இருக்கும் போது பதினெட்டு வயதிற்கு குறைவான தங்கள் பெண்ணிற்கு மணமுடிக்கும் பெற்றோர், அதுவே தங்கள் பிள்ளைகள் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் ஓடி சென்று திருமணம் செய்யும்போது, போக்சோ சட்டத்தின்  கீழ் கற்பழிப்பு புகாரை அந்த பையனின் மீது கொடுக்கின்றனர்.   ஆனால் பெரும்பாலும் இது போன்ற வழக்குகளில் அந்த பெண் தன்  காதலனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க  மறுககின்றனர் அல்லது அப்படியே கொடுத்தாலும் தானும்  சம்மதம் தெரிவித்தே அவனுடன் பாலியல் தொடர்பு கொண்டதாக  கூறுகின்றனர்.  அல்லது அந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது அவர்களுக்குள் திருமணம் ஆகாமல் இருந்தால், அது நடந்து விடுகிறது. அல்லது அவன் குழந்தைக்கு அவள் தாயாகி விடுகிறாள். எனவே குற்றவாளிக்கு எதிர் சாட்சியம் இல்லாத நிலையில்,  பெரும்பான்மையான குற்றவாளிகள் வழக்கிலிருந்து  விடுதலையடைகின்றனர்.  இதனால் உண்மையான கற்பழிப்பு வழக்குகளில் கவனம் செலுத்த இயலாமல் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகின்றது என்று நமது மாண்புமிகு உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது.

            "எங்கள் பதிவுகளிலிருந்து, பெரும்பாலான வழக்குகள் POCSO ... -ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட தப்பியோடிய வழக்குகள் என்பதை பகுப்பாய்வு காட்டுகிறது. இதன் காரணமாக, மைனர் கற்பழிப்பு பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. … ஆணும் பெண்ணும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், முழு கிராம மக்களும் குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறார்கள், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை, ஆனால் வெவ்வேறு சமூகத்தின் விஷயத்தில் பையன் மீது வழக்குத் தொடரப்படுகிறது, 18 வயதுக்குட்பட்ட பையனும் பெண்ணும் ஓடிப்போனால், அவன் மட்டுமே தண்டிக்கப்படுகிறான், இது பையனுக்கான இயற்கை நீதிக்கு தீங்கு விளைவிக்கும்" என்றது .

            இதே போன்ற இன்னொரு வழக்கில் சம்பவத்தின்போது 17 வயதான அந்த இளைஞனை விடுவித்த மாண்புமிகு உயர் நீதிமன்றம், 16 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பாலியல் செயல்பாடுகளுக்கு சம்மதிக்கும் அளவுக்கு முதிர்ச்சியடைந்துள்ளனர் என்று கருத்து தெரிவித்து, POCSO சட்டத்தின் 2(d) இன் கீழ் "குழந்தை" என்ற கருத்தை 18 ஆண்டுகளுக்குப் பதிலாக 16 ஆண்டுகள் என மறுவரையறை செய்ய பரிந்துரைத்தது.

             2012 ஆம் ஆண்டு டெல்லி கூட்டுப் பலாத்காரத்திற்குப் பிறகு குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டியும் இளம் பருவத்தினரின் பாலினத்தை 16 வயதிற்குள் அல்லது POCSO சட்டததின் கீழ் குற்றமாக்குவதைக் கட்டுப்படுத்தவும் IPC பிரிவு 375 இல் ஒப்புதல் வயதை பராமரிக்க வேண்டும் என்னும் அதே பரிந்துரையை வழங்கியது

    இருப்பினும், நாடாளுமன்றம் சற்று முன்னேறி, CLA சட்டம், 2013 இன் கீழ் ஒப்புதல் வயதை 18 ஆக உயர்த்தியது.

                 இந்தியாவில், வெவ்வேறு விஷயங்களுக்காக வெவ்வேறு வயது வரம்பு உள்ளது. ஒருவர் 18 வயதில் வாக்களிப்பது தொடர்பான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவர்; 16 (கியர் இல்லாத வாகனங்கள்) அல்லது 18 (மோட்டார் வாகனங்கள்) ஓட்டவும்; 18, 21, 23, 25 வயதில் குடிக்கவும் (வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு வயதை நிர்ணயிக்கின்றன); 21 இல் தத்தெடுக்கவும்; 14 இல் தொழிற்சாலையில் வேலை; மற்றும் 18 (பெண்களுக்கு) மற்றும் 21 (ஆண்களுக்கு) திருமணம். மெஜாரிட்டி சட்டம், 1875 பெரும்பான்மை வயதை 18 வயதாக நிர்ணயித்தது (1999 இல் திருத்தப்பட்டது).


            இப்போது சொல்லுங்கள்.....

    ஒருவரின் முதிர்ந்த வயதை இதில் யார் தீர்மானிக்கிறார்கள்?
    - சட்டம், சமூகம், அரசு அல்லது உயிரியல் காரணிகளா? 1

    சனி, 7 மே, 2022

    பாதிக்கப்பட்டோர் நஷ்டஈட்டு நிதி ..ஒரு கண்ணோட்டம்

    1.   இந்திய சிறைகளில் கைதிகளுக்கு வேலை கொடுப்பது என்பது   ஆரம்பத்தில் தண்டனையாகத்  தான் பார்க்கப்பட்டது.\   சிறை கைதிகளை வேலை செய்ய வைப்பது என்பது  சிறை நிர்வாகத்தின் செலவுகளை சரி செய்வதற்காக இருக்கக் கூடாது என்பது தான்  இந்த திட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்த லார்ட் மெக்கலேயின் எண்ணமும் கூட PRISON-LABOUR-AND-INDUSTRY-IN-INDIA-AN-ANALYSIS-OF-WORK-Dr-Barik-1.pdf

            


    1950 
    ல் இது குறித்து    நடந்த ஹேக்  மாநாட்டில்,  கைதிகளின் திறனை ஒரு பயனுள்ள நோக்கத்திற்காக மாற்றுவதற்கான சிறந்த மாற்றாக 'வேலைஉள்ளது என்பதால்

    • கைதிகளை உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்துவது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.
    • அவர்களிடையே தன்னம்பிக்கையை ஊட்டவும்சமூகம். பரிந்துரைத்தபடி சட்டத்தை மதிக்கும் குடிமகனாக அவர்கள் திரும்பவும் நினைக்க வைக்கலாம
    •  இதன் மூலம்கைதிகள் சிறைக்குள் இருந்தே தங்கள் குடும்பத்திற்கு உதவலாம்.
    • சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்'வேலை' என்பது,  கைதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதே நேரத்தில் அரசுக்கு ஊதியமாக இருக்கும்.

    ·         அதே சமயம், மனித கண்ணியத்தின் மதிப்புகள் மதிக்கப்பட வேண்டும் என்பதால்கைதிகளின் வேலை நிலைமைகள்இலவசமாக பணி செய்யும் தொழிலாளர்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்று  யோசனை சொல்லப்பட்டது.

         அதன்படியே இந்தியாவின் பொருளாதார மறுவாழ்வு திட்டத்தில்திகார் சிறை ஒரு முன்னோடியாககருதப்படுகிறது. இது கிட்டத்தட்ட  12000 கைதிகள் உள்ளடக்கியது. திகார் சிறைத் தொழிற்சாலைதச்சுநெசவுதையல் மற்றும் பேக்கிங் சம்பந்தப்பட்டவைகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறது:  அங்கு உற்பத்தி செய்யப்படும் சில பொருட்கள், மாநில அரசின் தேவையை பூர்த்தி செய்கின்றன. ரொட்டி மற்றும் ஊறுகாய் போன்ற பொருட்கள் டெல்லியை சுற்றியுள்ள ஜெயில் விற்பனை நிலையம் மூலம் சந்தையில் விற்கப்படுகின்றன. சிறைத் தொழிற்சாலையின் தோராயமான வருவாய் ரூ.10 முதல் 15 கோடி மேல் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. .தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் (NCRB) -2010 தரவுகளின்படி, 36,995 கைதிகள் பயிற்சி பெற்றனர். அதில் நெசவு, தையல், தச்சு, விவசாயம் மற்றும் கைத்தறி ஆகியவை முக்கிய பயிற்சிப் பகுதிகளாகும்

          ஆனால்   இந்தியாவில் சிறைச் சட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு, நீண்ட காலமாக தீண்டப்படாமல் இருந்தன சிறைகள் எண்ணற்ற பிரச்சனைகளால் பீடிக்கப்பட்டுள்ளன.   கைதிகள் முறைகேடுகளுக்கும் இழிவான சிகிச்சைக்கும் உட்படுத்தப்படுகின்றனர். ஆனாலும்  சுதந்திரத்திற்குப் பிறகு, சிறைச்சாலைகளில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றிய விரிவான அறிக்கையைத் தயாரிக்கவும், மற்றும் நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் இந்திய அரசாங்கம் பல குழுக்களை நியமித்தது. என்றாலும் சிறைச்சாலைச் சீர்திருத்தக் குழுக்கள் சமர்ப்பித்த அறிக்கைகள்,  எதிலும் கைதிகள் செய்யும் பணிக்கான ஊதியம் குறித்த பிரச்சினை முன்வைக்கப்படவில்லை.

            1977 ஆம் ஆண்டு தான், கைதிகளின் ஊதியப் பிரச்சினை முதன்முதலில்கியாசுதீன் முகமத் எதிராக ஆந்திரப் பிரதேச மாநிலம்,  வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது இதை விசாரித்த உச்ச நீதிமன்றம்,    "ஊதியம் கொடுக்காத வேலை என்பது  "கொத்தடிமை உழைப்பு என்றும் அது  அவமானகரமானது" என்றும் கூறி  குறைதபட்ச ஊதியம் கூட சிறைக் கைதிகளுக்கு  ஆந்திர சிறை  நிர்வாகம் வழங்காதது குறித்து அதன் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியது.  பல தசாப்தங்களுக்குப் பிறகும் நாட்டில் ஊதிய திருத்தம் மற்றும் மறுவாழ்வு பற்றிய அனைத்து விவாதங்களுக்கு பிறகும் கூட , ஆந்திர  அரசாங்கம் இன்னும் கைதிகளுக்கு சரியாம ஊதியம் வழங்குவதற்கான விதிகளை    உருவாக்கவில்லை என்பது    ௨௦15 தரவுகள் மூலம் இன்னமும் சிறைகைதிகளுக்கு 5௦ ரூ வழங்குவதில் இருந்து தெரிகிறது.

      அந்த தீர்ப்பில் சொல்லப்பட்ட மற்ற சிறப்பம்சம் என்னவென்றால், :

    (1) கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை, அவர் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும், கடின உழைப்பைச் செய்ய வேலைக்கு அமர்த்துவது சட்டப்பூர்வமானது.

    (2) மற்ற கைதிகளை அவர்கள் செய்யத் தேர்ந்தெடுக்கும் எந்த வேலையையும் அத்தகைய கோரிக்கை விடுக்கும் போது   செய்ய அனுமதிப்பது   சிறை அதிகாரிகளுக்கு உரியது

    (3)  கைதிகள் செய்யும் பணிக்கு சமமான ஊதியம் வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அந்த  அளவை நிர்ணயம் செய்வதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலமானது பரிந்துரைகளை வழங்குவதற்காக ஊதிய நிர்ணய அமைப்பு ஒன்றை. ஒவ்வொரு மாநிலத்தையும் கூடிய விரைவில் அமைக்க வேண்டும் " என்றது.

        'கைதிகளின் உழைப்பை இலவசமாக பெறுவது என்பது  " அரசியலமைப்பு   23(1) சட்டப்பிரிவை மீறுவதாகும்"  என்று சிறைச் சீர்திருத்தங்கள் மற்றும்  கைதிகளின் ஊதிய உயர்வு கோரிய வழக்கில் ( AIR 1983 Kerala 261சுட்டிக்காட்டிய கேரளா உயர் நீதிமன்றம், 'இந்திய தண்டனைச் சட்டத்தின் 53வது பிரிவின்படி அங்கீகரிக்கப்பட்டவை கடின உழைப்பு கோரும் தண்டனை தானே தவிரஇலவச உழைப்பு அல்ல" என்றது. மேலும்  நியாயமான ஊதியத்தின் அடிப்படையிலான ஊதியத்தின் அளவையும் நீதிமன்றம் பரிசீலித்து ஊதியத்தை தற்காலிக பணியாளர் அடிப்படையில்ஒரு நாளைக்கு ரூ. 8/-உயர்த்தியது

              இந்த விதிகளின்படி, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள சிறைசாளைகளில் உள்ள கைதிகளுக்கு ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு 2015 இன் போது. எடுக்கப்பட்ட தரவுகளின்படிபுதுச்சேரி தான் அதிக ஊதியமாக  ரூ. 180/-, ரூ. 160/-, மற்றும் ரூ.150/-என்று   திறமையான கைதிகள்அரை திறன் கொண்ட கைதிகள் மற்றும் திறமையற்ற குற்றவாளிகளுக்கு முறையே   கொடுப்பதாக தெரிகிறது.  தமிழ் நாடு ரூபாய் 80 கொடுக்கிறது ஆனால் சிறைக்கைதிகளுக்கு சில மாநில சிறைகள் சரியான ஊதியம் கொடுப்பதோ அல்லது குறித்த காலத்தில் ஊதியம் அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படுவதோ இல்லை.  

       1996 ண்டு மாண்புமிகு உச்ச நீதிமன்றம்ராமமூர்த்தி எதிர் கர்நாடக அரசு என்ற வழக்கில் ஒவ்வொரு மாநில சிறையும் வெவ்வேறு விதிமுறைகளை கையாளுவதை தவிர்த்து ஒரே மாதிரி ஜெயில் கையேடு இருக்க வேண்டும் என்று  வலியுறுத்தியதை அடுத்து 2016ல் மாதிரி சிறை கையேடு நடைமுறைக்கு வந்தது. அதன்படி 

    • கைதியின் ஊதியங்கள் நியாயமானதாகவும்சமமானதாகவும்பெயரளவாகவோ அற்பமானதாகவோ இருக்கக்  கூடாது. 
    •  அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை கருத்தில் கொண்டு அவ்வப்போது.சிறைச்சாலைகளில் உள்ள ஊதிய முறையை சிறைக்கு வெளியுள்ள சுதந்திர சமூகத்திற்கு இணக்கமாக வைத்திருக்கும் நோக்கில்,ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஊதியம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் மற்றும் தேவைப்படும் போது திருத்தப்பட வேண்டும்.
    • குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் ஒரு பகுதி அவரது பராமரிப்பிற்கும், மாநில அரசால் உருவாக்கப்படும் விதிகளின்படி பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீட்டு நிதிக்கு ஒரு பகுதியும் கழிக்கப்பட வேண்டும் .
    • ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஊதியம் கைதியின் சேமிப்பு வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும்/
    •  பாஸ் புத்தகம் சம்பந்தப்பட்ட கைதியிடம் வைக்கப்பட வேண்டும்.

         கைதியின் பராமரிப்பு செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மாநில அரசு அவன் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய விதிகள் அனுமதிக்கபடுகின்றன. இவ்வாறு ஏன் செய்யபடுகிறது என்பதற்கும் மேற்சொன்ன குஜராத் வழக்கில் உச்ச நீதிமன்றம் காரணத்தை சொல்கிறது.
    "
    குறைந்தபட்ச ஊதியச் சட்டம் (1948) நிர்ணயம் செய்யப்பட்ட விகிதத்தில் ஒரு கைதிக்கு அத்தகைய விலக்கு ஏதும் இல்லாமல் வழங்கப்பட்டால், அதன் நிகர விளைவு என்னவென்றால், அவர்  சிறைக்கு வெளியே அதே வகையான வேலையைச் செய்யும் ஒரு தொழிலாளியின் ஊதியம் காட்டிலும் அதிகமாக ஊதியம் பெறுவார் . ஏனென்றால், பிந்தையவர் உணவு மற்றும் உடைகளுக்கான செலவுகளை அவருக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தில் இருந்து சமாளிக்க வேண்டும். இதன் மூலம் கைதிகளின் உணவு, உடைகள் மற்றும் இதர வசதிகளுக்காக அரசு செய்யும் செலவினங்களுக்காக கைதிகளின் ஊதியத்தை மாநில அரசு பிடித்தம் செய்யலாம்" என்றது.

          சிறைக் கைதிகளில் ஊதியத்தில் ஒரு பகுதியை பிரித்துப்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தான் குஜராத் மாநில அரசு எதிர் குஜராத் உயர் நீதிமன்றம் மற்றும் ஒருவர்  வழக்கில்,  மாநிலங்களுக்கு முதன் முதலில் பரிந்துரைத்தது   ,  AIR 1998 SC 3164  .

        2008ல் CrPC திருத்தப்பட்டது . அதில் ஒரு புதிய பிரிவு, 357A சேர்க்கப்பட்டது.   ஒவ்வொரு மாநிலமும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் சிஆர்பிசி திருத்தம் ஆகிய இரண்டிற்கும் பிறகு மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளும் குற்றத்த்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க VICTIM COMPENSATION FUND என்ற தனி ஏற்பாடுகளை செய்துள்ளது இதன்படி கைதிகளின் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கழிக்கப்பட்டு பாதிக்கப்பட்டோர் நல நிதியில் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த விகிதா சாரமானது மாநிலம் தோறும் வேறுபடுகிறது. 

                தமிழ்நாடு சிறைச்சாலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால், இதன் சிறை விதிகள், 1983 இன் விதி 481, சம்பாதித்த ஊதியத்தைப் பயன்படுத்துதல். பற்றி   பின்வருமாறு கூறுகிறது:

             (1) ஊதியம் பெறும் திட்டத்தின் கீழ் இருக்கும் கைதிக்கு, அவரது சம்பாத்தியத்தை அவரது வரவுக்குள் வைத்திருக்கவோ அல்லது சிறைக்கு வெளியே உள்ள அவரது உறவினர்களுக்கு அனுப்பவோ விருப்புரிமை அளிக்கப்படும். வருவாயை தனது கிரெடிட்டில் வைத்திருப்பதற்கான அவரது விருப்பத்தை செயல்படுத்தினால், அவரது மொத்த அல்லது அவரது வருவாயின் ஒரு பகுதியை அவரது உறவினருக்கு அனுப்புவதற்கு ஆதரவாக எந்த நேரத்திலும் அவரது விருப்பத்தை திருத்திக்கொள்ள விருப்பம் வழங்கப்படும்.

            (2) கைதி, சிகரெட்,சோப்பு, எண்ணெய் போன்ற தனது தனிப்பட்ட உபயோகத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு, மாதம் ஒன்றுக்கு ரூபாய் 10க்கு மிகாமல் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவார். தேவைப்படும் பொருள்களின் பட்டியல் சிறை கண்காணிப்பாளரால் அங்கீகரிக்கப்படும்.

            (3) எந்தவொரு கைதியும் தனது வருமானத்தை மற்றொரு கைதிக்கு கடனாக மாற்ற அனுமதிக்கப்படக்கூடாது

            தமிழ்நாட்டில் சிறை கைதிகளை பராமரிப்பதற்காக கைதிகள் சம்பாதிக்கும் ஊதியத்தில் 50% பிடித்தம் செய்தும் மேலும் 20% ஊதியத்தை சிறை நிதியில் வரவு வைக்கபடுகிறது.  இவ்வாறு  செய்ததற்கு எதிராக திரு கே ஆர் ​​ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக (பிஐஎல்) தாக்கல் செய்தார். மனுதாரர், திரு கே ஆர் ​​ராஜு, தமிழ்நாடு சிறை விதிகள், 1983 இன் விதி எண்.481ஐ அறிவிக்க வேண்டும் என்றும், கைதிகளை பராமரிப்பதற்காகவும், சிறை நிதியில் வரவு வைக்கப்பட்டுள்ள ஊதியத்தில் 20% பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட விரோதமாகவும், சட்டம் மற்றும் நீதிக்கு எதிராகவும் உள்ளதாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும்   நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கைதிகள் சொத்துக் கணக்கில் குறைந்தபட்சம் 30% முதல் 75% வரை பணமாகப் பெறுவார்கள் என்று உத்தரவிட வேண்டும் என்றும்  கோரியிருந்தார்..

               இந்த வழக்கில் மெட்ராஸ்  உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் முன் வைக்கப்பட்ட கேள்வி, "ஊதியத்தில் கணிசமான குறைப்பு என்பதுஇந்திய அரசியலமைப்பின் 23 வது பிரிவை மீறுகிறதா?"

                 70 சதவீதத்தை (கைதிகளை பராமரிக்க 50 சதவீதமும், பாதிக்கப்பட்ட இழப்பீட்டுக்காக 20 சதவீதமும்) பிடித்தம் செய்து வருகிறது. ஒரு பொதுநல அரசு , எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாமல் ஒரு தனிநபரின் ஊதியத்தில் இருந்து கணிசமான கழித்தல் என்பது தீய மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரானது. சிறை விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் இருந்து கணிசமான அளவு பிடித்தம் செய்வது அரசியலமைப்பின் 23 வது பிரிவை மீறுவதாக உள்ளது. போதிய ஊதியம் கொடுக்காமல் வேலை வாங்குவதும் பிச்சைதான்.   தமிழகத்தில் கைதிகளுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதியம் வழங்கப்படவில்லை என்பது ஒப்புக்கொள்ள முடியாதது.. எனவே, சிறைச்சாலை விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தில் இருந்து கணிசமான கழித்தல் என்பது மாண்புமிகு உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்றது சென்னை உயர் நீதிமன்றம்.

          மேலும் அந்த தீர்ப்பில் "சிறைச்சாலைகளில் நடக்கும் கண்ணுக்குத் தெரியாத அத்துமீறல் மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைக்கு இது ஒரு அங்கீகாரம். நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத் திட்டம் இருக்க வேண்டும் என்று கூறி  கைதிகளின் மறுவாழ்வு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பீடு ஆகியவற்றுக்கு இடையே உள்ள சமநிலையை மனதில் கொண்டு  குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பிடித்தம் செய்ய அனுமதித்தது.  ஆனால் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படியே கைதியின்  ஊதியத்தில் இருந்து இந்த பாத்திக்கபட்டவருக்கான நஷ்டஈட்டு நிதிக்கு கைதிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யபடுவதால் அதில தவறேதும் இல்லை என்றது. " ஊதியத்தின் ஐந்தில் ஒரு பங்கு இதற்காக பிடித்தம் செய்யபடுவதில் எந்த தவறும் உள்ளதாக தெரியவில்லை.  ஆனால் அதே சமயம் ஐம்பத்து சதவீதம் ஊதியத்தில் இருந்து அவர பராமரிப்பிற்காக பிடித்தம் செய்வது சட்ட விரோதமானது என்றது . 

            இதில் கொடுமை என்னவென்றால்கோடிக்கணக்காக இவ்வாறு வசூலிக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் கிடப்பதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது தான் தில்லி திஹார் கேயிலில் கூட இது போல திகார்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் ஊதியத்தில் இருந்து 2006- ஆம் ஆண்டு முதல் வசூலிக்கப்பட்ட ரூ.15 கோடியில், பாதிக்கப்பட்ட 194  பேருக்கு சுமார் ரூ.80.73 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ.14  கோடிக்கு மேல் பயன்படுத்தப்படாமல் கிடப்பதாகவும் காத்யாயினி என்பவர தொடர்ந்த  பொதுநல மனுவில் கூறியுள்ளார்.  ஏன் இது போன்ற நிலை??   

                 பெரும்பாலோனோருக்கு இது போன்ற ஒரு நிதி உள்ள  விவரமே தெரிவதில்லை. ஒரு குற்றத்தில் பாதிக்கபட்டோர்ர் யார்  என்றால், அந்த  குற்றத்தினால், மனதாலோ உடலாலோ அல்லது  அவர் சொத்திற்கு தீங்கு  நடந்திருந்தால், அந்த குற்றத்தை செய்த  நபர் அடையாளம் காடபட்கிறாரோ இல்லையோ, நீதிமன்றத்தில்,  அந்த குற்றவாளிக்கு எதிராக வழக்கு தீர்ப்பாகிறதோ இல்லை அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டாரோ இல்லையயோ ,  அந்த குற்றத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு அரசு நஷ்டஈடு கொடுக்க வேண்டிய கடமை உண்டு.  அதேபோல, அந்த குற்றத்தை  செய்ததாக ஒருவர் தண்டனை பெற்று சிறைவாசம்  செய்யும்போது,குற்றத்தை செய்ததாக ஒருவர் தண்டனை பெற்று  சிறைவாசம் செய்யும்போது,  அங்கு அவர் செய்யும் வேலைக்கு  கொடுக்கப்படும் ஊதியத்தில் இதற்கென பிடித்தம் செய்யப்படும்  தொகையை பெறும் உரிமையும் இந்த பாதிக்கப்பட்டவருக்கு உண்டு   இதில் அந்த குற்றவாளி சிறை சென்றதால் பாதிக்கப்பட்ட  அவரை நம்பி உள்ள குடும உறவினரும் அடங்கும். குற்றவாளியின் மைனர் குழந்தைகளுக்காக அவர்களை பராமரிக்கும்  பாதுகாவலர்கள் இந்த  நிதியின் கீழ் அந்த குழ ந்தைகளுக்கு நஷ்டஈடு  கேட்டு பெறலாம்.

            நீதிமன்றத்தின் மூலமாக பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு பெற குற்ற விசாரணை நடை சட்டம் இருந்தாலும், இந்த நிதி அரசின் பாதுகாப்பில் இருப்பதால் எளிதில் பெற முடியும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்டது என்றாலும இத்திட்டம் தற்போது பெரும் கால தாமதத்தையே ஏற்படுத்துகிறது. 

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

            

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

       

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     


        

     

     

    சிறப்புடைய இடுகை

    பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

    மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...